Tuesday, April 27, 2010

போலீஸ்

என் பெயர் திவ்யா. ரியல் எஸ்டேட் ஏஜென்டாக வேலை பார்க்கிறேன். வழக்கமாக மாலை 4 மணிக்கு வேலை முடித்து, 3 வயது, 2 வயது பிள்ளைகளை டேகேரிலிருந்து ஏற்றிக் கொண்டு வீடு போய்ச் சேர 5.30 ஆகிவிடும்.

இன்று லேட்டாகி விட்டது. பிள்ளைகளை ஏற்றிக் கொண்டு வீடு போய், சமையல் செய்து, பிள்ளைகளுக்கு குடுத்து, படுக்க வைக்க வேண்டும். ஆக்ஸிலேட்டரில் காலை வைத்து ஒரு மிதி மிதித்தேன். சொய்ங், சொய்ங்...என்று ஏதோ சத்தம். என்ன சத்தம்?. ஓ போலீஸ். சைரன் போட்டுக் கொண்டு பின்னாடியே போலீஸ் கார் வருகிறது. நிப்பாட்டாவிட்டால் தொல்லை. ஆகா! இறங்கி என்னை நோக்கி வருகிறார்.

போலீஸ் : மேம், குட் ஈவினிங்.( மெல்லிய புன்சிரிப்பு )

நான் : குட் ஈவினிங்! ( இனிமேல் எனக்கு பேட் ஈவினிங் தான். அட! என்ன அட்டகாசமாக சிரிக்கிறார் )

போலீஸ் : மேம், நீங்கள் குறிப்பிட்ட வேகத்தை விட 20 மைல்கள் அதிக வேகத்தில் சென்றீர்கள்...

நான் : குழந்தைகள் பசியால் அழுகிறார்கள். அதான்......
போலீஸ் : குழந்தைகளா? ( உள்ளே எட்டிப் பார்க்கிறார். இது வரை அழுது கொண்டிருந்த என் பிள்ளைகள் எப்போது அமைதியானார்கள்! )
ஹாய், பேபிஸ்.

போலீஸ் : நீங்கள் செய்தது சட்டப்படி தவறு.( மீண்டும் மெல்லிய புன்சிரிப்பு )

நான் : ம்ம்.... ( ஆகா! மீண்டும் சிரிக்கிறார். எங்கள் நாட்டில் எப்போதும் முறைத்த போலீஸ் அதிகாரிகளைப் பார்த்தே பழக்கப்பட்ட கண்கள். இந்த நாட்டில் பெரும்பாலும் போலீஸ் அதிகாரிகள் சிநேகமாக சிரிக்கின்றார்கள். இந்த சிரிப்பிற்கு என் சொத்தையே எழுதி வைக்கலாம்.)

போலீஸ் : நீங்கள் ஸ்பீட் லிமிட் தாண்டி வண்டி ஓட்டியதால் 1 மைலுக்கு 5 டாலர்கள். அப்ப மொத்தம்100 டாலர்கள். அதோடு ப்ராஸஸிங் ஃபீஸ் 50 டாலர்கள்...

நான் : என்னது அம்புட்டு பணமா? இந்த ஒரு தடவை மன்னிச்சு விட்டுடுங்களேன்.

போலீஸ் : இப்படியே எல்லாரையும் மன்னித்து விட்டால் நாட்டில் சட்டம் ஒழுங்கு குலைந்து விடும். ( மீண்டும் புன்சிரிப்பு )

நான் : ( மனதிற்குள் ) இவர் சிரிக்கவில்லை என்று யார் அழுதார்கள்.

போலீஸ் : மேம், இந்தாங்கள் டிக்கெட். குட்நைட். ( குழந்தைகளிடம் ) பை பை, பேபிஸ். ( போலீஸ் போய் விட்டார் )

நான் : குட் நைட்டாம் குட் நைட். நான் இனிமேல் எப்படித் தூங்குவேன்.
சிரித்து சிரித்து வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் ஏற்றி விட்டுப் போய் விட்டார்.
எந்த செலவைக் குறைப்பது? பிள்ளைகளை கட்டாயம் டெகேர் அனுப்ப வேன்டும். என்னுடைய ஃபேஸியல், சலான் செலவுகளையும் குறைக்க முடியாது. ஓவர் டைம் செய்து தான் பணம் கட்ட வேண்டும்.

ஏதோ சொத்தையே எழுதிக் குடுக்குறாப் போலை ரீல் விட்டியே... இப்ப 150 டாலருக்கு இவ்வளவு யோசனை.

அட யாரிது? என் மனசாட்சி. ம்ம்...... நீயும் நையாண்டி பண்ற அளவுக்கு என் நிலமை போய் விட்டது. சும்மா கம்முனு கிட.

20 comments:

  1. //என்னுடைய ஃபேஸியல், சலான் செலவுகளையும் குறைக்க முடியாது//

    இதை குறைக்கலாமே ....:D:D

    //போலீஸ் அதிகாரிகளைப் பார்த்தே பழக்கப்பட்ட கண்கள். இந்த நாட்டில் பெரும்பாலும் போலீஸ் அதிகாரிகள் சிநேகமாக சிரிக்கின்றார்கள். இந்த சிரிப்பிற்கு என் சொத்தையே எழுதி வைக்கலாம்///
    என்ன ஒரு டயலாக் ...
    /ஏதோ சொத்தையே எழுதிக் குடுக்குறாப் போலை ரீல் விட்டியே... இப்ப 150 டாலருக்கு இவ்வளவு யோசனை///

    மாட்டிகிட்டியா மாட்டிகிட்டியா

    ReplyDelete
  2. jokses apart it shows the difference in apporach of police

    ReplyDelete
  3. Hii..

    //நான் : குட் ஈவினிங்! ( இனிமேல் எனக்கு பேட் ஈவினிங் தான். அட! என்ன அட்டகாசமாக சிரிக்கிறார் ) //

    hehe..I felt the same way once vanathy..
    they do smile nicely... righttt??

    sirichittae aappu vachiruvaanga.. ;)
    nice writing pa.

    ReplyDelete
  4. சின்ன‌ விச‌ய‌த்தை கூட‌ அழ‌காக‌ எழுதியிருக்கிறீர்க‌ள்....

    ReplyDelete
  5. வானதி அப்படியே சூழ்நிலையை கண்முன்னாடி நிறுத்தியிருக்கீங்க,நான் சிரிச்சேங்க.அப்புறம் சிந்திச்சேங்க,ஃபேசியல் சலூன் செலவே நம்ம செய்யலையேன்னு.

    ReplyDelete
  6. //இந்த சிரிப்பிற்கு என் சொத்தையே எழுதி வைக்கலாம்.)//
    இமா போலீஸ்ல சேரப் போறேன்ன்ன்ன். ;) அப்பிடியே வாணி வீட்டு ரூட்ல 'ட்ராபிக்' பார்க்கப் போறேன். ;)

    சாதாரணமா நடக்கிற நிகழ்ச்சியை நகைச்சுவை, எரிச்சல், பொறுப்புணர்ச்சி, இயலாமை எண்டு பல விதமான விஷயங்களையும் சேர்த்துச் சொல்லிப் போட்டீங்கள். ரசிச்சன் வாணி. ;)

    ReplyDelete
  7. சாதாரணமா நடக்கிற நிகழ்ச்சியை நகைச்சுவை, எரிச்சல், பொறுப்புணர்ச்சி, இயலாமை எண்டு பல விதமான விஷயங்களையும் சேர்த்துச் சொல்லிப் போட்டீங்கள். ரசிச்சன் வாணி. ;) /// mee too... vaany. Nice story.

    ReplyDelete
  8. நான் கொப்பி ரைட் வாங்கி வச்சிருக்கிறன்ன்ன். க்ர்ர்ர்
    சோம்பேறிப் பூஸ். ;)

    ReplyDelete
  9. எல்கே, மிக்க நன்றி. ம்ம்ம்...நல்ல ஐடியா.
    ஆனந்தி, நீங்கள் டிக்கெட் வாங்கினீங்களா?? அனுபவம் பேசுது. நன்றி.
    நாடோடி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
    ஆசியா அக்கா, நான் எங்கே பேஸியல் எல்லாம் செய்வது. சும்மா கதைக்கு அப்படி எழுதினேன்.
    நன்றி.

    ReplyDelete
  10. ஜெய்லானி, வாங்க. நன்றி.
    இமா, போலீஸா??? அப்ப கான்ஸ்டபிள் அதீஸா? ஐயோ நினைத்துப் பார்க்கவே செம சிரிப்பா இருக்கு. உங்கள் இரண்டு பேருக்கும் என் சொத்தை பிரித்து எழுதி விடுகிறேன். ( இமா, எதற்கும் கவனமா இருங்கோ. அதீஸை முழுக்க நம்ப வேண்டாம். )

    ReplyDelete
  11. மேனகா, நன்றி.
    அதிரா, copyCAT ஆ! நன்றி.

    ReplyDelete
  12. தக்குடு பாண்டி ( அருமையான பெயர்), சிரிப்பிற்கு நன்றி.

    ReplyDelete
  13. வானதி... கடைசில சிரிக்க வச்சுட்டீங்க :) ஹா ஹா.. மனசாட்சி போட்டாரே ஒரு போடு :))

    அதென்னமோ எங்களக் கண்டா மட்டும் சிரிக்க மாட்டேங்கறாங்க.. மூஞ்சிய உர்ருன்னு வச்சிட்டுத் தான் பேசுவாங்க :)

    //நான் கொப்பி ரைட் வாங்கி வச்சிருக்கிறன்ன்ன். க்ர்ர்ர் சோம்பேறிப் பூஸ். ;)// அப்படிப் போடுங்க இமா :))))))

    ReplyDelete
  14. சந்தனா,
    //அதென்னமோ எங்களக் கண்டா மட்டும் சிரிக்க மாட்டேங்கறாங்க.. மூஞ்சிய உர்ருன்னு வச்சிட்டுத் தான் பேசுவாங்க :)//

    உங்கள் ஊரில் போலீஸ் டிப்பார்ட்மென்டுக்கு ஒரு புகார் கடிதம் எழுதி அனுப்புங்கோ...அதுக்கு பிறகு பாருங்கோ....

    மிக்க நன்றி

    ReplyDelete
  15. நல்ல அழகான எழுத்து நடை.. நம்ம ஊர் போலீசா இருந்தா கம்மியா கப்பம் கட்டி எஸ்கேப் ஆகி இருக்கலாம்.. மேக்கப் செலவுகளைக் குறைக்கும் நிலை வந்திருக்காது.. :-)

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!