Thursday, March 18, 2010

சீனிச் சம்பல்


தேவையானவை



வெங்காயம் - 3
புளி -கொஞ்சம்
கறிவேப்பிலை - சிறிது
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
மாசித்தூள்(விரும்பினால்) - 1/2 டீஸ்பூன்
சீனி - 1/2 டீஸ்பூன்
பட்டை - 1 துண்டு
பெப்பர் ப்ளேக்ஸ்(காய்ந்த மிளகாய்) - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு
மஞ்சள் - சிறிது

வெங்காயத்தை நீளவாக்கில் மிகவும் மெல்லியதாக அரிந்து வைக்கவும்.
வெங்காயத்துடன் மிளகாய்த்தூள், உப்பு, பெப்பர் ப்ளேக்ஸ்(dried red chili flakes) , மாசித்தூள் (விரும்பினால்), கறிவேப்பிலை கலந்து வைக்கவும்.
நான்-ஸ்டிக் சட்டியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்க்கவும். பிறகு பட்டை சேர்க்கவும்.
பின்னர் வெங்காயம் சேர்த்து 4 நிமிடங்கள் கிளறவும். புளி( 2 டீஸ்பூன் ) சேர்த்து, அடுப்பை சிம்மரில் விட்டு மூடிவிடவும். இடையிடையே திறந்து கிளறி விடவும்.
10 நிமிடங்களின் பிறகு( வெங்காயம் பொன்னிறமானதும் ) சீனி சேர்க்கவும்.
மேலும் ஒரு 7- 8 நிமிடங்கள்மூடி போடாமல் கிளறி இறக்கவும்.


இது சப்பாத்தி, நூடில்ஸ் க்கு ஏற்ற சைட் டிஷ்.

11 comments:

  1. நல்லாருக்கு வானதி..பேப்பர் பிளேக்ஸ் வீட்டிலே செஞ்சதா, இல்லை ஸ்டோர்ல வாங்கினதா? நெக்ஸ்ட் டைம் சப்பாத்தி செய்யும்போது கண்டிப்பா இந்த சம்பல் செஞ்சுடுவேன். :)

    ReplyDelete
  2. Oh....its pepper flakes..not paper flakes!:) :)

    ReplyDelete
  3. மகி, நானே காய்ந்த மிளகாயை உரலில் போட்டு பொடித்துக் கொள்வேன். நான் பெப்பர் ஃப்ளேக்ஸ் பாவிப்பது குறைவு. இந்த ரெஸிப்பிக்கு மட்டுமே பாவிப்பேன். செய்து 2 வாரம் வரை fridge இல் வைத்து சாப்பிடலாம். நான் புளி பாவிப்பது குறைவு. உங்களுக்கு தேவை எனில் புளியின் அளவைக்கூட்டலாம்.

    ReplyDelete
  4. மகி... இதான் நிஜமாவே 'சீனி' போடற ரெசிபி. நல்லா பார்த்துக்கோங்க. ;)

    வாணி.. மகிஅக்கா புளிக்கு பதிலாக தக்காளி போட்டுக் கொள்ளுவாங்க. ;)

    ReplyDelete
  5. சூப்பர் வாணி இதை நான் கட்டாயம் செய்து பார்த்து சொல்லுரேன். வீட்டில் குழந்தைகள் நலமா?


    பஸ்தா கொண்டு உணவு தயாரிக்கிராங்கலே அதை சொல்ல முடியுமா? அந்த பாஸ்தா கோதுமையா அல்லது மைதாவா? இல்லை வேறு எதில் தயாரிக்கிராங்க தோழி.

    தெரிந்தால் கட்டாயம் பதில் சொல்லவும். யாருக்கு தெரிந்தாலும் பதில் பிலீஸ்.

    ReplyDelete
  6. சூப்பர் சம்பல் வாணி. இதை உள்ளே வைத்து பன் செய்தால் இன்னும் சூப்பர். மாசி அ பொரித்த நெத்தலி கருவாடு சேர்த்ததும் சாப்பிட்டிருக்கிறேன்... அதுவும் சூஊப்பர்.

    ReplyDelete
  7. பிரபாதாமு..pasta வைத்தானே சொல்கிறீங்கள். அதன் பக்கட்டை வாங்கி படித்துப்பாருங்கோ எழுதியிருக்கும். கோதுமை என்றுதான் நினைக்கிறேன், பிரவுண் பாஸ்தாவும் கிடைக்கிறது. முட்டை சேர்த்ததும் கிடைக்கிறது.

    ReplyDelete
  8. பிரபா, பிள்ளைகள் நலம்.நன்றி. பாஸ்தா மைதாவில் தயாரிப்பதும் இருக்கு. ஹோல் wheatல் தயாரிப்பதும் இருக்கு. உங்களுக்கு வேண்டும் என்றால் ரெசிப்பி பிறகு தருகிறேன்.

    ReplyDelete
  9. அதிரா, ம்ம்... கறி பன் நினைக்கவே வாயிலை தண்ணீர் ஓடுது. கனடா போய் வாங்கி சாப்பிட வேணும்.

    ReplyDelete
  10. சமீபத்தில் ஆனியன் தொக்குன்னு ஒண்ணு செய்தேன்,அப்பதான் இந்த ரெசிப்பி செய்து பார்க்கவேணும்னு நினைத்தோமே என்று நினைவு வந்தது. மறுபடி வந்து பார்த்திருக்கேன்,சீக்கிரம் செஞ்சு பார்க்கிறேன் வானதி! :)

    ReplyDelete
  11. மகி, செய்து பாருங்கள் சூப்பரா இருக்கும். என் மகனின் பேவரைட் சைட் டிஷ் இது.

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!