Wednesday, March 17, 2010

கத்தரிக்காய் சாம்பார்

கத்தரிக்காய் சாம்பார்

தேவையானவை



கத்தரிக்காய் - 1
சின்ன வெங்காயம் - 7
புளி
பெருங்காயம்
துவரம் பருப்பு - 1/2 கப்
மைசூர் பருப்பு - 1/2 கப்
மிளகாய் - 3
தக்காளி - 1
கறிவேப்பிலை
கொத்தமல்லி தழை

சாம்பார் பொடிக்கு:
கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
கொத்த மல்லி விதை - 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்தமிளகாய் - 6
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
சின்ன சீரகம்- 1/4 டீஸ்பூன்

தாளிக்க:
கடுகு, சீரகம் - தலா 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை
பருப்புடன் மஞ்சள், உப்பு, பெருங்காயம், சிறிது நெய் சேர்த்து நன்கு குழைய வேக வைத்து, மசித்துக் கொள்ளவும்.
இதனுடன் கத்தரிக்காய்,பச்சை மிளகாய் சேர்த்து வேகவிடவும்.
பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை சிறிது எண்ணெய் விட்டு, சிவக்க வறுத்து, அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த பொடியை பருப்புக் கலவையில் விடவும்.
புளி விடவும்.
தக்காளி, வெங்காயம் சேர்க்கவும்.
பச்சை வாடை போனதும் கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி இறக்கவும்.
இறுதியில் தாளித்துப் போடவும்.
சாம்பார் தயார்.

இட்லி உபயம்: மகி(ஹி)
இந்த சாம்பார் நான் ஒரு வார இதழில் இருந்து கற்றுக் கொண்டேன்.
சிறிது மாற்றங்களுடன் நான் முயற்சி செய்த இந்த ரெசிப்பி என் கணவரின் விருப்பமான டிஷ்.

9 comments:

  1. ம்.. டெய்லி சமைக்கிறதை எல்லாம் இங்க போட்டு வைத்துப் புண்ணியம் கட்டிக் 'கொல்றீங்க'. ;) பொறுங்க, நானும் எல்லாம் பழகி வைக்கிறேன். ;)

    ReplyDelete
  2. இமா, என்ன ஒரே புகையா இருக்கு???.போட்டால் நாங்களும் சமைக்கலாம் தானே.

    ReplyDelete
  3. நல்லாருக்கு வானதி! மசூர் பருப்பும் சேர்த்திருக்கீங்களோ?

    ReplyDelete
  4. Mahi, yes. I forgot. Thanks!!!

    ReplyDelete
  5. வாணி... இதென்ன இது? எப்பூடி இப்பூடியெல்லாம்? “அங்கு” இருக்கும்போது பூனைமாதிரி இருந்ததுபோல தெரியுது.... ஒண்ணொண்ணா பார்க்கிறேன். சாம்பாறு சூப்பர்? உண்மையைச் சொல்லோணும் இவ்வளவு அழகான இட்லி நீங்க அவிச்சதோ? பாபு கேற்றரிங்கில தானே வாங்கினனீங்கள்?:).

    ஏன் நியூப்பக்கம் புகைக்குது?:).

    ReplyDelete
  6. அதிரா, வருகைக்கு நன்றி. என்ன இப்படி கேட்டு விட்டீரகள். இது நானே செய்த இட்லி. மகியின் ரெசிப்பி பார்த்து செய்தேன்.
    ஆமாம்...பூனை அடுப்பங்கரையில் சும்மா படுத்து கிடந்தது. இப்போ நல்ல தெளிவா வந்திட்டுது.சும்மா டமாஷ்...

    ReplyDelete
  7. //இட்லி உபயம்: மகி(ஹி)//ஏன்,ஏன்,ஏன் இந்த கொலை வெறி?? இது உங்களுக்கே ஓவரா இல்லை??:) :D

    கோயில்ல ஒரொரு கட்டடம்/சாமான்கள் மீது எழுதி வைச்சிருப்பாங்க,உபயம் பை ஸோ அண்ட் ஸோ-ன்னு! அது மாதிரியே இருக்கே..எ.கொ.வா.இ?

    ReplyDelete
  8. மகி, சும்மா ஒரு டமாஸ் தான். கொடுமை/வெறி எல்லாம் இல்லை.

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!