Tuesday, February 2, 2010

Corn Soup






சிக்கின் - 500 கிராம்
கார்ன் - 3
காரட் - 1
பீன்ஸ் - 100 கிராம்
ஸ்பினாச் - 1/2 கட்டு
மல்லி விதை - 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி - 1 துண்டு
மிளகு - 1 டேபிள்ஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
வெள்ளை மிளகு - 1 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு

செய்முறை:
சிக்கினை எலும்பில்லாமல் சுத்தம் செய்து வைக்கவும்.
காரட், பீன்ஸ் பொடியாக அரிந்து வைக்கவும்.
சோளத்தை செங்குத்தாக பிடித்து அப்படியே சோள முத்தை மட்டும் கத்தியால் அரிந்து எடுக்கவும்.

இந்த அரிந்த சோளத்தை சட்டியில் போட்டு, அது மூழ்கும் அளவு
தண்ணீர் விட்டு சிறிது உப்பு போட்டு அவிக்கவும். நன்கு அவிந்ததும் இஞ்சி, மல்லி
விதை, மிளகு போட்டு மேலும் 5 நிமிடங்கள் அவிக்கவும்.

பின்பு இஞ்சியை எடுத்து விட்டு, புட் பிராஸஸரில் (Food processor)அரைக்கவும்.
இதை சல்லடையில் வடிக்கவும். மீண்டும் சோளம், மல்லி விதை கலவையை சிறிது தண்ணீர் விட்டு அரைத்து வடிக்கவும்.

தண்ணீரை மட்டும் எடுத்து ஒரமாக வைக்கவும்.

வேறு சட்டியில் சிக்கினை போட்டு, தண்ணீர், ஆலிவ் எண்ணெய், உப்பு போட்டு தண்ணீர் ஓரளவு வற்றும் வரை மூடி அவிக்கவும்.

பின்பு காரட், பீன்ஸ் சேர்த்து 1 கப் நீர் சேர்த்து நன்கு அவிக்கவும்.

காரட், பீன்ஸ் அவிந்ததும் அரைத்து வைத்துள்ள சோளத் தண்ணீரை விட்டு 5 நிமிடங்கள் கொதிக்க விட்டு, ஸ்பினாச் கீரையை அரிந்து போட்டு இறக்கவும்.

பரிமாறும் போது வெள்ளை மிளகு/ கறுப்பு மிளகு தூள் தூவி பரிமாறவும்.

4 comments:

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!