Saturday, February 9, 2013

என் பொருட்கள் ( தொடர்பதிவு )


என் நண்பி ஆசியா அக்கா எழுத அழைத்த தொடர்பதிவு. இப்பெல்லாம் நான் மிகவும் பிஸியோ பிஸி. வேலை, வீட்டு வேலையென்று பம்பரமாக சுழல்வதால் எழுத நேரம் கிடைப்பது குறைவு. ஆனால், ஆசியா அக்கா தேர்ந்தெடுத்த  தலைப்பு மிகவும் வித்யாசமாக இருப்பதால் எழுதியே ஆகவேண்டும் என்று எழுதுகிறேன். சரி இப்ப என்னிடம் இருக்கும், என்னைவிட்டு பிரியாத பொருட்களைப் பார்ப்போம். நிறைய பொருட்கள் இருந்தாலும் எல்லாவற்றையும் இங்கே பட்டியல் இடமுடியாது அல்லவா. படிப்பவர்களுக்கும் இதென்னடா சோதனை என்று நினைச்சாலும்...நீங்க அப்படி நினைத்தாலும் பரவாயில்லை. வாங்கோ.. வந்து பார்த்துவிட்டு கட்டாயம் இரண்டு வார்த்தை சொல்லிட்டு போகவேண்டும்.
முதலாவது இருக்கும் கை கடிகாரம் என் கணவர் எனக்கு 1999 மாசி மாதம், 14ந் திகதி அன்பளிப்பாக கொடுத்தது. அதாவது திருமணத்திற்கு முன்பு. அதை நான் விட்டுப் பிரிவதில்லை. தங்க கலரில் அழகா மின்னும் எந்தப் பொருட்களுக்கும் எப்போதும் மதிப்பு அதிகம் தான் அல்லவா!

அடுத்து இருப்பது ஸ்கார்வ்ஸ். அதுவும் என் கணவர் கொடுத்தது தான். வருடம், திகதி எல்லாம் மேலே கைகடிகாரம் கொடுத்த அதே நாள், திகதி தான். ஒரு நாள் கூட அணிந்ததில்லை. அந்தக் கலர், டிசைன் மிகவும் பிடிக்கும்.


அடுத்து இருப்பது என் மகன். 3 வயதில் எடுத்த படம். இந்த  படம் Hersheyஇல் அவர் வேலை செய்த போது எடுத்த படம். சீ! தூ! நீயெல்லாம் ஒரு அம்மாவா? என்று யாரும் காறித்துப்ப வேண்டாம். அவர் வேலைக்குப் போய் சம்பளமாக பெற்றது ஒரு பை நிறைய ஹேர்ஸி சாக்லேட்டுக்கள் தான். கோகோ பீன்ஸ் வறுத்து, அரைத்து, பட்டர் மிக்ஸ் செய்து, ஒரு மெஸினில் ஊற்றினால் என்று ஏதெதோ செய்யச் சொன்னார்கள் அங்கிருந்தவர்கள். வேலை தொடங்கும் முன்னர் அணிவிக்கப்பட்ட அடையாள அட்டை தான் இது. வேறு ஒரு மெஸின் வழியாக அலுமினிய பேப்பர் சுற்றப்பட்ட சாக்லேட்டுக்கள் வர  அதை பொதியாக கட்டிக் கொடுத்தார்கள்.


அடுத்து இருப்பது பிரேஸ்லட். எனக்கு மிகவும் பிடிக்கும் கலரில். இப்பெல்லாம் தங்க நகைகளை விட இப்படி விலைகுறைவான அணிகலன்கள் தான் மிகவும் பிடிக்கும்.


அடுத்து இருப்பவை என் பிள்ளைகள் வரைந்த ஓவியங்கள். முயல் என் மகளின் கை வண்ணம். என் மகளுக்கு கை வேலைகளில் ஆர்வம் அதிகம். மீதிப்படங்கள் என் மகன் வரைந்தவை. இது வரை பிள்ளைகள் வரைந்தவை நூற்றுக் கணக்கில் இருக்கு. எதையும் குப்பையில் எறிந்ததில்லை. எல்லாவற்றையும் பத்திரமாக வைத்திருக்கிறேன்.


சரி இவ்வளவு நேரமும் என்னிடம் இருந்த பொருட்களைப் பற்றிய சந்தோஷமான விஷயங்களைப் பார்த்தோம். இப்ப என்னிடம் இருக்கும் பொருள்... அதாவது கிட்டத்தட்ட 15 வருடங்களாக இருக்கும் ஒரு நறுமணக் குப்பி பற்றி சொல்லப் போகிறேன். இது என் உறவினர் பெண் அணியும் நறுமணப் பொருள். வாசனை சூப்பராக இருக்கும். அவர் இதை அணிந்து வந்தால் எனக்கு மிகவும் ஆசையாக இருக்கும். என் உறவினர் பெண் வந்தால் வீடு முழுவதும் இனிய நறுமணம் வீசும். அவர் என்னை ஒரு நாள் கடைக்கு கூட்டிச் சென்றார். கடையில் இந்த நறுமணக் குப்பியை வாங்கி என்னிடம் கொடுத்தார். நான் எங்காவது வெளியில் கிளம்பும் போது கொஞ்சமே கொஞ்சம் எடுத்து பூசிக் கொள்வேன். 2001இல் என் உறவினர் பெண் அகால மரணமாகிவிட்டார். 29 வயதில் மரணம். மிகவும் கவலையாக மனமுடைந்து போனேன். அதோடு இந்த வாசனை திரவியம் பூசுவதை நிறுத்திக் கொண்டேன். இந்தக் குப்பியை எறியவும் மனமில்லாமல் எங்கோ ஒரு மூலையில் வைத்துவிட்டேன். ஒரு நாள் அறையினுள் சென்றபோது இனிய மணம் வீசியது. கட்டிலில் என் மகள் இந்தக் குப்பியை எங்கேயோ கண்டுபிடித்து, மூடியினை திறந்து விளையாடிக் கொண்டிருந்தார். அவரிடம் நைஸாக பேச்சுக் கொடுத்தபடி மூடியினை மூடி கண்காணாத இடத்தில் வைத்தபின்னர் தான் நிம்மதியாக இருந்தது.இவை தவிர என் அண்ணா, அப்பா, அம்மா, தங்கை, மாமா, மாமி கொடுத்த பொருட்கள் என்று என் லிஸ்டில் நிறைப் பொருட்கள் உள்ளன. என்னிடம் யார் எதை அன்பாக கொடுத்தாலும் அந்தப் பொருளை வருடக்கணக்கில் வைத்திருப்பேன்.
இந்த தொடர்பதிவை எழுத நான் அழைப்பது அஞ்சு, மகி, அதிரா, இமா, கிரி, ஸாதிகா அக்கா. நேரம் கிடைத்தால் எழுதுங்கள் எல்லோரும். எழுத நேரம் இல்லையென்றால் நான் கோபிக்க மாட்டேன்.
37 comments:

 1. வானதி :))) முதல் பரிசு உங்களுக்கும் கைக்கடிகாரமா :))எனக்கும்தான் ..
  நானும் வச்சிருக்கேன் பத்திரமா ..நிறைய நினைவுகளுடன் கண்டிப்பா எழுதறேன்

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ர்ர்ர்ர் இவ எப்ப வந்தா?:) நான் காணல்லியே:)

   Delete
  2. அஞ்சு, கை கடிகாரம் ஃபேமஸ் தான் போலிருக்கு. எங்கட அஞ்சு தான் எப்பவும் 1st ஆக்கும் அதீஸ். மிக்க நன்றி, அஞ்சு.

   Delete
 2. ஆஆஆஆஆஆஆஅ மீ த 1ச்சு.. அந்த வோச் நேக்குத்தேன்ன்ன்.. ஏனெண்டால் நான் ஒரு பைத்தியம் அதாவது வோச், காண்ட்பாக் கலெக்ட் பண்ணும் பைத்தியமாக்கும்:) அதை ஒரு பதிவாகவே போட இருக்கிறேன்ன்.... சேமிப்பு புதையல்கள் பற்றி அயகாச் சொல்லிட்டீங்க.. ஆனா...

  ReplyDelete
  Replies
  1. முடிவில வச்சிட்டீங்க ஆப்பு:).. முயற்சிக்கிறேன்ன் எப்பவென்றெல்லாம் வாக்கு கொடுக்க மாட்டேன்ன் இப்போ... என்னையும் அழைத்தமைக்கு மியாவும் நன்றி, அதிலயும் அஞ்சுவை மறக்காமல் அழைத்தமைக்கு மியாவும் மியாவும் நன்றி... :))...

   Delete
  2. நானும் அழைத்து இருக்கிறேனே ! பார்க்கலையோ!பின்னூட்டமும் கருத்து கொடுத்திருந்தேனே!

   Delete
  3. என்ன ஆசியா? என்னையா? ஹையோ நான் பார்க்காமல் விட்டுவிட்டேனே... வெரி சொறி இப்போ பார்க்கிறேன்ன்..

   Delete
  4. அதீஸ், எனக்கு கை கடிகாரம், பிரேஸ்லட், மிகவும் மெல்லிய நகைகள் பிடிக்கும். கை பை பெரிய ஈடுபாடு இல்லை. கடைக்கு போனாலும் சும்மா அகப்படுவதை எடுத்துக் கொள்வேன். ப்ரவுன் கலர் தான் பிடிக்கும். போன முறை வாங்கிய பையை நான் வேலை செய்யும் இடத்தில் சூப்பரோ சூப்பர் என்று சொல்வார்கள். அடடா! நான் போனா போகுது என்று வாங்கியதுக்கே இவ்வளவு விசிறிகளா? என்று மலைச்சுப் போனேன்.
   நீங்களும் உங்கள் பொக்கிஷங்களை எழுதுங்கள். படிக்க ஆவலாக உள்ளது.
   மிக்க நன்றி.

   Delete
  5. ஹையோ ஹையோ! ஆசியா அக்கா பூஸாருக்கு கண் கொஞ்சம் பிரச்சினை போலிருக்கு!!!???

   Delete
 3. அட...ஆச்சர்யமா இருக்கே அங்கேயும் கைக்கடிகாரமா...! என் வீட்டம்மாவுக்கும் முதன்முதலாக கொடுத்ததும் கைக்கடிகாரம்தான், பத்திரமா வச்சிருக்காங்க அவங்களும்..!

  ReplyDelete
  Replies
  1. மனோ, உங்களையும் தொடர்பதிவுக்கு அழைத்திருக்கலாம் போல. ஆண்களிடம் பெரிதா என்ன இருக்கப் போகிறது என்று நினைச்சு ஆண்களை அழைக்கவில்லை.
   மிக்க நன்றி.

   Delete
 4. வானதி குட்டீஸின் கைவண்ணம் மிக அழகு ..கிளிப் ஆர்ட் போல அழகா வரைஞ்சிருக்காங்க .
  நானும் என் மகளின் ஆர்ட்ஸ் பத்திரமா வச்சிருக்கேன்

  ReplyDelete
  Replies
  1. அஞ்சு, மிக்க நன்றி. உங்கள் மகளின் கை வண்ணத்தையும் போடுங்கள். பார்க்க ஆவலாக இருக்கு. மிக்க நன்றி.

   Delete
 5. குட்டீஸின் கைவண்ணம் மிக அழகு

  எனது தளத்தில் Passion On Plate contest வைத்திருக்கிறேன்.. உங்களால் முடிந்த சமையல் குறிப்பினை அனுப்பி போட்டியில் கலந்துக்கொள்ளும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  http://www.en-iniyaillam.com/2013/02/announcing-passion-on-plate-giveaway.html

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி.
   கட்டாயம் வருகிறேன். சமைக்க முடிந்தால் கட்டாயம் கலந்து கொள்வேன். எனக்கு இந்த போட்டிகளில் பங்கு கொள்ளும் அளவுக்கு பொறுமை இருப்பதில்லை. முயற்சி செய்கிறேன்.

   Delete
 6. பல பொருட்களை மறக்காமல் வைத்துள்ளீர்கள்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 7. வானதி பகிர்வு மிக அருமை.நம்மிடம் நீண்ட நாட்களாக நிறைய பொருட்கள் இருக்கும்,அனைத்தையும் பகிர்ந்தமைக்கு மகிழ்ச்சி.அந்த வாசனை குப்பி அழகு:( ! இதைப் பார்த்தவுடன் நானும் இன்னும் பல பொருட்களை லிஸ்ட் கொடுத்திருக்கலாமோன்னு நினைக்கிறேன்.சிரமம் பார்க்காமல் அழைப்பை ஏற்று உடனே பகிந்தமைக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான் அக்கா. என்னிடம் இன்னும் நிறைய இருக்கு. என் அப்பா 1998 இல் வாங்கி கொடுத்த சல்வார், எனக்கு மிகவும் உயிர். என் கஸின் ஒரு முறை அதை எடுத்துப் போய்விட்டார். கிட்டத்தட்ட 1 மாசம் கழிச்சு தான் திரும்ப கிடைத்தது. அதன் பிறகு என் கஸின்ஸ் மாற்று ஆடைகள் கேட்டால் அந்த சல்வாரை மட்டும் மறைத்து வைத்துவிடுவேன். என்னா ஒரு வில்லத்தனம் என்று பல்லை நற நறப்பார்கள்.
   மிக்க நன்றி.

   Delete
 8. கைக்கடிகாரமும் புகைப்படமும் நாம் அனைவருமே வருடக்கணக்கில் பயன்படுத்தும் பொருள்... பிரேஸ்லெட், நறுமணக்குப்பி மிக அபூர்வம்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. ஸ்கூல் பையன், வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

   Delete
 9. ஆஹா... எங்க வீட்டிலும் வாட்ச்தான்...டயலில் கல் வைத்தது.... செட்டாக வாங்கியது.... வாட்ச் போடும் பழக்கம் கல்யாணத்திற்குப்பின் குறைந்துவிட்டது.... கடந்த ஓரிரண்டு மாதமாகத்தான் தூசுதட்டி உபயோகித்து வருகிறேன்...பகிர்வுக்கும் நினைவலைகளைத் தட்டிவிட்டதற்கும் நன்றி.

  ReplyDelete
  Replies
  1. என்றும்16, கை கடிகாரம் பொதுவான பொருள் போல இருக்கு. என் அம்மா ஒரு கை கடிகாரம் பல வருடங்களா வைத்திருக்கிறார்.மிக்க நன்றி.

   Delete
 10. ஆண்டு பதினான்கு ஆனாலிம் உங்கள் வாட்ச் மெருகு குலையாமல் உள்ளது வான்ஸ்.

  விலை குறைவாக இருந்தாலும் பிரேஸ்லெட் அருமையாக உள்ளது.

  உங்கள் பிள்ளைகள்ம் வரைந்த ஓவியங்கள் சூப்பர்.தி பாடி சாப் வாசனைத்திரவியம் எனக்குக்கூட மிகவும் பிடிக்கும்,

  உங்கள் அழைப்பையும் தோழி ஆசியா அழைப்பினையும் ஏற்று பதிவெழுதி உள்ளேன் .பாருங்கள் வானதி.

  ReplyDelete
  Replies
  1. ஸாதிகா அக்கா, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

   Delete
 11. ஒவ்வொருவர் பதிவும் ஸ்வாரஸ்யமாய் இருக்கிறது. :) ஆசியாக்கா பதிவைப் பார்த்தேன், அது ஒரு விதம், இப்ப உங்களுது, அடுத்து ஸாதிகா அக்கா வீட்டுக்குப் போறேன். ;)

  நான் என்ன எழுதப் போறேன்னு தெரிலை, இன்னும் பல்பூ:) எரியல, எப்ப எரியப் போகுதுன்னும் தெரியல. நல்ல பகிர்வு வானதி!

  ReplyDelete
  Replies
  1. மகி, எழுத தொடங்கினால் நிப்பாட்ட முடியாது. எங்களை அறியாமல் நிறைய பொருட்கள் வரிசை கட்டி நிற்கும். முடியும் போது எழுதுங்கள்.
   மிக்க நன்றி.

   Delete
 12. ப்ரேஸ்லெட் அப்புறம் உங்க வீட்டு ஜூனியர்ஸ் வரைந்தது எல்லாம் அழகு

  ReplyDelete

 13. அறுசுவையில் உங்களை அறிந்திருகிறேன் இங்கும் உங்கள் பதிவுகள் அறுசுவையாய் இருக் கிறது நான் புதுசு என்னையும் சேர்த்துகொள்வீர்களா உங்கள் நட்புவட்டத்தில்
  இந்த உங்கள் நியாபக சின்ன பதிவு எனக்கும் பல நியாபகங்களை கொடுத்தது உயிரோட்டமுள்ள பகிர்வு

  ReplyDelete
 14. வலைச்சர அறிமுக வாழ்த்துக்கள்...

  Visit : http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_2.html

  ReplyDelete
 15. தல, மிக்க நன்றி.

  மலர் பாலன், வாங்க. அறுசுவையில் இருந்து வரீங்களா? நல்வரவு. நீங்களும் என் நட்பு வட்டத்தில் இணைந்து கொள்ளுங்கள்.
  மிக்க நன்றி.

  குமார், நீண்ட நாட்களின் பின்னர் மீண்டும் பார்க்கிறேன்.மிக்க நன்றி.

  ReplyDelete
 16. உங்கள் வாட்ச் மெருகு குலையாமல் உள்ளது .ஓவியங்கள் சூப்பர்...

  ReplyDelete
 17. இரண்டு மாதங்களுக்கு முன் போஸ்ட் போட்டிருக்கிறீங்கள். இவ்வளவு நாள் வராததுக்கு முதலில் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். ;(

  கைக்கடிகாரம் வடிவா இருக்கு வாணி. எனக்கு ஒவ்வொரு தரம் வாங்கப் போகேக்கயும், "வேணாம். துலைப்பன்," என்று சொல்லுவன். மலிவாக வாங்குவன். கேட்காமல் நல்லதா ஒன்று வாங்கித்தர கவனமா வைச்சிருந்தன். எங்கயோ துணிக்கடைல ட்ரையல் ரூம்ல துணியோட கழற்றிக் கொடுத்துட்டு வந்தாச்சுது. ;(

  ஸ்கார்ஃப் - அழகான டிசைன்.

  ஃபாக்டரி ஐடீ - ;) கவனமா வைச்சிருந்து வளர்ந்தபிறகு காட்டுங்கோ. :)

  ப்ரெஸ்லட் - சூ..ப்பர். பிடிச்சிருக்கு.

  குட்டீஸ் வரைதல் எல்லாமே க்யூட் வானதி. தொடர்ந்து வரையுறாங்கள் என்கிறது சந்தோஷமாக இருக்கு.

  வாசனைத்திரவியம் - நீங்கள் சொன்ன கதை ஹ்ம்! ;( உங்கள் மனநிலை விளங்குது. உங்கள் தோழியின் ஆன்ம இளைப்பாற்றிக்காக என் பிரார்த்தனைகள்.

  //என்னிடம் யார் எதை அன்பாக கொடுத்தாலும் அந்தப் பொருளை வருடக்கணக்கில் வைத்திருப்பேன்.// So sweet. :)

  ;) அழைப்புக்கு அன்பு நன்றிகள் வாணி. இப்பதான் இதைக் கவனிச்சன். நிச்சயம் இன்னும் நான்கைந்து நாட்களுக்குள் தொடருவேன்.

  ReplyDelete
 18. இமா, உங்கள் பக்கம் வந்து நான் தான் சொல்லியிருக்க வேண்டும். எனவே பிழை என் மீது தான்.

  நான் கை கடிகாரம் கட்டுவது இப்பெல்லாம் குறைவு. ஏனோ பிடிப்பதில்லை. பிரேஸ்லட் தான் எப்பவும்.

  ஃபாக்டரி ஐடி இப்ப என் மகனுக்கு காட்டினால் சிரிப்பார். குழந்தைதனமாக இருக்கிறாராம்!!!!
  இப்பவும் என் மகன் நிறைய வரைவார். எல்லாம் கவனமாக இருக்கு. போட்டோ எடுக்க நேரம் வருவதில்லை.
  முடிந்தால், நேரம் இருந்தால் தொடருங்கள்.
  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்.

  ReplyDelete
 19. வான்ஸ்... வாங்கோ... ;) http://imaasworld.blogspot.co.nz/2013/04/blog-post_20.html

  ReplyDelete
 20. வாட்ச் பிரேஸ்லேட், ஸ்கார்ஃப் எல்லாம் ரொம்ப நல்ல இருக்கு
  உங்க குட்டீஸ் வரைந்த படங்களும் மிக அழகு

  ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!