Monday, February 27, 2012

50 கிலோ தாஜ்மகால் இப்போ...

ஐந்து வருடங்களின் பின்னர் ஊருக்கு வந்த சந்தோஷம் மனைவி ருக்மணியின் முகத்தில் கொஞ்சம் கூட இருக்கவில்லை. எதையோ பறி கொடுத்தவள் போல இருந்தாள்.என் தங்கையின் திருமணத்திற்கு கிட்டத்தட்ட 400 பேராவது வந்திருந்தார்கள். மகிழ்ச்சியாக இருக்க வேண்டியவள் ஏன் இப்படி இருக்கிறாள் என்று கோபம் வந்தது கணேஷுக்கு.

ஏன் ருக்கு, என்ன நடந்தது? ஏன் இப்படி சோகம்? என்றான் மனைவியிடம்.
அவள் பதில் சொல்ல முன்னர். கோபி சித்தப்பா வந்தார்.
கணேஷ், எப்படி இருக்கிறாய்? உன் மனைவி வரவில்லையா?, என்றார்.
கணேஷ் பக்கத்தில் இருந்த ருக்மணியைக் காட்டினான். கோபி சித்தப்பா ஏதோ உலக அதிசயத்தைக் கண்டவர் போல விழிகள் விரிய சில நிமிடங்கள் நின்ற பின்னர் கடந்து போனார்.
ருக்மணியின் கன்னங்களில் கண்ணீர் வழிந்தது.
கணேஷ், வாங்க ஊருக்கே திரும்ப போகலாம். வந்ததிலிருந்து எல்லோரும் என்னை வெறுப்பேத்திக் கொண்டு இருக்கிறார்கள். நான் என்ன செய்வேன். என் உடம்பு வாகு அப்படி. சும்மா பால் குடிச்சாலே 1 கிலோ ஏறுது. உங்க வீட்டு வாண்டிலிருந்து பெரிசு வரை எல்லோரும் என் உடம்பினை நக்கல் செய்கிறார்கள். இப்ப கூட பாருங்க உங்க சித்தப்பாக்கு என்னை அடையாளம் தெரியவில்லை, என்றாள் சிவந்த முகத்தோடு.

அப்படி இருக்காது ருக்கு. நீ முன்பு இருந்ததை விட இப்ப இன்னும் கூடுதலாக அழகா இருக்கிறாய் அல்லவா.... என்று தொடர்ந்த கணவனை எரித்து விடுவது போல பார்த்தாள்.

நீங்க இங்கேயே இருங்கள். நான் போகிறேன், என்று கிளம்பிய மனைவியை நிப்பாட்டுவதற்குள் பிராணன் போய்விட்டது கணேஷுக்கு.
அதன் பிறகு மனைவியை விட்டு எங்கேயும் நகராமல் அருகிலேயே நின்றான்.

திருமணம் ஆகிய போது ருக்மணியும் 50 கிலோ தாஜ்மகால் போல் தான் இருந்தாள். வெளிநாடு போன பின்னர் கிட்டத்தட்ட 25 கிலோ ஏறிவிட்டது உண்மைதான். எப்போதும் ருக்மணியின் அருகிலேயே இருந்தமையால் அவளின் எடை ஒரு பெரிய பிரச்சினையாக தெரியவில்லை. இப்படி எங்காவது கிளம்பி வந்தால்தான் விளங்குது. ஒரு சிலருக்கே ருக்மணியை அடையாளம் தெரிந்தது. பலருக்கு இவளை அடையாளம் தெரியவில்லை. வலிந்து புன்னகைத்தபோதும் விலகிச் சென்றார்கள். ஒரு கட்டத்தின் பின்னர் அழுகை மட்டுமே மிஞ்சியது.

ஏம்பா கணேஷ், உன் மனைவி உனக்கு சாப்பாடு தர்றாளா இல்லையா?, என்று இவனின் ஒன்றுவிட்ட பாட்டி கேட்டபோது, சுற்றும் முற்றும் பார்வையினை ஓடவிட்டாள் ருக்மணி. ஏதாவது கையில் அகப்படுமா என்பது போல பார்த்தாள்.
பாட்டியை அங்கிருந்து அனுப்புவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.
கிழடு மட்டும் இன்னும் இங்கு ஒரு 1 செக்கன்ட் நின்றிருந்தால் மண்டையை பிளந்திருப்பேன், என்றாள் ருக்மணி.
மனைவியை சமாதானப்படுத்தி, வீட்டுக்கு கூட்டிக் கொண்டு வருவதற்குள் வாழ்க்கை வெறுத்துப் போனது.

ஊருக்கு போனதும் இவளை ஒரு ஜிம்மில் சேர்த்து விட்ட பிறகு தான் மறுவேலை என்று நினைத்துக் கொண்டான்.
கணேஷ், நீங்களும் என்னை வெறுக்கிறீங்க இல்லையா?, என்றாள் ருக்கு. இப்பவே உங்களுக்கு வேறு ஒரு பெண் பார்க்கச் சொல்லுங்க. நான் எங்கையாவது போய்த் தொலைகிறேன், என்று தொடர்ந்தாள் ருக்கு.
ருக்கு, ஊருக்கு போனதும் உன்னை ஜிம்மில் சேர்த்து விடுகிறேன். இப்ப அழ வேண்டாம் என்றவனை இடைமறித்தாள்.
அப்ப நீங்களும் ஒத்துக் கொள்கிறீங்களா நான் குண்டு என்பதை. நான் இப்பவே எங்காவாது தொலைந்து போகிறேன், என்றாள்.

கடவுளே! என்று மனதினுள் நினைத்துக் கொண்டான்.

அந்த நேரம் கணேஷின் தங்கை சுவர்ணா வந்தாள், அண்ணி, உங்களை பெரும்பாலும் யாருக்கும் அடையாளமே.... என்று முடிக்கும் முன்னர் கணேஷ் அவளை அங்கிருந்து விரட்டி விட்டான். இருக்கிற பிரச்சினை பத்தாது என்று இவள் வேறு எதுக்கு என்று ஆத்திரம் வந்தது.
சுவர்ணா வசனத்தை முடிக்காவிட்டாலும் ருக்கு இறுதி வார்த்தையினை அவளே போட்டு நிரப்பிக் கொண்டாள். அழுகை இன்னும் கூடியது.


இந்த சம்பவத்தின் பிறகு ருக்குவிடம் பழைய கலகலப்பு காணாமல் போனது. ஏதோ கடமைக்கு இருப்பவள் போல இருந்தாள்.
ஊருக்கு போகும் நாளும் வந்தது. இவர்களை வழியனுப்ப ஒரு பெரிய கூட்டமே வந்திருந்தது.
எல்லோரிடம் விடைபெற்று காரில் ஏறி அமர்ந்த பின்னர் ருக்மணியின் பெரியப்பா, பெரியம்மா இருவரும் ஒரு பெரிய பொதியுடன் வந்தார்கள்.
எங்க ருக்குக்கு வழியில் பசிக்குமே அதுக்கு தான் இந்த தின்பண்டங்கள் எல்லாம் வீட்டில் செய்து கொண்டு வந்தோம் என்றார்கள்.
பையினுள் முறுக்கு, சீனிப்பணியாரம், அதிரசம் இப்படி ஏகப்பட்ட தின்பண்டங்களை கண்டதும் ருக்குவின் முகத்தில் ஒரு மின்னல்.

பையினை தன் பக்கத்தில் வைத்துக் கொண்டாள். ஊர் போய் சேரும் வரை அவளின் வாய் ஓயப்போவதில்லை.

பையினை தூக்கி எறிய வேண்டும் போல ஆத்திரம் வந்தது கணேஷுக்கு. அடக்கிக் கொண்டான்.

இவ்வளவு நாட்களா.. இல்லையில்லை வருடங்களா இவளின் எடை பற்றி நான் கவலைப்பட்டதில்லை. இப்ப யாரோ சொன்னதும் எனக்கும் அது ஒரு பெரிய பிரச்சினையாக மாறி, விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. கூடவே இருந்து குடும்பம் நடத்திய நான் அல்லவா மனைவியின் நலனில் அக்கறை காட்டி இருக்க வேண்டும். இப்ப யாரோ சொன்னார்கள் என்பதுக்காக நான் அவளை வெறுப்பது நியாயம் இல்லை. ஊருக்கு போனதும் இருவருமே ஜிம்மில் இணைந்து கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

ஒரு சிறுமி போல பொதியினை அணைத்துக் கொண்டே தூங்கி விழுந்த மனைவியை பார்த்து மனதினுள் சிரித்துக் கொண்டான்.


( குறிப்பு: 50 கிலோ தாஜ்மகாலாக இருந்து 80 கிலோவாக மாறிய அனைவருக்கும் இந்தக் கதை சமர்ப்பணம். )

43 comments:

 1. அவ்வ்வ்வ்வ்வ்வ்... மீ தான் 1ஸ்ட்டு:))

  ReplyDelete
 2. //( குறிப்பு: 50 கிலோ தாஜ்மகாலாக இருந்து 80 கிலோவாக மாறிய அனைவருக்கும் இந்தக் கதை சமர்ப்பணம். )//

  ஐஐஐ... அப்போ இதெல்லாம் வான்ஸ்க்கு.. ஜெய்க்கு, மகிக்கு அஞ்சுவுக்கு கிரிஷாவுக்குத்தான்.. எனக்கு இல்லை:)))

  ReplyDelete
 3. //என்று தொடர்ந்த கணவனை எறித்து விடுவது போல பார்த்தாள்.//

  றீச்சர் ஓடிவாங்க.. ஸ்பெல்லிங் மிசுரேக்கூஊஊஊஊ:))).

  ஹா..ஹா...ஹா.. ஊரில நடக்கும் கதை:)).

  //ஊருக்கு போனதும் இருவருமே ஜிம்மில் இணைந்து கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.///

  எல்லோரும் நினைப்பதுதான் மனதில்:)).. குண்டுதான் அழகாம் வான்ஸ்ஸ்ஸ்... அதனாலதான் நான் குண்டாக ட்ரை பண்றேன்:).

  ReplyDelete
 4. //ATHIRA SAID அவ்வ்வ்வ்வ்வ்வ்... மீ தான் 1ஸ்ட்டு:))//

  ஐஐஐ... அப்போ இதெல்லாம் வான்ஸ்க்கு.. ஜெய்க்கு, மகிக்கு அஞ்சுவுக்கு கிரிஷாவுக்குத்தான்.. எனக்கு இல்லை:)))//

  அப்படியே இருக்கட்டும் பூஸ் . ஆனாலும் அந்த லிஸ்டிலும் நீங்க தான் ஃபர்ஸ்டு .ஓகே

  ReplyDelete
 5. கதை நல்லா இருக்கு வானதி .ஆனா நம்ம மக்கள் கொஞ்சம் கூட மோசம்
  விவஸ்தையில்லாமல் நேருக்கு நேர் சொல்லுவார்கள் .
  அதிக அளவு சந்தோஷமா இருந்தாலும் உடம்பு பூசினாற்போல் வரும் .

  ReplyDelete
 6. இன்னொரு விஷயமும் கவனிக்கணும் ,குறிப்பா வெளிநாட்டில் நம்மூர் ஆட்களுக்கு வியர்ப்பதில்லை .வியர்தாலே பாதி கொழுப்பு குறையும் .
  ஒரு நண்பர் அவர் மனைவியின் முன்பே எங்களிடம் இப்படி சொன்னார் //இவ விரதம்லா இருந்தா அப்படியும் குண்டாதானிருக்கா இனி உருட்டி விட வேண்டியதுதான்// .நான் மனசுக்குள் பாலசந்தர் பட ஹீரோயின் மாதிரி அந்த மனிதரை மிதி மிதி என்று மிதிச்சுட்டேன் கற்பனையில் .

  ReplyDelete
 7. //கூடவே இருந்து குடும்பம் நடத்திய நான் அல்லவா மனைவியின் நலனில் அக்கறை காட்டி இருக்க வேண்டும்//

  அதானே!! ஆண்களின் நலனில் நாம் காட்டும் அக்கறையை அவர்களும் நம்மிடத்தில் காட்டவேண்டுமல்லவா?

  :-))))))

  ReplyDelete
 8. னைவருக்குமான பிரச்சனையை
  நகைச்சுவை மிளிர சொல்லிப் போனவிதம் அருமை
  இறுதியாக முடித்தவிதம் மனம் கவர்ந்தது
  மனம் கவர்ந்த அருமையான பதிவு
  இதுபோல் அதிக இடைவெளிவிடாமல்
  வாரம் ஒரு பதிவாவது தரவும்
  அன்புடன்...

  ReplyDelete
 9. குண்டாக இருந்தால் இத்தனை சங்கடங்களா!!!

  நான் மனசுக்குள் பாலசந்தர் பட ஹீரோயின் மாதிரி அந்த மனிதரை மிதி மிதி என்று மிதிச்சுட்டேன் கற்பனையில் .//

  ஏஞ்சலின் உங்கள் வரிஅக்ளைப்பார்த்து சிரித்து முடியலே

  ReplyDelete
 10. அதீஸ், நீங்களே பர்ஸ்ட் டூடூன்னு சொல்லி எங்களையெல்லாம் பின்னுக்கு தள்ளிட்டீங்க.

  நீங்க ஓடி ஒடி ( மஞ்சள் ரோஸ் பக்கம் ) கமன்ட் போடுறதை பார்த்தா உங்களுக்கு வெயிட் பிரச்சினை.... இல்லை நான் மூச்....
  குண்டாக இருந்து கொண்டு எதுக்கு இன்னும் ட்ரை பண்ணனும். ஹையோ! இன்று என் ராசி பலனில் என்ன போட்டிருக்கு என்று போய் பார்க்கோணும்.
  மிக்க நன்றி, அதீஸ்.

  ReplyDelete
 11. அஞ்சு, உண்மை தான். அளவுக்கதிகமான சந்தோஷம் உடம்புக்கு நல்லதில்லையோ?
  ஊரில் இருந்தவரைக்கும் எனக்கு வியர்ப்பது அதிகம். இங்கு வியர்ப்பது குறைவு தான்.
  விரதம் இருந்த பின்னர் அதிகமாக சாப்பிடுவார்கள் என்றே நினைக்கிறேன். அதைவிட அளவாக சாப்பிடுவது நல்லது.
  உங்க கற்பனை மிதி நல்லா இருக்கே.
  மிக்க நன்றி.

  ReplyDelete
 12. ஹூசனம்மா, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  ரமணி அண்ணா, முயற்சி செய்கிறேன். மிக்க நன்றி.

  ReplyDelete
 13. ஸாதிகா அக்கா, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 14. வானதி அக்கா நீங்க எங்கோ போயிட்டீங்க
  செம செம செம
  நிஜம் கதை
  ஆமா இவங்க எல்லாம் விட எல்லாருமே எப்போ அதிக குண்ட அகிடினம்

  ReplyDelete
 15. அப்படியே இருக்கட்டும் பூஸ் . ஆனாலும் அந்த லிஸ்டிலும் நீங்க தான் ஃபர்ஸ்டு .ஓகே//
  correcta choneenga anju akka.

  ReplyDelete
 16. எல்லோரும் நினைப்பதுதான் மனதில்:)).. குண்டுதான் அழகாம் வான்ஸ்ஸ்ஸ்... அதனாலதான் நான் குண்டாக ட்ரை பண்றேன்:).

  February 27, 2012 8:50 AM//

  avv WHY TRY NO NO TRY..JUST YOU ALREADY LIKE THIS ENDRU yaaro chonnaga..

  ReplyDelete
 17. மஞ்சவனப்பதி முருகா... இங்கின யாருமே நல்லவிங்க இல்ல:)) எல்லோரும் பொய் சொல்லீனம்... எக்ஸப்ட் பூஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)).

  ReplyDelete
 18. எத்தனை நாளா அவரையே அதாவது அவர் mrs வள்ளியையே ஏமாதிட்டிருக்கீங்க ஐந்து பவுன் இருபத்துநாலு கேரட்ல செயன போடுங்க
  இல்லன்ன அவ்ளோதான்

  ReplyDelete
 19. சிவா, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
  பூஸார் இதை படித்திட்டு ஏதோ கமன்ட் வேறு போட்டிருக்கிறார். எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பார்களே அது போல.

  ReplyDelete
 20. மாதவி, மிக்க நன்றி.
  ஏஞ்சலின், செயின் இல்லைப் போல. இனிமே தான் செய்யணுமாம்.
  கல்யாணி கவரிங்க் செய்னும் நல்லா இருக்குமாம். என்ன வள்ளி குளிக்கும் போது கழட்டி பத்திரமா வைக்க வேணும்.

  ReplyDelete
 21. இதோ வந்துட்டேன்ன்ன்ன் யாரு யாரு என்னைய ஐம்பது கிலோ தாஜ்மகால்ன்னு கூப்பிட்டது . போட்டோ கூட நான் போட்டதில்லையே எப்படி வான்ஸ் உங்களுக்கு மட்டும் நான் 50 kg தாஜ் மஹால் ன்னு தெரிஞ்சுது ?? இருக்கட்டும் தாங்க்ஸ்

  ReplyDelete
 22. //ஐஐஐ... அப்போ இதெல்லாம் வான்ஸ்க்கு.. ஜெய்க்கு, மகிக்கு அஞ்சுவுக்கு கிரிஷாவுக்குத்தான்.. எனக்கு இல்லை:))) //


  //50 கிலோ தாஜ்மகாலாக இருந்து 80 கிலோவாக மாறிய அனைவருக்கும் இந்தக் கதை சமர்ப்பணம். //


  வான்சுக்கும் பூசுக்கும் கர்ர்ரர்ர்ர் ! நான் எல்லாம் 54 கிலோவாக இருந்து பதினோரு வருஷம் கழிச்சு 59 - 60 கிலோவுக்கு நடுவில் அல்லாடிகிட்டு இருக்கேன் என்னைய போயி 80 kilo கர்ர்ரர்ர்ர்ர்

  ReplyDelete
 23. //அதனாலதான் நான் குண்டாக ட்ரை பண்றேன்:).// :)) :)) :))

  எலும்பும் தோலுமா பூச கற்பனை பண்ண முடியலையே ???

  ReplyDelete
 24. //ஒரு நண்பர் அவர் மனைவியின் முன்பே எங்களிடம் இப்படி சொன்னார் //இவ விரதம்லா இருந்தா அப்படியும் குண்டாதானிருக்கா இனி உருட்டி விட வேண்டியதுதான்//


  இப்படி குறை சொல்லாமல் மனைவியின் உடல் எடையை குறைக்க ஏதாவது ஆக்க பூர்வமா செஞ்சா மனைவியும் அழகா இருப்பாங்களே?  எல்லா ஆண்களையும் குறை சொல்ல முடியாது ஏன்னா எங்க நண்பர்கள் வட்டத்தில் பல ஆண்கள் (என் வீ.கா உட்பட) குழந்தைகள நாங்க பார்த்துக்கிறோம் நீ ஜிம் போயிட்டு வா அப்படின்னு அனுப்புபவர்களும் இருக்காங்க. இதுவும் மனைவி மேல் இருக்கும் காதல் தான் ஏன்னா எடை கூடுறதனால எவ்ளோ வியாதி எல்லாம் வருது

  ReplyDelete
 25. //avv WHY TRY NO NO TRY..JUST YOU ALREADY LIKE THIS ENDRU yaaro chonnaga..//


  சிவா வுக்கு நேரம் சரி இல்லையாம் வான்ஸ் பூஸ் கண்ணில் இது பட முன்னே கிழ்ழிச்சுடுங்க :))

  ReplyDelete
 26. நான் இப்பவெல்லாம் கறுப்புக் கண்ணாடியைக் கழட்டுவதே இல்லை:), “தீயனவற்றைப் பார்க்காதே” என அம்மம்மா சொல்லித்தந்தவ:).

  ReplyDelete
 27. :)
  நான் எந்தக்காலத்திலும் 50 கிலாவா இருந்ததும் இல்லே,80கிலோவா மாறவும் இல்லே! ஸோ மீ நாட் இன் தி லிஸ்ட் யா!

  காமெடியா கதைனு ஒரு நிஜத்தைச் சொல்லிட்டீங்க! இருந்தாலும் ருக்குவின் கணவன் உட்பட எல்ல்ல்ல்ல்லாருமே இப்பூடி இங்கிதம் இல்லாமப் பேசுவது டூ மச்சு! :))))

  ReplyDelete
 28. //நான் எந்தக்காலத்திலும் 50 கிலாவா இருந்ததும் இல்லே,80கிலோவா மாறவும் இல்லே! ஸோ மீ நாட் இன் தி லிஸ்ட் யா! //


  அப்படீன்னா ஒரு அறுபது எழுபது கிலோ இருப்பீங்களோ ? இப்படி மொட்டையா சொன்னா டவுட்டு வருதில்லே ஹீ ஹீ :)


  //எல்ல்ல்ல்ல்லாருமே இப்பூடி இங்கிதம் இல்லாமப் பேசுவது டூ மச்சு! :))))//

  அந்த எல்லல்ல்லாரும்ம்ம்ம் யாரு யாருன்னு வரிசைபடுத்தி சொல்லிட்டீங்கன்னா நான் கொஞ்சம் நிம்மதியா போய் தூங்குவேன் :))

  ReplyDelete
 29. மிக அழகான கதை வானதி! தங்கள் தங்கள் மனைவிமாரின் உடல்நலனில் அக்கறை செலுத்துவது ஒவ்வொரு புருஷனதும் கடமை! இதனை அழகாக விபரித்துள்ளீர்கள்!

  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 30. அவ்வ்வ்வ்வ்வ்வ்... மீ தான் 1ஸ்ட்டு:))/////

  அட, எங்க போனாலும் இந்த பூஸாரின் தொல்லையா இருக்கே! அவ்வ்வ்வ்வ்வ்வ்!

  ReplyDelete
 31. அட்டகாசம், எங்க டீம்லயும் ரெண்டு பேரு இருக்காங்க!!

  ReplyDelete
 32. //
  ஐஐஐ... அப்போ இதெல்லாம் வான்ஸ்க்கு.. ஜெய்க்கு, மகிக்கு அஞ்சுவுக்கு கிரிஷாவுக்குத்தான்.. எனக்கு இல்லை:)))//


  80 கேஜியில ஒரு வசதி இருக்கு யாருமே இங்கே சொல்லலை...நல்லா குழம்பிகிட்டு இருங்க ..பிறகு வரேன்

  ReplyDelete
 33. //
  ( குறிப்பு: 50 கிலோ தாஜ்மகாலாக இருந்து 80 கிலோவாக மாறிய அனைவருக்கும் இந்தக் கதை சமர்ப்பணம். //

  ஆ......ஊ..........ஈ...........ஆ.......

  அழுவாச்சி அழுவாச்சி :'( :'( :'(

  ReplyDelete
 34. //அட்டகாசம், எங்க டீம்லயும் ரெண்டு பேரு இருக்காங்க!! //

  ஏலேய்... உன்கிட்ட கேட்டாய்ங்களாக்கும் :'( :'(

  ReplyDelete
 35. இந்தக் கதை எனக்கு சமர்ப்பணம் இல்லை. நான் இன்னும் ஐம்பதை எட்டவில்லை.

  இது புனைகதை அல்ல. எங்கோ பார்த்த உண்மைக் கதைதானே?

  //ஆமா இவங்க எல்லாம் விட எல்லாருமே எப்போ அதிக குண்ட அகிடினம் //
  என்ன சொல்றார் சிவா? ஒண்டும் விளங்கேல்ல.

  ReplyDelete
 36. நகைச்சுவை மிளிர எழுதியிருக்கும் கதை அழகு!!

  ReplyDelete
 37. ஐயையோ ... நானும் ஊருக்கு போகயிருக்கேனே.... இப்டி ஒரு குண்டை போட்டுட்டீங்களே.... பேசாம வீட்லயும் பர்தாவ போட்டு சமாளிச்சிட வேண்டியதுதான். ;-))


  //ஏம்பா கணேஷ், உன் மனைவி உனக்கு சாப்பாடு தர்றாளா இல்லையா?, /// இப்படியெல்லாம் யாரும் கேட்காமல் இருப்பதற்கு ஒரு யோசனை வச்சிருக்கேன்... அத.... என் ப்ளாக்கில் போடுறேன் விரைவில்... (ஹி..ஹி..பதிவு தேற்றவேண்டாமா?! ;-)))

  ReplyDelete
 38. ஆஹா இப்படி ஒரு கதை ஓடிகிட்டு இருக்கா? இங்கே,இந்த ரீடிங் லிஸ்ட் தெரியாமல் போவதால் என் கண்ணில் பலரின் பதிவுகள் எட்டாமல் போய்விடுகிறது.திருமணமாகும் பொழுது 44 இப்ப 64 அப்ப எனக்கும் இந்த கதை சமர்ப்பணமா?

  ReplyDelete
 39. //கீழ பார்த்தனா.. எங்கட வான்ஸ் ஐயும் அறிமுகப்படுத்தியிருக்கிறீங்க, அதைப் பார்த்ததும்,.. என் சந்தோசமெல்லாம்.... பொசுக்கெனப் போயிட்டுது:)))[///  வான்ஸ் என்ன நீங்க பூசார் பாட்டுக்கு இந்த மாதிரி கமெண்ட் போட்டிட்டு பயப்புடற மாதிரி நடிச்சுகிட்டு திரியுறாங்க. உங்க கண்ணுல இது படவே இல்லையே. அதுதான் ஏதோ என்னால முடிஞ்சது ஹீ ஹீ :)) போய் என்னன்னு கேழுங்க

  ReplyDelete
 40. நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

  நன்றி
  யாழ் மஞ்சு

  ReplyDelete
 41. கருத்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றிகள்.

  ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!