Wednesday, June 22, 2011

கயல்விழி என்னை மன்னித்து விடு

மதுமிதா கடிகாரத்தை பார்த்தாள். நேரம் அதிகாலை 3 மணி என்று காட்டியது. கணவனை இன்னும் காணவில்லை. எங்கே போயிருப்பான் வசந்த் என்று நினைத்துக் கொண்டாள். கனடாவின் ஏதோ ஒரு முக்கியமான இடத்தில் இருக்கு துரித உணவகத்தில் இரவு 2 மணி வரை வேலை. அது எந்த இடம் என்பது மதுமிதாக்கு தெளிவாக தெரியவில்லை. வசந்தும் அவளுக்கு சொன்னதில்லை. வெளிநாடு வந்து கிட்டத்தட்ட 11 மாதங்கள் ஓடி விட்டன. இவளை ஏதோ ஒரு ஜந்து போல கூட அவன் மதிப்பதில்லை. கட்டிய பாவத்திற்கு ஒரு வேளை சாப்பாடு மட்டுமே கிடைத்தது. வீட்டு வாடகை, ஊரில் அவன் அம்மாக்கு பணம் அனுப்பியது போக பெரிதாக பணம் மிஞ்சுவதில்லை. அவன் துரித உணவகத்தில் வேண்டிய அளவு சாப்பிட்டுட்டு வீடு வருவான். இவளிடம் என்ன சாப்பிட்டாய் என்று நாசூக்காக கூட விசாரிக்க மாட்டான். ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தாலும் போக போக பழகிவிட்டது.

இவளின் திருமணம் நடந்ததே ஒரு அதிசயம். இவளின் தந்தைக்கு ரோஷம் நிறைய இருந்தது ஆனால் பணம் இருக்கவில்லை. இவளின் காதல் விடயம் அப்பாவிற்கு தெரிய வந்ததும் கோபமாகி கத்தி, கூப்பாடு போட்டார். கல்லூரியில் முதல் வருடம் படித்துக் கொண்டிருந்த போது காதலும் வந்து தொலைத்து விட்டது. கோயிலில் பூசாரியாக இருந்த அப்பாவிற்கு காதல் விடயம் தெரிய வந்ததும் எகிறினார். இவளின் படிப்பிற்கு தடை போட்டார். இவரின் தூரத்து உறவினர் வலிய வந்து பெண் கேட்டார்கள். மாப்பிள்ளை கனடாவில் பெரிய உத்தியோகம் என்றார்கள். இவளை எப்படியாவது தள்ளி விட்டால் போதும் என்ற நோக்கத்தில் இருந்தவர் தீர விசாரிக்காமல் திருமணத்திற்கு ஏற்பாடுகள் செய்தார்.

மாப்பிள்ளை வந்து இறங்கினார். பார்த்த உடனே விளங்கியது அவர் ஒன்றும் பெரிய கெட்டிக்காரன் இல்லை என்பது. பேஸ்து அடிச்சவர் போல பேந்த பேந்த விழித்துக் கொண்டிருந்தார். மதுமிதாக்கு அழுகை வந்தது. காதலனும் எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்திவிட்டு வேறு ஊருக்கு போய்விட்டான். அதோடு இவளை வைத்து காப்பாற்ற அவனிடம் பணமோ அல்லது வேலையோ இருக்கவில்லை. தலையெழுத்து என்று மனதை கல்லாக்கி கொண்டாள்.

வெளிநாடு வந்த நாட்களில் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போலிருந்தது. வீட்டில் மீன், இறைச்சி, முட்டை என்று எல்லாமே வெளுத்துக் கட்டினான் வசந்த். அப்பாவை நினைக்கவே ஆத்திரமாக வந்தது மதுமிதாக்கு. வசந்த் சாப்பிடும்போது புகைப்படம் எடுத்து அப்பாவுக்கு அனுப்பி வைத்தாள். உங்கள் மருமகனின் யோக்கியதை இப்ப விளங்குதா என்று கடிதமும் வைத்து அனுப்பினாள். அப்பா எழுதிய கடிதத்தை படிக்காமலே குப்பையில் போட்டாள். வசந்த் குடிகாரன் மட்டுமல்ல போதைப் பழக்கமும் இருந்தது நாளடைவில் தெரிய வந்தது. ஏதோ ஒரு வெண்மை நிற பொடியினை உறிஞ்சியோ அல்லது ஊசி மூலம் போதை ஏற்றிக் கொள்வான்.

அதிகாலை 4 மணி அளவில் கதவு திறக்கு சத்தம் கேட்டது. வசந்த் உள்ளே வருவது தெரிந்தது. அவன் மட்டுமல்ல கூடவே 4 பேர் வாசலில் நின்றார்கள். மதுமிதா அறையினுள் போய் பூட்டிக் கொண்டாள். வந்தவன் சிறிது நேரம் இருந்து விட்டு, மீண்டும் வெளியே கிளம்பிவிட்டான். அவன் வெளியே கிளம்பிய பின்னர் தான் அவனிடம் பணம் கேட்க வேண்டும் என்று ஞாபகம் வர வெளியே ஓடினாள். அதற்குள் அவன் வெகுதூரம் போயிருந்தான். நாளைக்கு சாப்பாட்டிற்கு என்ன செய்வது என்று யோசனையில் திரும்பி நடந்தாள். அந்த அடுக்கு மாடிக் குடியிருப்பின் நீளமான வராந்தாவில் நடந்து, இடது பக்கம் திரும்பியவள் யார் மீதோ இடிபட்டு கீழே விழுந்தாள்.

பயத்துடன் அந்த ஆளை நோக்கினாள்........

தொடரும்

20 comments:

 1. //பயத்துடன் அந்த ஆளை நோக்கினாள்........

  தொடரும்//
  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அதெதுக்கு முடிவில வந்து தொடரும்ம்ம்ம்ம்ம் என்று போடுறாங்க?:)) ஆரம்பத்திலயே போட்டிருந்தால், அடுத்த தொடரும் வரட்டும் படிச்சிடலாம் என விட்டிருப்பேன்... இப்பூடி டென்ஷனாக்கிட்டீங்களே வான்ஸ்ஸ்:))).

  இடிபட்டது காதலரோ?:)))) என்ன கொடுமை இது...

  ReplyDelete
 2. வெளிநாட்டு மாப்பிள்ளை என்றதும், சில பெண்கள், விரும்பிய உள்ளூர் காதலனை விட்டுவிட்டு வந்தகதை நானும் அறிந்து வேதனைப்பட்டிருக்கிறேன்.

  இது பலரது வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவங்களாகவே இருக்கு, அழகாகப் போகுது கதை.... ம்ம்ம்ம்ம்ம்ம் தொடருங்க... அடுத்த பகுதி வரும்வரை என் டென்ஷன்............
  ...........
  ........
  குறையாது என நினைக்கிறீங்களா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. டென்ஷனே இல்ல எனக்கு... மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)).

  ReplyDelete
 3. ராஜா, மிக்க நன்றி.

  அதீஸூ, தொடக்கத்தில் தொடருமா???? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...... உர்ர்ர்ர்ர்ர்ர்.
  காதலர்களா??? இதுக்கு இன்னொரு கர்ர்ர்ர்ர்ர்....
  முடிவு இப்ப சொல்ல மாட்டேன். ஊகித்துக் கொண்டே இருங்கள். இடிப்பட்டது யாரென vacation முடிஞ்சு வந்து சொல்றேன்.
  மிக்க நன்றி.

  ReplyDelete
 4. அடப் பாவிங்களா.... வக்கேஷன் முடிஞ்சோ? என்ன செப்டெம்பரிலயோ? சொல்லிட்டேன்... இதுவெல்லாம் சரிப்படாது.... நான் 6 வயசிலிருந்தே ரொம்ப நல்ல பொண்ணு:)))... என்னை தொடர்ந்து அப்பூடியே இருக்க விடுவது உங்க கைலதான் இருக்கூஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ:))))

  ReplyDelete
 5. வக்கேஷன் முடிஞ்சு!! அது எப்ப!! சொல்லிட்டுப் போங்க வான்ஸ்.

  ReplyDelete
 6. சபாஷ் வான்ஸ்,
  உங்களிடமிருந்து, இன்றைய கால கட்டத்தில் ஒரு பெண்ணிடமிருந்து, எமது ஈழத்தின் அவசரக் குடுக்கைத் திருமணங்கள்-
  இரவோடு இரவாக காதலர்களைப் பிரித்து, வெளி நாட்டு மாப்பிளைகளுக்கு கட்டி அனுப்பும் பெற்றோரின் இழி நிலை, குடும்ப சூழ் நிலையினைக் காரணங் காட்டிப் பிள்ளைகளின் ஆசாபாசங்களைத் தொலைக்கும் பெற்றோரின் நிலை,
  இதனால் பூட்டிய சிறைக்குள் வாழும் பெண் பிள்ளையின் மண வாழ்க்கையின் பின்னரான நிகழ்வு என அனைத்தையும் தத்ரூபமாகக் கதையில் சொல்லியிருக்கிறீங்க.

  பல கனவுகளோடும், எதிர்காலம் பற்ற்றி எண்ணங்களோடும் விமானமேறும் எம் ஊர்ப் பெண்களின் வாழ்வு வெளி நாட்டில் எப்படி அமைந்து கொள்கிறது என்பதனை- உங்களின் இத் தொடர் கதை படம் பிடித்திருக்கிறது.

  அடுத்த பாகத்தைப் படிக்கும் ஆவலுடன் காத்திருக்கிறேன்,.

  இடிபட்ட அந்த உருவத்தினை அடிப்படையாக வைத்து,
  மதுமிதாவின் வாழ்க்கை திசை மாறப் போகிறது என நினைக்கிறேன்,
  கதையின் திருப்பமும் இங்கே தான் தொடங்குகிறது.

  ReplyDelete
 7. அது சரி! செப்டெம்பர் வரை vacation இல் போக நாங்க என்ன அம்பானி குடும்பமா???

  இமா, இங்கே சொன்னா சஸ்பென்ஸ் காணாம போயிடும்.
  மிக்க நன்றி.

  நிரூ, இங்கே வந்து நிறையப் பேர் கஷ்டப்படுகிறார்கள். இதில் சில சம்பவங்கள் உண்மை. நிறைய கற்பனை.
  இடிபட்டவர் தான் கதையின் திருப்பு முனை.
  மிக்க நன்றி.
  இன்ட்லியில் இணைக்க விருப்பமில்லை. வோட்டுப்பட்டையை நீக்கி விடலாமா என்று யோசிக்கிறேன்.

  சங்கவி, மிக்க நன்றி.
  தல, உங்க கமன்டா? நான் பார்க்கவில்லையே.
  மிக்க நன்றி, கார்த்திக்.

  ReplyDelete
 8. ஆரம்பமே அற்புதம்
  சூழலை மிகச் சுருக்கமாக அழகாக
  விளக்கியுள்ளது மிக மிக அருமை
  மிகச் சரியான இடத்தில் கதையை நிறுத்தி
  எங்களில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டீர்கள்
  அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்

  ReplyDelete
 9. பச்சைமிளகா கடிச்ச மாதிரி சுருக்கமா ஒரு கதை,சுறு சுறுன்னு படிச்சிட்டு வந்தா, காரமா ஒரு தொடருமா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

  கதை எல்லாப்பகுதியையும் எழுதி ஷெட்யூல் பண்ணிட்டுப் போவீங்களாம்,நாங்க டெய்லி ஒரு பகுதியா படிச்சு கமென்ட் போடுவோமாம்,டீல் ஓக்கேவா? ;)

  ReplyDelete
 10. ரொம்ப சஸ்பென்சான இடத்திலே தொடரும் போட்டுட்டீர்களே?

  ReplyDelete
 11. நீங்க கடைசி மட்டும் ஊர் பெயர் சொல்லாததால் நான் உங்களுடன் கண்ணை கட்டி கோபம்

  ReplyDelete
 12. ஆரம்பமே அசத்தல் ரகம். அடுத்து என்ன?

  ReplyDelete
 13. எடுத்த எடுப்பிலேயே டாப் கியரில் எகிறுது கதை..

  ReplyDelete
 14. //இங்கே வந்து நிறையப் பேர் கஷ்டப்படுகிறார்கள். இதில் சில சம்பவங்கள் உண்மை. //i've seen so many pathetic cases like this .i really feel sorry for them .
  ஒரிஜினல் பெயரில் எழுதுவதால் பிரச்சினை வரும் என்று நான் நிறைய விஷயங்கள் எழுதறதில்ல ..இதெல்லாம் பெத்தவங்க கொஞ்சம் விசாரிச்சு திருமணம் செஞ்சு தரணும் .ஒரே டென்ஷனா இருக்கு .எப்ப அடுத்த பார்ட் ?

  ReplyDelete
 15. //தல, உங்க கமன்டா? நான் பார்க்கவில்லையே. //

  first nanthan potten spamla irukanu paaru

  ReplyDelete
 16. naan potta commenta kanom? yaravathu parthinkala?

  ReplyDelete
 17. ரமணி அண்ணா, மிக்க நன்றி.
  மகி, நல்ல ஐடியா தான். ஆனால், நான் உலக மகா சோம்பேறி ஆக்கும். எனவே இந்த ஐடியா சரிவராது.
  மிக்க நன்றி.
  ஸாதிகா அக்கா, மிக்க நன்றி.
  கவி அழகன், ஊர் பெயர் காதை கிட்ட கொண்டு வாங்கோ.....
  மிக்க நன்றி.
  லஷ்மி ஆன்டி, மிக்க நன்றி.
  சாரல் அக்கா, மிக்க நன்றி.
  ஏஞ்சலின், ஓ! அப்படியா. புனை பெயரில் எழுதினா யாருக்கும் தெரியாதே. எழுதுங்க. ஓக்கை.
  விரைவில் அடுத்த பாகம்.
  மிக்க நன்றி.
  தல, பார்தாச்சு. அங்கேயும் இல்லை.
  மிக்க நன்றி.
  குமார், உங்க கமன்ட் உம் இங்கே இல்லையே.
  மிக்க நன்றி.

  ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!