Wednesday, May 18, 2011

என் நிலமா? உன் நிலமா?

தோட்டம் வைத்து, அதில் விதம் விதமாக காய்கறிகள் வைக்க வேண்டும் என்பது என் நெடுநாளைய ஆசை. முன்பு குடியிருந்த இடம் கார்டின் ஸ்டைல் அடுக்கு மாடிக் குடியிருப்பு. அப்பார்ட்மென்ட் போல 10, 20 தளங்கள் கட்டாமல், அங்கொன்றும், இங்கொன்றுமாக வீடுகள் கட்டியிருந்தார்கள். அதிகப்படியாக 3 தளங்கள் தான் இருக்கும் இந்த வகை வீடுகளில். நாங்கள் குடியிருந்தது 2 வது தளம். கீழ் தளத்தில் ஒரு அமெரிக்க பெண்மணி, அவரின் குட்டி மகள். அவரின் வீடு நிலத்தோடு ஒட்டி இருந்தமையால் தோட்டம் போடுவதற்கு இடம் இருந்தது. மண் பரவி, உரம் போட்டு, தக்காளி செடிகள் நட்டார். கோடை காலம் வர அவரின் தக்காளியில் காய்கள் வரத் தொடங்கிவிட்டன. நல்ல பச்சை நிறத்தில், அழகாக இருந்தன. நான் எங்கள் வீட்டு பல்கனியில் நின்று தினமும் தக்காளிகளை எண்ணுவதுண்டு.

ஒரு நாள் வேலையால் வந்தவர் யாரையோ கெட்ட வார்த்தைகளில் திட்டத் தொடங்கிவிட்டார். அந்தப் பெண்மணியின் முகத்தில் எப்போதும் ஒரு கடுமை இருக்கும். மெதுவாக எட்டிப் பார்த்தேன். என்னைக் கண்டவர் இன்னும் சத்தமாக திட்டினார். எனக்கு ஒரே குழப்பம். மறுநாளும் இதே கூத்து தான். அவர் திட்டும்போது கூர்ந்து கவனித்ததில், அவரின் தக்காளிப் பழங்களை யாரோ திருடி விட்டார்கள் என்பது விளங்கியது. நான் தான் திருடி என்று எண்ணித் திட்டினார் போலத் தோன்றியது. எனக்கு தக்காளி மீது பெரிய ஈர்ப்பு இல்லை. அதோடு அதை களவாக எடுத்து சாப்பிடும் அளவிற்கு தரம் தாழ்ந்து போய் விடவில்லை.

இப்படியே தொடர்ந்த அவரின் பாட்டு ஒரு நாள் முடிவுக்கு வந்தது. அன்று வழக்கத்திற்கு மாறாக வெற்றிச் சிரிப்பொலி கேட்டது. திருடனை நோக்கி வசை பாடிக் கொண்டே இருந்தார். எனக்கு ஒரே ஆர்வம். என்னடா திருடன் சைடில் இருந்து ஒரு ரியாக்ஸனையும் காணோமே என்று நினைத்தபடி மெதுவாக எட்டிப் பார்த்தேன். அங்கே மூன்று மான்கள் அப்பாவியாக நின்று கொண்டிருந்தன. இவரின் திட்டுக்களை சட்டையே செய்யாமல் மெதுவாக நடை போட்டார்கள் மூவரும். இவர் கையில் கிடைத்த கம்பினால் வீசியெறிய ஓடி மறைந்தார்கள்.
என் நிலத்தில் நான் செடி வளர்க்க எவ்வளவு கஷ்டப் படுறேன். இதுங்களுக்கு கொழுப்பை பாரேன் என்று திட்டு விழுந்தது. திருடனை பிடித்த வெற்றிப் பெருமிதம் முகத்தில். மறுநாள் அவர் வேலைக்குப் போய் விட மான்கள் மீண்டும் வந்து மேய்ந்து விட்டுச் சென்றன.

தற்போது நாங்கள் இருக்கும் வீட்டில் தோட்டம் வைக்க வேண்டும் என்ற ஆசை எட்டாக் கனியாகவே இருக்கு. ஸ்ட்ராபெர்ரி செடியை நட்டு, பழங்கள் வந்த பின்னர் சில பழங்கள் மாயமாக மறைந்து போயின. சில பழங்களில் ஏதோ மிருகங்கள் கடித்த அடையாளம். காப்ஸிகம் செடியும் வேரோடு மாயமாகிப் போனது. ஒரு நாள் முயல்கள் துள்ளிக் குதித்து ஓடின.ஸ்ட்ராபெர்ரி திருடர்கள் அவர்கள் தான். எரிச்சல் வரவில்லை. எங்கள் இடம், நிலம் என்ற கோபம் வரவில்லை. சில ஆண்டுகளின் முன்பு இது அவர்கள் குடியிருந்த இடமாக இருந்திருக்கலாம். எல்லாவற்றையும் அழித்து, வீடு கட்டிய பின்னர் உரிமை கொண்டாடுவது சரியில்லை.

*****************************


கொஞ்சம் சிரிங்க பார்க்கலாம்
ஒரு அமெரிக்கர், ஜப்பானிய நாட்டில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார். திடீரென அவருக்கு ஏதோ ஒரு ஜோக் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அவரின் மொழிபெயர்ப்பாளரிடம் அனுமதி கேட்ட பின்னர், ஜோக் சொல்ல ஆரம்பித்தார். கிட்டத்தட்ட 5 நிமிடங்கள் செலவு செய்து ஜோக் சொன்னார். பிறகு மொழிபெயர்ப்பாளரிடம் சைகை செய்தார். மொழிபெயர்ப்பாளர் கூட்டத்தை பார்த்து ஏதோ சொல்ல கூட்டத்தினர் விழுந்து விழுந்து சிரித்தார்கள். அமெரிக்கருக்கு ஒரே குழப்பம். என்னடா! நான் கிட்டத்தட்ட 5 நிமிடங்கள் செலவு செய்தேன். ஆனால், இவர் 1 நொடியில் மொழிபெயர்த்து விட்டார். மெதுவா அவரிடம் விசாரித்தார்.

அவர் சொன்னார், அது வேறு ஒன்றும் இல்லை. இந்தக் கணவான் ஒரு ஜோக் சொன்னார் எல்லோரும் கொஞ்சம் சிரிங்க என்று சொன்னேன். அதான் எல்லோரும் சிரிக்கிறாங்க என்று பதில் சொன்னாராம்.

26 comments:

  1. இந்தக் கணவான் ஒரு ஜோக் சொன்னார் எல்லோரும் கொஞ்சம் சிரிங்க என்று சொன்னேன். அதான் எல்லோரும் சிரிக்கிறாங்க என்று பதில் சொன்னாராம்.

    haa haa

    ReplyDelete
  2. //சில ஆண்டுகளின் முன்பு இது அவர்கள் குடியிருந்த இடமாக இருந்திருக்கலாம். எல்லாவற்றையும் அழித்து, வீடு கட்டிய பின்னர் உரிமை கொண்டாடுவது சரியில்லை//
    இது நல்ல இருக்கே!

    அந்த ஜோக் சூப்பர்! :-)

    ReplyDelete
  3. அருமையான செடி வளர்ப்பு அனுபவம்... நானும் சிரித்தேன்.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. சூப்பர் வானதி... நகைச்சுவையோடு கூடிய கருத்து.. வர வர உங்க ரசிகனா மாறிடுவன் போலிருக்கு.. அதெப்படி அழகாய் எடுத்து சென்று, கருத்தை அப்படியே இறக்கி வைக்கிறீர்கள்.? சூப்பருங்க..

    ReplyDelete
  5. ////இந்தக் கணவான் ஒரு ஜோக் சொன்னார் எல்லோரும் கொஞ்சம் சிரிங்க என்று சொன்னேன்.////

    அக்கா இப்படி ஒரு மொழிபெயர்ப்பாளர் தான் கட்டாயம் தேவை....

    ReplyDelete
  6. அந்த நிலத்துக் கதை என்னமா வளைத்து வளைத்து அழகாய் கொண்டுவந்து முடித்திருக்கிறீர்கள். அதெப்படி?? அந்த சோக்கு உங்களுக்கும் என்னான்னு தெரியாதா? நான் என்னமோ ஏதோன்னு வந்தேன். ஹி..ஹி..ஹி..போங்க வான்ஸ்!!

    ReplyDelete
  7. ////சில ஆண்டுகளின் முன்பு இது அவர்கள் குடியிருந்த இடமாக இருந்திருக்கலாம். எல்லாவற்றையும் அழித்து, வீடு கட்டிய பின்னர் உரிமை கொண்டாடுவது சரியில்லை////
    Wow.

    ReplyDelete
  8. முயலாருக்குச் சொந்தமான நிலத்தை அபகரித்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

    நானும் சிரித்துவிட்டுப் போகிறேன் என அந்த 5 நிமிடம் ஜோக் சொன்னவரிடம் சொல்லிடுங்க பிளீஸ்ஸ்ஸ்ஸ்.

    ReplyDelete
  9. இது மாதிரி தான் எனக்கும் நடத்து இருக்கின்றது...

    Brussel Sproutsயினை இப்படி தான் முயல் சாப்பிட்டு போச்சு ...

    ReplyDelete
  10. முதலாவதே பெரிய ஜோக்

    ReplyDelete
  11. கருத்து : ) சில ஆண்டுகளுக்கு முன்பு ....இடம் அவங்க சொந்தமானது...avvv..


    ஜோக் :)))

    ReplyDelete
  12. /. எல்லாவற்றையும் அழித்து, வீடு கட்டிய பின்னர் உரிமை கொண்டாடுவது சரியில்லை.//

    வாணி எப்படி இப்படிலாம் ... சூப்பர்

    ReplyDelete
  13. நிலம் பற்றிய பதிவு சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது

    ReplyDelete
  14. ஹாஹ்ஹா,சூப்பர் தக்காளித்திருடர்கள்! :) சில மனிதர்கள் அப்படித்தான் வானதி,என்ன செய்ய?

    நான் முயலைத் திட்டமாட்டேன்,கொஞ்சம் முயலுக்கும் கொடுத்துட்டு கொஞ்சம் நானும் எடுத்துக்குவேன். ;) அதாவது,கொஞ்சநாள் அவங்க சாப்பிட விட்டுட்டு, அப்புறம் கொஞ்சம் பாதுகாப்பு பண்ணிப்பேன்னு சொல்லவரேன். ;)

    ReplyDelete
  15. //சில ஆண்டுகளின் முன்பு இது அவர்கள் குடியிருந்த இடமாக இருந்திருக்கலாம். எல்லாவற்றையும் அழித்து, வீடு கட்டிய பின்னர் உரிமை கொண்டாடுவது சரியில்லை.// ம். உண்மைதான்.

    இங்கயும் ஸ்ட்ரோபெரி எப்பவும் மிச்சம் மீதிதான் எங்களுக்கு.

    ReplyDelete
  16. சில ஆண்டுகளின் முன்பு இது அவர்கள் குடியிருந்த இடமாக இருந்திருக்கலாம். எல்லாவற்றையும் அழித்து, வீடு கட்டிய பின்னர் உரிமை கொண்டாடுவது சரியில்லை.

    ...How sweet!

    Joke.... :-)))))))

    ReplyDelete
  17. பூமி தனக்கென படைக்கப்பட்டதாக
    மனிதன் எண்ண ஆரம்பித்த நாளில் இருந்துதான்
    இயற்கை அழிவு ஆரம்பித்தது எனச் சொல்வார்கள்
    அதையே தங்கள் பாணியில் மிக அழகாகச்
    சொல்லியிருக்கிறீர்கள் .அருமை
    இரண்டாவதாக சொன்ன நகைச்சுவை
    மிக மிக அருமை
    நான் அந்த ஜோக் சொன்ன அம்மாவின் முகம்
    இவர் பதிலுக்குப்பின் எப்படி இருந்திருக்கும் என
    எண்ணி எண்ணி வெகு நேரம் சிரித்துகொண்டிருந்தேன்

    ReplyDelete
  18. தக்காளி கதை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது... ஜோக் கதை நிஜமாவே சிரிக்க வைத்தது...:))

    ReplyDelete
  19. செடி வ‌ள‌ர்ப்ப‌து என‌க்கும் பிடித்த‌மான‌ ஒன்று.. ஜோக் சூப்ப‌ர்.. :)

    ReplyDelete
  20. எங்கள் இடம், நிலம் என்ற கோபம் வரவில்லை. சில ஆண்டுகளின் முன்பு இது அவர்கள் குடியிருந்த இடமாக இருந்திருக்கலாம். எல்லாவற்றையும் அழித்து, வீடு கட்டிய பின்னர் உரிமை கொண்டாடுவது சரியில்லை
    I really appreciate the wards dear.
    viji

    ReplyDelete
  21. தக்காளிக் கதை சுவாரஸ்யமாக இருந்தது வானதி!

    ReplyDelete
  22. சரவணன், மிக்க நன்றி.

    ஜீ, மிக்க நன்றி.

    தம்பி கூர்மதியான், தொடர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    சுதா, இப்படி என்ன? இதே போல் ஒராள் ரெடி. யாரா? நாந்தேன்.
    மிக்க நன்றி.
    நாட்டாமை, என்ன நினைச்சு வந்தீங்கன்னு கடைசி வரை சொல்லவேயில்லை.
    மிக்க நன்றி.
    அனாமி, மிக்க நன்றி.
    அதீஸ், நான் தான் ஓரமா இருக்கிறேன். முயல்கள் நல்லாத்தான் ஓடித்திரிகிறார்கள்.
    மிக்க நன்றி.
    கீதா, அவர்களின் பார்வையில் எதுவுமே தப்பாது போல.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  23. யாதவன், மிக்க நன்றி.

    சிவா, மிக்க நன்றி.

    எல்கே, மிக்க நன்றி.

    மாதவி, மிக்க நன்றி.

    மகி, மிக்க நன்றி. நல்ல ஐடியா தான்.
    இமா, மிக்க நன்றி.
    சித்ரா, மிக்க நன்றி.
    ரமணி, மிக்க நன்றி.
    செந்தில்குமார், மிக்க நன்றி.
    அப்பாவி, மிக்க நன்றி.
    நாடோடி, மிக்க நன்றி.
    விஜி ஆன்டி, மிக்க நன்றி.
    மனோ அக்கா, மிக்க நன்றி.

    ReplyDelete
  24. நானும் இப்படித்தான் எங்க வீட்டுத் திருடங்களைக் கண்டுபிடிச்சேன். ஆனா, திட்டலை!! :-)))

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!