இந்த அநியாயத்தை கேட்க ஆள் இல்லையா? போன மாசம் மரகதம் மகன் சேகர் வெள்ளையும் சொள்ளையுமா இன்டர்வியூக்கு கிளம்பி சென்றான். இந்த சின்னவாளிக் கிழவி செய்த அளும்பினால் அவனுக்கு வேலை கிடைக்கவில்லை. அதே போல இரண்டு வாரங்களுக்கு முன்பு, பாக்கியம் மகள் மேகலாக்கு திருமணம் கூடி வந்திச்சு. ஆனா இந்த கிழவி அதையும் கெடுத்து விட்டா. நாளைக்கு நம்ம மகன் 10 ம் வகுப்பு சோதனை எழுதப் போறான். என்ன நடக்குமோ? என்று கண்ணம்மா கவலையுடன் கணவரிடம் புகார் சொன்னார்.
உன் மகன் முதல்ல படிச்சு இருக்கிறானா என்று பார். அதை விட்டுப் போட்டு கிழவியின் மீது பழி சொல்லாதே. நொண்டிக் குதிரைக்கு சறுக்கியது சாக்குன்னு சொல்வாங்களே , என்றார் வேலாயுதம்.
உங்களுக்கு எப்பவும் என் பிள்ளை மீது ஓரவஞ்சனை. உங்க வாயில் நல்லதா நாலு வார்த்தை வராது. இதில் கிழவியை போய் திட்டி என்ன ஆகப்போகிறது. எல்லாம் என் தலையெழுத்து, என்று மூக்கை சிந்தினார் கண்ணம்மா.
சரி. அழாதை. நாளைக்கு அந்த கிழவியின் கண்களில் படாமல் கூட்டிச் செல்வது என் பொறுப்பு என்று உரையாடலை முடித்துக் கொண்டார் வேலாயுதம்.
சின்னவாளிக் கிழவி - எல்லோருக்கும் சிம்ம சொப்பனமாக இருந்தார். அந்த தெருவே அவரை கண்டு நடுங்கியது. அவர் மகனிடம் சென்று புகார் செய்தும் புண்ணியமில்லை.
" இதை வைச்சுகிட்டு நான் படும்பாடு சொல்லி மாளாது. இனிமே யாராவது வாசலில் வந்து நின்று புகார் வாசிங்க அதுக்குப் பிறகு இருக்கு கச்சேரி", என்று உறுமினான் மகன்.
கிழவி திண்ணையில் படுத்துக் கிடந்தது. யாருப்பா நீங்கெல்லாம் என்று கேள்வி கேட்டு, பதில் சொல்லு முன்னர் திரும்ப போர்வை போர்த்திக் கொண்டு படுத்து கொண்டது. ஊரார் வாசலில் நின்று எகிறி விட்டு வீடு வந்து சேர்ந்தார்கள்.
ஊர் பெரியவர்கள் ஒன்று கூடி பேசி, போலீஸில் புகார் கொடுப்பது என்று முடிவு செய்தார்கள். சில போலீஸ் அதிகாரிகள் கிழவியின் வீட்டுக்கு போனார்கள். போன வேகத்தில் திரும்பியும் விட்டார்கள்.
அந்தக் கிழவி லூஸ் போல இருக்கே. மனநிலை சரியில்லாதவர்கள் மீது கேஸ் போடக் கூடாது என்று சட்டம் பேசி விட்டு சென்றார்கள். போன அதிகாரிகள் மீதும் கிழவி கை நிறைய மண் அள்ளி, ஏதேதோ மந்திரம் சொல்லி, பூ என்று முகத்திற்கு நேராக ஊதியது.
கிழவியின் இந்த பாழாய் போன பழக்கத்தினால் தான் ஊரார் கடுப்பாகி இருந்தார்கள்.
யாராவது நல்ல காரியத்திற்காக கிளம்பி போகும் போது இந்தக் கிழவி கையில் மண் அள்ளி, மந்திரம் சொன்ன பின்னர் அவர்கள் மீது விட்டெறியும். போன காரியம் வெற்றி பெறவில்லை எனில் மக்கள் ஆத்திரம் கொண்டனர். எல்லாம் இந்தக் கிழவியின் சாபம் என்று பேசிக் கொண்டனர். சிலர் கிழவியின் கண்களில் படாமல் அதிகாலையில் எழுந்து, மறைந்து , ஒளிந்து போனார்கள். கிழவி எப்போதும் திண்ணையில் இருந்ததால் அவரின் பார்வையில் இருந்து தப்புவது கடினமாக இருந்தது. யாராவது திட்டினால் இன்னும் ஆவேசத்துடன் மேலும் மண்ணை வாரி இறைக்கும்.
கெஞ்சி பார்த்தார்கள். அன்பாக சொல்லிப் பார்த்தார்கள். கிழவி கேட்டபாடு இல்லை. ஒரு நாள் தெருவில் சிறுவர்கள் கிரிகெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் பந்து கிழவி மீது போய் விழுந்தது. படுத்துக் கிடந்த கிழவி ஆவேசமாக எழுந்தது. உக்கிர பார்வை பார்த்தபடி கையில் மண்ணை வாரி எடுத்துக் கொண்டது. சிறுவர்கள் சிலர் ஓட்டம் பிடித்தார்கள். ஒரு பொடியன் மட்டும் தைரியமாக நின்றான். அவனும் கிழவி போலவே கையில் மண் அள்ளிக் கொண்டான். கிழவி செய்தது போலவே செய்து, கிழவியின் மீது விட்டெறிந்தான். கிழவி ஓடிப் போய் திண்ணையில் படுத்துக் கொண்டது. ஓடிப் போன சிறுவர்கள் மீண்டும் வந்து சேர்ந்தார்கள். எல்லோரும் கையில் மண்ணை அள்ளி கிழவியின் மீது எறிய, கிழவி வீட்டின் உள்ளே போய் கதவை பூட்டிக் கொண்டது.
இதன் பிறகு கிழவிக்கு காய்ச்சல் பிடித்துக் கொண்டது. அந்தப் பொடியன் தான் ஏதோ செய்வினை செய்து விட்டான் என்று கிழவி அரற்றிக் கொண்டே இருந்தார். இப்பெல்லாம் கிழவி யார் மீதும் மண்ணை வாரி தூற்றுவதில்லை. இப்போதெல்லாம் போன காரியம் வெற்றி பெறவில்லை எனில், தலையெழுத்து, விதி என்று ஊரார் சமாதானப்பட்டுக் கொண்டார்கள்.
வடை.....
ReplyDeleteவடை எனக்குதானா சந்தேகமா இருக்கு....
ReplyDeleteமிக நல்ல கதை,சகுனம் பார்ப்பது சாபத்திற்கு அஞ்சுவது என்று இருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல விழிப்புணர்வு கதை.கிளவிக்கு பையன் வச்ச ஆப்பு சூப்பர்.வானதி தொடர்ந்து எழுதுங்க..
ReplyDelete//இதன் பிறகு கிழவிக்கு காய்ச்சல் பிடித்துக் கொண்டது. அந்தப் பொடியன் தான் ஏதோ செய்வினை செய்து விட்டான் என்று கிழவி அரற்றிக் கொண்டே இருந்தார். இப்பெல்லாம் கிழவி யார் மீதும் மண்ணை வாரி தூற்றுவதில்லை. இப்போதெல்லாம் போன காரியம் வெற்றி பெறவில்லை எனில், தலையெழுத்து, விதி என்று ஊரார் சமாதானப்பட்டுக் கொண்டார்கள்.///
ReplyDeleteமனசுக்கு பாரமா இருக்குப்பா....
இது உண்மை சம்பவமா...?? புனை கதையா மக்கா....?? மனசு வலிக்குது....
ReplyDeleteஎன்னா பூ "மஞ்ச"கலர்ல மாறி இருக்கு.....
ReplyDeleteஃஃஃஃஒரு நாள் தெருவில் சிறுவர்கள் கிரிகெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் பந்து கிழவி மீது போய் விழுந்தது. படுத்துக் கிடந்த கிழவி ஆவேசமாக எழுந்ததுஃஃஃஃ
ReplyDeleteஎங்க பாத்தாலும் இது தானே பிரச்சனையாக்கா ஹ..ஹ..
அருமையான பகிர்வு..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம் (வன்னி மக்கள் கண்டுபிடிப்பு)
Nice writing dear.
ReplyDeleteviji
என்ன சொல்லுறது என்று தெரியல வான்ஸ்.. நேர்ல பாத்தா மாதிரி இருக்கு.. கிழவிக்கு என்ன பிரச்சனையோ அது இப்படி வெளிப்படுது, அதே மாதிரி மக்கள் அதுக்கு பயப்படறதும்.. கடைசியா அந்தப் பையன் தான் அந்த பயத்தை உடைத்துப் போடுறான்..
ReplyDeleteஅருமையான படைப்பு ஆனந்தி
ReplyDeleteஅந்தக் கிழவியும் தன் செய்கை மீது அதிக
நம்பிக்கை வைத்திருந்திருக்கிறது
இல்லையேல் அந்தப் பையனின்
செய்கைக்கு பயந்திருக்காது
மூட நம்பிக்கைகளை பூடகமாக
நாசூக்காக தகர்த்துச் செல்கிறது
இந்தப் பதிவு
தொடர வாழ்த்துக்கள்
சகுனம் பார்ப்பது பற்றி அழகா சொல்லிருக்கீங்க,கடைசி பார நச்னு இருக்கு.
ReplyDeleteஅழகாக சொல்லி இருக்கீங்க சில வயசானவங்க செய்கைகளுக்கு காரணமே இருப்பதில்லை.
ReplyDeleteமூட நம்பிக்கை தகர்க்கும் கதை
ReplyDeleteஅதை சொல்லிய விதம் நன்று வாழ்த்துக்கள் வானதி
ஒரு வயதான கிழவியின் உவமையில் அழகான சிந்தனையை சொல்லி இருக்கிறீர்கள் . இறுதி வரிகளை வாசிக்கும் பொழுது கிழவியின் மனநிலை எண்ணி மனம் கனத்துப்போனது . பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteNice Narration...
ReplyDeleteசூப்பராக சொல்லி இருக்கின்றிங்க ...ரொம்ப ரொம்ப நல்லா இருக்க்கு...முடிவு நல்லா இருக்கு...
ReplyDeleteஹிஹிஹி அக்கா நல்லா கதை சொல்றாங்க இப்பலாம்
ReplyDeleteகதை உயிரோட்டமாக உள்ளது.அழகான நடை.
ReplyDeleteநொண்டிக் குதிரைக்கு சறுக்கியது சாக்கு
ReplyDeleteசுவாரசியமா இருக்கு
இங்கேயும் வடைக்கு அடிபாடுதானா? ஹையோ..ஹையோ..:)))).
ReplyDeleteவான்ஸ், அந்த ஆச்சிக்கு ஏன் சின்னவாளி என்று பெயர் வந்தது?
அங்க மழை புயல் எல்லாம் எப்படி இருக்கு வான்ஸ்!! நீங்க, அவங்க, பிள்ளைகள் குடும்பம் எல்லாம் ஃஷேபா இருக்கீங்களா??
ReplyDeleteஅட, அந்த பொடியன் என்னமா துணிச்சலா செய்திட்டான். நல்ல விழிப்புணர்வு. "சின்னவாளிக் கிழவி" அழகான பேரா இருக்கே!! எங்கே புடிச்சீங்க வான்ஸ்!!
ReplyDeleteகதை நல்லா வந்திருக்கு சகோ...
ReplyDeleteசிறுவனின் செயல் அருமை... :)
பாட்டியின் பேர் வித்யாசமா இருக்கு வானதி! இயல்பா நகருது கதை!
ReplyDeleteசின்னவாளிக் கிழவி- தலைப்பே காரணப் பெயருடன் இருந்தாலும்,
ReplyDeleteகிழவிக்கான பெயருக்கான காரணத்தைச் சொல்லவில்லையே சகோ.
எங்கள் சமூகத்தில் உள்ள மூட நம்பிக்கைகளினைச் சுட்டும் வகையில் சின்ன வாளிக் கிழவியினை இங்கே உருவகித்து,
ReplyDeleteகிழவியின் குண இயல்புகளை அடிப்படையாக வைத்து கதையினை நகர்த்தியுள்ளீர்கள்.
ஒவ்வோர் காரணங்களுக்கும் நொண்டிச் சாட்டுச் சொல்லும் உள்ளங்களுக்கு, இறுதியில் சாட்டுச் சொல்ல காரணங்கள் இல்லையே என்பது தான் கதை நமக்கு கற்றுத் தரும் பாடம்.
ReplyDeleteமொழிக் கையாள்கை, உரை நடையினைத் தொய்வின்றி அழுத்தமாக எழுதிச் செல்லும் பக்குவம், வட்டாரச் சொற்கள் கதைக்கு பக்க பலமாக உள்ளன.
வடை உங்களுக்குத் தான்.
ReplyDeleteகற்பனை தான் , நாஞ்சிலார்.
பூ கலர் மாறிட்டே இருக்கும். ஏன் மஞ்சள் பிடிக்காதோ?
மிக்க நன்றி.
ஆசியா அக்கா, மிக்க நன்றி.
சுதா, மிக்க் நன்றி.
விஜி, மிக்க நன்றி.
சந்தூ, மிக்க நன்றி.
ரமணி அண்னா, மிக்க நன்றி.
மேனகா, மிக்க நன்றி.
லஷ்மி ஆன்டி, மிக்க நன்றி.
சரவணன், மிக்க நன்றி.
சங்கர், மிக்க நன்றி.
பிரபாகரன், மிக்க நன்றி.
கீதா, மிக்க நன்றி.
எல்கே, நன்றி.
ஸாதிகா அக்கா, மிக்க நன்றி.
யாதவன், மிக்க நன்றி.
அதிரா, வடைக்கு எல்லா இடமும் அடிபாடு தான்.
ReplyDeleteஅதிரா போல சும்மா ஒரு பெயர் " சின்னவாளி " . ஒக்கை.
மிக்க நன்றி.
நாட்டாமை, நாங்கள் நலம். இயற்கை எப்போது தன் வேலையை காட்டும் என்று சொல்ல முடிவதில்லை.
இது வரைக்கும் ஒரு பிரச்சினையும் இல்லை.
சின்னவாளிக்கிழவி - கதையை விட பெயருக்கு தான் ஒரே டிமான்டா இருக்கே. யாராவது பிள்ளை, குட்டிக்கு வைக்கிறதா இருந்தா அனுமதி கேளுங்க. ஓக்கி.
மிக்க நன்றி.
நாடோடி, மிக்க நன்றி.
மகி, இன்னொரு ரசிகை!!!
மிக்க நன்றி.
நிருபன், பெயர்க்காரணம் சொல்லியிருந்தா அலுப்புத் தட்டியிருக்கும் கதை படிப்பவருக்கு. அதோடு கதையும் நீண்டு போயிருக்கும்.
அதனால் தான் சொல்லவில்லை. காரணம் சொல்வதற்கு எதுவும் பெரிதாக இல்லை. ஊரில் என் வீட்டுப் பக்கம் இருந்த பாட்டியின் பெயர் கிட்டத்தட்ட இதே போல தான். போய் கேட்டால் விறகு கட்டையால் தூக்கி அடிக்கும்.
மிக்க நன்றி.
நல்லாருக்கு கதை. சகுனம் பாக்கிறோமோ இல்லையோ, இப்படி யாராவது மண்ணை ஊதினா கோவம் வரத்தானே செய்யும்? நல்லவேளை பெரியவஞ்க யாரும் இப்படி பதிலுக்கு செய்யத் துணியலை பாருங்க. ”முள்ளை முள்ளால் எடுக்கணும்” என்ற ரீதியில் சின்னப் பையன் தைரியமாக பிரசனைக்கு முடிவு கட்டிட்டான். :-)))))
ReplyDeleteநல்ல கதை. அழகாக எழுதி இருக்கிறீர்கள்.
ReplyDelete