Sunday, April 17, 2011

கறிவேப்பிலை தானே!

கறிவேப்பிலை - இந்த இலைக்கு இருக்கும் மதிப்பு இப்பதான் விளங்குது. ஊரில் இருந்த போது பெரிய மரம் போல செழித்து வளர்ந்திருந்தது கறிவேப்பிலை. ஒரு ஊருக்கே சமையல் செய்யலாம் போல அவ்வளவு கிளைகள், கிளைகள் முழுவதும் இலைகள். நல்ல நறுமணத்துடன் இருந்தது. பக்கத்து வீடுகளிலிருந்து கறிவேப்பிலை பறித்து செல்வார்கள்.
திருச்சியில் இருந்த போது கறிவேப்பிலை செடி இருக்கவில்லை. கடைகளில் இலவசமாக கொடுப்பதே ஒரு வாரம் வரை இருக்கும். ஒரு ரூபாய் குடுத்தால் ஒரு திருமண சமையலே செய்துவிடலாம் போல நிறைய அள்ளித் தருவார் கோபால் மாமா.
அப்படியே கனடாக்கு ஷிப்ட் ஆனபோதும் கறிவேப்பிலை தமிழ் கடைகளில் கிடைத்தது. அமெரிக்கா வந்த பின்னர் தான் கறிவேப்பிலைக்கும், எனக்கும் ஒரு பிரிக்க முடியாத பந்தம் இருப்பது விளங்கியது. ஆரம்பத்தில் கறிவேப்பிலை இல்லாமல் சமையல் செய்து வந்தேன். பின்னர் இந்தியன் கடையில் கிடைத்தது. ஆனால், தாராளமா போட முடிவதில்லை.
ஒரு முறை கனடா போன போது, என் கஸினிடம் சொன்னேன் என் கஷ்டத்தை. அவர் சொன்னார், ஏன் இங்கே இருந்து ஒரு செடி கொண்டு போக வேண்டியது தானே என்றார். கனடா, அமெரிக்கா எல்லையில் இருக்கும் கஸ்டம்ஸ், இமிகிரேஷன் அதிகாரிகள் உயிருள்ள மனிதர் தவிர வேறு எதையும் நாட்டினுள் வரவே அனுமதிக்கமாட்டார்கள்.
இதெல்லாம் என் கஸினுக்கு தெரிந்து சொன்னாரா? இல்லையா என்று நான் ஆராய்ச்சி செய்யும் முன்னர் அவர் என் ஆ.காரரிடம் கதை அளக்க ஆரம்பித்து விட்டார்.
மச்சான், இனிமே உங்களுக்கு தொல்லை விட்டது, ஒரு கறிவேப்பிலை செடியை வாங்கி குடுங்கோ. எல்லை தாண்டி அந்தப் பக்கம் வந்தா கூட்டிட்டு போக வேண்டியது. இல்லை என்றால் தொல்லை விட்டது என்று இருங்கோ" என்றார்.
பார்ட்டிக்கு வந்த எல்லோருக்கும் நான் தான் பெரிய காமடி பீஸ் ஆகிப் போனேன்.
இந்தியன் கடைகளில் கறிவேப்பிலை என்பது ஒரு பகல் கொள்ளை போலவே இருந்தது. பேருக்கு 4 நெட்டு வைச்சு, அதை கொள்ளை விலைக்கு விற்பார்கள். இப்படியே போய்க் கொண்டிருந்த நேரத்தில் கொரியன் சூப்பர் மார்க்கெட்டில் கறிவேப்பிலை விற்பனை செய்ய ஆரம்பித்தார்கள். குடுத்த காசுக்கு தாராளமாவே இருந்தது. என் பிரச்சினை தீர்ந்து விட்டது என்று நினைத்தேன். ஆனால், சில மாதங்களின் பின்னர் கறிவேப்பிலை அறவே இல்லாமல் போய்விட்டது.
சரி திரும்ப இந்தியன் கடைக்கு போவோம் என்று நினைத்து அங்கே போனேன். அங்கே 1 நெட்டு கறிவேப்பிலை, அதில் 10- 18 இலைகள் தான் காணப்பட்டன. விலை 2 டாலர்கள்.
அடப்பாவி! இப்படியா கொள்ளை அடிக்கிறது என்று கறுவியபடி. இது என்ன விலை ( யாராவது தவறா விலை ஸ்டிக்கர் ஒட்டியிருந்தாலும் என்ற நினைப்பில் ) என்று கேட்டேன்.
கடைகாரனுக்கு ஏற்கெனவே கடு கடு முகம். இன்னும் கடுமையாக முகத்துடன், " அதில் விலை போட்டிருக்கு நல்லா பார், என்றார்.
எடுத்த இடத்தில் அதை வைத்த பின்னர் வெளியே வந்தேன். கடைகாரனின் மனைவி ஹைபிரிட் காரில் வந்து இறங்கி உள்ளே போனார்.
இப்பெல்லாம் நான் கறிவேப்பிலை இல்லாமல் சமையல் செய்ய பழகிவிட்டேன். பெரிசா வித்யாசம் எதுவும் தெரியவில்லை.

41 comments:

 1. ஹ்ம்ம் .

  // ஒரு கறிவேப்பிலை செடியை வாங்கி குடுங்கோ. எல்லை தாண்டி அந்தப் பக்கம் வந்தா கூட்டிட்டு போக வேண்டியது. இல்லை என்றால் தொல்லை விட்டது என்று இருங்கோ"//

  உங்களை கருவேப்பிலையா நினச்சு போட்டுட்டு போக சொல்லி இருக்காங்க.

  ReplyDelete
 2. கடைக்காரரின் மனைவி
  ஹைபிரீட் காரில் வந்தார்
  வரமாட்டாரா பின்னே!

  கறிவேப்பலை இல்லையென்பதால்
  பட்ட கஷ்டங்களையெல்லாம்
  மிக அழகாகச் சொல்லி
  கடைசியில்
  அது இல்லாமல் பெரிய வித்தியாசம்
  தெரியவில்லை என முடித்திருந்தது
  உண்மையில் மிக அருமை

  கறிவேப்பலையை ஒரு குறியீடாகக் கொண்டேன்
  நிறையச் சொல்லிப்போனது
  நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. ம்ம்..இங்கு கருவேப்பிலையா தூக்கிப்போட்டுட்டாங்க என்று கருவேப்பிளையை பற்றி மட்டமா சொல்ல்வாங்க.அங்கு அதற்கு இருக்கும் மவுசே தனிதான் போலும்.

  ReplyDelete
 4. பஹ்ரைனிலும் கொஞ்சமாத்தான் தருகிறான்....

  ReplyDelete
 5. கறிவேப்பிலை சாப்பிட்டா தலைமுடி வெளுக்காது...

  ReplyDelete
 6. கறிவேப்பிலை சுகருக்கு நல்ல மருந்து...

  ReplyDelete
 7. ஹி ஹி.. கருவேப்பிளைக்கு இப்படி ஒரு மகத்துவமா.? எல்லாம் வேஸ்ட்னு சொல்றதுக்கு இதைதான் உபயோகபடுத்துவாங்க.. ஆனா அது நம்மைய வேஸ்ட் ஆக்கிடும் போலிருக்கு

  ReplyDelete
 8. இங்கேயும் அதே பிரச்சினைதான் வானதிக்கா. புதன், வெள்ளி மட்டும்தான் இதெல்லாம் கிடைக்கும். அதுவும் நாங்க போறதுக்குள்ள தீர்ந்துடும். ஊரிலிருந்து வர்றப்ப நிழல்ல காய வச்சு நிறைய சூட்கேஸ்ல வச்சி கொண்டு வருவேன். 4,5 மாசம் வரும். அது முடிஞ்ச பின் தாளிக்க கருவேப்பிலை குச்சி மட்டும் போட்டு தாளிச்சுட்டு செர்வ் பண்ணறப்ப குச்சி எடுத்துடுவேன். வாசம் மட்டும் தங்கிடும். அப்பப்பா... என்னல்லாம் பண்ண வேண்டியிருக்கு!!

  ReplyDelete
 9. இங்கேயும் அதேகதைதான் வானதி,ஆனா என்ன செய்ய இந்தியன் கடைக்கு போனா முதல்ல கறிவேப்பிலைதான் வாங்க தோனுது..

  ReplyDelete
 10. karuveppilaikku ivvalAVU TIMAANTAA?

  ReplyDelete
 11. :) i can make that 4 leaves last for 4 times.. just tear one and use ti for a dish :)

  ReplyDelete
 12. dried curry leaves are available in packets. check of m-curries brand in sri lanka.

  ReplyDelete
 13. அதே அதே!!!... எங்கட வீட்டிலயும் கறிவேப்பிலைக்கு தனி மரியாதை உண்டு.... கறுத்துப்போனாலும், எறிஞ்சுபோட்டென்ன செய்வதென எறிய மாட்டேன்.... ஊரில எண்டால் அப்பூடியோ?... சின்ன வெங்காயத்துக்கு இதைவிட மரியாதை இங்கு... ஏனெனில் கிடைக்கவே கிடைக்காது.

  ReplyDelete
 14. கருவேப்பிலை பகிர்வு நல்லாயிருக்கு,முன்பு போல் இல்லை,இப்ப இங்கேயும் கொஞ்சம் காசு அதிகம் தான்,ஊரில் இருந்து வரு சமயம் கொண்டு வருவேன்,அது இரண்டு மாதத்திற்கு வரும்,கருவேப்பிலையைக்கூட கொண்டு வருவியான்னு யாரும் கேட்டுடாதிங்க,நான் வள்ர்த்த மரத்தின் இலைகளாச்சே என்னோடு இருக்கும் வரை வாடாது,காலியாகும் பொழுது கடைசி இலை கூட பச்சை ப்சேல் என்று இருக்கும்,எனக்கும் கருவேப்பிலைக்கும் அத்தனை பந்தம்..

  ReplyDelete
 15. இங்கு பரவாயில்லை. இலங்கை இந்திய, சீன மற்றும் ஃபீஜியன் கடைகளில் கிடைக்கும். அப்பப்போ செடிகள் விற்பனைக்கு வரும். இரண்டு வருடங்கள் முன்னால் ஒரு செடி வாங்கி வைத்தோம். நன்கு வளருகிறது. ஆனால் பெரிதாக வாசனையாக இல்லை.

  ReplyDelete
 16. கறிவேப்பிலையின் முக்கியத்துவத்தினை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்..

  நீங்கள் கூறும் கடைக்காரனின் மனைவி.. நம்ம ஊரு கறிவேப்பிலையினை அறா விலையில் விற்றுத் தான் கார் வாங்கியிருப்பாவோ எனும் எழுத்து.. சிரிப்பினை வரவைக்கிறது.

  ReplyDelete
 17. "கறிவேப்பிலையால கார் வாங்கினேன்" அப்படின்னு அந்தம்மா பேட்டி கொடுத்தாலும் கொடுக்கும்! ஹி ஹி.. :)

  ReplyDelete
 18. உங்கூர்ல கறிவேப்பிலை வித்தே கார் வாங்கிடலாம் போலிருக்கே..

  இந்தியாவிலும் அதே கதிதான், முன்னெல்லாம் ஒரு ரூபாய்க்கு வாங்கினாலே ரெண்டு வாரம் வரை வரும். இப்போ ரெண்டு ரூபாயை நீட்டினா எண்ணி ரெண்டு இலைகளை தர்றாங்க :-))). பிரச்சினையே வேணாம்ன்னுட்டு வீட்ல செடி வெச்சுட்டேன்.

  ReplyDelete
 19. நிச்சயமாய் நூறு சதவீதம் உண்மை வான்ஸ். சமீப காலமாய் தான் இதற்கு இந்த மவுசு கூடியிருக்கு. நீங்க சொல்ற மாதிரி தான் நாளே நாலு நெட்டு வைத்து ஒரு முழு பெரிய குச்சியை பாலிதீன் பேக்கில் செருகி (அதை பெரிசா காட்டுவதற்க்காம்) முன்பு ஒரு ரியால் (ரூ.பனிரெண்டு) விற்றதை இப்ப ரெண்டு ரியால் (ரூ.இருபத்தி நாலுக்கு) விற்கிறார்கள். ஆனாலும் 'இவங்க' கேட்டா வாங்கி கொடுக்கத் தான் வேண்டி இருக்கு!! மறுப்பு சொல்ல முடிவதில்லை!!

  ReplyDelete
 20. எளிதாக‌ எந்த‌ பொருள் கிடைத்தாலும் அந்த‌ பொருளின் ம‌க‌த்துவ‌ம் ந‌ம‌க்கு தெரிவ‌தில்லை.. அத‌ன் அவ‌சிய‌த்தையும் உண்ர்வ‌தில்லை... :)

  ReplyDelete
 21. It is not available (totally ) over here... The store keeper told us that it would take a while for them to get it as usual. :-(

  ReplyDelete
 22. எனக்கு பக்கத்துக்கு வெட்டு அங்கிள் ஒரு பாக்ஸ் முட்ட தந்தவர் அதவச்சி 2 மாசமா ஓட்டுறான் முடிஞ்ச பிறகு எங்க போறதோ தெரியா

  ReplyDelete
 23. கறிக்குள கருவபில்லை போட்ட அத தேடி பொருக்கி சாபிடுவன் அப்படி விருப்பம் அனா இப்ப கரிக்க போடவே தேடி பொருக்கி போடவேண்டி இருக்கு

  ReplyDelete
 24. தமிழ்நாட்டிலும் இதே கதை தான் வானதி ஒரு ரூபாய்க்கு கேட்டால் ஒரு பார்வை பார்த்து விட்டு கொஞ்சமா கொடுக்கிறாங்க

  ReplyDelete
 25. சகோதரி இங்கேயும் (சவுதி) கொஞ்சம் தான் தருகிறார்கள் முன்பு ஒரு ரியாலுக்கு நிறைய கிடைக்கும் இப்பொழுது இரண்டு ரியாலுக்கு கொஞ்சம் தான் கிடைக்கிறது காரணம் முன்பு கருவேப்பில்லையில் கலர் அடித்து விற்றார்கள் அதை பலதிய்யா (சுகாதாரத்துறை ) கண்டுபிடித்து இந்தியா கருவேப்பில்லைக்கு தடை விதித்தது .இப்பொழுது கலர் அடிக்காமல் வருகிறது விலைதான் அதிகம்

  ReplyDelete
 26. வான்ஸ்.. இந்தத் தொல்லை தாங்காம போன வருஷம் ஒரு கறிவேப்பிலைச் செடி தொட்டியிலே வாங்கி வைத்தேன்.. விண்டரிலே வளரவில்லை.. வெயிற் காலம் வந்ததும் கொஞ்சம் தழைத்தார்.. ஆனால் வீடு மாற வேண்டியிருந்ததால் ஒரு தோழிக்கு கொடுத்துவிட்டு வந்துட்டேன்..

  எனக்கும் ஊருல எங்க வீட்டுல கேட்பாரற்று வளர்ந்து கிடக்கும் கறிவேப்பிலைச் செடி அடிக்கடி நினைவுல வந்து போவும் :))

  ReplyDelete
 27. நானும் கருவேப்பில்லை இல்லாமல் தான் சமைப்பது..

  ரொம்ப நாள் கழித்து இந்த வாரம் தான் இந்தியன் கடைக்கு சென்ற பொழுது விலையினை பார்த்துவிட்டு வாங்காமலே வந்துவிட்டேன்..

  ReplyDelete
 28. எதுவுமே அரிதானால்தான் பெருமை தெரியும். ஆனால், எனக்கும் கருவேப்பிலை இல்லாவிட்டால் பெரிசாக வித்தியாசம் ஒன்றும் தெரியாது. போட்டுட்டா மட்டும். ஹி..ஹி..

  அடுத்த முறை கருவேப்பிலை வாங்கும்போது, பச்சையான குச்சி இருந்தால், அதை ஒரு கப் அல்லது பாட்டிலில் தண்ணீரில் போட்டு வையுங்கள். சிறிது நாட்கள் கழித்து குருத்து வரும். பின் மண்ணில் நட்டுப் பாருங்கள். வளர்ந்தால் அதிர்ஷ்டம்!! :-))))

  ReplyDelete
 29. இங்கே சில சமயங்கள்ல,இண்டியன் ஸ்டோர் கறிவேப்பிலை சிவப்பு காம்போட நல்லா வாசனையாக்கூட இருக்கும்.ஆனா பெரும்பாலும் செங்காம்பு கறிவேப்பிலை வரதில்ல.கொஞ்சநாளா மழை வந்ததால்(!!) கறிவேப்பிலை வரலைன்னுட்டாங்க.காய்ந்த இலை இருந்தது,ஆனால் இதுவரை யூஸ் பண்ணாததால் வாங்கல.(BTW,இங்கே 99காசு!யாருப்பா அது முறைக்கறது?நானும் $1.50 வரை குடுத்திருக்கேன்!;)

  ஊர்லயும் முன்னெல்லாம் கறிவேப்பிலை-கொத்துமல்லி ரெண்டும் சேர்த்து ஒரு கட்டு 50பைசாக்கு விற்பாங்க.இப்பலாம் அப்படியில்ல,2 ரூபாய்க்கு குறைவா தரதில்லையாம்,அதுவும் தனித்தனியாத்தான்!!!

  //பச்சையான குச்சி இருந்தால், அதை ஒரு கப் அல்லது பாட்டிலில் தண்ணீரில் போட்டு வையுங்கள்.//ஹூஸைனம்மா,நீங்க சொல்லறது கறிவேப்பிலைக் காம்பா இல்ல குச்சியா?? இங்கே குச்சியெல்லாம் வராது,ஆர்க்காத்தான் வரும்.அது முளைக்குமா?

  ReplyDelete
 30. எல்கே, ம்ம்... புரியுது!!
  மிக்க நன்றி.

  ரமணி அண்ணா, தொடர்வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  ஸாதிகா அக்கா, மிக்க நன்றி.

  நாஞ்சிலார், நீங்க தான் சமைப்பதில்லையே. இப்படி போட்டு தாக்குறீங்க!!!!
  மிக்க நன்றி.

  கூர்மதியான், உண்மைதான். மிக்க நன்றி.

  அன்னுக்கா, எனக்கு காய்ஞ்சு சருகா போன இலைகளில் பெரிதாக நாட்டம் இல்லை.
  மிக்க நன்றி.

  ReplyDelete
 31. மேனகா, உண்மைதான். பழகிட்டோம் இல்லையா? விடுவது கொஞ்சம் கஷ்டம் தான்.
  மிக்க நன்றி.

  ஆன்டி, டிமான்ட் தான்.
  மிக்க நன்றி.

  இலா, கொஞ்ச நாள் அப்படி செய்தேன்.
  மிக்க நன்றி.

  அனாமி, இங்கே நான் கண்டதில்லை. இந்தியன் கடைமட்டும் தான் இருக்கு.

  மிக்க நன்றி, அனாமி.

  ReplyDelete
 32. அதீஸ், அங்கேயும் இதே கதை தானா?
  சின்ன வெங்காயம் இங்கே நிறைய கிடைக்கும்.
  இந்தியன், கொரியன், அமெரிக்கன் சுப்பர் மார்க்கெட்டுகளில் நிறைய இருக்கு.
  மிக்க நன்றி.

  ஆசியா அக்கா, இரண்டு மாசம் வரை இருக்குமா?
  கஸ்டம்ஸ் இல் பிரச்சினை குடுக்க மாட்டார்களா?
  மிக்க நன்றி.

  சிநேகிதி, நன்றி.
  இமா, வெளிநாடுகளில் கறிவேப்பிலை பெரிதாக வாசனையாக இருக்காது என்றே நினைக்கிறேன்.
  எனக்கு தெரிந்தவர்களின் வீட்டில் இருக்கு, ஆனால் கேட்டா ஏதோ சொத்தை கேட்பது போல பெரிய அலட்டல்.
  நான் ரோஷம் வந்து கேட்கிறதில்லை.
  மிக்க நன்றி.

  நிரூபன், பின்னை இல்லையா??? ஹாஹா
  எல்லா பொருட்களும் கொஞ்சம் அதிகமான விலை தான் .
  மிக்க நன்றி.

  ReplyDelete
 33. பாலாஜி, ம்ம்.. குடுத்த இன்கம்டாக்ஸில் சொல்லிடலாம்.
  மிக்க நன்றி.

  அமைதி அக்கா, இரண்டு இலைகளா? ட்ரெயினே வாங்கிடுவார் கடைகாரன்.
  மிக்க நன்றி.

  நாட்டாமை, அட! அங்கேயும் அந்த பையில் தானா?
  இங்கேயும் ஏதோ சயன்ஸ் கிளாஸில் இலையை புத்தகத்திற்குள் வைப்பது போல வைச்சு நல்லா பிஸ்னஸ் செய்யுறாங்க.
  ஒரு நெட்டு, அதுவும் உள்ளே காற்றே இல்லாமல் நல்லா அழுத்தி ஒட்டி விற்கிறாங்க.
  சமையல் செய்து உங்களுக்கு குடுக்க தானே கேட்கிறாங்க. வாங்கி குடுப்பதில் தவறே இல்லை.
  மிக்க நன்றி.

  நாடோடி, மிக்க நன்றி.

  ReplyDelete
 34. சித்ரா, இந்தியன்ஸ் நிறைய இருக்கும் இடங்களில் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.
  வட இந்தியர்கள் இந்த இலை பாவிப்பதில்லை.
  மிக்க நன்றி.

  யாதவன், வாங்க சேர்ந்தே புலம்பலாம்.
  அங்கிள் திரும்ப தர மாட்டாரா?
  மிக்க நன்றி.

  சரவணன், என்னது தமிழ் நாட்டிலும் முறைக்கிறாங்களா???
  இப்ப இலவசமா குடுப்பது இல்லையா???
  மிக்க நன்றி.

  கறிவேப்பிலையில் கலப்படமா?
  உடலுக்கு கெடுதி ஆச்சே!
  மிக்க நன்றி.

  ReplyDelete
 35. இதுக்கு இன்னொரு வழி இருக்கு. ஊர்ல இருக்கிறவையிட்ட, நிறைய கறுவேப்பமிலையை கழுவி காயவச்சு (நல்லா காயோனும்) பக் பண்ணி அனுப்ப சொல்லுங்க. பிரச்சினை முடிஞ்சுது. கருவேப்பமிலை போடாட்டி கறி சப் என்டு இருக்கிற மாதிரி இருக்கும். ரம்பையை கூட காயவைச்சு வைக்க வேண்டியது தான்.

  ReplyDelete
 36. கறிவேப்பிலையில் செய்து சாப்பிடும் சம்பல் எப்பவும் தனி ரூசி தாங்க..

  என் உயிரே.

  ReplyDelete
 37. தங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டு இருக்கிறேன்..http://blogintamil.blogspot.com/2011/04/blog-post_21.html

  ReplyDelete
 38. Herafter, if I use karuvepellai at Chennai,
  I remember you and your this writing o.k?
  viji

  ReplyDelete
 39. வானதி,நீங்க இந்த போஸ்ட் போட்டதும் எல்லாரும் கறிவேப்பிலை நினைவாவே திரியறாங்க! ;)

  மஞ்சப்பூ அழகா இருக்கு.போட்டோவில் இருக்கும் பெயர் புதுசா இருக்கு?! வெஜிடபிள் கார்டன் பேக்ரவுண்டும் மேட்ச் ஆகிறது ப்ளாகுக்கு.கலக்குங்க!

  ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!