Wednesday, January 19, 2011

பழையன கழிதலும்


புத்தாண்டு இப்படி தான் இருக்க வேண்டும், இருக்கப் போறேன் என்று எதையும் ப்ளான் பண்ணி செய்வதில்லை. 2011 ல் நெடு நாட்களாக நினைத்த காரியம் நடைபெற வேண்டும்/நடை பெறும் என்றே நம்புகிறேன்.
2010 - சுமாரான ஆண்டாகவே இருந்தது. சில நேரங்களில் வாழ்க்கையே வெறுக்கும் அளவிற்கு போனாலும் ஓரளவிற்கு தாங்கி, வாழ்க்கை கரடு முரடான பாதையிலும் செல்லும் என்று மனதை தேற்றிக் கொண்டதுண்டு.

ஒவ்வொரு முறையும் வெயிட் குறைக்க வேண்டும் என்று நினைப்பதோடு நின்று விடாமல், அதற்கான முயற்சிகளிலும் தீவிரமாக ஈடுபட்டது 2010 தான். அது 2011 ம் சாத்தியமாக வேண்டும் என்று உறுதியாக நம்புகிறேன்.

ஜனவரி - புதுவருடத்தில் சபதம் எடுத்தாச்சு இனிமே என்ன செய்வதுன்னு ஒரே யோசனை. அப்படியே ஜனவரி மாசம் முடியும் வரை நான் யோசிப்பதை நிறுத்தவே இல்லை.

மாசி மாசம் ஸ்நோ க்ளீன் பண்ணியதிலேயே நாட்கள் இறக்கை கட்டிப் பறந்தன. மலை போல குவிந்த பனியை கிளீன் பண்ணி கொட்டுவதற்கு இடமில்லாமல் அலைந்து திரிந்த மாசம். ஒரே ஒரு சந்தோஷம் பெரிசா என்னவோ சாதிச்சு கிழிசாப் போல ஸ்நோ க்ளீன் பண்ணுவது போல போட்டொ எல்லாம் பிடிச்சு வைச்சது தான்.

மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் பெரிசா எதுவுமே சாதிக்கவில்லை. நூல் நிலையத்திற்கு அடிக்கடி சென்று வந்தது, ப்ளாக் எழுத ஆரம்பித்தது.

ப்ளாக் எழுத ஆரம்பித்ததும் 2010 ல் தான். சும்மா பொழுது போக்காக கிறுக்க ஆரம்பித்தேன். தேவதை இதழில் வெளிவந்தது மிகவும் மகிழ்ச்சியான தருணங்கள்.

கிட்டத்தட்ட 5 வருடங்களின் பின்னர் என் தங்கை, அவரின் கணவரை போன வருடம் சந்தித்தேன். ஒரு வாரம் மிகவும் மகிழ்ச்சியாக போனது நாட்கள்.
மீண்டும் அந்த நாட்களுக்காக காத்திருக்கிறேன்.



ஆர்ட் competition ல் ( கணவரின் வேலையில் நடந்த ) என் மகனின் ( 6 வயது ) சித்திரம் பரிசு வென்றதும், பரிசுத் தொகையான $100 டாலர்களை சிறுவர்களுக்கான ஆஸ்பத்திரிக்கு நன்கொடையாக வழங்கியதும் மிகவும் பெருமையாக கருதும் விடயங்கள்.

சமீபத்தில் Barnes & Noble என்ற நூல் நிலையத்தில் என் மகன் தன் சித்திரம் பற்றி பேச ஒழுங்குகள் செய்தார் அவரின் வரைதல் ஆசிரியை. நானும் நிறைய நேரம் செலவு செய்து குட்டி ஸ்பீச் ஒன்று தயார் செய்தேன். ஆனால், கடைசி நேரம் இந்த பாழும் வின்டர்/பனி வந்து எல்லாவற்றையும் ரத்து செய்து விட்டார்கள். மீண்டும் வேறு ஒரு நாளில் நடைபெறும் என்று சொன்னது கொஞ்சம் ஆறுதலான விடயம்.


என் ரங்ஸ் போல வருடத்திற்கு 4, 5 தடவை திருந்தாமல் ஒரே தடவையில் திருந்தி விட வேண்டும் என்பதும் இன்னொரு உறுதி மொழி. இதைப் படிச்சுட்டு என் ரங்ஸ்க்கு கெட்ட பழக்க வழக்கங்கள் இருக்கோ என்று தப்புக் கணக்கு போட வேண்டாம். டி.வி பார்ப்பதை நிப்பாட்டணும், வேலைக்கு நேரத்தோடு போகணும் இப்படிப் பட்ட உறுதி மொழிகள் தான் என் ரங்ஸ் வருஷா வருஷம் எடுப்பது.

ஆசியா அக்கா அழைத்த தொடர்பதிவு. கொஞ்சம் லேட்டானாலும் லேட்டஸ்டா எழுதணும் என்று நினைச்சேன். ஆனால், பெரிசா எதுவுமே ஞாபகம் வந்து தொலையமாட்டேன் என்கிறது.

24 comments:

  1. //பெரிசா எதுவுமே ஞாபகம் வந்து தொலையமாட்டேன் என்கிறது. //

    sometimes, no news is good news! :)

    ReplyDelete
  2. ரசிக்கும் படி, எழுதி இருக்கீங்க. சூப்பர்!

    ReplyDelete
  3. வானதி அருமையாக எழுதி அசத்தி இருக்கீங்க,வெரி இண்ட்ரெஸ்டிங்.மகனிற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. உங்க ரிஸொல்யூஷன்ஸ் எல்லாம் நிறைவேற வாழ்த்துக்கள் வானதி!

    ReplyDelete
  5. திரும்பிப் பார்த்த விதம் அருமை.
    நல்லாயிருக்கு

    ReplyDelete
  6. அருமை நான் தான் 1st

    ReplyDelete
  7. நல்ல நினைவலைகள் வானதி

    சுவாரசியமா இருந்துச்சு

    ReplyDelete
  8. கடந்தவைகளை நினைவு படுத்தி அழகா சொல்லிட்டீங்க! :)

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் வானதி

    ReplyDelete
  10. அருமையான நினவலைகள் வானதி.

    ReplyDelete
  11. அழகாக திரும்பி பாத்திருக்கீங்கவானதி. நல்லா இருக்கு.

    ReplyDelete
  12. vanathy! Very well written.. congratulations to your son !

    ReplyDelete
  13. சுவராசியமான நினைவலைகள்...

    ReplyDelete
  14. வான்ஸ் நீங்களா இதை எழுதியிருப்பது.. மிக அடக்கொடுக்கமாக...:).

    மகன் அழகா வரைந்துள்ளார், ஊக்கம் கொடுங்க.

    ReplyDelete
  15. அருமை.. தொடர் பதிவால் மனதில் தொடர்கிறிர்கள்...

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    காதல் கற்பித்த தமிழ் பாடம்

    ReplyDelete
  16. athira said...

    // வான்ஸ் நீங்களா இதை எழுதியிருப்பது.. மிக அடக்கொடுக்கமாக...:).//

    அதானே!!

    ReplyDelete
  17. // ஜனவரி மாசம், மாசி மாசம், மார்ச் மாசம்,//

    அதென்ன ஆங்கிலமும் தமிழும் கலந்த மாதமா வான்ஸ்?? ஹி.. ஹி... நல்லாஇருக்கு

    ReplyDelete
  18. நல்லா எழுதி இருக்கீங்க.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. //வருடத்திற்கு 4, 5 தடவை திருந்தாமல் ஒரே தடவையில் திருந்தி விட வேண்டும் என்பதும்//

    ஹும்.. அங்கயும் அப்படித்தானா? வீட்டுக்கு வீடு ஆம்பளைங்க இப்படித்தான் போல!! :-)))))))

    ReplyDelete
  20. புத்தாண்டு சபதங்கள் நிறைவேற வாழ்த்துக்கள் வானதி

    ReplyDelete
  21. உங்க இந்த தொடர்பதிவை படிக்கிற போது எனக்கு நேரில் நாம இரண்டுபேரும் பார்த்து பேசிகொளவது போல் இருக்கிறாது. நான் ரசித்து படித்தேன்.

    புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    கொஞ்சம் உடல்நிலை சரியில்லாதாதல் வர இயலவில்லை.

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!