வாங்கப்பா எல்லோரும் எப்படி பீன்ஸில் ஒரு ரெசிப்பி செய்வது என்று பார்க்கலாம்.
பீன்ஸ் - 1/4 கிலோ
வெங்காயம் - 1 ( பெரிய வெங்காயம் )
சின்ன வெங்காயம் - 3
மிளகாய் - 4
தேங்காய் துருவல் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி - 1 துண்டு
சீரகம் - 1/2 டீஸ்பூன்
சீரக தூள் - 1/4 டீஸ்பூன்
மஞ்சள் - 1/4 டீஸ்பூன்
உப்பு ( மறக்க வேண்டாம் )
கறிவேப்பிலை
அரிசி - 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 3 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை சாறு ( விரும்பினால் ) - 1/4 டீஸ்பூன்
செய்முறை
கடலைப்பருப்பினை மறக்காமல் தண்ணீரில் ஊறப் போடவும்.
பீன்ஸ் வெட்டுவது பற்றி நிறைய சொல்லியாச்சு. எனவே, நான் அது பற்றி நிறைய எழுதப் போவதில்லை. பீன்ஸ் மிகவும் மெல்லியதாக அரிந்து வைக்கவும்.
சட்டியை சூடாக்கி அதில் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் வறுக்கவும்.
இதனுடன் இஞ்சி சேர்த்து மீண்டும் வறுக்கவும். பின்னர் அரிசியை சேர்க்கவும்.
துருவல் வறுபட்டதும் ( light brown ) அடுப்பை நிப்பாட்டி விட்டு, சின்ன வெங்காயம், சீரகம் சேர்க்கவும்.
மிக்ஸியில் இந்தக் கலவையை சிறுது தண்ணீர் விட்டு நன்கு அரைக்கவும்.
அடி கனமான சட்டியில் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம், கடலைப்பருப்பு தாளிக்கவும். பிறகு வெங்காயம், க. வேப்பிலை சேர்க்கவும். ஓரளவு வதங்கியதும் பீன்ஸ், பச்சை மிளகாய், மஞ்சள், உப்பு சேர்க்கவும். மீதி 1/2 டேபிள்ஸ்பூன் தேங்காய் சேர்க்கவும். அரைத்து வைத்திருக்கும் தேங்காய் கலவையினை ஊற்றவும். அடிக்கடி கிளறி விடவும். பீன்ஸ் வேகாவிட்டால் சிறிது தண்ணீர் தெளிக்கவும். இறுதியில் சீரகத்தூள், 1/4 டீஸ்பூன் எலுமிச்சை சாறு ( விரும்பினால் ) விட்டு இறக்கவும்.
இந்த ரெசிப்பி கண்டி பிடித்தது ஒரு அழகிய விபத்து (!) என்று சொல்லலாம். வேறு ஒரு ரெசிப்பிக்கு அரைத்த தேங்காய் துருவல் கலவை மீந்து போய் விட, அதை எறிய மனம் வராமல், குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும் மனம் வராமல் பீன்ஸில் விட்டுக் கிளறினேன். சுவை நன்றாக இருந்தது. நான் எப்போது தேங்காய் பாவிப்பது குறைவு. நீங்கள் விரும்பினால் அளவை கூட்டிக் கொள்ளலாம்.
// இந்த ரெசிப்பி கண்டு பிடித்தது ஒரு அழகிய விபத்து (!) என்று சொல்லலாம். //
ReplyDeleteVaanathy 's
பெரும்பாலான புது வகை ரெசிப்பிகள் வெளியில் வருவது இப்படித்தான். நல்லா இருக்கு புது ரெசிப்பி.
ஆஹா...
ReplyDeleteவானதி!!! பிரிட்ஜில் இருக்கு. செய்து பார்க்கணும் இதே முறையில்
எனக்கு மிகவும் பிடித்த பீன்ஸ் பெரியல்...சூப்பர்ப்...
ReplyDeleteநான் இப்ப தனிய சமித்து சாபிடற நிலைக்கு வந்திட்டன் உங்கட ரெசிபிய முயற்சித்து பார்ப்பம்
ReplyDeleteTasty one!
ReplyDeleteமேல குட்டீஸ் போட்டோ - சூப்பரோ சூப்பர்!
ஆஹா... ஆஹா... ஆஹா...
ReplyDeleteNalla irukkum pola.
antha kutties photo kalakkal.
நிதியும் நித்தியும் ஒன்று தான்
ReplyDeletehttp://aagaayamanithan.blogspot.com/2011/01/blog-post_6104.html
வானதி படம் அழகு.
ReplyDeleteவானதி படம், செய்முறை விளக்கம் எல்லாமே அருமையா இருக்கு.
ReplyDeleteஇதை ஒரு அழகிய விபத்துல கண்டுபிடிச்சீங்க சரி! எல்லாத்தையும் முழுசா சாப்பிட்டீங்களா இல்ல திரும்பவும் ஃபிரிட்ஜிலேயே வச்சுட்டீங்களா? அவ்வ்வ்வ்....
ReplyDeleteபோட்டோகிராஃபி அருமை!!
அருமை
ReplyDeleteஇப்படி எல்லாம் நடக்குதா. பாவம் பட்ட ஜென்மங்கள் இந்த ஆண்கள்.
ReplyDeleteஎல்லா கண்டுபிடிப்புமே ஒரு விபத்தில் தானே கண்டுபிடிக்க படுகிறது...! :))
ReplyDeleteஅதை உண்மைன்னு சொல்கிறது இந்த டிஷ்.
படத்தை பார்க்கிறப்போ டேஸ்டா இருக்கும்னு தோணுது...முயற்சி பண்ணி பார்கிறேன் வாணி.
super vaani:) very best invention..:)))
ReplyDeleteவித்தியாசமாகத்தான் இருக்கு.இப்படி காய்கறி விலை எக்குத்தப்பா ஏறி கிடக்கையில் இப்படி ரெசிப்பி போட்டால் எப்பூடீஈஈஈஈ??
ReplyDeleteநல்லாயிருக்கு வானதி!!
ReplyDeleteஅந்த குழந்தைகள் போட்டோ சூப்பர்
ReplyDeleteநல்ல ரெசிபி வானதி!
ReplyDeleteசெய்முறை விளக்கம் எல்லாமே அருமை.
ReplyDeleteநல்ல ரெசிபி செய்முறை விளக்கம் எல்லாமே அருமை.
ReplyDeleteதண்ணீர் ஊற்றும் சிறுமியரும் கையேந்தி நிற்கும் சிறுவர்களும் அருமையான் படம் . எங்கே பிடித்தீர்கள்.?
ReplyDeleteகக்கு மாணிக்கம், வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteஆமி, மிக்க நன்றி.
கீதா, மிக்க நன்றி.
யாதவன், செய்து பாருங்கோ. நல்லா இருக்கும்.
மிக்க நன்றி.
சித்ரா, மிக்க நன்றி.
குட்டீஸ் போட்டோ - என் ஆ.காரர் வேறு ஒரு தளத்தில் இருந்து சுட்டது.
குமார், மிக்க நன்றி.
ReplyDeleteஆகாய மனிதன், வருகைக்கு மிக்க நன்றி.
ஆசியா அக்கா, மிக்க நன்றி.
லஷ்மி ஆன்டி, மிக்க நன்றி.
நாட்டாமை, பழையது தின்னா பரம்பரையாக்கும் எங்கள் பரம்பரை.
மிக்க நன்றி.
ஜலீலா அக்கா, மிக்க நன்றி.
இளம் தூயவன், கர்ர்ர்ர்ர்...
மிக்க நன்றி.
கௌஸ், மிக்க நன்றி.
ஆனந்தி, மிக்க நன்றி.
ஸாதிகா அக்கா, விலை குறைஞ்ச பிறகு செய்து பாருங்கோ.
ReplyDeleteமிக்க நன்றி.
தெய்வ சுகந்தி, மிக்க நன்றி.
ஆயிஷா, மிக்க நன்றி.
மலிக்கா, மிக்க நன்றி.
சிவகுமாரன், படம் இலங்கை வெப் சைட்டில் சுட்டது.
மிக்க நன்றி.
நன்றாக இருக்கு வானதி.உங்க அழகான விபத்தை சீக்கிரம் செய்துபார்க்கிறேன்.:)
ReplyDelete