காலையில் எழுந்தபோது இடது உள்ளங்கை லேசாக அரித்தது. அரித்தால் சொறிந்து கொள்ள வேண்டியது தானே என்று குதர்க்கமாக பேசக்கூடாது. பெண்களுக்கு இடது உள்ளங்கை அரித்தால் பணம் வரும் என்று ஊரில் சொல்வார்கள். எனக்கு எங்கிருந்து பணம் வரும்.
பிறந்த நாள் ( வாய் நிறைய வாழ்த்து மட்டுமே கிடைத்தது )போன மாதம், திருமண நாள் அடுத்த மாசம் ..கை அரிப்பு இன்னும் அதிகமாகியது. ஏதாவது வியாதியாக இருக்கப் போவுது - இது என் கணவர்.
மகனை பள்ளிக்கு கூட்டிச் சென்ற போதும் இதே யோசனை.
ரோட்டினை கடக்க நின்ற போது கை மீண்டும் லேசாக அரிப்பு எடுத்தது.
அடடா! இங்கு தான் எங்கேயோ எனக்கு உரிய பணம் இருக்கு என்று மனசாட்சி அலறியது.
10 டாலர்கள் கிடைச்சா என்ன செய்வது... 20 டாலர்கள் கிடைச்சா ஒரு ப்ளான், 100 டாலர்கள் கிடைச்சா .. 100 டாலர்களை இழந்தவன் எப்படிக் கவலைப் படுவானோ என்று அவனுக்காக இரக்கம் உண்டானது.
ஸ்கூல் கார்ட் வாகனங்களை நிறுத்தி, ரோட்டினை கடக்க உதவி செய்தார். அவருக்கு நன்றி சொல்லி மறு கரையினை அடைந்தோம்.
ஸ்கூலினை நெருங்கிய போது கீழே ஏதோ கடதாசி தென்பட்டது. நடை பாதையோரம் செடிகளின் மத்தியில் தென்பட்டது. உடனே பணம் தான் என்று என் மனசாட்சி சொல்லியது.
அது பணமே தான். தமிழ் சினிமாவில் கீழே கிடந்த பணத்தினை எடுக்க நம்ம ஹீரோக்கள் கஷ்டப்படுவதைப் பார்த்திருக்கிறேன். சும்மா சொல்லக் கூடாது அது அத்தனையும் உண்மையே தான்.
எங்கள் பின்னாடி, முன்னாடி, பக்க வாட்டில் எல்லா இடமும் மக்கள் வெள்ளம். சிலர் ஒட்டினாற் போல பின்னாடியே வருவார்கள்.
ஷூ காலினை மேலே வைத்துக் கொண்டேன். கீழே லேஸ் கட்டுவது போல அமர்ந்து, மெதுவா காசை எடுத்து விட்டேன்.
அம்மா! எவ்வளவு பணம் கிடைச்சுது? என் மகனின் கேள்வி.
தெரியலையே ராசா?- இது நான்.
மெதுவாக பிரித்துப் பார்த்தேன். 5 டாலர் நோட்டு.
இதை என்ன செய்வது? பின்னாடி வந்த ஆசாமி என்னை முறைப்பது போல இருந்தது.
இவரும் பங்கு கேட்பாரோ தெரியவில்லை.
வேகமாக நடந்தேன்.
அம்மா! எம்பூட்டு பணம் இருக்கு - இது மீண்டும் மகனே தான்.
5 டாலர்கள் இருக்கு என்று 5 விரல்களை காட்டினேன்.
அதை இப்படிக் குடுங்க என்ற மகனிடம் மறுப்பு சொல்லாமல் குடுத்தேன்.
மகன் பணத்துடன் பள்ளியை நோக்கி வேகமாக ஓட, நானும் பின்னாடியே ஓடினேன்.
பள்ளியில் அலுவலக அறையில், இது யாருடைய பணம் என்று தெரியவில்லை? ரோட்டில் இருந்திச்சு. யாராவது அவர்களின் லன்ஞ் பணத்தினை தொலைத்து இருப்பார்கள். அவங்க இன்று சாப்பாட்டிற்கு என்ன செய்வார்கள்? என்று என் மகன் மழலையில் சொல்ல, அதிபர் திறந்த வாய் மூட மறந்து நின்றார்.
ஒலி பெருக்கியில் அறிவிக்கப்பட்டது. பணத்தினை தவற விட்ட பொடியன் ஓடி வந்து, நன்றி சொல்லி பணத்தினைப் பெற்றுக் கொண்டான்.
தேசிய கீதம் பாடல் தொடங்க எங்கும் அமைதி நிலவியது.
நான் வீட்டினை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.
கீழே கிடந்த பணத்தினை பொறுப்பாக கொண்டு வந்து கொடுத்த என் மகனின் பெயரினை ஒலி பெருக்கியில் அறிவித்தார்கள்.
அங்கிருந்த மரங்களில், செடிகளில் பட்டு மீண்டும் மீண்டும் எதிரொலித்தது.
வான்ஸ்! சூப்பர் வான்ஸ்! பிள்ளைகள் மனசு வேணும் என்று சொல்வது இதுதானா :))
ReplyDeleteungal maganukku ennudaya paarattukkal.
ReplyDeleteKurinji
ஆஹா.. சூப்பர்.
ReplyDeleteகுழந்தைகள் நம்மை விட தெளிவா யோசிக்கராங்க.
ReplyDeleteYou are bringing him up so well. மகனுடன், உங்களையும் பாராட்ட வேண்டும்.
ReplyDeleteவானதி,கதையா?அனுபவமா?எதுவாயிருந்தாலும் பாராட்டுக்கள்.அருமை.
ReplyDeleteArumai:-)
ReplyDeleteவாவ்... க்யூட்டாக ஒரு ஸ்வீட் கதை :)
ReplyDeleteஉள்ளங்கை அரிப்பு எடுத்தா பிள்ளைங்க மூலமா சந்தோஷமும் மனநிறைவும் வரும்னு இனிமேல் மாத்தி ஒரு ஜோசியம் சொல்ல ஆரம்பிச்சிடுவாங்களோ இதைப் படிச்சா!! :)
குழந்தை மனமும் தெய்வ குணமும் ஒன்று என சொல்வார்கள் உண்மையென உங்கள் நிருபித்துவிட்டார் சகோ
ReplyDeleteநக்கல் பண்றதுல உங்கள அடிச்சுக்க முடியாது வான்ஸ்.. கதை நாயகி எப்பிடியெல்லாம் கனவு கண்டு.. ச்சே கடைசியில இப்பிடி பையனுக்கு புண்ணியம் கிடைச்சுடுச்சு..
ReplyDeleteme the first...
ReplyDeleteellai erunthalum
வடை எனக்குத்தான்
நானா இருந்த
ReplyDeleteஎல்லாத்தயும் கடலை முட்டாய் வாங்கி எல்லாருக்கும் கொடுத்து நானும் சாப்டு இருப்பேன்.
உங்கள் மகனுக்கு
வாழ்த்துக்கள் ...
Good one Vanathy. ;)
ReplyDeleteவானதி, உங்க பையன்கிட்ட இருந்து நீங்க நிறைய கத்துக்கனும்:)
ReplyDeleteஉங்க மகனுக்கு வாழ்த்துகள்...எவ்வளவு பொருப்பான பையன்...வாழ்த்துகள் உங்களுக்கும் வானதி...
ReplyDeleteசூப்பர் வாணி!!!
ReplyDeleteபையன் ரொம்ப சமத்து.......
உள்ளங்கை அரிப்பு இப்போ மன அரிப்பா இடம் மாறிடுச்சு போல! நல்ல கதை. வாழ்த்துகள்.
ReplyDeleteCongratulations (son)
ReplyDeleteவானதி,கதையா?அனுபவமா?எதுவாயிருந்தாலும் பாராட்டுக்கள்.அருமை.
ReplyDeleteவானதி,கதையா?அனுபவமா?எதுவாயிருந்தாலும் பாராட்டுக்கள்.அருமை.
ReplyDeleterepeat
best wishesh for ur son
ReplyDeleteகதையோ அனுபவமோ, ரொம்பவும் நன்றாக எழுதியிருக்கிறீர்கள் வானதி! குழந்தைகள் மனது பனித்துளி மாதிரி பரிசுத்தமானது என்பதை உங்கள் மகன் நிரூபித்து விட்டார். அடிப்படையில் நல்ல வளப்பு இருந்தால்தான் இதெல்லாம் சாத்தியமாகும் ஒரு குழந்தைக்கு! அதனால் பாராட்டில் பாதி உங்களைத்தான் நியாயமாகச் சாரும்!!
ReplyDeleteஇவன் நல்லா வருவான்டா.... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅது உங்க பிள்ளையாச்சே!! இருக்காத பின்னே!! குழந்தைக்கு என் அன்புகள். எழுதிய உங்களுக்கு வாழ்த்துகள்!!
ReplyDeleteஎனக்கும் உள்ளங்கை அரிக்குது ..அது தூக்கம் வரும் போது மட்டுமே..ஆனா கனவுல பணம் வருவது மாதிரி ஒன்னும் தெரியலையே...!!
ReplyDeleteகதையா இருந்தாலும் அனுபவமா இருந்தாலும் ரெண்டுமே நல்ல இருக்கு :-)
ReplyDeleteS ரொம்ப நல்ல பிள்ளையா இருக்காரு வானதி! பாராட்டுக்கள்!
ReplyDeleteகுழந்தைக்கும் பண்போடு வளர்த்த அம்மாக்கும் என் பாராட்டுக்கள. கதையோ அனுபவமோ பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteவாணி.... உண்மையில் நெகிழ்ச்சியான.... பகிர்வுப்பா... ரொம்ப சந்தோசமா இருக்குங்க.. :-))
ReplyDeleteகுட்டிக்கு என் அன்பும், அணைப்பும்...
chooooo sweeettt :-))
//பெண்களுக்கு இடது உள்ளங்கை அரித்தால் பணம் வரும் என்று ஊரில் சொல்வார்கள். எனக்கு எங்கிருந்து பணம் வரும். //
ReplyDeleteவழக்கம் போல அவரோட பாக்கெட்டுல இருந்து ஆட்டயப் போட வேண்டியது தான.. ;)
//திருமண நாள் அடுத்த மாசம் ..கை அரிப்பு இன்னும் அதிகமாகியது//
ஆஹா அடுத்த மாசம் இன்னும் அதிகமாகுமே ;)
//100 டாலர்களை இழந்தவன் எப்படிக் கவலைப் படுவானோ என்று அவனுக்காக இரக்கம் உண்டானது.//
எவ்வளோ பெரிய மனசு ;)
//அதிபர் திறந்த வாய் மூட மறந்து நின்றார்.//
உங்கள மேலயும் கீழையும் பார்த்திருப்பாரே.. அத சொல்லவே இல்ல? ;)
//மகனின் பெயரினை ஒலி பெருக்கியில் அறிவித்தார்கள்.//
உங்க பையனுக்கு பாராட்டுக்கள்.. :)
நிறைய கத்துக்கங்க மேடம் அவர்ட இருந்து ;)
o...great vani..great...படிச்சுட்டு புல்லரிசிருச்சு...நல்லா கோர்வையா எழுதுறிங்களே...படிக்க ரொம்ப சுவாரஸ்யம்...:))உங்க பையனுக்கு ஒரு ஓ போட்டேன்...கிரேட்..:))
ReplyDeleteதேவதை மூலம் உங்கள் பதிவுக்கு வந்தேன்.
ReplyDeleteஇனி தொடர்ந்து வர முயற்சிக்கிறேன்.
நன்றி.
நிஜமோ நிழலோ .விவரித்து இருந்ததது பிரமாதம்.
ReplyDeleteபிள்ளைக்கு இருக்கும் பொறுப்பு பெரியவர்களுக்கு ஏன் இல்லாமல் போனது ? அவனும் பரியவன்
ReplyDeleteஆனதும் நம்மைப் போல் ஆகி விடுவானோ.
இலா, மிக்க நன்றி.
ReplyDeleteகுறிஞ்சி, மிக்க நன்றி.
புவனேஸ்வரி, மிக்க நன்றி.
லஷ்மி ஆன்டி, மிக்க நன்றி.
சித்ரா, மிக்க நன்றி.
ஆசியா அக்கா, மிக்க நன்றி.
நிது, மிக்க நன்றி.
பிரபு, ம்ம்ம்..நல்லா சொன்னீங்க.
மிக்க நன்றி.
தினேஷ்குமார்,
சந்தூ, நீங்க தான் என் பீலிங்ஸை புரிஞ்சுக்கிட்ட ஒரே ஒரு ஆள்.
மிக்க நன்றி.
சிவா, எல்லோருக்கும் குடுத்து சாப்பிடுவது நல்ல பழக்கம்.
மிக்க நன்றி.
இமா, மிக்க நன்றி.
கோபி, மிக்க நன்றி.
கீதா, மிக்க நன்றி.
ஆமினா, மிக்க நன்றி.
ஹூசைனம்மா, மன அரிப்பா??? அப்படியெல்லாம் இல்லைப்பா.
மிக்க நன்றி.
கீதா, மிக்க நன்றி.
குமார், மிக்க நன்றி.
சரவணன், மிக்க நன்றி.
ரமேஷ், மிக்க நன்றி.
சுதா, மிக்க நன்றி.
ReplyDeleteநாட்டாமை, மிக்க நன்றி.
ஜெய், எந்தக் கை சொறியுது?? நல்லா சோப்பு போட்டு கழுவுங்க. சரியா??
மிக்க நன்றி.
மகி, மிக்க நன்றி.
நிலாமதி, மிக்க நன்றி.
ஆனந்தி, மிக்க நன்றி.
பாலாஜி, சொந்த வீட்டில் எப்படி ஆட்டையை போடுறது. த்ரில்லாவும் இருக்காது.
திருமண நாள் பெரும்பாலும் சாதாரண நாள் போலவே இருக்கும். என் ஆ.காரர் சில சமயம் மறந்துவிடுவார்.
கொஞ்சமாச்சும் இரக்க குணம் இருக்குன்னு காட்ட வேண்டாமா??
சரி கத்துக்கறேன், அண்ணாச்சி.
மிக்க நன்றி.
ஆனந்தி, பாராட்டிற்கு மிக்க நன்றி.
அமைதி அப்பா, மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து வாங்க.
மிக்க நன்றி.
ஸாதிகா அக்கா, மிக்க நன்றி.
சிவகுமாரன், அதான் எனக்கும் விளங்கவில்லை.
மிக்க நன்றி.
வாவ்... நல்ல படிப்பினை வாணி... குழந்தையும் தெய்வமும் ஒண்ணுனு சும்மாவா சொல்றாங்க
ReplyDeleteஉங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்... நேரம் கிடைக்கும் போது பார்வையிடவும்
ReplyDeletehttp://blogintamil.blogspot.com/2011/10/blog-post_4769.html
வாழ்த்துக்கள்