Thursday, December 9, 2010

தொடர்பதிவு.

ஆமி அழைத்த தொடர்பதிவு. நிறைய யோசித்து மண்டை காய்ந்து போனது தான் மிச்சம். எனக்கு பாட்டுக்கள் என்றாலே மிகவும் பிடிக்கும். இதில் எதை குறிப்பிட்டு சொல்வது என்றே தெரியவில்லை. பழைய பாட்டுக்கள் விரும்பி கேட்பதுண்டு. ஆனால், பாடியது யார் என்ற விபரம் தெரியாது. நான் எதையாச்சும் எழுதி தொலைக்க, யாராச்சும் சண்டைக்கு வந்தா.... எனவே எனக்கு மிகவும் தெரிந்த பாடல்களை மட்டுமே இங்கே குறிப்பிடப் போகிறேன்.

1. அழகு மயில் ஆட அபிநயங்கள் கூட.... ஜானகியின் பாடல் மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு வரியும் அவ்வளவு அழகா, அர்த்தம் நிறைந்ததா இருக்கும்.
ஒரு விதவையின் மனசை சொல்லும் பாடல்.
கல்லூரியில் படிக்கும் போது இந்த பாட்டுக்கு என் வகுப்பு மாணவிகள் இருவர் நடனம் ஆடினார்கள். மிகவும் சிறப்பாக பரத நாட்டியம் ஆடிய போதும். முதல் பரிசு கிடைக்கவில்லை. காரணம் ??? நான் சொல்ல மாட்டேன் ( இவளுக்கு இதே வேலையாப் போச்சு என்று திட்ட வேண்டாம். கேள்வி கேட்டாதானே அறிவு வளரும்ன்னு பெரியவங்க சொல்வாங்க. )

2. சின்ன சின்ன ஆசை... மின்மினியின் குரலில் ரோஜா படத்தின் பாடல். எனக்கும் இப்படி நிறைய சின்ன சின்ன ஆசைகள் இருக்கு. அதெல்லாம் நிறைவேற ஆசை.

3. காதோடு தான் நான் பாடுவேன்... எல் ஆர்.ஈஸ்வரி பாடிய பாடல். அவரின் குரலில் ஒரு கவர்ச்சி இருக்கும். அவரின் பாடல்களை you tube ல் நிறைய கேட்பதுண்டு.

4. கங்கை கரை தோட்டம்.. சுசீலா பாடிய பாடல். மிகவும் அருமையான குரல் வளம் மிக்கவர். அவரின் பல பாடல்கள் பிடிக்கும். ஆனால். மிகவும் பிடித்த பாடல் இது தான்.

5. கண்ணோடு காண்பதெல்லாம் ... ஜீன்ஸ் படத்தில் Nithyashri பாடிய பாடல். கணீரென்ற குரலும், பாடல் வரிகளும் அழகோ அழகு.


6. யமுனை ஆற்றிலே ஈரக்காற்றிலே.... தளபதி படத்தில் வரும் பாடல். பாடியவர் பெயர் தெரியவில்லை ஆனால், மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று.
( பாடகி பெயர் தெரிஞ்சா எனக்கு தனிப்பட்ட முறையில் மெயில் அனுப்புங்கப்பா. இங்கே திட்டாதீங்க. சரியா? )

7. கண்ணாளனே எனது கண்ணை ... பாம்பே படத்தில் சித்ராவின் குரலில் வரும் பாடல். என்றும் இனிமையான குரலுக்கு சொந்தக்காரர்.

8. ஒவ்வொரு பூக்களுமே சொல்... என்ற பாடல். ஆட்டோகிராஃப் படத்தில் வரும் பாடல். சித்ராவின் குரலில் அருமையான வரிகள். சோர்ந்து போய் இருக்கும் நேரம் இந்தப் பாடலைக் கேட்டால் தன்னம்பிக்கை வரும். நிறையத் தடவைகள் கேட்டாலுல் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல்.


9. இது ஹரினி பாடிய பாடல். ஆரம்பம் ஞாபகம் இல்லை. இடையில் வரும் வரிகள் மட்டுமே ஞாபகம் இருக்கு.

வானம் வரை வந்த தலைவா இனி வெண்ணிலவு ரொம்பத் தொலைவா.....இந்தப் பாடல் மிகவும் பிடிக்கும். காரணம் சொல்லமாட்டேன். ஆனால், இந்தப் பாடல் கேட்ட உடனே எனக்கு சிரிப்பு வந்து விடும். தொடக்கம் தெரிஞ்சா சொல்லுங்க. ஆனால், இந்த வரிகள் தான் மிகவும் மனதில் பதிந்த வரிகள்.

10. உயிரே படத்தில் வரும் நெஞ்சினிலே நெஞ்சினிலே ... பாடல் மிகவும் பிடித்த பாடல். ஜானகியின் கணீர் குரல், ரஹ்மானின் இசையில் கேட்க அவ்வளவு இனிமையாக இருக்கும். படமாக்கப்பட்ட விதமும் அருமை.

21 comments:

  1. நல்ல பாடல்கள் வானதி!

    ReplyDelete
  2. பாடல்கள் தொகுப்பு அருமை
    சிறப்பாக பதிவு செய்துள்ளீர்கள்...

    தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

    நன்றி

    ReplyDelete
  3. அட என்னபா எல்லாம் எனக்கு பிடித்த பாடல்கள்....மிக முக்கியமா யமுனை ஆற்றிலே....!

    ஹரிணி பாடிய அந்த பாட்டு தெரியல...ஆனா பாடலின் தொடக்கம் தெரியாமலேயே பாட்டை ரசிக்கிறீங்கனா நீங்க கிரேட் வாணி.... :))

    ReplyDelete
  4. பொருமையா காத்திருந்து போட்டதில் தவறே இல்லை வானதி. எல்லா பாடல் தேர்வுகளும் அருமையோ அருமை....

    இடையிடையே பதிலில்லா கேள்வியை கொடுத்து தலைய பிக்க வச்சுடீங்க.....

    யமுனை ஆற்றிலே பாடலை பாடியவர்: மிதாளி :)

    ReplyDelete
  5. ஆஹா... கேட்ட ரெண்டு கேள்விகளும் எனக்கு தெரியலியே.... நல்லாத்தான் இருக்கும், அம்மணி!

    ReplyDelete
  6. நைஸ் கலெக்ஷன்.வானதி.அதென்னவோ தெரியவில்லை.இத்தொடர் எழுதிய அநேகர் "காதோடுதான்"பாடலை குறிப்பிட்டுள்ளனர் என்பது உண்மையில் வியப்பத்தருகின்றது.

    ReplyDelete
  7. அனைத்து பாடல்களும் சூப்பர் பதிவிட்ட விதமும் சூப்பர் கலக்கிட்டிங்க சகோ

    ReplyDelete
  8. எப்பிடியோ பத்து தேத்திட்டீங்களா? :)

    நல்லாயிருக்கு வானதி... "காதோடு தான் நான் பாடுவேன்" தேடிகிட்டு இருக்கேன்.. இன்னும் யூ ட்யூப் ல வரல..

    ReplyDelete
  9. சாரி மிஸ் கொஞ்சம் லேட் ஆய்ட்டு...நேரிய ஹோமே வொர்க்..

    ஆறு, ஏழு
    பிடித்த பாடலில் உள்ளது

    ReplyDelete
  10. பாடல்கள் தொகுப்பு அருமை வானதி

    ReplyDelete
  11. ரொம்ப சூப்பர் வானதி

    சின்ன சின்ன ஆசை எனக்கும் பிடித்தது,
    காதோடு தான் அருமையோ அருமை

    ReplyDelete
  12. எல்லாப்பாடல்களுமே எனக்கு பிடித்த பாடல்கள் தான்,ஒவ்வொருவர் எழுதும் பொழுது தான் பல பாடல்கள் நினைவு வருகிறது.அருமை வானதி.

    ReplyDelete
  13. பாடல்கள் தொகுப்பு அருமை வானதி.

    ReplyDelete
  14. இது எப்ப போட்டீங்க. நான் வந்தது லேட்டோ. முதல் ரெண்டு வாரம் எப்பவுமே ஆணி கடுமையா இருக்கும். இந்த மாசமும் அப்படி ஆகிப் போச்சு. எல்லாப் பாடல்களும் அருமை வான்ஸ்.

    ReplyDelete
  15. //"அழகு மயில் ஆட அபிநயங்கள் கூட".... ஜானகியின் பாடல் மிகவும் சிறப்பாக பரத நாட்டியம் ஆடிய போதும். முதல் பரிசு கிடைக்கவில்லை. காரணம் ??? நான் சொல்ல மாட்டேன் ( இவளுக்கு இதே வேலையாப் போச்சு என்று திட்ட வேண்டாம். கேள்வி கேட்டாதானே அறிவு வளரும்ன்னு பெரியவங்க சொல்வாங்க. ) //

    ஏன் வெள்ளை டிரஸ் உடுத்திக் கிட்டு டான்ஸ் ஆடலியோ?? எப்படி என் அறிவு? நீங்க இப்படியே கேளுங்க. அப்படியாச்சும் எங்களுக்கு அறிவு வளருதான்னு பார்ப்போம். ஹி..ஹி..

    ReplyDelete
  16. சந்தூஸ் இதை கேளுங்க ..கேளுங்க ..கேட்டுகிட்டே இருங்க ...http://www.youtube.com/watch?v=s4TdHTtuVQ8

    ReplyDelete
  17. எனக்கு பிடிச்ச பாட்டுக்கள் நிறைய இருக்கு .தனியா அதை மட்டும் சொல்ல விரும்பல .சூப்பர் கலெக்‌ஷன்ஸ் :-)

    ReplyDelete
  18. நல்ல கலெக்சன் :)

    ReplyDelete
  19. மிதாளி என்பவர் பாடிய பாடல்தான் யமுனையாற்றிலே.எழுதியவர் வாலி.

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!