Thursday, September 30, 2010
ஆத்தா! நான் பாஸாகிட்டேன்...
எல்லோரும் நலமா? வாங்க அப்படியே இந்தப் பேருந்துல்ல போய்க் கொண்டே பேசலாம். இன்று எனக்கு கல்லூரிக்கு போக வேண்டும். கடந்த 2 வருடங்களாக இந்த பஸ்ஸில் தான் பயணம் செய்கிறேன். ட்ரைவர் கூட அவ்வளவு பழக்கம். எங்கே கண்டாலும் வண்டியை நிப்பாட்டி, என்னை ஏற்றிக் கொள்வார். கனடாவில் இப்படி செய்வது சட்டத்திற்கு புறம்பானது என்றாலும் அவர் அதைப்பற்றி அலட்டிக் கொள்வதில்லை.
அன்றொரு நாள் நல்ல பனி. நடைபாதை முழுவதும் பனி மூடி, நான் பேருந்தை பிடிக்கும் நோக்கில் வேகமாக ஓடி வந்து, பனியில் விழுந்து... சொல்லவே அழுகாச்சி வருகிறது. அதே நேரம் பேருந்து நிறுத்தத்தில் வந்து நின்றது. ஓட்டுநர் வண்டியை நிப்பாட்டி விட்டு, என்னை நலம் விசாரித்தார். பலமாக அடி விழுந்தாலும் சிரிச்சு, ஒரு வழியா சமாளித்து விட்டேன்.
ஏன் இப்படி கஷ்டப்படுகிறாய்? கார் லைசன்ஸ் எடுத்து தொலைக்கலாமே என்று நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது. அதைப்பற்றி தான் சொல்லப் போகிறேன். என் சகோதரன் கார் வைத்திருக்கிறான். ஆனால், எனக்கு ட்ரைவிங் பழக்கும் அளவிற்கு பொறுமை அவனுக்கோ, அல்லது அவனிடம் பழகும் அளவிற்கு பொறுமை எனக்கோ இருப்பதாக தெரியவில்லை. நான் ஒரு வழியா முட்டி மோதி ட்ரைவிங் ஸ்கூலில் பணம் கட்டி, கார் ஓடப்பழகினேன். எழுத்து பரீட்சையில் பாஸாகி விட்டேன். ஆனால், இந்த ட்ரைவிங் பரிட்சை மட்டும் எனக்கு சரியாவே வரமாட்டேன் என்கிறது. உங்களுக்கு மட்டும் ஒரு ரகசியம்... காதை கிட்ட கொண்டு வாங்க. நான் 5 தடவையும் பெஸிலாகி விட்டேன். நாளை மீண்டும் ட்ரைவிங் டெஸ்ட் இருக்கு. கல்லூரி முடிய அங்கிருந்து ட்ரைவிங் ஸ்கூல் போய் 1 மணி நேரம் கார் ஓட்டிப்பழக வேண்டும். இந்த முறை எப்படியாவது நான் பாஸ் பண்ணி விடுவேன் என்று என் ட்ரைவிங் இன்ஸ்ட்ரக்டர் சொல்லியிருக்கிறார். பார்க்கலாம்.
பாஸாகிய பிறகு என்ன நடந்திச்சு என்று சொல்றேன். வரட்டா.
என்ன காத்துப் பிடுங்கிய பலூன் போல இருக்கிறாய் என்று நக்கல் எல்லாம் வேண்டாம். இந்த தடவையும் பாஸாகவில்லை. ம்ம்ம்...6வது தடவையும் பெயிலாகிவிட்டேன்.
எல்லாம் நல்லபடியா தான் போய்ட்டு இருந்திச்சு. இந்த முறை ட்ரைவிங் டெஸ்ட் செய்ய ஒரு பெண் அதிகாரி வந்தார். பெயர் ஜோ ஆன் என்று சொன்னார். என் பெரியம்மா வயசு இருக்கும். லைட், வைப்பர், சிக்னல் என்று அவர் கேட்ட கேள்விகளுக்கு சரியாகவே பதில் சொன்னேன். என்னைக் காரை ஓட்டச் சொன்னார். நானும் சந்தோஷமாக ஓடினேன். கொஞ்சம் நம்பிக்கை ஒளி தெரிந்தது. ட்ராஃபிக் நிறைந்த சாலையில் ஓடிக் கொண்டிருந்த போது, எங்களைக் கடந்து ஒரு கார் சர் என சீறிப்பாய்ந்து ஓடியது. குறிப்பிடப்பட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் சென்ற காரைப் பார்த்ததும் ஜோவின் முகம் தக்காளிப்பழம் போல சிவந்து விட்டது. மடையன் என்று சத்தமாகவே சொன்னார். ஒரு சிக்னலில் நின்ற காரின் பக்கத்தில் போய் எங்கள் காரும் நின்றது. ஜன்னலை திறந்து, " ஏன்பா! இப்படி ஓட உனக்கு யார் லைசென்ஸ் குடுத்தார்கள்", என்று கோபமாக கேட்டார் ஜோ.
" ஆத்தா! என்ன என்னை மறந்துவிட்டாயா? நீங்க தானே எனக்கு லைசென்ஸ் 4 மாசங்களுக்கு முன்பு குடுத்தீங்க. என் பெயர் அலெக்ஸ். உங்க மகன் பெயர் கூட அலெக்ஸ்ன்னு சொன்னீங்களே? ", என்றான் அலெக்ஸ்.
ஜோவின் முகம் கடுகடு என்று இருந்தது.
என்னைக் கண்டதும் அலெக்ஸ் கை அசைத்தான். " கவலைப்படாதே நீயும் பாஸான மாதிரி தான். வரட்டா, ஜோ ", என்று கையை அசைத்து விட்டுப் போய் விட்டான்.
அடப்பாவி! நீ எனக்கும் குழி தோண்டி விட்டு அல்லவா போகிறாய் என்று என் உள்மனம் கூச்சல் போட்டது.
அதன் பிறகு ஜோ சுரத்திழந்து போய் இருந்தார். என் நேரம் முடிந்ததும் எதுவுமே சொல்லாமல் உள்ளே போய் விட்டார்.
பிறகு ஏதோ தோன்றியவராக வெளியே வந்தார், " பெட்டர் ட்ரை நெக்ஸ்ட் டைம் (Better try next time )", என்று சொல்லிவிட்டு உள்ளே போய் மறைந்துவிட்டார்.
இந்த கூத்திற்காக என் பாக்கெட் பணம் நிறைய செலவு செய்து விட்டேன். இனிமேல் திரும்ப பணம் சேர்க்க வேண்டும். பணம் சேர்த்து, அடுத்த தடவை கண்டிப்பா பாஸாகி விடுவேன். நீங்களும் இப்படி என்னுடன் பஸ்ஸில் ஏறி, இறங்கி அல்லாட வேண்டி இருக்காது. பாஸாகிய பிறகு மீண்டும் சந்திப்போம்.
Labels:Tamil Short Stories
ஆத்தா நான் பாஸாகிட்டேன் - funny story
Subscribe to:
Post Comments (Atom)
இது ஒருவிதத்தில் நல்லதுதான். இவ்வளவு சோதனைக்குப் பிறகு கிடைக்கும் லைசென்சை நீங்கள் தக்கவைக்க மிக ஜாக்கிரதையாக வண்டி ஒட்டுவீர்கள்.
ReplyDeleterenewed, newfound and eternal optimism.
இதெல்லாம் இன்னைக்குக் காலம்பர படிச்ச வார்த்தைகள். எங்கயாவது பயன்படுதனும்ல :)
அப்பா நீங்க விதௌட் கேசா ??
ReplyDelete// இந்த முறை ட்ரைவிங் டெஸ்ட் செய்ய ஒரு பெண் அதிகாரி வந்தார். பெயர் ஜோ ஆன் என்று சொன்னார். என் பெரியம்மா வயசு இருக்கும். //
ReplyDeleteஇருக்கட்டுமே..!! நீங்க அவங்களை பார்த்து 'ஹி..ஹி ன்னு' ஒரு சிரிப்பு சிரித்து வைக்க வேண்டியது தானே!! அங்க தான் நீங்க 'மிஸ்டேக்' பண்ணிட்டீங்க வாணி!!
அடுத்த முறை பாஸ் செஞ்சறலாம் விடுங்க:((
ReplyDeleteஆத்தா நீ பாஸாயிட்டியா இல்லையா?பாஸாயிட்டேன் சொல்லிட்டு ஆறாம்தடவை பெயில் சொன்னா எப்படி?கவலைப்படாதே ஆத்தா பாஸாயிடுவே.
ReplyDeleteவானதி,அடுத்த முறை பாஸ் பண்ணிடலாம் விடுங்க.7தான் ராசி நம்பராம்!
ReplyDelete:))))
பாராட்டுறேன்! உங்க விடா முயற்சியையும், உண்மைய சொல்ற தைரியத்தையும் :)
ReplyDeleteவான்ஸ்! ஹ ஹ ஹா! என் தம்பியும் இதே தான் சொன்னான்...அவனுக்கு ஊரில 2 சக்கர வண்டிக்கே டிரைவர் ( குட்டி தம்பி) போட்டுட்டு போவான்.. இங்க வந்து ஒவ்வொரு முறையும் என்னிடம் சொல்லிட்டு போவான்... எப்படியோ கடைசி 2/3 முறை சொல்லவே இல்லை.. கஜினி மாதிரி :))
ReplyDeleteஇங்க விசாவில் இருந்தா ஒவ்வொரு மாநிலத்துக்கும் விதிமுறை வேற.. பாஸ்டனில் உங்களுக்கு ஒரு ஸ்பான்சர் வேற வேணும்.
ஹூம்.... கதை நீளமா போகும்.. ஒரு தொடருக்கு அழைத்துவிடுங்கோ :))
எனக்கும் பழைய கதை எல்லாம் நினைவில் வருகிறது ம்ம்ம்ம்.....ஆனால் இங்கு லைசன்ஸ் இல்லை என்றால் கஷ்டம் தான்
ReplyDeleteபாஸாக வாத்துக்கள் :-)
நீங்க பாஸ் ஆக வாழ்த்துக்கள்
ReplyDeleteஅழுதழுது சிரிக்கும் அழகிய படைப்பு
இந்த கதையை படிச்சா தலைப்பு உதைக்குதே.. :)
ReplyDelete//கவலைப்படாதே நீயும் பாஸான மாதிரி தான். வரட்டா, ஜோ ", என்று கையை அசைத்து விட்டுப் போய் விட்டான்.
ReplyDeleteஅடப்பாவி! நீ எனக்கும் குழி தோண்டி விட்டு அல்லவா போகிறாய் //
ஆமாம் வாணி என் உள்மனசும் அப்படித்தான் சொல்லிச்சு...ஆனா மனம் தளராதிங்க....முயற்சி செய்ங்க.... வெற்றியடைய வாழ்த்துக்கள் தோழி.
உண்மைய வெளிபடையா சொல்ற உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குப்பா.... :)))
ஆத்தா நீ பாஸாயிட்டியா இல்லையா?பாஸாயிட்டேன் சொல்லிட்டு ஆறாம்தடவை பெயில் சொன்னா எப்படி?கவலைப்படாதே ஆத்தா பாஸாயிடுவே.:
ReplyDeleterepeatu...
வானதி,அடுத்த முறை பாஸ் பண்ணிடலாம் விடுங்க.7தான் ராசி நம்பராம்!
ReplyDelete:)))) ///
nooooooooooo.....
10தான் ராசி நம்பராம்.because..
01.10.10..ok
kavalapadathenga...en peyarai chollunga..udaney paas agividuvenga..
okva...wish you all the best..
adavance all the best.
ReplyDeleteவானதி.. தொடர் பதிவுக்கு யாரையாவது அழைச்சா என்னையும் சேத்துக்கோங்க.. ப்ளீஸ் ப்ளீஸ் :))
ReplyDeleteநல்ல நகைச்சுவை.. அலெக்ஸ் காரெக்டர் அருமை :) எல்லாமே கற்பனை தான்னு நம்பறேன்.. ஹாஹ்ஹா..
//பாஸாக வாத்துக்கள் :-)// என்னோட வாத்துக்களும்.. :)
எங்க பெரியண்ணன் மகளுக்கு 10-10-10 அன்று
ReplyDeleteகலயாணமாம். லக்கி நம்பர்ன்னு சொன்னார். நா சொல்லிட்டேன் இந்த நம்பருக்கும் வான்ஸுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு ஹி..ஹி..
நானும் ரெண்டாவது வாட்டி தான் பாஸ் பண்ணினேன் டிரைவ் டெஸ்ட்ல... (நோட் தி பாயிண்ட்... ஒரு வாட்டி பெயில் ஆனேன்னு நான் சொல்லலியே... இதான் இங்க ஊர்ல "positive thinking" ஹா ஹா அஹ... ஒகே ஒகே ..மீ எஸ்கேப்...)
ReplyDelete1. வாணி ;)))
ReplyDelete2. //7தான் ராசி நம்பராம்!
:)))) // ம். ;)))))
3. //வானதி.. தொடர் பதிவுக்கு யாரையாவது அழைச்சா என்னையும் சேத்துக்கோங்க.. ப்ளீஸ் ப்ளீஸ் :))
உ
ReplyDelete//படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!//
இப்படி சொன்னா சொல்லாம போ முடியுமா!
ஏன்னா என்னை இப்படி போங்’கள்’னு சொல்றது
நேக்கு ’கிக்’காருக்கு!
ஏன்னுதான் ஒங்களுக்கு தெர்யுமே!
ஆனா ஒன்னு நான் TVS 50க்கு ஓட்டாமையே
லைசென்ஸ் வாங்கிட்டேனாக்கும்!
விட்டுத் தள்ளுங்க....
ReplyDeleteஅடுத்தமுறை வாங்கிடலாம்...
வானதி அடுத்த முறை பாஸ் பண்ணிடலாம்
ReplyDeleteஅந்தப் படத்துல இருக்கதுதான் நீங்க ஓட்டின காரா? அந்தம்மாதான் டெஸ்ட் இன்ஸ்ட்ரக்டரா? :-)))
ReplyDelete/ஏன்பா! இப்படி ஓட உனக்கு யார் லைசென்ஸ் குடுத்தார்கள்", //
அதென்ன, உலகத்துல எல்லாருமே அடுத்தவனைப் பாத்து இப்படித்தான் சொல்வாங்க போல!!
மிக அருமையான பதிவு
ReplyDeletehttp://denimmohan.blogspot.com/
அன்றே படிச்சாச்சு பதிவ , பதில் மனதில் நினைத்து கொண்டு பதில் போட்டாச்சுன்னுட்டு போய்விட்டேன். இப்ப வந்து பார்த்தா என் பதில கானும்.
ReplyDeleteசரி பராவாயில்லை , வானதி ரொம்ப சூப்பரா கார பார்க் பண்ணி இருக்கீங்க.
பரவாயில்லப்பா இங்கு நிரைய பேர் கஜினி முகம்மது போல் படை எடுத்து கொண்டு இருககங்க
எஅன்க்கும் ஆசை தான் சரி கார் வேண்டாம் பைக் எடுக்கலாமுன்னு எங்க ரங்ஸ் கிட்ட சொன்னா. ஏற்கனவே நடக்கிற ஆக்சிடெண்ட் போதாதா, ஏன்னா அவ்வை சன்முகி போல ஓட்டுவேனாம்.
ராமமூர்த்தி, மிக்க நன்றி.
ReplyDeleteவார்த்தைகளை நல்லாவே பயன்படுத்திறீங்க.
இதெல்லாம் சும்மா கற்பனைக் கதைங்க.
எல்கே, அவ்வ்வ்.
நான் விதௌட் கேஸா??? இல்லவே இல்லை.
மிக்க நன்றி.
நாட்டாமை, சிரிச்சு சமாளிக்க நான் என்ன இன்டர்வியூக்கா போனேன்.
லூஸாக்கும் என்று முடிவு கட்டிடுவாங்க.
மிக்க நன்றி.
சுகந்தி, ம்ம்.
மிக்க நன்றி.
ஆசியா அக்கா, மிக்க நன்றி.
மகி, மிக்க நன்றி.
பாலாஜி, இதெலாம் சும்மா கதை.
மிக்க நன்றி.
இலா, இப்ப நிறைய ரூல்ஸ் இருக்கு. முன்பு இவ்வளவு கெடுபிடி இல்லை.
நான் பாஸான நேரமே கொஞ்சம் கெடுபிடி குடுத்தார்கள்.
உங்கள் தம்பிக்கு பாஸாக வாழ்த்துக்கள்.
தொடர்பதிவு தானே அழைச்சுட்டா போச்சு.
மிக்க நன்றி.
ஹர்சினி அம்மா, மிக்க நன்றி.
ReplyDeleteயாதவன், மிக்க நன்றி.
நாடோடி, தலைப்பு யாருக்கும் உதைக்கலை உங்களை விட்டு.
அதாவது நான் வசனத்தை முடிக்க வில்லை. ஆத்தா! நான் பாஸாகிட்டேன் என்று நினைச்சேன் ஆனா சொதப்பிட்டான் அலெக்ஸ். அல்லது ஆத்தா! நான் பாஸாகிட்டேன் என்று நினைச்சேன் ஆனா பெஸில் இப்படி வசனத்தை கம்ளீட் பண்ணலாம். இதெல்லாம் தலைப்பா இருந்தா மக்கள் கெஸ் பண்ணிடுவாங்க. அதனால் தான் அப்படி வைச்சேன்.
மிக்க நன்றி.
கௌஸ், மிக்க நன்றி.
ReplyDeleteசிவா, உங்கள் பெயரை சொன்னேன் யாராதுன்னு திருப்பி கேட்டாங்க.
ஒபாமான்னு பெயரை மாத்துங்க. சரியா?
விஜி, மிக்க நன்றி.
சந்தூ, கற்பனையே தான்.
உங்களை அழைச்சுட்டா போச்சு.
மிக்க நன்றி.
நாட்டாமை, இது தான் லக்கி நம்பரா? கல்யாணத்துக்கு போய் நல்லா மொய் எழுதிட்டு வாங்க.
ReplyDeleteமிக்க நன்றி.
தங்ஸ், மிக்க நன்றி.
நானும் இரண்டாவது தடவை தான் பாஸ் பண்ணினேன்.
இம்ஸ், உங்களையும் தொடர்பதிவுக்கு அழைக்கவா?
மிக்க நன்றி.
உ மாமி, பார்த்து வண்டியை ஓட்டுங்க.
மிக்க நன்றி.
குமார், மிக்க நன்றி.
சரவணன், மிக்க நன்றி.
ReplyDeleteஹூசைனம்மா, வெளியே யாருக்கும் சொல்ல வேண்டாம். அது என் கார் தான்.
இப்படி நிறைய சென்டிமென்ட் வசனங்கள் உலகம் முழுவதும் இருக்கும் போல.
மிக்க நன்றி.
டெனிம், மிக்க நன்றி.
ஜலீலா அக்கா, பாராட்டிற்கு மிக்க நன்றி.
boat ல் போக ரொம்ப நாளாக ஆசை. அதை இப்படி நிறைவேத்தியாச்சு.
ரங்ஸ் ஏதாச்சும் சொல்லி வாயை அடைப்பார். நீங்கள் விட வேண்டாம். எப்படியாச்சும் லைசென்ஸ் எடுத்திடுங்க.
மிக்க நன்றி.
நோ வே. ம்ஹும். வேணாம் வான்ஸ். பிறகு எங்கயாவது இருந்து டொமாரைக் கூப்பிட்டுட்டு வந்துருவேன்ன்ன். ;)
ReplyDeleteஇதெல்லாம் டிரைவிங் வாழ்கையில சகஜம்ப்பா.. சகஜம்..!!
ReplyDeleteவாணி பயங்கரமா சிரிப்பு தான் வருது
ReplyDeleteசீக்கிரமா பாஸாகிடுங்க