Saturday, September 25, 2010

பதிவுலகில் நான்

மகியின் அழைப்பினை ஏற்று, என்னைப் பற்றிய சுயபுராணம்.




1. வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
வானதி அல்லது வாணி இரண்டுமே என் பெயர்கள் தான். என் பெயரில் இருக்கும் இன்னொருவரை நான் இது வரை சந்தித்தது குறைவு. யுனீக் ஆக இருக்கட்டுமே என்று அப்படியே மெயின்டேன் பண்றேன்.



2. அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா?
என்னப்பா! நான் இவ்வளவு வெளிப்படையா சொன்ன பிறகு... .... உண்மைப் பெயரே தான்.


3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி..
காலடி எடுத்து வைத்தது...ம்ம்.. சும்மா பொழுது போக்கிற்கு தான் வலைப்பூ தொடங்கினேன். எப்போதும் பிள்ளைகள், கணவரின் வேலைகள் என்று இருந்ததால் கொஞ்சம் ஓய்வு தேவைப்பட்டது. பிள்ளைகள் படுத்த பின்னர் ஏதாவது கிறுக்கித் தள்ளுவேன். அதை அப்படியே வலைப்பூவில் போட்டேன். இது தான் நான் வலைப்பூவில் காலடி எடுத்து வைச்ச வரலாறு.


4. உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
மற்றவர்களுக்கு கமென்ட் ( நேரம் கிடைக்கும் போது ) போடுவது, இன்ட்லியில் இணைந்தது இவை மூலம் கொஞ்சம் பிரபலமானேன் என்று நினைக்கிறேன். ஆனால், நேரம் குறைவாக இருப்பதால் எல்லா வலைப்பூக்களையும் பார்வையிட முடிவதில்லை.

5. வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா?
சொந்தக் கதை, கற்பனை என்று எல்லாமே இருக்கு என் வலைப்பூவில்.

6. நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா? அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
இருங்க சொல்றேன்.
இந்த வலைப்பூ வருமானத்தில் என் கணவரை கண்கலங்காமல் வைச்சு காப்பாத்தறேன்.
வெள்ளை மாளிகை ( அதாங்க நம்ம ஓபாமா வீடு ) போல் ஒரு( கொஞ்சம் மங்கலான கலரில்) வீடு வாங்க முற்பணம் செலுத்தி விட்டேன்.
இன்னும் இருக்கு அப்புறம் இன்கம்டாக்ஸ் பிரச்சினை வந்தா. அதான் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறேன்.

எல்லாம் சும்மா பொழுது போக்கிற்காக தான் எழுதுகிறேன்.



7. நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
இதை வச்சு சமாளிக்கவே நேரம் பத்தவில்லை. இதில் இன்னொன்றா? தாங்காது.


8. மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம்..
கோபம், பொறாமை, ஆத்திரம் எல்லாம் கடந்தவள் நான். அதாவது ஒரு ஞானிக்குரிய மனப்பக்குவம் அடைந்து விட்டேன்.
வலைப்பூவில் சண்டை போடுபவர்கள், மற்றவர்களை மறைமுகமாக தாக்குபவர்களை பிடிக்காது.


9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்?
அண்ணாமலையான் தான் என்னை முதன் முதலாக பாராட்டியவர்.நிறைய தோழிகள், இனிமையான நட்புகள் என்று என் நட்பு வட்டம் பெருகியது. இமா, மகி இருவரும் தனிப்பட்ட முறையிலும் நிறைய ஊக்கம் கொடுத்தார்கள். அறுசுவைக்கு என் கதை அனுப்பியதில் இமாவின் பங்கு நிறைய உண்டு. மற்றவர்களுக்கு பின்னூட்டம் கொடுக்கவே ப்ளாக் தொடங்கினேன்.பிறகு சமையல் குறிப்புகள் கொடுக்க ஆரம்பித்தேன். பிறகு க்ராப்ஃட், கதைகள் என்று சாம்பாராக மாற்றி விட்டேன். என்னிடம் ப்ளாக் இருப்பதே பலருக்கு நீண்ட நாட்கள் கழித்தே தெரிய வந்த...( யாருப்பா அது கொட்டாவி விடுறது...) சரி இன்னும் சொல்லி போரடிக்க விரும்பவில்லை.


10. கடைசியாக, விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்..

அப்படியே 1 இலிருந்து 9 வரை கேள்விகளுக்கான விடைகளை மீண்டும் படித்துப் பாருங்க. அப்பவும் விளங்காவிடில் மீண்டும் 1....9 . ஸ்ஸ்ஸ் அப்பா முடியலை.

35 comments:

  1. nice to know about u..interesting answers...

    ReplyDelete
  2. //இந்த வலைப்பூ வருமானத்தில் என் கணவரை கண்கலங்காமல் வைச்சு காப்பாத்தறேன்.
    வெள்ளை மாளிகை ( அதாங்க நம்ம ஓபாமா வீடு ) போல் ஒரு( கொஞ்சம் மங்கலான கலரில்) வீடு வாங்க முற்பணம் செலுத்தி விட்டேன்.//

    எப்புடி இப்புடி எல்லாம்? ஹாஹ்ஹா..

    //அப்படியே 1 இலிருந்து 9 வரை கேள்விகளுக்கான விடைகளை மீண்டும் படித்துப் பாருங்க. அப்பவும் விளங்காவிடில் மீண்டும் 1....9 . ஸ்ஸ்ஸ் //

    ஹாஹ்ஹா..

    // அதாவது ஒரு ஞானிக்குரிய மனப்பக்குவம் அடைந்து விட்டேன். //

    இதெல்லாம் எப்ப நடந்தது? :))

    ReplyDelete
  3. வானதியின் பதில்கள் அருமை.வாணி பெயர் நல்லாயிருக்கு.

    ReplyDelete
  4. ///இருங்க சொல்றேன்.
    இந்த வலைப்பூ வருமானத்தில் என் கணவரை கண்கலங்காமல் வைச்சு காப்பாத்தறேன்///



    ஹா ஹா ஹா.. முடியல.. சூப்பர் மா... :-))

    எல்லா பதில்களும் நல்லா இருக்குங்க..


    யாருங்க அங்க கொட்டாவி விடறது, டச் செம செம... ROFL :-))))

    ReplyDelete
  5. உங்களை பற்றி ஏற்கனவே தெரியும், இப்பொழுது இன்னும் தெரிஞ்சிகிட்டேன்

    ReplyDelete
  6. //வீடு வாங்க முற்பணம் செலுத்தி விட்டேன்.///

    சொல்லவே இல்ல ??

    //அப்படியே 1 இலிருந்து 9 வரை கேள்விகளுக்கான விடைகளை மீண்டும் படித்துப் பாருங்க. அப்பவும் விளங்காவிடில் மீண்டும் 1....9 . ஸ்ஸ்ஸ் //

    அவ்

    ReplyDelete
  7. தொடர்பதிவு காமெடியா கலக்கலா இருக்கு! நன்றி வானதி!

    இந்த பதிவை படிக்கையில் என் ஆ.காரர் எட்டிப்பாத்து,உங்க ப்ளாக்ல இருக்க போட்டோ நல்லா இருக்கு என்று சொன்னார்.

    சொல்லிட்டேன். :)

    ReplyDelete
  8. உங்க சுயவிவரத்தை படிக்கும் போது நகைட்சுவை நாயகி கோவை சரளா அவர்கள் டயலாக் பேசிய மாதிரி இறக்குங்க..........
    மனசுல பட்டத அப்படியே சொல்லிட்டிங்க

    ReplyDelete
  9. வாணி பதில்கள் அனைத்தும் அருமை...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. //அப்படியே 1 இலிருந்து 9 வரை கேள்விகளுக்கான விடைகளை மீண்டும் படித்துப் பாருங்க. அப்பவும் விளங்காவிடில் மீண்டும் 1....9// எப்ப நிற்பாட்ட வேணும்!! ;)

    வடிவா எழுதி இருக்கிறீங்கள் வாணியம்மா. சிரிச்சுக் கொண்டே வாசிச்சன். ;) பிறகு... ;) நன்றி. ;)

    ReplyDelete
  11. //இந்த வலைப்பூ வருமானத்தில் என் கணவரை கண்கலங்காமல் வைச்சு காப்பாத்தறேன்.//

    ஹா ஹா இதை உங்க ரங்ஸ் பார்த்தாரா!

    ரொம்ப நல்லா இருக்கு வான்ஸ். நல்லா சிரிச்சுக்கிட்டு இருக்கேன் :)

    ReplyDelete
  12. //வடிவா எழுதி இருக்கிறீங்கள்//

    இமா என்ன அர்த்தம். எனக்கு புரியலை

    ReplyDelete
  13. ப‌தில்க‌ள் ந‌ல்ல‌ ந‌கைச்சுவையா இருந்த‌து.. :)

    ReplyDelete
  14. /வடிவா/=அழகா என்று அர்த்தம்ங்க கார்த்திக்! நம்ம ஊரில் பொதுவாக வடிவு=ஷேப் என்பதாகத்தான் அதிகம் உபயோகிப்போம்,ஆனால் அழகு என்ற அர்த்தமும் உண்டு.
    இமா&கோ இந்த அர்த்ததில சொல்லுவாங்க. :)

    இமா,மொழிபெயர்த்துட்டேன்,இன்க்ரிமெண்ட் போட்டு:) குடுங்கோ!!

    ReplyDelete
  15. அதுக்கு அர்த்தம்... LK இன்னும் முன்னேற இடமுண்டு என்பதே. ;)))

    வாணியும் இமாவும் இலங்கைத் தமிழர்கள். ;) வடிவு = அழகு ;)

    ReplyDelete
  16. Hi Vanthy,

    Beautifully written..Arumai...

    Dr.Sameena@

    www.myeasytocookrecipes.blogspot.com
    www.lovelypriyanka.blogspot.com

    ReplyDelete
  17. சுவாரஸ்யமான பதில்கள்.
    //இந்த வலைப்பூ வருமானத்தில் என் கணவரை கண்கலங்காமல் வைச்சு காப்பாத்தறேன்.// ரொம்பவே ரசிச்சேங்க!!

    ReplyDelete
  18. //ஒரு ஞானிக்குரிய மனப்பக்குவம் அடைந்து விட்டேன். //

    அப்படியா?

    //அப்படியே 1 இலிருந்து 9 வரை கேள்விகளுக்கான விடைகளை மீண்டும் படித்துப் பாருங்க. அப்பவும் விளங்காவிடில் மீண்டும் 1....9//

    இப்ப நம்பறேன்!!

    ReplyDelete
  19. மகி,
    புது கம்பெனிக்கு பேர் தேடிட்டு இருந்தேன். தாங்க்யூ.
    //இன்க்ரிமெண்ட்// ;) போட்டு குடுத்துருவேன். ;) தண்ணிக்கு அசிஸ்டண்டா ப்ரமோஷன் இன்று முதல். :))

    ReplyDelete
  20. அதாவது ஒரு ஞானிக்குரிய மனப்பக்குவம் அடைந்து விட்டேன். ...eppovey kanna katuthey,,,,

    ReplyDelete
  21. வானதி ப‌தில்க‌ள் ந‌ல்ல‌ ந‌கைச்சுவையா இருந்த‌து. நன்றி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  22. மேனகா, மிக்க நன்றி.

    சந்தூ, அப்ப நீங்கள் இன்னும் அந்த நிலையை அடையவில்லையா?
    எப்ப நடந்திச்சு என்ற விபரம் தெரியவில்லை?
    மிக்க நன்றி.

    ஆசியா அக்கா, மிக்க நன்றி.

    ஆனந்தி, மிக்க நன்றி.

    எல்கே, மிக்க நன்றி.

    மகி, நன்றி. திரு. மகிக்கும் என் நன்றிகள்.

    ReplyDelete
  23. புவனேஸ்வரி, மிக்க நன்றி.

    தினேஷ்குமார், நான் சரளாவா? அவ்வ்வ்வ்வ்...
    மிக்க நன்றி.

    குமார், மிக்க நன்றி.

    சித்ரா, மிக்க நன்றி.

    இமா, விளங்கியதும் நிப்பாட்டவேணும்.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  24. டாக்டர் சமீனா, மிக்க நன்றி.
    உங்கள் பக்கம் விரைவில் வருகிறேன்.

    கவி, ரங்ஸ் பாதி படித்தார். மீதி படிக்கலை.
    மிக்க நன்றி.

    எல்கே, வடிவு = அழகு.
    மிக்க நன்றி.

    நாடோடி, மிக்க நன்றி.

    மோகன் ஜி, மிக்க நன்றி.

    ReplyDelete
  25. ஹூசைனம்மா, என்ன கேள்வி அவ்வ்வ்வ்??
    மிக்க நன்றி.

    இமா, தண்ணிக்கு உதவியாளர்???? நல்ல பொறுப்பான பதவி.

    அம்பி சிவா, போய் தூங்குங்க! எல்லாம் சரியாயிடும்.
    மிக்க நன்றி.

    சரவணன், மிக்க நன்றி.

    ReplyDelete
  26. // ஒரு ஞானிக்குரிய மனப்பக்குவம் அடைந்து விட்டேன். //

    இப்ப தான் அங்க தலைக்கு "வலைஞாநி" பட்டம் கொடுத்திருக்கிறோம், உங்களையும் "ஞாநி வாணி" என்று கூப்பிட்டுட்டால் போச்சு. ஹா..ஹா..

    ReplyDelete
  27. // ஒரு ஞானிக்குரிய மனப்பக்குவம் அடைந்து விட்டேன். //

    ஞானிக்குரிய மனப்பக்குவம் என்பது பெரிய விஷயம் வான்ஸ். அது அப்படியே தொடரட்டும்!!

    ReplyDelete
  28. பதிவு அருமையா வந்திருக்கு!! வாழ்த்துகள் வாணி.

    ReplyDelete
  29. //அதாவது ஒரு ஞானிக்குரிய மனப்பக்குவம் அடைந்து விட்டேன். //

    இப்படி சொல்லிய ஒருத்தரை கொஞ்ச நாளா கானல..இன்னும் தேடிக்கிட்டு இருக்கோம் அதனால சொன்ன சொல் வாபஸ் வாங்குங்க ..இல்லாட்டி விட மாட்டேன்..


    இப்படிக்கு
    ஜெய்லானி
    தலைவர்,
    பேசிய பேச்சை வாபஸ் வாங்காதவர்
    வீட்டுக்கு ஒரு லாரி கத்திரிகாய் அனுப்புவோர் சங்கம் ,

    ஷார்ஜா மண்டலம் யூ ஏ இ
    ((எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை ))

    ReplyDelete
  30. நல்ல காமெடியோட அழகா இருந்துச்சு வானதி உங்க தொடர்பதிவு! வாழ்த்துக்க‌ள்.

    ReplyDelete
  31. நகைச்சுவை மிளிர, கலகலப்பான அனைத்து பதில்களுமே உங்களுக்குள் இருக்கும் எழுத்தாளரையும் அடையாளம் காட்டியது வானதி!
    உண்மையில் உங்கள் பெயர் மிகவும் அழகானது வானதி! ராஜராஜசோழனின் மனைவி பெயரல்லவா?

    ReplyDelete
  32. ஹா ஹா ஹா... சூப்பர் கொஸ்டின்ஸ் சூப்பர் ஏன்சர்ஸ்... எப்பவும் போல கலக்கல் வாணி

    ReplyDelete


  33. நன்னா காமெடி பண்றேள்!

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!