Monday, September 20, 2010

நானும் டீயும்




தேநீர்- ஒரு மயக்கம் தரும் வார்த்தை. ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்ட போது, அவர்களைப் பார்த்து நாமும் பழகிய பழக்கம். ஊரில் இருக்கும் வரை அதிகாலை ஒரு டீ, ப்ரேக்ஃபாஸ்ட் முடிய ஒன்று, மாலை நேரம் ஒரு டீ, சில வேளைகளில் இடைபட்ட நேரத்திலும் டீ குடிப்பேன். காலை எழுந்து இதைக் குடிக்காவிட்டால் ஏதோ ஏர்வாடிக்கு போக வேண்டும் போன்ற உணர்வு ஏற்பட்டு, பாடாய் படுத்தி எடுக்கும். கனடா வந்த பிறகு டீ குடிக்க பெரிதாக விருப்பம் ஏற்படவில்லை. ஏதோ கடமைக்கு 2 தேநீர்கள் காலையும், மாலையும் அவ்வளவு தான். காலப்போக்கில் காலை நேரம் மட்டும் டீ குடிப்பது என்று மாற்றிக் கொண்டேன்.

அமெரிக்கா வந்த பிறகு ஒரு நாளைக்கு ஒரு டீ தான் குடிப்பது என்று ஒரு கொள்கை வைத்துக் கொண்டேன். தண்ணீரைக் கொதிக்க வைத்து, டீ தூளை போட்டு, வடி கட்டி, பாலை அடுப்பில் வைத்து, சுண்டக் காய்ச்சி.... இங்கு ஒரு முக்கியமான விடயம் சொல்ல வேண்டும். பால், தண்ணீர் விகிதம்( ratio ) என்பது மிகவும் முக்கியம். பால் அரைக் கப் எனில் தண்ணீர் 1/4 கப் தான் விடுவேன். இரண்டையும் கலந்து, அளவாக சீனி போட்டு, இந்த டீயை குடித்தால் சொர்க்கம் தான் போங்கள். இந்த டீயின் பிறகு நான் காலைச் சாப்பாடு சாப்பிட நேரமாகும், அல்லது சாப்பிடவே மாட்டேன்.

மைக்ரோவேவில் டீ போடுவது, பால் சுட வைப்பது எனக்குப் பிடிக்காது. அப்படி டீ குடிப்பதற்கு குடிக்காமல் இருந்து தொலைக்கலாம். தண்ணீரில் டீ பைகளைப் போட்டு, சும்மா ஒரு கடமைக்கு 1 டேபிள்ஸ்பூன் குளிர்ந்த பால் ஊற்றி டீ என்ற பெயரில் யாராவது குடுத்தால் மனசை கல்லாக்கி கொண்டு குடித்து விடுவேன். ஆனால், மீண்டும் அவர்கள் வீட்டீற்கு போனால் டீ வேண்டாம் என்று முன்பே சொல்லி விடுவேன்.

வெளியே கடைகளில் டீ வாங்கி குடிப்பது எனக்கு பிடிக்காத விடயம். அந்த டீக்கு குடுக்கும் பணத்திற்கு ஒரு 2 லிட்டர் பால் வாங்கி, ஒரு வாரத்திற்கு டீ குடிக்கலாம்.

அதோடு கடையில் வேலை செய்பவர்களுக்கு டீ போடத் தெரியாது என்று நினைத்துக் கொள்வேன். அவ்வளவு மட்டமா இருக்கும் அந்த டீ.
ஒரு முறை கனடா போகும் போது வழியில் ஒரு கடையில் ( தலைவலி காரணமாக) டீ வாங்கித் தந்தார் என் ஆ.காரர். நானும் பல விதமாக பகல் கனவு கண்டபடி டீ குடிக்க காத்திருந்தேன். ஒரு பெரிய கப்பில் சுடுதண்ணீர், 2 டீ பைகள் மிதந்து கொண்டிருந்தன.

பால் எங்கே என்று தேடினேன். என் கணவர் அவரின் காஃபியோடு பிஸியாகி விட, நான் போய் அந்தப் பெண்ணிடம் பால்/கிரீம் வேணும் என்று கெட்டேன். இரண்டு சிறிய குப்பிகள் ( 4 டேபிள்ஸ்பூன்கள் பால் இருக்கும் என்று நினைக்கிறேன் ) எடுத்து நீட்டினார். 1/2 கப் பால் எங்கே இந்த 4 ஸ்பூன் பால் எங்கே என்று மனம் பழசை அசை போட்டது. இந்த 1/2 லிட்டர் தண்ணீரில் 4 டேபிள் ஸ்பூன் பாலை விட்டால்...நினைக்கவே வெறுப்பாக வந்தது. மீண்டும் போய் அந்தப் பெண்ணிடம் பல்லைக் காட்டினேன். என்னை முறைத்துப் பார்த்து விட்டு, மேலும் ஒரு குப்பியை எடுத்து வேண்டா வெறுப்பாக குடுத்தார்.

பக்கத்தில் இருந்த வயசான அமெரிக்கர் அவரிடம் இருந்த 2 குப்பிகளை என்னிடம் நீட்டினார். இப்போது 5 குப்பிகள் சேர்த்து விட்டேன். ஆனால், இன்னும் பால் வேணும் என்று தோன்றியது. சீனிக்கும் இப்படி அலைபாய வேண்டி இருந்தது. பால் இனிமேல் கேட்கவே முடியாது.

அந்த அமெரிக்கர் அவரின் 1/2 லிட்டர் பால் கலக்காத டீயை குப்பைத் தொட்டிக்கு கொண்டு சென்று ஊற்றி 1/4 லிட்டர் ஆக்கினார். அடடா! சுப்பர் ஐடியா! இது நம்மளுக்கு தோன்றவே இல்லையே என்று நினைத்துக் கொண்டே நானும் ஓடிப்போய் அது போல செய்து விட்டு வந்தேன்.

பால் குப்பிகளை உடைத்து, டீ யில் ஊற்றி, ஆசையோடு குடித்தால் சப்பென்றிருந்தது. ஆறிப்போன தண்ணீரைக் குடிப்பது போல உணர்வு. அன்று சபதம் எடுத்தேன் இனிமேல் கடையில் டீ குடிப்பதில்லை என்று.




இது நான் போட்ட டீ தான். இருங்க குடிச்சு முடிச்சிட்டு ஆறுதலா வருகிறேன்.

38 comments:

  1. இப்பதான் டீ குடிக்கப் போறேன். ஒரு ரகசியம். என் தாங்க்ஸ் டீ அருமையா இருக்கும். வரீங்கள ஒரு டீ குடிக்க

    ReplyDelete
  2. அவ்வ்வ்... எனக்கு நானே டீ போட்டு குடிப்பது பிடிக்காத விஷயம்.(போடத்தெரியாது ?)என் ரங்ஸ் தான் போட்டு தருவார்.சரி வானதி முயற்சி பண்றேன்,,இப்படி ஒரு நல்ல டீயை நினைவு படுத்திட்டீங்களே.

    ReplyDelete
  3. ஹா ஹா வானதி எனக்கு வெளியில் டீ மட்டும் இல்லை காஃபி குடிக்கவும் பிடிக்காது :(. பாலில் தண்ணீர் சேர்த்தால் எனக்கு சுத்தமா பிடிக்காது :). குடிக்கறது தினமும் ஒரே ஒரு கப் காஃபி அல்லது டீ அதுலயும் தண்ணிய சேர்த்து சே சே ரொம்ப மோசம்

    ReplyDelete
  4. டீ நல்லா போட்டு இருக்கீங்களே..... எனக்கு ஒரு கப், ப்ளீஸ்!

    ReplyDelete
  5. ஆஹா...எனக்கும் அப்படி தான் வானதி...சூப்பராக எழுதி இருக்கின்றிங்க...

    ReplyDelete
  6. டீயைப்பற்றி சுறுசுறுப்பாக ஆராய்ச்சி பண்ணி இருக்கீங்க வானதி.

    ReplyDelete
  7. எனக்கு இன்னமும் எங்க அம்மா போடற டீதேன் இஷ்டம். அதென்னவோ போ தாயி, அப்பப்ப பாவம்னு ஒரியாக்காரர் போடற டீயும் நல்லாதேன் இருக்கும். என் டீ க‌ன்ஸிஸ்டென்ஸியே இல்லாம அப்பப்ப தங்ஸ் இட்லி மாதிரி இருக்கும், அப்பப்ப ஜலீலாக்கா வீட்டு பலகாரம் மாதிரி இருக்கும். இவிடே வந்த பின் கட்டஞ்சாயாவும் வல்லிய இஷ்டமானு. (அதேன் black / green tea!!)

    ReplyDelete
  8. அருமையான படைப்பு
    சுப்பர் கலக்கிட்டிங்க

    ReplyDelete
  9. டீயிலேயும் இவ்வ‌ள‌வு இருக்கா?..

    ReplyDelete
  10. வானதி,எனக்கும் டீ அவ்வளவா புடிக்காது.(ஆசியாக்கா,சேம் பின்ச்!:)) காபி ரொம்பப் பிடிக்கும்,நல்லாவும் இருக்கும்,நான் போடும் காபி!

    என் ஆ.காரருக்கு வீகெண்ட்,ஈவ்னிங் நேரத்துல வந்தா டீ கட்டாயம் வேணும்.நான் டீ-பேக்ஸ் தான் யூஸ் பண்ணறேன்.சுமாரா இருக்கும்.ஒரு சில நாள் சொதப்பிடும். ரொம்ப பொறுமைங்க உங்களுக்கு./தண்ணீரைக் கொதிக்க வைத்து, டீ தூளை போட்டு, வடி கட்டி, பாலை அடுப்பில் வைத்து, சுண்டக் காய்ச்சி.... /அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! ஒரு ஆளுக்கு இதெல்லாம் பண்ணுவீங்களா? எனக்கு படிக்கவே டயர்டா இருக்கே!
    :):):)

    ReplyDelete
  11. ஆஹா இப்படி ஆயிடுச்சே உங்க நிலமை

    L.K. சொன்ன மாதிரி நானும் டீ குடிக்கத்தான் போறேன். உங்களுக்கு ஒரு கப் ஸ்ட்ராங்கா சொல்லிடட்டுமா?

    ReplyDelete
  12. நீங்க போடற டீயில், ஒரு நாள் புதினா,ஒரு நாள் துளசி இலைகள்ன்னு சேர்த்து குடிச்சுப்பாருங்க. வாரம் முழுக்க வெரைட்டியான டீதான். உங்கூட்டு புதினாவையும் காலிசெஞ்சாப்ல ஆச்சு. ஆத்துக்காரர் ஒண்ணும் சொல்ல மாட்டார் :-)))

    ReplyDelete
  13. என்ன தான் இருந்தாலும் நம்ம நாயர் கடை டீ மாதிரி வருமா

    ReplyDelete
  14. வாணி "டீ"க்காக நான் ரிஸ்கே எடுக்குறதில்ல, அதுக்காக குடிக்காமல் இருக்கிறதுமில்ல. 'தங்ஸ்' அல்லது மகள் போட்டு கொடுப்பாங்க. 'தங்ஸ்'க்கு காபி தான் பிடிக்கும். மகளுக்கு டீ போடும் விஷயத்தை சொல்லிக் கொடுத்தேன். அது மாதிரி போட்டு கொடுக்கும். அவர்கள் இருவரும் வீட்டில் இல்லை என்றால் போரடிக்கும். 'டீ' குடிக்கணும் போலிருந்தால் மட்டும் நான் போட்டு குடிப்பேன். எப்படீன்னா...??

    ReplyDelete
  15. நீங்க சொன்ன மாதிரி தான் ஆனா செய்முறை வேறே, நீங்க சொன்ன விகிதத்தில் கலந்து ஒரே தடவையில் கொதிக்க விட்டு வடி கட்டி விடுவது. தனித் தனியா மிக்ஸ் செய்தால் டேஸ்ட் வேறு மாதிரியாகி விடுவதால் இப்படி? எனக்கும் 'டீ' காலை ஒன்று மாலை ஒன்று தான். மற்ற நேரங்களில் யார் சும்மா கொடுத்தாலும் அடியேன் குடியேன். ஹி..ஹி..

    ReplyDelete
  16. எனக்கும் இங்கு வெளியில் டீயோ காபியோ வாங்கி குடிக்க பிடிக்காது....

    ReplyDelete
  17. ஆஹ்! டீயை பத்தி சொல்லி காலையிலே ஒரு கொசுவத்திபத்த வச்சிட்டிங்களே :))

    என்ன இருந்தாலும் எங்க அம்மா போடற டீ மாதிரி வராது... நான் 11 ஆம் வகுப்பு படிக்கும் போது அண்ணா 12 வகுப்பு.. அவருக்கு ஒரு 10 மணி (இரவு) வாக்கில டீ போடுவாங்க... அப்போ நானெல்லாம் 9 மணிக்கு முன்னமே தூங்கிடுவேன்.. ஒரு நாள் கரெக்டா அம்மா டீ போடும் போது எழுந்து எனக்கும் என்று சொன்னேன்... சரி புள்ள எதோ படிச்சி கிழிக்கபோகுதுன்னு ஒரு டீ போட்டாங்க.. டீய வாங்கி கட கடன்னு குடிச்சிட்டு மறுபடியும் வந்து படுத்து தூங்க போனேன்...என்ன படிக்கலையான்னு அம்மா கேட்டதுக்கு " படிக்கறேன்னு சொல்லியா டீ கேட்டேன்"னு சொல்லிட்டு மறுபடியும் தூக்கத்தை தொடர்ந்தேன்... அப்புறம் ராத்திரில டீ கேட்டா அம்மா ஒரு மாதிரியா பாத்து படிக்கிற நிலமையில் இருந்தா போட்டு தருவாங்க...

    எனக்கு கொஞ்சமா பால் விட்டு டீ வேணும்... எவர்சில்வர் கிளாசில கொடுத்தாலும் தரை தெரியற மாதிரி தண்ணி டீ.... ஊரில எதோ பால் டீன்னு வேற இருக்காம்..

    ReplyDelete
  18. ஆஹா டீயில நல்ல ஆராய்ச்சி பண்ணியிருக்கீங்க! எனக்கும் இங்க கடையில டீ குடிக்க பிடிக்காது. காபிதான். இப்ப ஒழுங்கா சமைக்கறது வேற இல்ல. அடுத்து டீ ரெசிபி போட்டறலாம் போல.

    ReplyDelete
  19. சூப்பர் பதிவு. எனக்கு டீ குடிக்க ரொம்ப பிடிக்கும். ஆனா போடப் பிடிக்காது. அதனால எங்க வீட்டுல மைக்ரோவேவ் டீ தான்.. லீவு நாள்ல மட்டும் தான் ஸ்டவ் டாப் டீ :))

    ReplyDelete
  20. ஒரு டீ-க்கு இவ்ளோ போராட்டமா ?

    ReplyDelete
  21. super pakirvu...

    naan ginger tea nalla poduvean.... parcel anuppattuma?

    ReplyDelete
  22. டீ பற்றிய இடுகை ஓகே

    எனக்கு டீ

    ReplyDelete
  23. உங்க டீயும் சூப்பர் உங்கள் வரிகளும் சூப்பர்....

    ReplyDelete
  24. http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_23.html

    ReplyDelete
  25. சுடுதண்ணி வைக்கிற மாதிரி சொல்லப் போறீங்களோ எண்டு நினைச்சன். அப்பிடி இல்ல. ம். ஆனால்... என்ன இப்ப கொஞ்ச நாளா ஒரே புலம்பல்ஸா இருக்கு. ;)

    ReplyDelete
  26. மனசை கல்லாக்கி கொண்டு குடித்து விடுவேன். ஆனால், மீண்டும் அவர்கள் வீட்டீற்கு போனால் டீ வேண்டாம் என்று முன்பே சொல்லி விடுவேன்.
    -:)
    Athavathu neenga usshara erukkenga..nanga vidamatomula..enga veetuku vaanga..neriya MILK pootu enga veetila 2pasumaadu erukku..tea pottu tharen okva..
    ethukelam alakodthu..

    ReplyDelete
  27. //enga veetila 2pasumaadu erukku.// ;) யாரு! அந்த அசினும் தமனாவுமா? ;)

    ReplyDelete
  28. எல்கே, கட்டாயம் வருகிறேன். உங்க மனைவிக்கு நன்றிகள்.
    மிக்க நன்றி.

    ஆசியா அக்கா, என்ன சமையல் அரசிக்கு டீ போட தெரியாதா?
    நான் நம்ப மாட்டேன். நம்ப முடியவில்லை.....லை.

    மிக்க நன்றி.

    கவி, நீங்களும் என் கட்சியா? நான் காஃபி குடிப்பதே குறைவு.
    என் அம்மா அரைச்ச காஃபித் தூள் மட்டுமே குடிப்பேன்.
    மிக்க நன்றி.

    சித்ரா, மேலே இருக்கும் 2 கப்பும் உங்களுக்கே?
    காசு வேண்டாம். எஞ்சாய்!!!

    கீதா, மிக்க நன்றி.

    ஸாதிக்கா அக்கா, மிக்க நன்றி.

    ReplyDelete
  29. அன்னு, உண்மைதான். அம்மாவின் டீ எப்போதும் அருமையா இருக்கும்.
    ஏன்ன்ன்ன்? தங்ஸ் இட்லியை இங்கே இழுக்கிறீங்க. அவர் எவ்வளவு ஃபீல் பண்ணுவார்.
    மிக்க நன்றி.

    யாதவன், மிக்க நன்றி.

    நாடோடி, இன்னும் நிறைய இருக்கு.
    மிக்க நன்றி.

    தியாவின் பேனா, மிக்க நன்றி.

    மகி, என்ன படிக்கவே டயர்டா இருக்கா?
    எவ்வளவோ தியாகங்கள்(!?) செய்கிறோம். இந்த ஒரு கப் டீ தான் நான் விரும்பி குடிக்கும் ஒரு குடிவகை. அதுக்கு இன்னும் மெனக்கெடலாம்.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  30. வேலு, மிக்க நன்றி. டீக்கும் கமென்ட்டுக்கும் என் நன்றிகள்.

    அமைதிச்சாரல், ஐடியா சூப்பர். செய்து பார்க்கிறேன்.
    மிக்க நன்றி.

    சசிகுமார், நான் நாயர் கடையில் குடித்ததில்லை.
    மிக்க நன்றி.

    நாட்டாமை, இப்படி குட்டிப் பெண்ணிடம் வேலை வாங்க கூடாது. பாவம்!
    அடியேன் குடியேன் - நல்ல ரைமிங்கா இருக்கு.
    மிக்க நன்றி.

    மேனகா, என் கட்சியில் நிறையப் பேரா?
    மிக்க நன்றி.

    இலா, நல்ல ஐடியா தான்.
    நான் டீ குடித்தெல்லாம் படித்ததில்லை. கண்களை தண்ணிலை கழுவி, ஈரமாக்கி விட்டு படிப்பேன்.
    தண்ணி டீ தான் பிடிக்குமா?
    மிக்க நன்றி.

    ReplyDelete
  31. சுகந்தி, டீ வைச்சு ஒரு ரெசிப்பியா?
    காத்திருக்கிறேன். எப்ப போடப் போறீங்க?
    மிக்க நன்றி.

    ஸ்வேதா, நீண்ட நாட்களாக உங்களை காணவில்லை என்று நினைத்தேன். வந்து விட்டீங்க.
    மிக்க நன்றி.

    சந்தூ, மைக்ரோவேவ் டீ - அவசரத்திற்க்கு வேறு வழியில்லை.
    மிக்க நன்றி.

    மங்கு, என்ன இவ்வளவு ஈஸியா கேட்டுப் போட்டீங்க?
    மிக்க நன்றி.

    ReplyDelete
  32. குமார், கட்டாயம் அனுப்புங்கோ.
    மிக்க நன்றி.
    சரவணன், மிக்க நன்றி.

    குணலஷ்மி, மிக்க நன்றி.

    ஜெய், மிக்க நன்றி.

    இமா, என் புலம்பலை கேட்க உங்களை எல்லாம் விட்டா வேறு யார் இருக்கிறா சொல்லுங்கோ?
    அதான் இங்கே வந்து புலம்புகிறேன்.
    சுடுதண்ணிக்கு ரெசிப்பியா?? எங்க்ட ஜெய் அதைப்ப ற்றி விலாவாரியா போட்ட பிறகு என் ரெசிப்பி எல்லாம் ஜுஜுபி.
    மிக்க நன்றி.

    சிவா, மாட்டுப் பாலில் டீயா?? ம்ம்ம்... சூப்பர்.
    //என்னிடம் 2 மாடுகள் இருக்கு//
    செண்பகமே செண்பகமே...... சும்ம பாட்டுப் பாடுறேன்.

    ReplyDelete
  33. enga veetila 2pasumaadu erukku.// ;) யாரு! அந்த அசினும் தமனாவுமா? ;)

    yes

    ReplyDelete
  34. //மைக்ரோவேவில் பால் சுட வைப்பது எனக்குப் பிடிக்காது//
    எனக்கும் தான் வாணி... என்ன இருந்தாலும் காஸ்ல வெச்சு போங்க விடற சுவை இதுல இருக்கறதில்ல... என்னமோ பேருக்கு போடறாப்ல இருக்கும். வாவ்... நீங்களும் என் கட்சியா? சூப்பர்

    //ஒரு முறை கனடா போகும் போது வழியில் ஒரு கடையில் ( தலைவலி காரணமாக) டீ வாங்கித் தந்தார் //
    கொடுமை பிடிச்ச Timhortins ல குடிச்சீங்களோ... வெறும் சுடு தண்ணி தான் அது... இதை சொன்னா எல்லாரும் என்னை கிண்டல் பண்றாங்க இங்க...anyway நான் காபி டீ குடிக்கறதில்ல...சோ எஸ்கேப்...

    ReplyDelete
  35. இதில நீங்க சொல்லும் பல விஷயம் எனக்கும் ஒத்து போகும் ..
    இப்பதான் சரியா படிச்சி முடிச்சேன் .. இருங்க இதுக்கு லிங்க் ஒன்னு குடுத்து என் அனுபவத்தை என் பிளாக்கில போடுரேன் :-))

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!