Thursday, September 2, 2010

என் கணவரும் கத்தரிக்காயும்!

கத்தரிக்காய் தெரியாதவங்க கீழே உள்ள படம் பார்க்கவும். ( நன்றி: Wikipedia)



என் கணவருக்கும் கத்தரிக்காய்க்கும் அப்படி என்ன பூர்வ ஜென்ம பந்தமோ தெரியவில்லை. கத்தரிக்காய் என்றாலே என் கணவர் அப்படியே உருகிவிடுவார்.
கல்யாணமான புதிதில் இப்படி கத்தரிக்காய் மீது பைத்தியமாக இருந்ததில்லை. எல்லாமே என் சமையல் கைராசி என்று வைத்துக் கொள்ளுங்கள். அட! நம்புங்கப்பா.
காய் கறி வாங்கி வரச் சொன்னால் கண்டிப்பாக கத்தரிக்காய் இருக்கும். அதுவும் கிலோ கணக்கில். அதை வைச்சு என்ன செய்வது என்று இரவு பகலாக தூங்காமல் யோசித்து எனக்கு பைத்தியம் பிடித்து விடும்.

கத்தரிக்காயில் வதக்கல் கறி, பொரியல், பால்கறி, சம்பல், வறை இப்படி எனக்குத் தெரிந்த ரெசிப்பிகள் எல்லாமே செய்தாலும் என் கணவருக்கு அலுக்கவே அலுக்காது. எண்ணெயில் பொரித்து வைக்கும் வதக்கல் கறி நன்றாக இருந்தாலும் என் கணவருக்கு அது பெரிதாக நாட்டம் இல்லை. கத்தரிக்காயின் சத்துக்கள் எல்லாமே செத்துப் போய்விடும் என்று ஒரே புகார் தான். பொரியலும் அப்படியே.

கத்தரிக்காய் இருந்தால் கண்டிப்பாக வாழைக்காய் இருக்க வேண்டும் என்பது என் அம்மாவின் எழுதப்படாத விதி. எனக்கும் அதே. என் கணவருக்கு இந்த விதி அடிக்கடி மறந்து போய் விடும். கத்தரிக்காயும், பூசணிக்காயும் வாங்கி வந்து....ம்ம்ம் எழுதவே கடுப்பா வருது.
குரோசரி லிஸ்டில் கத்தரிக்காய் வேண்டாம் என்று தலைப்பு போட்ட பின்னர் தான் தேவையான பொருட்களை கீழே எழுதுவேன். அப்படியும் ஒரு விதமான அதிசயம் நடந்துவிடவில்லை. மீண்டும் கத்தரிக்காய்கள்.

பொறுத்தது போது பொங்கியெழு என்று என் மனம் சொன்னது. என்ன செய்தாய் என்கிறீங்களா? நானே குரோசரி வேலைகளை செய்து கொள்வது என்று முடிவு செய்தேன். கடையில் கத்தரிக்காய்களைக் கண்டாலே திரும்பிக் கூட பார்க்காமல் கடந்து போய் விடுவேன்.

ஒரு மாசம் போல என் கணவரும் ஆகா விட்டது தொல்லை என்று இருந்தார். ஆனால், கத்தரிக்காய் இல்லாமல் வாழ்க்கை வெறுத்துப் போனது போல இருந்தார். அவர் மட்டும் கத்தரிக்காய் வாங்க கடைக்குப் போய் வந்தார். மீண்டும் கத்தரிக்காய்... கத்தரிக்காய்...

என் கணவரிடம் கண்டிப்பாக சொல்லிவிட்டேன். இனிமேல் கத்தரிக்காய் வாங்கினால் நான் சமைக்கவே மாட்டேன் என்பதை மிகவும் தெளிவாக, பொறுமையாக சொன்னேன். காது குடுத்துக் கேட்டவர் சரி அப்படியே ஆகட்டும் என்றார்.

கொஞ்ச நாட்கள் மனம் திருந்தி இருந்தவர் அன்றொரு நாள் கடைக்குப் போய் வந்தார். அவர் கடைக்குப் போன விபரம் எனக்குத் தெரியாது.
கடையால் வந்து, அவரே நல்ல பிள்ளையாக பொருட்களை எல்லாம் குளிர்சாதனப் பெட்டியில் அடுக்கி வைத்தார்.
அடுத்த நாள் சமையல் செய்யும் போது மகளிடம் கறிவேப்பிலை எடுத்து தரச் சொன்னேன். ஃப்ரிட்ஜ் யை திறந்து கறிவேப்பிலை எடுக்கப் போன மகள் சொன்னா, " அம்மா, இங்கே பாருங்க அப்பா கத்தரிக்காய் வாங்கி வந்திருக்கிறார்."

உள்ளே பெட்டியில் குறைந்தது ஒரு கிலோ கத்தரிக்காய்கள் என்னைப் பார்த்துச் சிரித்தன. என் கணவரின் இந்தப் பழக்கத்தை எப்படி மாற்றுவது என்று ஐடியாக்கள் வரவேற்க்கப்படுகின்றன.

46 comments:

  1. இது என்ன அநியாயமா இருக்கு எனக்கும் கத்திரிகாய் ரொம்ப பிடிக்கும். எது இருக்கோ இல்லையோ கத்திரிகாயை அப்படியே என்னையில் ஃபிரை பண்ணி சாப்பிட பிடிக்கும் ..

    என் கிட்டேயே ஐடியாவா. அய்... அஸ்கு....புஸ்கு...

    ReplyDelete
  2. ///குரோசரி லிஸ்டில் கத்தரிக்காய் வேண்டாம் என்று தலைப்பு போட்ட பின்னர் தான் தேவையான பொருட்களை கீழே எழுதுவேன்///

    ஹா ஹா ஹா.. என்னமா திந்க் பண்றீங்கப்பா...!!

    ///பொறுத்தது போது பொங்கியெழு என்று என் மனம் சொன்னது. என்ன செய்தாய் என்கிறீங்களா? நானே குரோசரி வேலைகளை செய்து கொள்வது என்று முடிவு செய்தேன்///

    ஹி ஹி... நா கூட நீங்களும் கத்தரிக்காய் சாப்பிட ஆரம்பிச்சிட்டீங்கன்னு நினச்சேன்... :-))

    ///என் கணவரின் இந்தப் பழக்கத்தை எப்படி மாற்றுவது என்று ஐடியாக்கள் வரவேற்க்கப்படுகின்றன.///

    நா சொல்றேன் சூப்பர் ஐடியா.. ஒரு பெரிய போர்டு வீட்டு வாசல்ல மாட்டுங்க..
    "ஒன்னு கத்தரிக்காய் வீட்டுக்குள்ள வரணும்.. இல்ல நீங்க வரணும்னு...."

    எப்புடி.. ஐடியா....???
    நல்லா இருந்ததுப்பா.. உங்க பதிவு.. :-)))

    ReplyDelete
  3. by the way ... கத்தரிக்காய் படம் சூப்பர்... அப்படியே சாப்பிடலாம் போல இருக்கே வாணி...!! :-))

    ReplyDelete
  4. அட எங்கிட்டேவா? நானும் அப்படியே கடைக்கு போனால் கத்திரிக்காயை கண்டால் விட மனசு வராது,என் வீட்டு ஃப்ரிட்ஜில் எது இருக்கோ இல்லையோ கத்திரிக்காய் கால் கிலோவாவது இருக்கும்.

    ReplyDelete
  5. அதானே? எங்ககிட்டயே ஐடியாவா? அஸ்கு புஸ்கு!எனக்கும் கத்தரிக்கா ரொம்ப ரொம்ப ரொம்ப புடிக்கும் வானதி!:)
    http://www.worldproutassembly.org/archives/2006/06/biotech_brinjal.html
    இந்த போட்டோவைப் பாருங்களேன்.இந்த வெரைட்டி(வயலட்ல வெள்ளை கோடுகள் வந்தது)கத்தரிக்கா நல்ல டேஸ்ட்டா இருக்கும்.ஊர்ல இருந்தவரை இதேதான் கிடைக்கும். இங்கே வந்தப்புறம் இந்த கத்தரிக்காயைப் பாக்கவே முடீல.

    நீங்க போட்ட போட்டோல இருப்பது டேஸ்ட் அவ்வளவா நல்லா இருக்காது.குட்டி கத்தரிக்கா வாங்கிப்பாருங்க.நீங்களும் எங்க ஜோதில ஐக்கியம் ஆகிடுவீங்க.ஹிஹி!

    உங்க லிஸ்ட்ல எண்ணெய் கத்தரிக்கா,கத்தரிக்கா சாம்பார்,கத்தரிக்கா காரக்குழம்பு இதெல்லாம் மிஸ் ஆகுதே? இதெல்லாமும் செய்யுங்கோஓஓஓ!!

    ReplyDelete
  6. //குரோசரி லிஸ்டில் கத்தரிக்காய் வேண்டாம் என்று தலைப்பு போட்ட பின்னர் தான் தேவையான பொருட்களை கீழே எழுதுவேன்//

    ha ha ha idhu super

    Vaani - indha menia poga ore vali thaan irukku... naan oru recipe tharren kathirikaila adhai seinga... appuram neengale kettalum avar kathirikai vendaamnu solliduvaar...how is it? ha ha ha

    ReplyDelete
  7. ஜெய், என்ன இது? ஐடியா கேட்டா என் ஆ.காரருக்கு சப்போர்ட் பண்ணுறீங்க???? இது நல்லாவே இல்லை.
    மிக்க நன்றி.
    ஆனந்தி, நீங்க தான் உருப்படியான ஐடியா குடுத்திருக்கீங்க.
    வேலை செய்யுதான்னு பார்க்கணும்.
    மிக்க நன்றி.

    ஆசியா அக்கா, என்ன எல்லோருமே கத்தரிக்காய் விசிறிகளா இருக்கிறீங்க?
    உங்க கணவருக்குப் பிடிக்குமா?
    மிக்க நன்றி.

    மகி, நீங்க வேறு. என் கணவர் மார்க்கெட்டில் என்ன வெரைட்டியா இருந்தாலும் தூக்கி வந்திடுவார்.
    நீளம், குட்டை, மிகவும் குட்டை, கோடு போட்டது, போடாதது. இன்னும் என்னென்ன வகை இருக்கோ எல்லாமே வாங்கிவந்திடுவார்.
    இது படம் சும்மா லூலாயிக்கு.
    கத்தரிக்காய் சாம்பார் எழுத மறந்துட்டேன். படிக்கும் போது சேர்த்துப் படிங்கப்பா எல்லோரும். புண்ணியமா போகும்.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  8. வான்ஸ், எதுக்கு இப்பூடிப் புலம்புறீங்க? எனக்கும் சைவச் சமயல் என்றால், கத்தரிக்காய் குழம்பிருந்தாலே போதும், அல்லது பொரியலும் புட்டும் சூப்பரோ சூப்பர்.

    உங்கள் கணவரில் தப்பில்லை:), தப்பு உங்களில்தான், கத்தரிக்காய் வாங்க வேண்டாம்.... எனத் தலைப்பு போட்டு.... அவருக்கு கத்தரிக்காயை ஞாபகப்படுத்துறீங்க:))))).

    பின் குறிப்பு:
    வேறு வழியில்லை வாணி, நீங்களும் கத்தரிக்காய்ப் பிரியையாக மாறிவிடவேண்டியதுதான்:))), அதன் பின்பு ஒருவேளை, அவர் வெறுத்தாலும் வெறுக்கலாம் கத்தரிக்காயை:))))).... நல்ல கருத்துக்கள் சொல்லித்தரும்போது முறைக்கப்பிடாது ஓக்கை:).

    ReplyDelete
  9. வான்ஸ்... கத்திரிகா+கருவாடு குழம்பு யார் சாப்பிட்டாலும் அதுக்கு பிறகு அவங்க அதுக்கு அடிமை..

    ReplyDelete
  10. தலைப்புல இருந்து பதிவு முழுசும் 20 தடவை கத்தரிக்காய்ன்ற வார்த்தை யூஸ் பண்ணியிருக்கீங்க..

    கத்தரிக்காய் பைத்தியம் பிடிக்கப்போவது உங்க ஆத்துக்காரருக்கு இல்ல உங்களுக்குத்தான்... பிடிக்காததுதான் மனசுல ஆழப்பதிஞ்சுடுமாம்..

    ReplyDelete
  11. என்ன வானதி...இதுக்கு போய் இப்படி புலம்புறிங்க...கத்திரிக்காய் சூப்பராக தானெ இருக்கும்...அதுல விதவிதமாக சமைத்து பாருங்க...வாங்கிபாத்...ஸ்டஃப்டு கத்திரிக்காய்...எண்ணெய் கத்திரிக்காய்..கத்திரிக்காய் சட்னி...கத்திரிக்காய் துவையல்...என்று செய்து அசத்துங்க...நீங்களும் கத்திரிக்காய் பிரியராக மாற வாழ்த்துகள்...

    ReplyDelete
  12. // கத்தரிக்காய் வாங்க வேண்டாம்.... எனத் தலைப்பு போட்டு.... அவருக்கு கத்தரிக்காயை ஞாபகப்படுத்துறீங்க// ம். அதுவேதான். :)))))
    ஆனாலும் கத்தரிக்காயும் யாருக்கும் வெறுக்குமா!!

    ஒரு ஐடியா! A & a ட்ட ஒரு போர்ட் செய்ய வைத்து வாசலில் மாட்டுங்க. "Fresh eggplant for sale" ;)
    அல்லது 'கத்தரிக்காய் வற்றல்' பிஸ்னஸ் ஆரம்பிக்கலாம். ;)

    ReplyDelete
  13. அழாதீங்க..... அழாதீங்க...... கத்திரிக்காய் உங்களை இந்த பாடு படுத்துதே......

    ReplyDelete
  14. ஹாஹ்ஹா.. சிரிச்சுகிட்டே எழுதறேன் வானதி.. சான்சே இல்ல.. பொருமித் தீர்த்திருக்கீங்க..

    இங்கயிருந்து ட்ரைனிங்கு ஒரு ஆள அனுப்பி விடலாம்ன்னு இருக்கேன்.. எப்பிடியாவது கத்திரிக்கா பிரியத்த வளர்த்து விட்டு அனுப்பச் சொல்லுங்க உங்க வீட்டுகாரர் கிட்ட :))

    இமா மற்றும் ஆனந்தியோட போர்ட் ஐடியாக்கள் டாப் :)

    ஒருக்கா ஜூஸ் பண்ணி கொடுத்துப் பாருங்களேன் :)

    சரி சீரியஸா ஒரு யோசன.. நீங்களே கூடப் போயி கொஞ்சமா வாங்கி வாங்க.. வாரமொருக்கா இல்ல ரெண்டு வாட்டி செஞ்சு கொடுத்துருங்க.. ஒரேயடியா மறக்க வைக்கணும்னு நினைச்சா தான் கஷ்டம்..

    கத்திரிக்கா அடிக்ட் பண்ணற பொருளெல்லாம் இல்ல.. கவலை வேண்டாம்..

    ReplyDelete
  15. எங்கக்கிடயேவா? அஸ்கு புஸ்கு. அசைவம் சாப்பிடாத நாட்களில் கத்திரிக்காய்தான் என் மீன் பொரியலே :). சிங்கை சென்று திரும்பும் போது கண்டிப்பா ஒருகிலோ கத்திரிக்காய் என் பையில் இருக்கும். என்ன செய்வேனா...எல்லாமே செய்வேன். தினம் தினம் கத்திரிக்காய் இருக்கும் சமையலில். உங்களுக்கு வேணாம்னா எனக்கு பார்சல் பண்ணிடுங்க :). ஜெய்லானி வேற கத்திரிக்க்காய் கருவாட்டு குழம்பை ஞாபகப்படுத்திட்டார். இப்பவே சாப்பிடணுமே...வாழ்க கத்திரிக்காய் :)

    ReplyDelete
  16. வானதி பார்த்தீங்களா இங்க கத்திரிக்காய்ய்க்கு ரசிகர் மன்றம் வைக்கற அளவுக்கு கூட்டம் இருக்கு. பேசாம நீங்களும் எங்களோட ஜோதியில் ஐக்கியமாயிடுங்க :)

    ReplyDelete
  17. தங்ஸ், ஐயோ! மீண்டும் உங்கள் ரெசிப்பியா??? ஒரு இட்லி போதுமே. இது இட்லி போல இருக்காது அப்படின்னு உத்தரவாதம் தாங்க. சரியா?
    மிக்க நன்றி.

    அதீஸ், என்ன இது? என் ஹஸ்ஸூக்கு சப்போர்ட்டா??? முறைக்க எல்லாம் இல்லை. கொஞ்சம் மனவருத்தமே(!!!!???) அவ்வளவு தான்.
    புட்டும் கத்தரிக்காயும் நல்லா தான் இருக்கும். அதை சாப்பிட்டுட்டு 2 மைல் ஆவது ஓடணும். எதுக்கு வம்பு????

    ஜெய், கருவாட்டுக்கு நான் எங்கே போவேன்?? கொஞ்சம் அனுப்பி வைங்க.

    வசந்த் சாரே, என்னை குழப்ப வேண்டாம். நான் கத்தரிக்காய்க்கு எதிரி அல்ல. ஏன்பா எல்லோரும் சேர்ந்து எனக்கும் கத்திரிக்காய்க்கும் சண்டை மூட்டுறீங்க???
    மிக்க நன்றி.

    கீதா, ஹையோ! நானே கத்தரிக்காய் சமைச்சு சமைச்சு நொந்து போயிட்டேன். உங்கள் ஐடியா எல்லாமே சூப்பர்.
    மிக்க நன்றி.

    இமா, பிரச்சினையே எழுதாவிட்டாலும் வாங்குவார் என்பதே. அதான் முன்னெச்சரிக்கையா எழுதி அனுப்புறேன். சரி விடுங்கோ, என் சோகம் என்னோடு போகட்டும். இப்படி நீங்களே எனக்கு சப்போர்ட் பண்ணாத போது ஜெய் ஏன் சப்போர்ட் பண்ணுவார்.
    சேல் போடவா??? ம்ம்... போலீஸ் வந்து கத்தரிக்காயை பறிச்சு, என்னையும் கம்பி எண்ணக் கூட்டிக் கொண்டு போவதற்கு ஐடியாவா???
    மிக்க நன்றி.

    ReplyDelete
  18. சித்ரா, இவ்வளவு நாட்களாக பழகியவர்கள் எல்லோருமே என் ஆ.காரரை சப்போர்ட் பண்ண நீங்கள் மட்டுமே எனக்கு ஆறுதல் சொல்றீங்க.
    மிக்க நன்றி.

    சந்தூ, டிரைனிங் ஆ ? சுத்தம். என் ஆ.காரருக்கு வாங்க மட்டுமே தெரியும். உங்க ஆ.காரருக்கு அதில் வேணுமென்றால் இலவசமாக டிரைனிங் குடுக்கப்படும்.
    நானும் கடைக்குப் போவதா?? ம்ம்ம்..வெரிகுட் ஐடியா.

    //கத்திரிக்கா அடிக்ட் பண்ணற பொருளெல்லாம் இல்ல.. கவலை வேண்டாம்..//
    ஒரு டாக்டர் ரேஞ்சுக்கு ஆறுதல் எல்லாம் சொன்னதற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  19. கவிசிவா, என்னப்பா செய்ய?? கத்திரிக்காய்க்கு இம்பூட்டு ரசிகர்கள் இருப்பார்கள்ன்னு யார்கண்டா??
    அட்ரஸ் குடுங்க இப்பவே அனுப்பி வைக்கிறேன். நல்லா பொரியல் செஞ்சு சாப்பிடுங்க.
    கத்திரிக்காய்க்கு ரசிகர் மன்றம் அதற்கு தலைவர் எங்கள் ச.ச. த. ஜெய்...லானி!!! எப்பூடி நம்ம ஐடியா?
    மிக்க நன்றி.

    ஐடியா கேட்டால் எல்லோரும் என்னைக் குழப்புவதிலேயே குறியா இருக்கிறாங்கப்பா.
    நான் கத்தரிக்காய்க்கு எதிரி அல்ல என்று சொல்லி விடை பெறுகிறேன்.
    வரட்டா.

    ReplyDelete
  20. potassium&folic acid rich food. it's good .so pl continue.

    ReplyDelete
  21. இந்த‌ க‌த்திரிக்கா இப்ப‌டி புல‌ம்ப‌ வைச்சிடுச்சா?.. ம்ம் .

    ReplyDelete
  22. //கொஞ்ச நாட்கள் மனம் திருந்தி இருந்தவர்//

    கத்தரிக்காய் சாப்பிட்டா அவ்வளவு பெரிய குற்றமா

    ReplyDelete
  23. @@ ஜெய்லானி said...

    //வான்ஸ்... கத்திரிகா+கருவாடு குழம்பு யார் சாப்பிட்டாலும் அதுக்கு பிறகு அவங்க அதுக்கு அடிமை.. //

    பாஸ் இது சொன்னீங்களே sooooper வாணிக்கி உதவியாளர் வேலை இப்ப தான் சரியா பார்க்கிறீங்க. குட் ஐ அப்ரிசியேட். இருங்க மேட்டர படிச்சிட்டு வந்து மத்தத டீல் பண்ணுவோம்!! அதுவரை வெயிட் ப்ளீஸ்!!

    ReplyDelete
  24. //கத்தரிக்காய் சாம்பார் எழுத மறந்துட்டேன். படிக்கும் போது சேர்த்துப் படிங்கப்பா எல்லோரும். புண்ணியமா போகும். மிக்க நன்றி. //

    படிச்சாச்சு. புண்ணியம் எங்கே வந்துச்சு. வாயிற்று
    பொருமல் தான் வந்துச்சு. ஹி ஹி

    ReplyDelete
  25. கத்திரிகாய சுட்டு அத ஏதோ சட்னி செய்வாங்களே அத செய்து பாத்தாச்சா வான்ஸ்.. ரொம்ப நல்ல இருக்குமே!

    ReplyDelete
  26. ஆமா கேட்க மறந்துட்டேன் கத்திரிக்கா சாப்பிட்டா தோளில் அரிப்பு வருமுன்னு சொல்றாங்களே அது உண்மையா? பெரியோர்களே தாய்மார்களே யாராச்சும் பதில் சொல்லுங்க??

    ReplyDelete
  27. //ஜெய், கருவாட்டுக்கு நான் எங்கே போவேன்?? கொஞ்சம் அனுப்பி வைங்க.//

    இங்கே வளைகுடா நாட்டில் சம்பாதிக்க வந்த நாங்கள் எல்லோருமே இந்த வெயிலில் கருவாடு தான். எழுதும் எழுத்தில் தெரியுமே எங்களின் வாட்டம். ஹா ஹா சும்மா இப்படி எழுதி எங்கள் மனதை தேற்றி கொள்கிறோம் .

    ReplyDelete
  28. நாடோடி, ஆமாம். மிக்க நன்றி.

    சசிகுமார், குற்றமே அல்ல. ஒவ்வொரு நாளும் அதை சமைப்பது தான் குற்றம் ஹாஹா.
    மிக்க நன்றி.

    நாட்டாமை, ஜெய்க்கு ஆறு இலக்க சம்பளம் அல்லவா மேசைக்கு கீழால கறுப்பு பணமா குடுக்கிறேன்.
    சூப்பரா வேலை செய்கிறார்.
    புண்ணியம் கிடைக்கும். அவசரப்பட வேண்டாம்.
    கத்தரிக்காய் சட்னி - அதுவும் செய்வேன். அதுக்கு நிறைய நேரம் ஆகும். கத்தரிக்காயை சுட்டு, தோல் நீக்கி....சரி விடுங்க. உங்களை வெறுப்பேத்தி என்ன ஆகப்போவுது??

    தோல் அரிப்பு- சிலருக்கு வரும். ஒவ்வாமையால் அவ்வாறு வருவதுண்டு.
    கருவாடு - புரியுது. எல்லாம் உங்கள் குடும்பத்திற்காக தானே. அவர்களின் மகிழ்ச்சிதானே இங்கே முக்கியம்.
    மிக்க நன்றி, நாட்டாமை.

    கற்பகம், அப்படியே ஆகட்டும். மிக்க நன்றி.

    ReplyDelete
  29. அடடா..கத்திரிக்காய் இவ்வளவு பேருக்கு விருப்பமா..ஹி..ஹி..எனக்கும்தான்..என்ன வானதி இப்படி சொல்லிட்டீங்க அதுல எண்ணெய் கத்திரிக்காய் குஎஅம்பின் சுவையே அலாதிதான்..சட்னி,தொக்கு எனவிதவிதமா செய்து அசத்துங்க..ரொம்ப நல்லது..

    ReplyDelete
  30. ஆகா கடலூர் அருகில் நாணமேடு கிராமத்தில் சிறிய குண்டு கத்தரிக்காய் கிடைக்கும். அதில் நம்ம ஜெய் சொன்ன மாதிரி கருவாடு போட்டு குழம்பு வைத்தாலோ, அல்லது எண்ணை கத்தரிக்காய் குழம்பு வைத்தாலோ அதை சாப்பிடுபவர் அடிமையாகிவிடுவார்கள்.

    இப்படிக்கு கத்தரிக்காய் ரசிகர் மன்றம்

    பி.கு: மபொரவில் அவருக்கு ஏதாவது கருப்பு தந்திர மருந்து இருந்தால் கத்தரிக்காயில் விருப்பம் அதிகமாக இருக்கும். அதை சாப்பிட்டால் அந்த மருந்து முறிந்து விடும். Pls continue to give him.

    ReplyDelete
  31. //கல்யாணமான புதிதில் இப்படி கத்தரிக்காய் மீது பைத்தியமாக இருந்ததில்லை. எல்லாமே என் சமையல் கைராசி என்று வைத்துக் கொள்ளுங்கள்.//
    அடப்பாவி மக்கா.

    ஏங்க அவரு கத்திரிக்காய்தானே சாப்பிடுறாரு... அதுக்கு ஏன் இந்த கொலைவெறி.

    (எனக்கும் கத்திரிக்காய் ரொம்பப் பிடிக்கும் சோ நம்ம சப்போர்ட் மிஸ்டர் (வான) தியாகராஜனுக்கே.)

    ReplyDelete
  32. ஹைஷ் அண்ணா, நீங்களாவது எனக்கு சப்போர்ட் பண்ணுவீங்கன்னு பார்த்தா??? நீங்களும் என் ஆ.காரர் கட்சியா? சே! இந்த கத்தரிக்காயோடு என் உண்மையான நட்புகளை இனங்கண்டு கொண்டேன்.
    மிக்க நன்றி.

    மேனகா, ரெசிப்பிகள் & ஐடியாக்களுக்கு மிக்க நன்றி.

    குமார், நீங்களுமா????
    மிக்க நன்றி.

    ReplyDelete
  33. //நீங்களும் என் ஆ.காரர் கட்சியா? சே! இந்த கத்தரிக்காயோடு என் உண்மையான நட்புகளை இனங்கண்டு கொண்டேன். //

    இந்த கருவாட்டு குழம்பு இருக்கே.....இதில கத்திரிகாய் சேர்த்தால டேஸ்டியா ..?இல்லை கத்திரிகாயில கருவாட்டை மிக்ஸ் பன்னியதால டேஸ்டியான்னு சாப்பிட்டவங்களுக்குதான் தெரியும்

    அதுவும் மழை காலத்தில சாப்பிட்டு பாருங்க சுடு சோறுடன்...ஆஹா....... மிஸ் பண்ணிட்டீங்களே வான்ஸ்.... :-(((

    ((உண்மை நட்புக்கள் காலை வாராது...ஸ்டெடியா நிக்க வைக்கும் ..கூல்...கூல்..))

    எங்க விஷேஷங்களில் பிரியாணியுடன் கத்திரிகா பச்சடி வைப்பாங்களே.. சாப்பிட்டது இல்லையா....?

    ஒன் மோர் அனதர் மிஸ்ஸிங்... :-(

    ReplyDelete
  34. எல்லாமே என் சமையல் கைராசி என்று வைத்துக் கொள்ளுங்கள். அட! நம்புங்கப்பா.

    நம்புகிறோம் ஆனா எனக்கு கத்திரிக்காய் என்றால் எப்போதும் ஆகாது

    ஐடியா யோசிச்சு சொல்றேன்

    ReplyDelete
  35. ஹூம்.. எங்க வீட்ல தலைகீழ்.. எனக்குப் பிடிக்கும், அவருக்குப் பிடிக்காது.. கத்தரிக்காதான்!!

    ஒரு வேலை செய்ங்க... ஒரு மாசத்துக்கு, தினம் மூணு வேளையும் கத்தரிக்கா செஞ்சு குடுங்க. கத்தரிக்கா ஜூஸும் கண்டிப்பா! அப்புறம் பாருங்க, அவர் எழுதுவார் க்ரோஸரி லிஸ்டில் “கத்தரிக்கா வேண்டாம்” என்று!!

    ReplyDelete
  36. வான்ஸ் ! என்னதிது! கத்திரிக்காய் பிடிக்காதா.. இங்க எண்ணை கத்திரிக்காய் செய்ய கொஞ்சமா பேன் ஸ்ப்ரே /உப்பு தெளிச்சு அவனில் வையுங்கோ ஒரு 45 நிமிசம் அப்புறம் செய்து பாருங்க... கோவை பக்கத்தில கத்திரிக்காய் வச்சு காலையில் இட்லி/ தோசைக்கு ஒரு சைட் டிஷ் பண்ணுவாங்க பாருங்க.. யம் யம் யம்.... எங்க மம்மி கொஞ்சம் அதிகமாவே பூண்டு தாளிச்சி சிம்பிளா க.காய் பொறியல் பண்ணுவாங்க வெறுமே சாப்பிடுவேன்... சாம்பார் காம்போ : க.கா + முருங்கை காய் , க.கா + பாவக்காய் , க.கா + அவரைக்காய் . க.கா+உ,கி எதுனாலும் போடலாம்.. பக்கத்து வீட்டு ஒரியா பெண் பஜ்ஜி செய்து அதன் மேல பிளாக் சால்ட் போட்டிருந்தாள் .. யாருக்குமே மிஞ்சல அவ்வளவு ருசி..ஆந்திரா ஸ்டையிலில் கொஞ்சமா வேர்க்கடலை/ கச்சான் போட்டு செய்து பாருங்க உனக்கு எனக்குன்னு கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க... அட போங்க நானே இன்னைக்கு தான் மறுபடி டயட் பண்ண நினைச்சேன்.. இப்போ வீட்டில தாய்லன்ந்து கத்திரிக்காய் இருக்கு அதை எல்லாம் தாளிச்சி பிரஷர் குக்கரில் போட்டால் சீக்கிரம் வேகும் :)
    சீக்கிர‌ம் நீங்க‌ளும் ஜோதியில ஐக்கிய‌ம் ஆகுங்க‌

    ReplyDelete
  37. @@@இலா-- நானாவது ஒன்னு ரெண்டு ரெஸிபிதான் சொன்னேன் ..நீங்க காலையில இட்லி கூட செய்யிரதிலேந்து எல்லாத்தையும் சொல்லி என் (( வயிற்றெரிச்சலை )) ஆசையை அதிகமாக்கிட்டீங்க .. இந்த வீனாப்போன ஊரில அதேல்லம் செஞ்சி குடுக்கதான் ஆளில்ல..அவ்வ்வ்வ்

    ReplyDelete
  38. cook egg plant continuously for one month in all ur dishes. like
    B.Fast : egg plant Dosa/Idly (grind egg plant & mix with Dosa mavu)
    Lunch : egg plant masiyal, rice, egg plant saambar.
    Dinner : Hamoos muttabal (chick pea + egg plant+ olive Oil), french fry mathiri kattarikka fry & kuboos or Naan along with kattarika smoothe.

    (only for ur Hubby).

    ReplyDelete
  39. ஹாஹ்ஹா.. இது பின்னூட்டங்களுக்கு..

    ReplyDelete
  40. வானதி. நல்ல காய்கறியாச்சே. அதில் எத்தனை அயிட்டங்க செய்து அசத்தலாம். எல்லா நாட்டவரும் கத்தரிக்காய் வைத்து ஒரு டிஷ் அவசியம் செய்து சாப்பிடறாங்க. அதிலும் இங்கு சொல்லவே வேண்டாம்.
    உங்களுக்கு மட்டும் ஒன்று சொல்கிறேன். நல்லா கவனமா கேளுங்கோ. உங்களுக்கு எப்படி கத்தரிக்காய் பிடிக்காதோ, அதே போல் எனக்கு சாம்பார் என்றாலே பிடிக்காது, அதிலும் கத்தரிக்காய் சாம்பார் என்றால் நான் அழுதே விடுவேன். யார் வீட்டிலாவது கத்தரிக்காய் சாம்பார் என்றால் நான் நினைப்பேன்,வேற காயே இல்லையா என்று நானே புலம்பிவிடுவேன்.

    ReplyDelete
  41. எனக்கும் கத்தரிக்காய் பிடிக்கும் உங்க அம்மா போல் கத்தரிக்காய் பிளஸ் வாழக்காய் பால் கறி ரொம்ப் பிடிக்கும். வேறு வகையில் செய்துகொடுங்க்களேன். அப்படியே தீபாவளி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  42. ரொம்ப லேட்டா வந்திருக்கிறன். கத்தரிக்காயா? அவ்வ்வ்வ்வ்வ்வ் ஐ மிஸ் இட். இங்க சரியான விலை. வீட்ட ஐஞ்சு வேளையும் (நாங்க ஐஞ்சு வேளை சாப்பிடற ஆளுங்க. கண் வைக்காதீங்க. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்) நல்லெண்ணெயில் பொரிச்சு வைக்காட்டி, எனக்கு சாப்பாடே இறங்காது. யம் யம்.

    ReplyDelete
  43. கத்தரிக்காய் பிடிக்கது என்று சொன்ன வானதி அக்காவை புறக்கணிக்கும் போராட்டம் வெகு விரைவில் ஆரம்பிக்கப்படும். அதை நிறுத்த வேணும் என்டால் எங்கள் எல்லாருக்கும் பிடிச்ச கறி வைச்சு டி.எச்.எல். இல அனுப்பவும். கடைசி எச்சரிக்கை =))

    ReplyDelete
  44. அனாமிகா, திட்ட தானே வந்தீங்க??? லேட்டா வந்தா என்ன? வெள்ளன வந்தா என்ன ?? திட்டு திட்டு தானே அவ்வ்வ்வ்..
    5 வேளை சாப்பிடுவீங்களா??? வெயிட் எல்லாம் எப்பிடி?? பொரியல் பிடிக்கும் தான் ஆனா அதை தின்னுபுட்டு ட்ரெட் மில்லில் லொங்கு லொங்கென்று மிதிக்கணும்.

    மிக்க நன்றி, அனா.

    நிலாமதி, ம்ம்... என் அம்மா கட்சி தான் நீங்களுமா??
    மிக்க நன்றி.

    விஜி, உண்மைதான். இத்தாலிக்காரர்களின் டிஷ் பார்க்கவே சூப்பரா இருக்கும். ஆனா, சாப்பிட்டதில்லை.
    மிக்க நன்றி.

    பாலகுமாரன், ரெசிப்பிக்கு நன்றி.
    ஜெய், இப்படி சந்தேகம் கேட்கிற நேரத்தில் அரிசி, உழுந்து ஊறப் போட்டு அரைக்கிறது.

    இலா, ரொம்ப தான் அனுபவிச்சு எழுதியிருக்கிறீங்க??!!! செய்து பார்க்கிறேன்.
    மிக்க நன்றி.

    ஹூசைனம்மா, அதெல்லாம் வேலைக்கு ஆவாது. அவராவது அந்தக் காயை மறக்கிறதாவது.
    மிக்க நன்றி.

    சரவணன், மிக்க நன்றி.

    ReplyDelete
  45. எதுக்கு சின்னப் புள்ளய கண் வைக்கறீங்க? ஹி ஹி.

    நல்லெண்ணையில் பொரிச்சா குண்டாக மாட்டீங்க. பூப்பெய்தற பொண்ணுங்களுக்கு உடம்பு இறுக (Fit ஆக) கத்தரிக்காய் பொரியல் கொடுப்பார்களாம். சோ, டோன்டு வொரி. Eat happily.

    எங்க வீட்டில மூணு பிசாசுங்க (சல்மான் கான் ரேஞ்சுக்கு பொடி பில்டிங் பண்ணற) இருக்குதுகள். அதுகளுக்கு விடிய எழும்பி ஓடாட்டி அன்டைக்கு விடிஞ்ச மாதிரியே இருக்காது. என்னையும் அப்பப்ப இழுத்துக்கொண்டு போகுங்கள். புறுபுறுத்துக்கொண்டு ஓடுவன். மாசத்தில ஒருக்கா ஓடிப்போட்டு நான் அடிக்கிற லூட்டி இருக்கே. எனக்கே ஓவரோ ஒவராகத் தெரியும். ஹி ஹி.

    ReplyDelete
  46. Grocery list இல் கத்திரிக்காய் எப்படி? எனக்கும் கத்தரிக்காய் பிடிக்கும். அதற்க்காக அடிக்கடி செய்வதில்லை. என்றால் என் மனைவிக்கு ( முன்னால் அம்மாவுக்கும்) ஆகாது. Eczema( கரப்பான்) allergy என்று அச்சம். மனைவிக்கு வேறு ஏற்பாடு ( function or fasting) இருக்கும் நாட்களில் எனக்கு மட்டும் என்றபோது நான் செய்வேன்.

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!