Thursday, July 8, 2010
பீன்ஸ் பிரட்டல்
பீன்ஸ் - 250 கிராம்
வெங்காயம் - 1
எலுமிச்சம் பழம்- பாதி
பூண்டு - 1 பல்
மிளகாய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை
உப்பு
மஞ்சள் தூள்
பீன்ஸை சுத்தம் செய்து, மிக மெல்லிய துண்டுகளாக அரிந்து கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக அரிந்து வைக்கவும்.
நான் - ஸ்டிக் சட்டியில் எண்ணெய் விட்டு, சின்ன சீரகம், கடுகு, உளுந்து தாளிக்கவும்.
பின்னர் வெங்காயம், கறிவேப்பிலை,காய்ந்த மிளகாய் சேர்த்து கிளறவும்.
வெங்காயம் லேசாக வதங்கியதும் பொடியாக நறுக்கிய பூண்டு, பீன்ஸ், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து கிளறவும். சட்டியில் சிறிது தண்ணீர் தெளித்து, அடுப்பை சிம்மரில் வைக்கவும்.
தண்ணீர் வற்றியதும் மீண்டும் சிறிது தண்ணீர் தெளிக்கவும். இடையிடையே கிளறி விடவும்.
பீன்ஸ் வேகும் வரை கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து, கிளற வேண்டும்.
பீன்ஸ் நன்கு வெந்ததும் கொத்தமல்லி தழை தூவி ( விரும்பினால் ) இறக்கவும்.
பின்குறிப்பு:
பீன்ஸை அரியும் போது பொறுமை அவசியம். எடுத்தமா கவிழ்த்தமா என்று இல்லாமல் நிதானமாக செய்ய வேண்டும்.
இந்த ரெசிப்பிக்கு நான் லைம் ஜூஸ் சேர்த்து செய்தேன்.
Subscribe to:
Post Comments (Atom)
/பீன்ஸை அரியும் போது பொறுமை அவசியம். எடுத்தமா கவிழ்த்தமா என்று இல்லாமல் நிதானமாக செய்ய வேண்டும்.//
ReplyDeleteஅப்படியா சரிங்க.
//மிக மெல்லிய துண்டுகளாக அரிந்து கொள்ளவும்.//
பெரிசா கட் பண்ணக் கூடாதா ?? வழக்கமா பொரியலுக்கு பண்றமாதிரிதான ??
//பீன்ஸை அரியும் போது பொறுமை அவசியம். எடுத்தமா கவிழ்த்தமா என்று இல்லாமல் நிதானமாக செய்ய வேண்டும்.// நல்ல அறிவுரை! :)
ReplyDeleteஎனக்கு என்னவோ பருப்பும் பீன்ஸ்ல மிக்ஸ் ஆகிருக்கமாதிரிதெரியுதே??டைப் பண்ணும்போது மறந்துட்டீங்களோ?
பொரியல் நல்லாஇருக்கு! எலுமிச்சை ஜூஸ் சேர்ப்பதும் புதுசா இருக்கு எனக்கு!
பார்க்கும் போது சாப்பிடனும் போல் இருக்கு தோழி.
ReplyDeleteஎங்கட வீட்டுக் கறி. ;)
ReplyDeleteபீன்ஸ் பொரியல் நல்லா இருக்குங்க.... சிம்பிளா செய்யலாம்..
ReplyDeleteபார்க்கவே அழகாக செய்து சாப்பிடவேண்டும் போலுள்ளது.சிலர் பீன்ஸ் கூட்டு செய்யும் பொழுது பீன்ஸை கிராஸ் துண்டங்களாக வெட்டுவார்கள்.கத்தியால்,சாப்பிங் போர்ட் உதவியுடன் வெட்டாமல் கத்திரியால் நறுக்கினால் அழகாகவும்,சுலபமாக வரும்
ReplyDelete//பீன்ஸை அரியும் போது பொறுமை அவசியம். //
ReplyDeleteஹா..ஹா..ஏன் ரொம்ப கத்துமா அழுவுமா..????
//எடுத்தமா கவிழ்த்தமா என்று இல்லாமல் நிதானமாக செய்ய வேண்டும்.//
அப்ப நல்லா குளிக்க வச்சி சூடம் சாம்பிரானி போட்டுட்டு கடவுளை வேண்டிட்டு செய்யனும்ன்னு அப்படிதானே ஹி..ஹி..
//Post a Comment
ReplyDeleteபடிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!//
நீங்க நல்லவரா கெட்டவரா..?
ரைட்டு , (எப்படி சாபுடுரதுன்னு ஒரு பதிவு போடுங்க )
ReplyDelete//பீன்ஸை அரியும் போது பொறுமை அவசியம்//
ReplyDeleteஅருமையான விஷயத்தை பொறுமையா சொல்லி புரிய வைக்கிறது பெரிய விஷயம்ங்க! வெரி நைஸ் போஸ்ட் ..
very nice!
ReplyDeleteஎல்கே, பீன்ஸ் மெல்லியதாக கட் பண்ணினால் வெகு விரைவில் வெந்து விடும். சுவையும் நன்றாக இருக்கும். பொரியல் போல தான் ஆனால், எலுமிச்சை சாறு சேர்ப்பதால் சுவை மாறுபடும்.
ReplyDeleteமிக்க நன்றி.
மகி, அது பருப்பு அல்ல உளுந்து. அறிவுரையை பாராட்டியமைக்கு மிக்க நன்றி.
கௌஸ், வருகைக்கு மிக்க நன்றி.
இமா, நீங்களும் இடு போல செய்வீங்களா?.
மிக்க நன்றி, இம்ஸ்.
நாடோடி, மிக்க நன்றி.
ReplyDeleteஸாதிகா அக்கா, சரியா சொன்னீங்க. நானும் சாப்பிங் போர்ட் இல்லாமல் தான் கைகளில் வைத்து வெட்டினேன்.
மிக்க நன்றி.
ஜெய், கடவுளே! இந்த ஜெய் தொல்லை தாங்க முடியலை. இப்படி அடிக்கடி சந்தேகம் கேட்கபடாது. இருங்க எங்காவது, யாரிடமாவது, டிக்ஸ்னரியில் தேடிப் பார்க்கிறேன்.
ஜெய்,
//நீங்க நல்லவரா கெட்டவரா..?//
இதில் கூட சந்தேகமா???? நான் உங்களுக்கு என்ன பாவம் செய்தேன். இப்படி விரட்டி விரட்டி கேள்வி கேட்கிறீங்க????? நான் ஒரு நல்ல அப்பாவி!!! அவ்வளவு தான்.
மங்குனி, சமையல் முடிஞ்சதும் குளிக்க ஆத்துக்கு போறேன், குளத்துக்குப் போறேன் என்று கிளம்பி போயிடக் கூடாது. சட்டியின் மீது ஒரு கண் வைத்தபடி, சாதம் வடித்து, சாப்பிட்டுட்டு தான் மறு வேலை பார்க்கோணும். என் ரெசிப்பி அவ்வளவு சூப்பராக இருக்கும் என்று நான் சொல்லித் தான் தெரிய வேண்டுமா???
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
அப்துல் காதர், ஜெய் போல குறுக்கே குறுக்கே கேள்வி கேட்காமல் பாயின்டை சரியா புரிந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.
கீதா6, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
உங்க செய்முறை நல்லாயிருக்கு வானதி!!
ReplyDeleteபொரியல் நல்லாஇருக்கு! எலுமிச்சை ஜூஸ் சேர்ப்பதும் புதுசா இருக்கு எனக்கு!
ReplyDeleteவாணி நீண்ட நாளின் பின் சமையல் குறிப்பு....
ReplyDeleteஇது இலங்கைக்கறியல்லவோ... எங்கள் வீட்டிலும் இதே முறைதான், தவறாமல் தேசிக்காய் சேர்ப்போம். அழகாகச் செய்து காட்டியிருக்கிறீங்கள்...
ஆரோ கொயந்தை, எப்பூடிச் சாப்பிடுவதெனக் கேக்கிறமாதிரித் தெரியுது:)... கொஞ்சம் சொல்லிக்கொடுங்கோ பிளீஸ்ஸ்.. ஆரெண்டெல்லாம் கேட்கப்பூடாது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
உங்கள் சமையல் முறைக்கு நன்றி. அழகாய் வந்துள்ளது .பாராடுக்கள்.
ReplyDeleteயப். மைனஸ் உளுந்து.
ReplyDeleteஆனால் இதில் ஸ்பெஷலைஸ் பண்ணின ஆட்கள் இருக்கிறாங்க இங்க. ;) நீங்க சொல்ற மாதிரி அரியிறதுலயும் விஷயம் இருக்கு. எங்கட ச்செஃப் ஸ்டைலாக சரிச்சு சரிச்சு அரிஞ்சு இருக்கிறதைப் பார்க்கவே சாப்பிட ஆசை வரும்.
வாங்க ஒரு லஞ்சுக்கு. ;)
நல்லா இருக்குதுங்க!!!
ReplyDelete.ஆஹா.. படமும்... செய்முறையும் சூப்பர்பா.
ReplyDeleteஎப்போ வீட்டுக்கு சாப்பிட வரலாம்னு சொன்னிங்கன்னா வசதியா இருக்கும்??
பகிர்வுக்கு நன்றி... வாணி.. :-)))
பீன்ஸ் பொரியல் நல்லா இருக்கு
ReplyDeleteமேனகா, மிக்க நன்றி.
ReplyDeleteகுமார், எலுமிச்சை சேர்ப்பதால் மிகவும் வித்தியாசமாக இருக்கும்.
மிக்க நன்றி.
அதீஸ், இது இலங்கை இந்தியா மிக்ஸ் கறி.
கொயந்தைக்கு எப்படி சாப்பிடுவது என்று விளக்கம் சொல்லியாச்சு. கையால், ஸ்பூனால், இல்லாவிட்டால் அம்மாவை ( அல்லது மனைவி ) ஊட்டி விடச்சொல்லலாம். இதுக்குப் பிறகும் சந்தேகம் வந்தால் கேளுங்கோ, கொயந்தை.
நிலாமதி, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
இம்ஸ், எங்கட செஃப் !!! கடவுளே ! உங்களுக்கு செஃப்.... அதாரது??? கி.... இல் தொடங்கி....ஸ் இல் முடியும் அவரோ????
கட்டாயம் வருகிறேன். நன்றி.
தெய்வசுகந்தி, மிக்க நன்றி.
ReplyDeleteஆனந்தி, என்ன கேள்வி இது? இப்பவே சாப்பிட வாங்க.
மிக்க நன்றிங்க.
சரவணன், வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
ஷுஷ் வாணி. ;D
ReplyDeleteச்செஃப் பேரை இப்பிடியோ போடுறது!! ;) நாங்கள் பேரை மாத்தப் போறோம். ;)
புதுப்பெயர் வைச்சாச்சே, இம்ஸ். நல்ல ஸ்டைலா வைங்கோ ( வாணி மாதிரி )
ReplyDeleteவானதி சூப்பரா சொல்லிட்டிங்க. அவசர சமையல்+ கட்டிங் சில நேரம் சொதப்பல். நல்லா சொல்லிட்டிக்க. குட். ரெசிப்ப்பி A1
ReplyDelete