Friday, July 11, 2014

எம்ப்ராய்டரி வேலைகள்




தங்கப் பறவை: இந்த பறவை தங்க நூல் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த கோல்டன் கலர் நூல் வாங்கி பல மாதங்கள் ஆகிவிட்டது. மற்ற வகை நூல் போல் இல்லாமல் தைப்பதற்கு மிகவும் கஷ்டமான நூல். 
Vanathy's





தங்க நூல் போல் இல்லாமல் இழை போல் இருப்பதால் அடிக்கடி பல இழைகளாக பிரிந்துவிடும். இருந்தாலும் விடாமல் ஒரு டெக்னிக் கண்டு பிடித்து தைத்து முடித்துவிட்டேன். இதில் ஹங்கேரியன், சங்கிலித் தையல், க்ராஸ் ஸ்டிச், அடைப்புத் தையல் ஆகிய தையல்கள் பயன்படுத்தினேன்.

























பூக்கள் சாதரண நூலிலும், கோல்டன் நூலிலும் கலந்து தைத்துள்ளேன்.


 அடுத்தது, வண்ணத்துப்பூச்சி, இதில் அந்த வட்ட அவுட் லைன்wheat/wheatear stitch பயன்டுத்தினேன். அடைப்புத் தையல், ஹங்கேரியன், சங்கிலித் தையல், சில மணிகள் கொண்டு உருவான வண்ணத்துப்பூச்சி.


சேவல்: இது பல முறை தைத்த டிசைன் என்றாலும் மிகவும் பிடித்த டிசைன். இந்த முறை பூக்களுக்கு மணிகள் வைத்தேன். 

கடைசியாக இருப்பது சங்கிலித் தையல் கொண்டு உருவான மேசை விரிப்பு. இது போன வருடம் தொடங்கினேன், இன்னும் முடிக்கவில்லை. இதில் சங்கிலித் தையல் மட்டும் பயன்படுத்தி உள்ளேன். ஷேடட் கலர் எனப்படும் 2 வகையான கலர்கள் கலந்த நூல் பயன்படுத்தி உள்ளேன்.

                                                       



15 comments:

  1. வணக்கம்
    அழகிய கைவண்ணம் மிக அருமையாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ரூபன், மிக்க நன்றி.

      Delete
  2. Superb....Great Job...Me Cholikoduthathu vida Alaga seithu erukeenga..Very good...:)

    ReplyDelete
    Replies
    1. சிவா, குருவை மிஞ்சினா குருவுக்கு பெருமை தானே!
      மிக்க நன்றி.

      Delete
  3. எம்ப்ராய்டரி அருமை...
    தலைப்பில் இருக்கும் பறவை போட்டோ சூப்பர் சகோதரி.

    ReplyDelete
    Replies
    1. குமார், மிக்க நன்றி.

      Delete
  4. தங்கப் பறவை கலக்குது வானதி. சேவல், பூ, வண்ணத்துப்பூச்சி... எல்லாமே அழகுதான்.

    அந்த பிங்கி ஸ்ரோல்ஸ்... சிம்ப்ளி சுப்பர்ப்! தொடர்ந்து தைச்சு முடியுங்க.

    ReplyDelete
    Replies
    1. இமா, மிக்க நன்றி.

      Delete
  5. ஆஹா அருமை.. நல்ல நீட்டாக வந்திருக்கு.. இது கையாலா இல்ல மெஷினோ?

    ReplyDelete
    Replies
    1. அதீஸ், கையால் தைச்சது தான். மெஸினில் பழகவில்லை.
      மிக்க நன்றி.

      Delete
  6. very very beautiful works.............i too have that golden colour thread...இருந்தாலும் விடாமல் ஒரு டெக்னிக் கண்டு பிடித்து தைத்து முடித்துவிட்டேன்..can u tell that.........
    thanks in advance...

    ReplyDelete
    Replies
    1. அனுராதா, முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
      நான் எப்போதும் 2 ஸ்ராண்டு நூல் எடுத்து தான் எம்ப்ரோய்டரி தைப்பேன். ஆனால் இந்த கோல்டன் கலர் இழை நுனியில் இருந்து பிரிந்து வந்து கொண்டே இருந்தது. எனவே நான் ஒரு ஸ்ராண்ட் எடுத்து, ஊசியில் கோர்த்து, இரண்டு end யும் சேர்த்து knot போட்டுக் கொண்டேன். இதனால் இழை பிரிவது என்ற தொல்லை இல்லாமல் அழகாக தைக்க முடிந்தது.

      Delete
    2. Thanks for details vanathy......sure i will try and show to u...

      Delete
  7. மகி, மிக்க நன்றி.

    ReplyDelete
  8. உங்களுக்கு ஒரு அவார்ட் எனது தமிழ் வலைப்பூவில் கொடுத்திருக்கேன் :)

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!