Saturday, November 9, 2013

யாயாவா? சுறாவா?


"சாம்பு, நேரம் 8 மணி. இன்று உனக்கு நீச்சல் வகுப்பு இருக்கு", என்ற அம்மாவின் குரலுக்கு நான் வாரிச் சுருட்டிக் கொண்டு எழும்பவில்லை. ஞாயிற்றுக் கிழமை என்பது கூட எனக்கு நினைவில் வரவில்லை. எனக்கு அந்த நீச்சல் குளத்தினை நினைக்கவே கண்கள், மூக்கு, ஏன் மூளை கூட எரிந்தது. அந்தக் குளத்தில் குளோரினை கலக்கி, தண்ணீரினை மிதமான சூட்டில் வைத்திருப்பார்கள். அங்கே போனாலே எனக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவது போல இருக்கும். குளத்தில் இறங்கினால் கண்களை மூடுவதா?, மூக்கினை மூடுவதா? அல்லது காதினைப் பொத்துவதா என்ற குழப்பத்தில் அழுகை வரும். அம்மாவின் கோபமான பார்வையினால் கண்ணீர் கூட கண்களின் ஓரத்தில் எட்டிப் பார்த்துவிட்டு உள்ளே ஓடிவிடும். 

"அம்மா, இன்று எனக்கு  ஒரே அலுப்பாக இருக்கு. எனவே நான் நீச்சல் பழக போகவில்லை.", என்றேன்.
" ஏன் துரை இரவு என்னத்தை வெட்டி முறிச்சீங்கள்?", என்றார் அம்மா நக்கலாக.
" அம்மா,உங்களுக்கு நீச்சல் தெரியுமா?", என்றேன்.
" இப்ப அதுவா முக்கியம். நேரம் ஆகிறது", என்று ஏனோ மழுப்ப பார்த்தார் அம்மா. 
"இல்லை. எனக்கு இப்பவே சொல்லுங்கள்", என்றேன்.
" எனக்கு நீச்சல் தெரியாது. நான் ஊரில் வளர்ந்தபோது அங்கு நீச்சல் குளம் இல்லை. கடலில் போய் தான் நீந்தப் பழகணும். ஒரு நாள் என் அப்பா என்னை கூட்டிப் போனார். நானும் மெதுவா காலை அசைத்தேன். காலில் ஏதோ பிராண்டியது போல இருந்தது. அந்தப் பக்கம் திரும்பி பார்த்தால் ஒரு சுறா...."

" யூ மீன் சார்க்",  என்றேன்  நான்.

" சுறா என்னை செல்லமாக சுண்டு விரலில் கடித்துவிட்டு, தூரத்தில் நின்று நோட்டம் விட்டுக் கொண்டே நின்றது. அன்று முடிவெடுத்தேன். நீச்சல் பழகுவது எனில்... இல்லை நீச்சலே பழகப்போவதில்லை என்று", என்று அம்மா தொடரும் முன்பு நான் குறுக்கிட்டேன்.
" அப்ப என்னை மட்டும் ஏன்.... நீச்சல் குளத்தில் சுறா வந்தால்", என்றேன்.
" அதெல்லாம் வராது. வா போகலாம்", என்றார் அம்மா. 



அன்றும் வழக்கம் போலவே நீச்சல் குளத்தில் என் நண்பர்கள் கூட்டம். அதில் சிலரோடு நான் பேசுவதில்லை. யாயா, ஜோர்டன், அலெக்ஸ் இவர்கள் தான் என் வயதினை ஒத்தவர்கள். இவர்களோடு நீச்சல் குளத்தில் சுறாவும் நின்றது. 
அம்மா, அங்கே பாருங்கள் சார்க்", என்றேன் அம்மாவிடம்.
உனக்கு எப்ப பாரு விளையாட்டு  தான். போய் குளத்தில் இறங்கு, என்றார் அம்மா. 
இல்லை. நான் மாட்டேன், என்றேன்.
"சாம்பு, உன் ஜில் ஜில் ரமாமணியை கூப்பிடவா", என்றார் அம்மா.
என் ஆசிரியையின் பெயர் ஜில். ஏனோ தெரியவில்லை அம்மா ஜில் ஜில் ரமாமணி என்கிறார்கள். நான் உடனடியாக குளத்தில் இறங்கிவிட்டேன். அங்கேயே நின்றால் ஜில் பிடித்து தள்ளிவிட்டு விடுவார்கள். பிறகு நான் தான் அவஸ்தைப்பட வேண்டும். 
"சாம்பு, நீ  இந்த இடத்திலிருந்து அங்கே அந்தக் கொடிக் கம்பம் வரை நீந்திச் சென்று, பின்னர் திரும்பி வர வேண்டும் சரியா", என்றார் ஜில்.
" நோ ஜில். அங்கே பாருங்கள் சார்க் நிற்கின்றது", என்றேன்.
"You silly, funny boy ", என்றார்.

நான் மெதுவாக நீந்தி கொடிக் கம்பம் வரை சென்றேன். சுறாவைக் காணவில்லை. திரும்பி வரும்போது தான் சுறா என் பின்னே வருவது தெரிந்தது. என்னைத் தொடர்ந்து வந்த என் நண்பர்களை சுறா ஏதாவது செய்யும் முன்னர் நான் துரித கதியில் செயல்பட வேண்டும் என்று உள்மனம் சொன்னது. 
எட்டி சுறாவின் வயிற்றில் விட்டேன்  ஒரு உதை. 

****
வீட்டில் எனக்கு பாட்டு விழுந்து கொண்டிருந்தது.
" சாம்பு, நீ எதற்காக யாயாவை உதைத்தாய்?", என்றார் அம்மா.
நான் எப்ப உதைத்தேன். அவனைக் காப்பாற்றினேன் அல்லவா?, என்று எண்ணிக் கொண்டேன். ஆனால், வாயைத் திறக்கவில்லை. அம்மா குறுக்கும் நெடுக்குமாக நடந்தார்கள். அவர் கைகளில் இருந்த லேட்டஸ்ட் போனில் எதையோ தேடினார்கள். அது ஒரு வீடியோ.


அந்த வீடியோவில் தெரிவது நானா? ஆங்! நானே தான். என் பின்னாடி வருவது யாயாவே  தான். வீடியோவில் சுறாவைக் காணவில்லை. இப்ப நான் யாயா பக்கம் திரும்பி பலம் கொண்ட மட்டும் உதைப்பது பதிவாகி இருந்தது. அப்ப சுறா எங்கே? அம்மா தான் ஏதோ எடிட் பண்ணி சுறாவை யாயாவாக மாற்றிவிட்டார்களோ? இப்படி ஆயிரம் கேள்விகள் என் மனதில். 



அதனால் தான் யாயா வீறிட்டுக் கத்தினானோ?



என் ஹீரோயிசத்தினை யாரும் பாராட்டாமல் இப்படி கரிச்சுக் கொட்டுகிறார்களே என்று எண்ணம் வந்தது. சுறாவினை சுவிமிங் பூலில் உதைத்து துரத்திய பொடியன் என்று கொண்டாட வேண்டிய என்னை கொண்டாடமல்... என்ன உலகமோ என்று நினைத்தபடி அந்த வீடியோவை 29 தடவையாக பார்க்கத் தொடங்கினேன். நீங்களும் என்னோடு பாருங்கள்.  என்னைப் போல உங்கள் கண்களுக்கும்

சுறா தெரியும் அல்லவா? கட்டாயம் தெரியும்.  என் அம்மாவிடம் சொல்லுங்கள்.






14 comments:

  1. ஆவ்வ்வ் வருகிறேன் வெயிட்... சுறாவா.. யாயாவா எனச் சொல்லத்தான்ன்:)

    ReplyDelete
    Replies
    1. அதீஸ், எனக்கும் குழப்பமா தான் இருக்கு. வந்து ஒரு முடிவு சொல்லுங்கள்.
      மிக்க நன்றி யாயா..சே! மியா.

      Delete
  2. //அம்மா,உங்களுக்கு நீச்சல் தெரியுமா?", என்றேன்.
    " இப்ப அதுவா முக்கியம். நேரம் ஆகிறது", //
    ஹையோ !!:)) இது எங்க வீட்டில் நடந்த/நடக்கிற உரையாடல் மாதிரியே இருக்கே :)

    ReplyDelete
    Replies
    1. எங்க வீட்டிலும் அடிக்கடி கேட்கும் டயலாக் தான். இதுக்காகவே நானும் நீச்சல் பழகலாம் என்று இருக்கிறேன். சுறா வந்தால்... வந்தபிறகு பார்க்கலாம்.
      மிக்க நன்றி, அஞ்சூஸ்.

      Delete
  3. பாவம் சாம்பு சுறா நினைப்பிலேயே போயிருப்பார் யாயா அவனுக்கு ஷார்க் மாதிரி தெரிஞ்சிருக்கு :))
    ( டோன்ட் வொர்ரி சாம்ம்பு :)) நீ உதைச்சது சுறாவைத்தான் :)

    ReplyDelete
  4. சின்னக் குழந்தைகளின் மனதைப் படம் பிடித்தது போல நல்ல பகிர்வு! :)

    ReplyDelete
  5. அழகான பகிர்வு...
    அருமை சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி, குமார்.

      Delete
  6. ஹா..ஹா..ஹா.. இப்போதான் கதை படிச்சு முடிச்சேன்ன்.. ரொம்ப அருமை. அம்மாவின் சுறாக் கதை.. மகனின் மனதில் எப்பூடிப் பதிந்திருக்கிறது... இது கிரேவிட்டியில் வரும் கனவேதான்ன்ன்:))... கனவுகள்/நினைவுகள் நம்மை எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கிறது. கனவிலே ஏதும் கைப்புக் காய் சாப்பிட்டு விட்டு, நிஜமாகவே பக்கத்தில் படுத்திருப்பவர் மீது துப்பிய சம்பவம் ஊரிலே நடந்தது அறிந்திருக்கிறேன்ன்..:))

    ReplyDelete
  7. அருமையான கதை.சாம்பு மை செல்லம்...

    ReplyDelete
  8. ஒரு சிறுவனின் வேறுபட்ட மனநிலையை அழகாக எழுதியிருக்கிறீர்கள் வானதி!

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!