சேகர், கூடையை கவனமா பார், என்றான் சண்முகம்.
சேகரின் முறைப்பினை பொருட்படுத்தாமல் ஜன்னல் வழியே பார்வையினை ஓடவிட்டான்.
பேருந்து அடுத்த ஸ்டாப்பில் நிற்க சில வயதான பெண்கள் கூடைகள் சகிதம் உள்ளே ஏறினார்கள். சில கூடைகளில் கீரை, சிலவற்றில் பழங்கள் என்று காணப்பட்டன.
சேகர் அலுப்புடன் சுற்றும் முற்றும் பார்த்தான்.
என் தலைவிதி உன்னோடு வரவேண்டி இருக்கே, என்று சண்முகத்திடம் குமுறினான்.
இருடா. இன்னும் அரை மணி நேரத்தில் கோயில் வந்துவிடும். அதன் பிறகு அங்கே இதை ... என்று சமாதானம் செய்தான் சண்முகம்.
கீரைக் கூடையோடு ஏறிய பாட்டி இவர்களை நோக்கி வந்தார்.
சேகர் ஆழ்ந்து உறங்குபவன் போல கண்களை மூடிக் கொண்டான்.
ஏம்பா, எத்தனை கீரைக் கட்டு வாங்கினாய், என்றார் பாட்டி.
அஞ்சு இருக்கும் பாட்டி, என்றான் சண்முகம்.
உன்னை நான் முன்ன பின்ன இந்த பஸ்ஸில் பார்த்ததில்லையே, என்றார் பாட்டி. இன்னைக்கு தான் பிஸ்னஸ் தொடங்குறாயா? ஒரு கட்டு எத்தனை ரூபாய்க்கு விற்கிறதா உத்தேசம்?. 5 கட்டுதான் இருக்கிறதா சொன்னே. இதை எந்த சந்தையில் கொண்டு போய் விற்கப் போகிறாய், என்று தொடர்ந்தார்.
பாட்டி சும்மா தொண தொணக்காமல் வா. இல்லாவிட்டால் இந்தக் கூடையை உங்களுக்கே தர வேண்டி வந்தாலும் வரலாம், என்றான் சண்முகம்.
பாட்டி அதன் பிறகு வாயை மூடிக் கொண்டாலும் அவரின் குறு குறுக்கும் பார்வை மட்டும் குறையவில்லை.
சண்முகத்திற்கு நேற்று நடந்தது எல்லாம் வரிசையாக ஞாபகம் வந்தது. உண்மையில் நேற்று அல்ல. இந்தச் சம்பவம்... இல்லை இல்லை அந்த "அது" இவனின் காதலி வீட்டினை சுற்றி வரத் தொடங்கி குறைந்து 2 மாதங்களாவது இருக்கலாம்.
காதலி வீட்டில் கோழிக் குஞ்சுகள், முட்டைகள் எல்லாம் மாயமாக மறைந்து போயினவாம்.காதலி சொன்னபோது பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை சண்முகம் . விடு உங்க அப்பா எடுத்து தின்னிருப்பார் என்று சமாதானம் சொன்னான். அவளின் அப்பா தான் இவனுக்கு வில்லன்.
இல்லை சண்முகம் எங்க வீட்டில் ஒரு பாம்பு இருக்கு. அது தான் எல்லாத்தையும் எடுத்து தின்னுது. நீ பெரிய ஆம்பிளையா இருந்தா அதை பிடி பார்க்கலாம், என்றாள்.
இவனுக்கு பாம்பென்றால் பயம் என்று சொல்வதை விட வெறுப்பு என்றே சொல்லலாம். அது நெளிந்து ஓடும்போது குமட்டிக் கொண்டு வரும். காதலி சொல்லும் போது எதுவும் சொல்ல முடியவில்லை. அடுத்த நாளே நண்பர்கள் துணையுடன் பெரிய வீரன் போல பாம்பு தேடச் சென்றான். கம்பு, தடிகளுடன் ஒரு கூட்டத்தினைக் கண்டதும் இவனின் மாமனார், முடிஞ்சா அடித்துக் கொல்லுங்கள், என்று சொன்னார்.
என்னது பாம்பினை அடிப்பதா? அதன் சாபம் ஏழு ஜென்மத்துக்கும் விடாதே, என்று வரிஞ்சு கட்டிக் கொண்டு வந்தார் வில்லனின் அம்மா.
அப்ப என்ன தான் செய்வதாம் என்று சொல்லு அதன்படி செய்துடுவோம், என்றார் அப்பா.
டேய்! அது சாதரண பாம்பு அல்ல. நாக பாம்பு. நீங்க அதை கவனமா பிடிச்சு நாக தம்பிரான் கோயிலில் கொண்டு போய் விட வேண்டும், என்றார் பாட்டி.
அதன் பிறகு சண்முகத்துக்கு உதறல் எடுத்தது. பாம்பினை லாவகமாக பிடிக்கும் முத்துவின் உதவியால் பிடித்து விட்டார்கள். ஆனால், முத்து ஏதோ அவசர வேலை இருப்பதாக சொல்லி கழன்று கொண்டான்.
சண்முகம் அவனுக்கு பணம் தருவதாக சொன்னபோதும் மறுத்துவிட்டான்.
நீயே கொண்டு போய் கோயிலில் போடுவியோ அல்லது அடிச்சுக் கொன்றாலும் பரவாயில்லை. நீ இதைக் கொன்றால் கூட கிழவிக்கு தெரியவா போகுது, என்று சொல்லிய பிறகு ஒரே ஓட்டமாக ஓடிவிட்டான் முத்து. மற்றைய நண்பர்களும் கழன்று கொண்டார்கள். மாட்டிக் கொண்டவன் சேகர் மட்டுமே.
தம்பிகளா, இதைக் கொண்டு போய் கோயிலில் விட்டுட்டு வாங்கப்பா, என்று வில்லன் கனிவாக சொன்ன போது மறுக்க முடியவில்லை.
டேய் என் மாமா சொல்லிட்டார். கிளம்பு என்றான் சேகரிடம்.
ஆங் பெரிய மாமா சொல்லிட்டாராம். எங்க வீட்டில் கூட 5 முட்டைகள் காணாமல் போச்சு என்று சொன்னேன் நீ கேட்டியா? இப்ப உன் காதலி வீட்டில் 4 முட்டைகள்....
இல்லைடா 6 முட்டைகள் என்று இடையில் குறுக்கிட்ட நண்பனை முறைத்தான் சேகர்.
போடா லூஸூ. 60 முட்டைகள் காணாமல் போனாலும் பரவாயில்லை. நான் வரமாட்டேன், என்றான் சேகர்.
நண்பனை சமாதானம் செய்து, பாம்பினை சாக்கு பையில் போட்டு, அதை மீண்டும் இன்னொரு சாக்குப் பையில் போட்டு பஸ்ஸில் ஏறச் சென்றார்கள்.
டேய் தம்பி, அந்த கோணிப் பையில் என்ன இருக்கு?, என்றார் பஸ்ஸில் டிக்கெட் கொடுப்பவர்.
அதுவாங்கண்ணா.... என்று தயங்கி நின்றார்கள்.
இப்பெல்லாம் நாட்டு வெடி குண்டுகள் நிறைய கடத்துகிறார்கள். பிடிபட்டால் கம்பி எண்ண வேண்டியது தான். உனக்கு டிக்கெட் கொடுத்த பாவத்துக்கு நானும் கம்பி எண்ண ரெடியில்லை சொல்லிட்டேன். இப்பவே பையை திறந்து காட்டு என்று பிடிவாதம் பிடித்த நடத்துனரிடம் இருந்து தப்பி வருவதற்குள் வாழ்க்கை வெறுத்துப் போனது.
சைக்கிளில் போகும் தூரம் இல்லை. பஸ்ஸில் போகவே குறைந்தது ஒரு மணி நேரம் வேண்டும். என்ன செய்வது என்று தயங்கி நின்ற வேளை தான் சேகர் சொன்னான்.
டேய் லூஸூ, ஒரு ஓலைப் பெட்டி வாங்கி அதன் அடியில் இந்த கோணிப் பையினை வைச்சு. மேலே கீரை வாங்கி அடுக்கிவிட்டால் பிரச்சினை தீர்ந்தது, என்று சொன்ன நண்பன் தெய்வமாகத் தெரிந்தான்.
இடையில் வேறு ஒரு பஸ்ஸில் ஏறி இறங்க வேண்டும். கீரைக் கூடையுடன் திரிந்த விடலைகளை சிலர் சந்தேகமாகப் பார்த்தார்கள். எல்லோரின் பார்வையினையும் தவிர்த்து கோயில் போய் சேர்ந்தார்கள்.
ஏன் சண்முகம், பாம்பினை கோயிலில் கொண்டு போய் உண்மையில் விட்டியா? அல்லது அடிச்சுக் கொலை செய்தாயா? என்று காதலி சந்தேகமாக கேட்டாள்.
நீ என்னை நம்பவில்லை என்றால் சேகரிடம் கேள், என்றான்.
சரி. நம்புறேன். நீ பாம்பினை கோயிலில் விட்டதும் அது என்ன பண்ணிச்சு, என்றாள்.
இப்ப எதுக்கு அதெல்லாம் என்று மழுப்பினான்.
இல்லை சொல்லு. சும்மா ஒரு ஆர்வம் தான், என்றாள்.
அந்தக் காட்சி கண் முன்னே விரிந்தது. பஸ்ஸில் இருந்து இருவரும் இறங்கி நாகதம்பிரான் கோயிலை நோக்கிச் சென்றார்கள். கீரையினை எறிந்த பின்னர் கோணிப் பையினை நடுங்கும் கைகளினால் அவிழ்த்துவிட்டான். உள்ளே இருந்து ஆக்ரோசமாக சீறியபடி வந்த பாம்பு இருவரையும் நோக்கி வந்தது. அன்று ஓட்டம் எடுத்த சேகர் அதன் பின்னர் இவனின் நட்பினை முறித்துக் கொண்டான்.
காதலி பெரிய ஜோக் கேட்டவள் போல விழுந்து விழுந்து சிரித்தாள்.
இவளின் சிரிப்புக்காக இன்னும் ஆயிரம் பாம்புகள் பிடிக்கலாம் என்று நினைத்துக் கொண்டான் சண்முகம்.
( இது ஒரு கற்பனைக் கதையே. இதில் வரும் கதாபாத்திரங்கள் எல்லாம் கற்பனையே.)
:)
ReplyDeleteMe the 1st!
உங்களுக்குதான் "அது"-ன்னாலே ஒரு பயமாச்சே?? அப்புறம் எப்படி "அதை" வைச்சே ஒரு கதையும் எழுதிட்டீங்க? ;)
ReplyDeleteகாமெடியா இருக்கு கதை! காதலி கடைக்கண் பார்வை காட்டினால் மாமலையும் சிறுகடுகாம்-னு சும்மாவா சொல்லிவைச்சாங்க?!:)
மகி, அதை பார்க்க தான் பயம். மற்றும்படி கதை என்ன? கவிதை கூட எழுதுவேன்.
Deleteமிக்க நன்றி.
நான் கேட்கலாமுன்னு வந்தேன்....நீங்க கேட்டுட்டீங்க ஒரு வேளை ஆக்ஷனோ. வான்ஸ் அதெல்லாம் தைரிய சாலிதான் :-))
Deleteகதை நல்லா இருக்கு வானதி .கூகிள்ல எவ்ளோ அவுக படம் இருக்கு
ReplyDeleteஒரு படம் ஒரே ஒரு படம் போட்டிருக்கலாமே :))))))))
ஆமா நான் ரொம்ப நாளா கேக்கணும்னு யோசிச்சேன்
நாங்கெல்லாம் கதை அல்லது பதிவு போட்டா ஆடு மாடு /மியாவ் எலி /பப்பி
டாபிக்ல போடுவோம் .உங்களுக்கு இவங்கன்னா ரொம்ப ஆசையோ ???
அஞ்சு, அவுக படம் பார்க்கமாட்டோம்மில்ல. கொஞ்சம் டென்ஷன் ஆகிடுவேன்.
Deleteபாவம் அவுகளைப் பற்றி யாரும் எழுதுவதில்லை. கலை -வாத்து, புஷ் - பூஸார், மகி- மஞ்சள் பூ, பழம், குருவி, சூரிய அஸ்தமனம், சந்திரோதயம், இமா- இவர் தான் பாம்புகளின் தோழர். ஆனால் பாருங்கள் இவர் கூட அவுக பற்றி எழுதுவதில்லை.
மிக்க நன்றி.
ம்.. இமா... ழி.
Deleteநீங்கள் பாவம் எண்டுதான் போடுறேல்ல வான்ஸ். ;)
//ம்.. இமா... ழி.
Deleteநீங்கள் பாவம் எண்டுதான் போடுறேல்ல வான்ஸ். ;)// மாமீஈஈஈஈஈ :-)))))))))))))))))))))))))))))))
அதோடு ஒரு பயணம்//// எதோடு?:))
ReplyDeleteஇது வேற அது அதீஸ், குழம்பப்படாது. ;))
Deleteஅவ்வ்வ்:)) நடக்கட்டும் நடக்கட்டும்:)
Deleteமீண்டும் வந்து கதை படித்துப்போட்டுச் சொல்றேன்..
ReplyDelete//மீண்டும் வந்து கதை படித்துப்போட்டுச் சொல்றேன்//
Deleteஇவ்ளோ நேரம் படிக்காமலா கமெண்ட் போட்டீங்க :))
அவங்க எப்ப படிச்சாங்க? எப்பவும் படம் பார்த்து விளக்கம் சொல் தான்.
Deleteமீண்டும் வந்து கதை படிச்சிட்டுச் சொல்றேன்.. எப்பூடி என:)).. மகிக்கு கர்ர்ர்ர்ர்ர்:)) இண்டைக்கு எல்லா இடத்திலயும் மகிக்கே வட:)) எனக்கும் பிச்சுப் பிச்சுத் தரலாமெல்லோ கர்:))
ReplyDelete//நாங்கெல்லாம் கதை அல்லது பதிவு போட்டா ஆடு மாடு /மியாவ் எலி /பப்பி
டாபிக்ல போடுவோம்////
இனம் இனத்தைச் சேரும் அவ்வ்வ்வ்வ்வ்வ்:)))).. பூஸ் எஸ்ஸ்ஸ்ஸ்:))
புஷ், படிக்காம சும்மா கேள்வி கேட்க கூடாது.
Deleteஇதுக்கு தான் நான் எப்பவும் disclaimer போடுறது. பாவம் பூஸார். அதைக் கூட படிக்காமல்.
/இண்டைக்கு எல்லா இடத்திலயும் மகிக்கே வட:)) / இல்லையே..ஒரு பூஸ் மட்டும் கரெக்ட்டா நான் குறட்டை பண்ணும் ;) நேரத்தில வடை சுட்டு போட்டுட்டாங்களே!
ReplyDelete/எனக்கும் பிச்சுப் பிச்சுத் தரலாமெல்லோ கர்:)) / தந்துட்டாப் போச்சு, நாங்கள்லாம் அள்ளித் தரலைன்னாலும் கிள்ளியாவது ;) தருவோம் அதிரா! எங்கே கையை நீட்டுங்கோ,கிள்ளி;)த் தரேன்...பயப்படக்கூடாது, வடையத்தான் கிள்ளிதருவேன்னு சொன்னேன்! ஹாஹஹா!! :)
;))
Delete//எங்கே கையை நீட்டுங்கோ,கிள்ளி;)த் தரேன்...பயப்படக்கூடாது,//
Deleteமகி இனி எல்ப் போர் கிள்ளிங் :)) சொல்லி அனுப்புங்கோ
இதுக்கெல்லாம் ஓரமா நின்னு கேட்கப்படாது. ஓடிப் போய் டபக்கென்று கிள்ளிப் போட்டு வந்திடோணும்.
Deleteஅவுக படத்தை போடாமல் இருந்த வானதிக்கு ஒரு ஜே! நல்ல கதையமைப்பு.கடைசி வரை அவுகளை எப்படி கோவிலில் விட்டாங்கன்னு அறியும் ஆவலுடன் கதை வாசிக்க தூண்டியது குறிப்பிடத்தக்கது.
ReplyDeleteஆசியா அக்கா, மிக்க நன்றி.
Deleteகதை நல்லாத்தான் இருக்கு....
ReplyDeletekumar, மிக்க நன்றி.
Deleteஆஆஆஆ பஸ்ல தொடங்கி பாஆஆம்பில முடியுதோ கதை? வான்ஸ்க்கு எப்பூடித் தைரியம் வந்துது பாம்பு பற்றி எழுத....:))
ReplyDeleteகனடால வான்ஸ் ஐ நினைச்சே பாம்புப் படம் எடுட்து வந்தேன் விரைவில வெளிவரும்.
அதீஸ், கனடாவில் பாம்போ? அங்கே மட்டும் தான் பயமில்லாமல் போய் வந்தனான். இனிமேல் அங்கே போகவும் பயமாக் கிடக்கு. சும்மா ரப்பர் பாம்பை வைச்சு விளையாட்டு காட்டக்கூடாது.
Deleteஅதிஸ், நான் வான்ஸோட வால்ல போட்டதுக்கு ரெண்டு நாளா அந்த ஏரியா பக்கமே எஸ்கேப் .படம் என்ன எழுத்தால் எழுதி இருந்தாலே ... ஹா..ஹா... :-)))))
Delete///நாங்கள்லாம் அள்ளித் தரலைன்னாலும் கிள்ளியாவது ;) தருவோம் அதிரா! எங்கே கையை நீட்டுங்கோ,கிள்ளி;)த் தரேன்...பயப்படக்கூடாது, வடையத்தான் கிள்ளிதருவேன்னு சொன்னேன்! ஹாஹஹா!! :)//
ReplyDeleteநோ.. இதை நான் ஏற்க மாட்டேன்... கிள்ளி..கள்ளி எல்லாம் வாணாம்:)) எனக்குப் பிச்சுப் பிச்சுத்தான் வேணும்:)))
நீங்க ரண்டு பேரும் வடைக்கு பிடிபடுங்கோ.
Deleteஇந்தக் கதையில் வரும் முத்து காரக்டர் எங்கட டீச்சரை நினைச்சு எழுதினது. அவரும் பாம்பு பிடிப்பதில் கீரி அல்லவா??? போய் போட்டுக் குடுக்க கூடாது.
/இந்தக் கதையில் வரும் முத்து காரக்டர் எங்கட டீச்சரை நினைச்சு எழுதினது. /ஆஹா..இதுக்குப் பிறகு மறுபடி கதைய முதல்ல இருந்து படிச்சா கதையில புதுப்புதுக் கோணங்கள் புடிபடுது வானதி! ;) ;)
Delete/போய் போட்டுக் குடுக்க கூடாது./// ஹ்ம்ம்..இப்படி வேற சொல்லீட்டீங்க? இதுக்கப்பறம் அமைதியா இருக்கக்கூடாது, இப்பவே இமாவின் உலகத்துக்கு கிளம்பறேன். நாராயண,நாராயண! :)))
;)) எல்லாம் கெ.கீ..ஸ்
Delete//அவரும் பாம்பு பிடிப்பதில் கீரி அல்லவா??//
Deleteரியலி ????:))
கிரி, உங்களை சொல்லவில்லை. உங்களைப் போய் சொல்வேனா? இது கீரி. யாராவது இங்கீலீஷூ தெரிஞ்சவங்க கொஞ்சம் எல்ப் பண்ணுங்கப்பா. கீரிக்கு ஆங்கிலம் என்ன???
Deleteகிரிஜா:))
DeleteGarrrrrrrr :))))
DeleteMongoose
இந்த பாம்பு பல்லி எண்டால் கொஞ்சம் பயம் நூறடி தள்ளியே நின்று கமெண்ட் போடறேன்
ReplyDeleteஅவ்வ்வ்வ்
நல்லா இருக்கு அக்கா
வேகாமா போய் மெதுவாய் முடிந்த கதை
என்னைப் போல ஒருவன். உங்க ஊரில் அவுக இருக்கிறாங்களோ??
Deleteமிக்க நன்றி.
ஆனந்தவிகடன், குமுதம், குங்குமம் போன்ற வார இதழ்களுக்கு இந்த படைப்புகளை அனுப்புங்கள், நல்லா சுவாரஸ்யமா இருக்கு....!!!
ReplyDeleteமனோ, அதுகெல்லாம் மெனக்கெட யாருக்கு நேரம் இருக்கு. அவர்களுக்கு மெயில் அனுப்பனும், அனுப்பினாலும் அவர்களை கையில் பிடிக்க கூட முடியாதே. 1000 ரூல்ஸ் பேசுவார்கள். அதெல்லாம் எனக்கு ஒத்துவராது. ஏதோ தோன்றுவதை எழுதுகிறேன். படிப்பவர்கள் படித்து கமன்ட் போடுவதே எனக்கு பெரிய உற்சாகம்.
Deleteமிக்க நன்றி, மனோ.
கர்ர்ர். இப்ப நான் கதைக்கு பின்னூட்டம் போடுறதா இல்லையா! பழைய கோவங்களை வைச்சுச் சாதிக்கினம் போல இருக்கு. ;))
ReplyDeleteமுத்து ஏனாம் ஓடினவர்!! காசை வாங்கிப் போட்டு அதை செல்லப்பிராணியாக யாருக்காவது விற்று இருக்கலாம். ;(
//மறுபடி கதைய முதல்ல இருந்து படிச்சா கதையில புதுப்புதுக் கோணங்கள் புடிபடுது வானதி! ;) ;)// படும், படும். பொல்லாத கூட்டம் எல்லாம். ;)
சே! பாம்பை செல்லப் பிராணியா வளர்ப்பதா??? என்ன கொடுமை. அதுக்கு இமாவின் அரைப் பாதியின் பெயரில் ஒரு பாத்திரத்தை உருவாக்கி இருக்கணுமோ!!!
Deleteமகி, நான் சொன்ன பிறகே இந்த இமா பாத்திரம் இங்கே இருப்பதே பலருக்கு தெரியும். எப்பூடி என் திறமை???
மிக்க நன்றி இமா.
எங்கட அக்காவின் மகனின் ஃபிரெண்ட் பாம்பூஊஉ வளர்க்கிறாராம், அவர் ஹொலிடே போகேக்கை, அக்காவின் மகனிடம் சொன்னாராம் கொஞ்சம் என் பாம்பைப் பார்த்துக்கொள்ள முடியுமோ என, இவருக்கும் ஆசை(13 வயது), அக்காவைக் கேட்டாராம் வீட்டுக்கு கொண்டுவரட்டோ என.. அக்கா சொன்னாவாம்.. பாம்பை மட்டுமில்ல உங்களையும் வீட்டுக்குள் விடமாட்டேன் என:)) அத்தோடு அக்கதை முடிஞ்சுபோச்சாம்:)).
Deleteநல்லா இருக்கு கதை வான்ஸ். அஞ்சு சொன்னத போல அவுக படத்த போடாததுக்கு கோடானு கோடி நன்றி. நடுங்கிங் ங் ங் கி கிட்டே தான் கமெண்ட் டைப் பண்ணுறேன். இதுல பூஸ் வேற படம் போட போறாங்களாம். கொஞ்ச நாளைக்கு என் பக்கம் உங்க பக்கம் இல்லே எந்த பக்கமும் :)) போக கூடாது ஹீ ஹி
ReplyDeleteகிரி, நான் படமெல்லாம் போட மாட்டேன். தைரியமா வாங்கோ. வதனப் புத்தகத்தில் "அது" படம் போட்ட இரு நபர்களை தொரத்தி விட்ட வீரமங்கை பரம்பரை.
Deleteமிக்க நன்றி.
வெகு சுவாரஸ்யம்
ReplyDeleteஅருமையான பகிர்வு
தொடர வாழ்த்துக்கள்
தங்கள் பதிவைப் படித்ததன் விளைவு
ReplyDeleteநானும் "அது " குறித்து ஒரு பதிவு எழுதியுள்ளேன்
பயப்படாமல் பதிவைப் பார்க்கவும்
ம்ம்.. பார்த்து பின்னூட்டம் போட்டாச்சு. கொஞ்சம் பயமா தான் இருக்கு உங்க கதை.
Deleteமிக்க நன்றி.
இந்தக் கதை சூப்பர் akakaa .
ReplyDeletedomaark kathai semak comedy
கலை, மிக்க நன்றி.
Deleteடொமார் பூஸாரின் நண்பன்.
அவ்வ்வ்வ்வ்வ்வ்:))).
Deleteஒரு பாம்பு கதை வான்ஸின் போஸ்டில் வருவது ஆச்சிரியம்தான் . இருந்தாலும் கதை சூப்பர் :-)
ReplyDeleteஃஃஃஃஃஃஎன்னது பாம்பினை அடிப்பதா? அதன் சாபம் ஏழு ஜென்மத்துக்கும் விடாதே, என்று வரிஞ்சு கட்டிக் கொண்டு வந்தார் வில்லனின் அம்மா.ஃஃஃஃஃ
ReplyDeleteசாதாரணமாக வீட்டினுள் நடப்பது போலவே மொழிநடையில் அருமையாகத் தந்துள்ளீர்கள் அக்கா...