Monday, October 3, 2011

நவராத்திரி?!

நீங்கள் நவராத்திரி பற்றி ஒரு பதிவு எழுதலாமே - இது ரமணி அண்ணாவின் விண்ணப்பம். ஓ! எழுதலாமே. எதை எழுத, எதை விட?

நான் பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காக மாறிய கதையை எழுதவா? சரி அது இப்ப வேண்டாம். நானே நொந்து போய் இருக்கிறேன். என் மாமா ( அப்பாவின் தங்கை கணவர் ) இறந்து விட்டார். அவர் வசித்தது கனடாவில். தொலை பேசியில் என் கஸின் அழுத போது ஆறுதல் தான் சொல்ல முடிந்தது. ஒடிப் போய் அணைத்துக் கொள்ளவோ அல்லது பக்கத்தில் இருக்கவோ முடியவில்லை என்று ஏக்கம் இன்னும் இருக்கு. நினைச்ச உடனே ஓடிப் போய் ப்ளைட்டில் ஏற முடிவதில்லை. கணவருக்கு வேலை, பிள்ளைகளுக்கு பள்ளிக் கூடம். நான் என் சகோதரியிடம் அடிக்கடி சொல்வேன், அடுத்த ஜென்மத்தில் இலங்கையில் பிறக்கவே கூடாது. கூழோ, கஞ்சியோ குடித்தாலும் பக்கத்து பக்கத்து குடிசைகளில் இருந்து குடிக்க வேண்டும்.

சரி. இப்ப நவராத்திரிக்கு வருவோம். ஆக்சுவலா என்ன நடந்தது என்றால் எனக்கு நவராத்திரி என்பதே தெரியாது. என் அம்மா கனடாவில் இருந்திருந்தா பொங்கல், தீபாவளி, நவராத்திரி, சிவராத்திரி, இன்னும் என்ன என்ன பண்டிகைகள் இருக்கோ அதெல்லாம் மறக்காமல் தொலை பேசியில் சொல்லிவிடுவார். கடந்த 2 மாசங்களாக அம்மா கனடாவில் இல்லை.

என் கணவருடன் கூட வேலை பார்ப்பவர் என் கணவரை நவராத்திரி பற்றிக் கேட்ட போது தான் அவருக்கே தெரிய வந்தது. அதன் பிறகு எனக்குத் தெரியும். தெரிஞ்சு என்ன புண்ணியம். என் கணவர் என்னிடம் சொன்ன போது நேரம் இரவு 8.30. அதுக்குப் பிறகு என்னத்தை செய்வது என்று பேசாமல் இருந்தாச்சு.

இன்னும் நவராத்திரி முடியவில்லை தானே. கடைசி நாள் மட்டும் ஏதாவது செய்து சமாளிக்கலாம். எங்கள் வழக்கப்படி கொலு வைப்பது இல்லை. இந்தியாவில் இருந்த போது சுண்டலுக்காக லச்சுமி மாமியுடன் வீடு வீடாக போனதுண்டு. என் சகோதரிக்கு நல்ல குரல் வளம். அவர் பாட நான் சுண்டலை பார்த்து ஜொள்ளு விடுவதுண்டு. எல்லாம் முடிந்த பின்னர் பூ, சுண்டல், மஞ்சள், ஜாக்கெட் துணி இவற்றுடன் வீடு போவோம்.

***********************************

ஒரு முறை National Geography சானல் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் தீவுப் பகுதிகள், மலைப் பிரதேசங்கள், காட்டுப் பகுதிகள், எரிமலைப் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கை முறைகள் பற்றிய ஒரு நிகழ்ச்சி காட்டினார்கள்.
எரிமலைப் பகுதியில் வாழும் மக்களின் ஒரு தொழில் எரிமலையின் அடிவாரத்தில் போய் பாஸ்பரஸ் நிறைந்த பாறைகளை எடுத்து வருவது. நச்சு புகை சூழ்ந்த பகுதியினுள் எந்தவிதமான தற்காப்பு நடவடிக்கைகள் எடுக்காமல் செல்கிறார்கள். பாறைகளை தோளில் தூக்கி வருகிறார்கள். சிலர் நச்சு வாயு தாக்கி இறப்பதும் உண்டாம். இதை விட்டா பிழைப்புக்கு வேறு வழி இல்லை என்று சொல்கிறார்கள். பாறைகள் தூக்கி இவர்களின் உடம்பில் நிறைய தழும்புகள்.

காட்டுப் பகுதியில் வாழ்பவர்களுக்கு உண்ண உணவுப் பொருட்கள் இல்லை. பெரும்பாலும் காட்டில் விளையும் உணவுகளை உண்கிறார்கள். புரோட்டீனுக்கு எங்கே போவார்கள்? காட்டில் திரியும் வௌவால்களை பிடித்து உண்ணுகிறார்கள். பெரிய குடும்பங்களுக்கு ஒன்று, இரண்டு பறவைகள் போதுமான தாக இல்லை. அந்தக் குடும்பத்தின் முன்னோர்கள் மண்டையை குடைஞ்சு கண்டு பிடித்த ஐடியா தான் இப்பவும் புழக்கத்தில் இருக்காம். ஒரு பிரமாண்டமான வலையினை திறந்த வெளியில் கட்டி விடுகிறார்கள். தூரமாக போயிருந்து தடியினால் தகர டப்பாவில் ஒலி எழுப்புகிறார்கள். வவ்வால்கள் கூட்டமாக வலை இருக்கும் பக்கம் நோக்கி பறந்து வலையில் சிக்கிக் கொள்கின்றன. இன்று நல்ல விருந்து தான் என்கிறார் அப்பா. நெருப்பு மூட்டி ஆனந்தமாக சமையல் செய்கிறார்கள். கடன் அட்டைகள், கரன்ட், கரண்டி, சட்டி, பானைகள் எதுவும் இல்லாமல சந்தோஷமாக வாழ்கிறார்கள்.


ஆகாயத்தில் அடக்கம்
மலைப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கை வரலாறு தான் கொஞ்சம் ஜீரணிக்க கஷ்டமாக இருந்தது. ஒரு வயதானவர் இறந்து விட்டார். அவரை எரிக்க விறகோ அல்லது புதைக்க இடமோ இல்லையாம். மலைப் பகுதியில் மரங்கள், சுடுகாடுகள் இல்லை. இறந்தவரை மூட்டையாக கட்டிக் கொண்டு மலையின் மீது ஏறுகிறார்கள் அவரின் மகன்கள். வேறு ஒருவர், இப்பெல்லாம் நிறைய அடிச்சா தான் வேலை செய்ய முடியுது, என்றபடி ஏதோ ஒரு பாட்டிலை வாயில் கவிழ்க்கிறார். மலையின் சம தளத்தினை அடைந்த பின்னர் மந்திரங்கள் சொன்ன பிறகு மகன்கள் அழுது கொண்டே கீழே இறங்கிச் செல்ல, ( மப்பில் இருந்த ) ஆசாமி இறந்தவரின் உடலை கழுகுக்கு இரையாக போடுகிறார்.
இன்று அப்பா, நாளை நான். இந்த வறண்ட பிரதேச்சத்தில் இதை விட்டா வேறு வழியில்லை. எங்களுக்கும் இந்து முறைப்படி அடக்கம் செய்ய விருப்பம் தான். இப்ப என் அப்பா இயற்கையோடு ஒன்றாக கலந்துவிட்டார், என்றார் மகன்.

24 comments:

  1. சூழல் புரியாது நான் மனதை
    சங்கடப் படுத்திவிட்டதாக நினைக்கிறேன்
    மன்னிக்கவும்

    ReplyDelete
  2. நல்ல பதிவு.
    வித்தியாசமான செய்திகள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. என் மாமா ( அப்பாவின் தங்கை கணவர் ) இறந்து விட்டார். அவர் வசித்தது கனடாவில். தொலை பேசியில் என் கஸின் அழுத போது ஆறுதல் தான் சொல்ல முடிந்தது. ஒடிப் போய் அணைத்துக் கொள்ளவோ அல்லது பக்கத்தில் இருக்கவோ முடியவில்லை என்று ஏக்கம் இன்னும் இருக்கு. நினைச்ச உடனே ஓடிப் போய் ப்ளைட்டில் ஏற முடிவதில்லை. கணவருக்கு வேலை, பிள்ளைகளுக்கு பள்ளிக் கூடம். நான் என் சகோதரியிடம் அடிக்கடி சொல்வேன், அடுத்த ஜென்மத்தில் இலங்கையில் பிறக்கவே கூடாது. கூழோ, கஞ்சியோ குடித்தாலும் பக்கத்து பக்கத்து குடிசைகளில் இருந்து குடிக்க வேண்டும்.//

    உங்கள் மாமாவுக்கு எனது கண்ணீர் அஞ்சலி....

    ReplyDelete
  4. நீங்கள் சொன்னது சரிதான் வானதி, கூழோ கஞ்சியோ குடிசை என்றாலும் பக்கத்து பக்கத்துல இருக்கணும் [[வாழனும்]...

    எனக்கும் என் அப்பா இறப்புக்கு போக இயலவில்லை, கம்பெனி விட மறுத்து விட்டது விசாவில் பிரச்சினைன்னு போய் சொல்லிடுச்சி, நீங்கள் படும் வேதனையை நான் உணர்கிறேன்....

    ReplyDelete
  5. நெருப்பு மூட்டி ஆனந்தமாக சமையல் செய்கிறார்கள். கடன் அட்டைகள், கரன்ட், கரண்டி, சட்டி, பானைகள் எதுவும் இல்லாமல சந்தோஷமாக வாழ்கிறார்கள்//

    நாமதான் இந்த கார் நெருக்கடியில் கிடந்து நோகிறோம்....!!

    ReplyDelete
  6. எங்களுக்கும் இந்து முறைப்படி அடக்கம் செய்ய விருப்பம் தான். இப்ப என் அப்பா இயற்கையோடு ஒன்றாக கலந்துவிட்டார், என்றார் மகன்.//

    இந்தியாவில் பார்சி இனத்தவர்களும் இப்படிதான் செய்கிறார்கள் வானதி....

    ReplyDelete
  7. கணவருக்கு வேலை, பிள்ளைகளுக்கு பள்ளிக் கூடம்.//

    சரியான பல்பு வாங்கிட்டேன் இப்போ உங்ககிட்டே, நான் உங்களுக்கு பதினெட்டு வயசு இருக்கும்னு நினைச்சேன் அவ்வ்வ்வ்வ்வ்......!!!

    நான் அங்கிள் என்ன...? ஹா ஹா ஹா பிச்சிபுடுவேன் பிச்சி...[[மனோ நீ போன ஜென்மத்துல பல்பா இருந்துருப்பியோ ம்ஹும்]]

    ReplyDelete
  8. அங்கிள், கூல் டவுன். மனசுக்கு ஏது வயசு?

    ReplyDelete
  9. //கூழோ, கஞ்சியோ குடித்தாலும் பக்கத்து பக்கத்து குடிசைகளில் இருந்து குடிக்க வேண்டும்.//
    எனது கருத்தும் அதே தான் வானதி .எங்க அப்பா சுகமில்லாதிருந்த நேரம் கணவர் மகள் விசாவுக்கு காத்திருந்தபோது எல்லாம் முடிந்து விட்டது ..இன்னும் அந்த குற்ற உணர்வு நெஞ்சில் முள்ளாய் நெருடி கொண்டு இருக்கிறது .

    ReplyDelete
  10. vanathy said...
    அங்கிள், கூல் டவுன். மனசுக்கு ஏது வயசு?//

    ஹா ஹா ஹா ஹா ஆமாம் அதுவும் சரிதான்....

    ReplyDelete
  11. வாங்க வான்ஸ்ஸ்... பின்னூட்டம் அனுப்பித் தேட வெளிக்கிட்டேன், போட்டாலும் நீங்களில்லாட்டில் இங்கு வெளில வராதே.. அதுதான் விட்டுவிட்டேன்.

    கவலைகள் + நவராத்திரி... இடம்பெயர்வு.... வீட்டுக்கு வீடு வாசல்படி.

    ReplyDelete
  12. இப்படியும் இருக்க முடியுமா!! ?

    நல்ல பதிவு.. கொஞ்சம் கனம்

    ReplyDelete
  13. வாங்க வாணி,இனி தினம் பதிவு வரும்தானே ..வேலையெல்லாம் முடிந்ததா ..நாளை விஜயதசமி..இதுவும் கடந்து போகும்.நாளை நடப்பது நல்லவையாகட்டும்..

    ReplyDelete
  14. நவராத்ரி பதிவா? ஒக்கெ, ஓகே

    ReplyDelete
  15. //பிள்ளைகளுக்கு பள்ளிக் கூடம். நான் என் சகோதரியிடம் அடிக்கடி சொல்வேன், அடுத்த ஜென்மத்தில் இலங்கையில் பிறக்கவே கூடாது. கூழோ, கஞ்சியோ குடித்தாலும் பக்கத்து பக்கத்து குடிசைகளில் இருந்து குடிக்க வேண்டும்.//உங்கள் ஆதங்கம் புரிகின்றது வானதி..

    //இன்று நல்ல விருந்து தான் என்கிறார் அப்பா. நெருப்பு மூட்டி ஆனந்தமாக சமையல் செய்கிறார்கள். கடன் அட்டைகள், கரன்ட், கரண்டி, சட்டி, பானைகள் எதுவும் இல்லாமல சந்தோஷமாக வாழ்கிறார்கள்.//ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்//. இந்த வறண்ட பிரதேச்சத்தில் இதை விட்டா வேறு வழியில்லை. எங்களுக்கும் இந்து முறைப்படி அடக்கம் செய்ய விருப்பம் தான். இப்ப என் அப்பா இயற்கையோடு ஒன்றாக கலந்துவிட்டார், என்றார் மகன்.
    //கொடுமை.

    ReplyDelete
  16. :)MEE THE FIRSTU...ELLA konjam late..

    ReplyDelete
  17. உங்கள் மாமாவுக்கு கண்ணீர் அஞ்சலி
    பிறகு புதிய செய்திகள் எல்லாம்
    கொடுத்து இருக்கீங்க..
    கடைசிவரை நீங்க நவராத்திரி எப்படி கொண்டடுவீகனு சொல்லலையே

    ReplyDelete
  18. :-( . சோக கீதம்....!!
    நீங்க வெளியே சொல்லிட்டீங்க . எங்களால சொல்ல முடியல அவ்வளவுதான் வித்தியாசம் .:-(

    ReplyDelete
  19. //சரியான பல்பு வாங்கிட்டேன் இப்போ உங்ககிட்டே, நான் உங்களுக்கு பதினெட்டு வயசு இருக்கும்னு நினைச்சேன் அவ்வ்வ்வ்வ்வ்......!!!//


    மனோ மக்கா...நீர் சொன்னது சரிதான் .. வான்ஸ் பேத்திக்குதான் பதினெட்டு வயசு ஆகுது ஹி...ஹி... :-)))

    ReplyDelete
  20. ரத்னவேல், மிக்க நன்றி.
    மனோ, மிக்க நன்றி. என் நெருங்கிய உறவினர் சில வருடங்களின் முன்பு இறந்தபோதும் விசா பிரச்சினையால் போகவில்லை.
    சொகுசாக வாழப் பழகிவிட்டோம். வேறு என்னத்தை சொல்ல?
    போன ஜென்மத்தில் பல்பா பிறந்திருப்பனோ???/// நான் என்னத்தைக் கண்டேன். இந்த ஜென்மம் பற்றிக் கேட்டிருந்தா டான் டான் என்று பதில் சொல்லியிருப்பேன்.

    ஏஞ்சலின், இந்த விசா தொல்லை பெரும் தொல்லை எல்லோர் வாழ்விலும்.
    மிக்க நன்றி.
    அதீஸ், எங்கேயும் போகவில்லை. பதிவு, கமன்ட் போட மூட் வரவில்லை.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  21. ரமேஷ், மிக்க நன்றி.
    ராதா ராணி, வேலை இன்னும் முடியவில்லை. என் ராசி அப்படி போல.
    மிக்க நன்றி.

    லஷ்மி ஆன்டி, மிக்க நன்றி.
    ஸாதிகா அக்கா, எனக்கு இந்த மலைவாசிகள், காட்டு வாசிகள் வாழ்க்கை முறை மிகவு பிடிக்கும். அநியாயத்திற்கு அப்பாவியா இருப்பார்கள்.கமராவை பார்த்து வெள்ளாந்தியா சிரிப்பார்கள். நாங்க என்னதான் பூசி மெழுகி போஸ் குடுத்தாலும் இவர்களின் இந்த அப்பாவி போஸ் முன்பு எடுபடாது.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  22. சிவா, நன்றி.
    நவராத்திரி - அவல், கடலை, பழங்கள் படைத்து, புத்தகங்கள் வைத்து வழிபடுவோம்.
    என் அப்பா முன்பு சரஸ்வதி தோத்திரம் பாட, நாங்கள் தொடர்ந்து பாடுவதுண்டு. இப்பெல்லாம் அந்தப் பழக்கம் அறவே இல்லை.
    மிக்க நன்றி.

    ஜெய், மிக்க நன்றி.
    அடேங்கப்பா! இரண்டு மாம்ஸூக்கும் சந்தோஷத்தை பாருங்கப்பா. என் வயசை கண்டு பிடிச்சுட்டாங்களாம்.
    அது என் பேத்தி அல்ல கொள்ளுப் பேத்தி. ஓக்கை.

    ReplyDelete
  23. இனிய வணக்கம் அக்காச்சி,

    உங்களின் மாமாவிற்கு என்னுடைய அஞ்சலிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
    அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்.

    இயந்திர வேக வாழ்க்கையில் எம் முக்கிய நிகழ்வுகளையும் மறந்து விட்டோம் என்பதனைப் பதிவு சொல்லி நிற்கிறது.

    ReplyDelete
  24. Vanathy,
    Sad to read your post.. but we are in same boat.. only if my parents call, i remember these navarathiri, sivarathiri etc :-).. just missing the sundal from amma..

    The case you mentioned about the malai vazh ppl, is it in india ? or some other place? There is a religion in western india called zorostranism and they believe in the same principle. They are supposed to leave their dead's body on the hill like what you say.. infact they do that because their religion tells them to be helpful to animals even after death. Even after dying, they want to feed some another animal and hence they do it - is the explanation I have heard of.

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!