Saturday, May 28, 2011

கிரகம் பிரவேசம்....

கல்யாணம் பண்ணிப் பார். வீட்டைக் கட்டிப் பார் என்று சும்மாவா சொன்னார்கள் பெரியவர்கள். அதுவும் வெளிநாட்டில் சொந்த வீடு கட்டுவது என்றால் சுலபமான வேலையா? ஒரு கல்லூரியில் விரிவுரையாளர் வேலை தனஞ்சயனுக்கு. வயது 40. கல்லூரியின் பக்கத்தில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் குடியிருந்தார். தொடக்கத்தில் வேலைக்கு போனோமா, வந்தமா என்று சாதாரண வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டிருந்தார் தனஞ்சயன். சேமிப்பு கொஞ்சம் இருந்தது என்னவோ உண்மை தான். பணத்தை செலவு செய்யவே மாட்டார். ஓய்வு நேரங்களில் பிள்ளைகளுக்கு ட்யூசன் வகுப்புகள் எடுப்பார். அக்கம் பக்கம் இருந்த குழந்தைகள் கிட்டத்தட்ட 10 பேராவது தேறுவார்கள். சில அம்மாக்கள் 2, 3 பிள்ளைகளை அனுப்பினா டிஸ்கவுன்ட் கிடையாதா என்று நச்சரித்ததில் பாதிப் பேருக்கு ( அதாவது 5 பிள்ளைகளுக்கு ) தான் பணம் வந்தது. மீதி இலவசமாகவே படித்துக் கொண்டிருந்தார்கள். தொண்டை கிழிய கத்தினாலும் சிலதுகளுக்கு மண்டையில் முழுவதும் ஏறவேயில்லை.

கல்லூரியில் தமிழ் மாணவர்கள் உரிமையாக தனஞ்சயன் என்று பெயர் சொல்லிக் கூப்பிடுவது, வீட்டுக்கு வருவது எல்லாமே எரிச்சலாக இருந்தது. ஊரில் வாத்தியார் என்றால் என்ன மரியாதை. இங்கே தோளில் கை போடாத குறை தான் என்று அடிக்கடி நினைப்பார். இப்படி ஏகப்பட்ட கடுப்புகள் தனஞ்சயன் வாழ்வில்.

ஒரு நாள் ஒரு அமெரிக்கர் அறிமுகமானார். பெயர் ஜோசப். பேசும்போது வாய் காது வரை கிழிந்தது ஜோசப்பிற்கு. அவர் ஒரு நாள் சொன்னார், " ஏன் இப்படி வீட்டுக்கு வாடகை குடுக்கணும். என் கையில் நீ ஒரு துண்டு நிலமும், ஒரு இலட்சம் டாலர்களும் குடு, நான் உனக்கு அழகிய வீடு கட்டித் தருகிறேன்." என்றார்.
அவ்வளவு பணமா? என்னிடம் கொஞ்சம் இருக்கு. மீதிக்கு நான் எங்கே போவதாம்? என்று அலுத்துக் கொண்டார் தனஞ்சயன்.

இருப்பதை கொண்டு தொடங்கலாம். மிச்சத்துக்கு லோன் எடுக்கலாம் என்றார் ஜோசப். முதலில் தயங்கினார் தனஞ்சயன். பிறகு ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில் சரி என்று சொல்லி விட்டார். அதன் பிறகு எப்போதும் புது வீட்டு நினைப்பாகவே திரிந்தார். அலைந்து திரிந்து கடன் வாங்கி, நிலம் வாங்கி, ஜோசப் வேலை தொடங்கவே 1 வருடத்திற்கு மேல் எடுத்தது. ஏற்கனவே கஞ்சன் என்று பெயர் பெற்ற தனஞ்சயன் மகா கஞ்சன் ஆனார். வீட்டுப்பக்கம் கல்லூரியில் கற்கும் மாணாவர்களின் தலை தெரிந்தாலே கோபம் வந்தது.

இயலுமானவரை அவர்களைத் தவிர்த்தார். அப்படியும் மீறி வருபவர்களை வேண்டா வெறுப்பாக வரவேற்பார். இவரின் கஞ்சத்தனத்தையோ, எரிச்சலையோ எவரும் பெரிதாக எடுத்துக் கொண்டாத தெரியவில்லை. மாணவர்கள் வழக்கம் போலவே வந்தார்கள். உரிமையாக சமையல் அறை வரை சென்றார்கள்.
தனஞ்சயனின் வீட்டு அஸ்திவாரம் போடப்பட்டது. ஒரு வாரம் கழித்து சென்று பார்த்தபோது மள மளவென இடுப்பளவு உயரத்திற்கு மரப்பலகைகள் வைத்து, வீட்டினை எழுப்பி இருந்தார்கள். ஊரில் ஒரு வீடு கட்டுவதெனில் 1 வருடங்களாவது வேணும். இங்கே 2 மாசத்தில் கட்டி முடித்து விடுவார்கள் போலிருக்கே என்று யோசனை ஓடியது. அஸ்திவாரம் உறுதியா இருக்கிறதா? ஆணிகள் ஒழுங்கா அடிக்கிறார்களா என்று சோதனை செய்ய நேரம் கிடைக்கும் போது போய் பார்வையிட்டு வருவார்.

வேலையால் வந்தால் சுத்தியலுடன் கிளம்பி விடுவார். சில நேரங்களில் இவரின் மாணவர்களும் கூடவே போவார்கள். அதுமட்டுமல்லாது, தனஞ்சயன், இன்று உங்கள் வீட்டில் ஒரு ஆணி வெளியே நீட்டிட்டு இருந்தது. நான் போய் சுத்தியலால் இரண்டு தட்டு தட்டினேன். நான் போன வாரம் 3 ஆணி அடிச்சேன் என்று புள்ளி விபரங்களோடு மாணவர்கள் ஆணி அடித்த கதைகள் சொன்னார்கள். தனஞ்சயனும் தனி ஆளாக கிடந்து அல்லாடமல் மாணவர்களின் உதவியை மறை முகமாக விரும்பினார். ஆனால், அதை வெளிக்காட்டாமல் இருந்து விடுவார்.
தனஞ்சயனின் வீடு ஒரு வழியாக உருப் பெற்றது. அழகிய இரண்டு அடுக்கு வீடு. முன் பக்கம் சிறிய தோட்டம் என்று அவரின் கனவு போலவே அழகிய குட்டி வீடு. எதிர்பார்த்ததை விட நிறையவே செலவு தான்.
ஐயர் நாள் பார்த்து குறிப்பிட்ட நாளில் பால் காய்ச்சி, குடி போகச் சொன்னார். தனஞ்சயன் ஒரு சிறு விருந்துக்கு ஏற்பாடுகள் செய்தார். வீடு கட்டும் போது உதவி செய்த மாணவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று மனசாட்சி சொல்லியது.

ஒரு நாள் கல்லூரியில் கணிணியில் வேலை செய்து கொண்டிருந்த போது இரண்டு மாணவர்களின் பேச்சுக் குரல் கேட்டது. இவரின் பெயர் அடிபடவே மெதுவாக ஒட்டுக் கேட்டார். என்னடா! ஞாயிற்றுக்கிழமை பிஸியா, என்றான் ஒரு மாணவன்.
ஓ! அதுவா. எங்க கஞ்சூஸ் தனஞ்சயன் வீடு கட்டி, அங்கே குடி போறார். ஞாயிற்றுக்கிழமை விருந்து குடுக்கிறார், என்ற மாணவன் தொடர்ந்தான். டேய், நம்ம கிரகம் அன்று தான் வீட்டில் பிரவேசிக்கணும் என்று ஐயர் சொல்லிட்டாராம் என்றான்.

தனஞ்சயனை நிற்பதை பிறகு தான் அந்த மாணவன் அறிந்து கொண்டான். சின்ன சிரிப்புடன் கிட்ட வந்தவன். நான் வரட்டா, என்றபடி கடந்து போனான்.

கிரகம் பிரவேசிக்க போவுதாம் என்ற சொல்லாடல் அவரையும் அறியாமல் அவரின் முகத்தில் புன்னகை தோன்ற வைத்தது. விருந்துக்கு மறக்காமல் வந்திடுப்பா என்று சத்தமாக சொன்னார். அவன் கையை அசைத்து விட்டு மறைந்து போனான். தனஞ்சயன் முகத்தில் ஒரு புன்சிரிப்புடன் கணிணியை நோக்கினார் . நீயும் இந்த வயதில் இந்த சேட்டைகள் செய்திருப்பாய் தானே என்று உள்ளே ஒரு குரல் ஒலித்துக் கொண்டே இருந்தது.

21 comments:

  1. கதையில் எதோ ஒண்ணு மிஸ்ஸிங் வாணி. அது இருந்த பர்பாக்ட்டா இருந்திருக்கும் . நல்ல முயற்சி

    ReplyDelete
  2. அருமையான கதை சகோ. என் பார்வையில் கிரகப் பிரவேசம். என்பது இரண்டு அர்த்தங்களை வெளிப்படுத்துகிறது,
    முதலாவது எம்மவர்கள் இன்னமும் தமது மூட நம்பிக்கை எனும் கட்டுக்களைப் புலம் பெயர்ந்தும் அகற்றாது வாழ்கிறார்கள்,
    மற்றையது,
    ஊதாரித்தனம், கஞ்சத்தனம் இலகுவில் அகற்றப்பட முடியாத அழுக்காக எங்களோடு கலந்திருக்கிறது.

    ReplyDelete
  3. டொமார், சின்னவாளியின் சாபம். இப்ப கிரகம் பிரவேசம்.. ;))) கதைக்குத் தலைப்பு வைக்கிறதில வான்ஸை யாரும் அடிக்க எல்லாது. ;D

    ReplyDelete
  4. எனக்கும் அனுபவம் இருக்கு சகோ.

    ReplyDelete
  5. நல்ல இருக்கு அஆன ஒரு கிக் இல்ல

    ReplyDelete
  6. வானதி இப்பிடியெல்லாம் சூப்பர் கதை வச்சிருக்கீங்களா??? அட்டகாசமா இருக்கு கதை...!!!!

    ReplyDelete
  7. . டேய், நம்ம கிரகம் அன்று தான் வீட்டில் பிரவேசிக்கணும் என்று ஐயர் சொல்லிட்டாராம் என்றான்.//


    ஹா ஹா ஹா ஹா சூப்பர் ரசித்தேன் ரசித்தேன்...

    ReplyDelete
  8. . //நீயும் இந்த வயதில் இந்த சேட்டைகள் செய்திருப்பாய் தானே என்று உள்ளே ஒரு குரல் ஒலித்துக் கொண்டே இருந்தது.//. ஹி !ஹி!ஹி! நிறைய பேருக்கு இந்த மைன்ட் வாய்ஸ் கேட்டிருக்கும் .very nice

    ReplyDelete
  9. கதை அசலா அருமையாய் இருக்கிறது

    ReplyDelete
  10. //கிரகம் பிரவேசிக்க போவுதாம் என்ற சொல்லாடல்//

    மாண‌வ‌ர்க‌ள் கூறிய‌தை காமெடியாக‌ எடுத்துவிட்டு அவ‌ர்க‌ளை விருந்துக்கு அழைத்த‌து ஆசிரிய‌ரின் பெருந்த‌ன்மையே...

    ReplyDelete
  11. ஃஃஃஃநம்ம கிரகம் அன்று தான் வீட்டில் பிரவேசிக்கணும் என்று ஐயர் சொல்லிட்டாராம் ஃஃஃஃஃ

    நான் பிரவேசிக்க வாறனெண்டு சொல்லலியே அக்கா அப்பறம் எப்படி... ஹ..ஹ..ஹ..

    நல்லாயிருக்குது அக்கா...

    அன்புச் சகோதரன்
    ம.தி.சுதா
    பிளக்பெறி போனும் வில்லண்ட பிரச்சனைகளும் (blackberry phone problems)

    ReplyDelete
  12. கதை மெல்ல மெல்ல உருவெடுத்து வீடு கட்டி முடிந்தது போல் நிறைவு பெற்றது ரொம்ப ரொம்ப அழகு தான் வான்ஸ் !!

    ReplyDelete
  13. நல்லா இருக்கு வானதி!நாங்கள்லாம் சேட்டை செய்யாமப் படிச்ச சின்சியர் சிகாமணிகளாக்கும்.:)

    இந்த ஊர் மாணவர்-ஆசிரியர் உறவு மற்றும் பள்ளி மாணவர் பழக்கவழக்கங்களை ஜீரணிப்பது கொஞ்சம் கஷ்டமாத்தேன் இருக்கும் போல.சமீபத்தில் ஒரு பள்ளிக்கருகில் சிலநிமிடங்கள் செலவழிக்க நேரிட்டதில் புரிந்தது இது! ;)

    ReplyDelete
  14. ;) (இது மகி சொன்னதுக்கு.) அது எல்லாம் மெதுவா பழகிரும். பல சமயம்... they don't mean what they say. இது இங்க மட்டும் இல்ல... ஊர்லயும் பார்த்து இருக்கிறேன். நாங்க பழகிற விதத்துல தான் எல்லாம் இருக்கு. வாணி கதை சொல்றதே அதைத்தானே.

    ReplyDelete
  15. ரமேஷ், மிக்க நன்றி.
    எல்கே, நீங்க சொன்னா சரி தான்.
    மிக்க நன்றி.

    நிருபன், சரியாச் சொன்னீங்க.
    மிக்க நன்றி.

    இமா, எல்லா தலைப்பும் copy rights வாங்கி வைச்சிருக்கிறேன். இதென்ன பிரமாதம் இன்னும் நிறைய இருக்கு.
    மிக்க நன்றி, இம்ஸ்.

    தூயவன், மிக்க நன்றி.
    ஹாஜா, மிக்க நன்றி.
    மனோ, மிக்க நன்றி.
    ஏஞ்சலின், மிக்க நன்றி.
    சரவணன், மிக்க நன்றி.
    நாடோடி, மிக்க நன்றி.

    ReplyDelete
  16. சிவா, நன்றி.
    மதி, நீங்க கிரகமா???
    மிக்க நன்றி.
    நாட்டாமை, மிக்க நன்றி.
    மகி, // நாங்கள்லாம் சேட்டை செய்யாமப் படிச்ச சின்சியர் சிகாமணிகளாக்கும்// எல்லோரும் நம்பிடுங்கப்பா!
    இங்கே வித்யாசம் இருக்கு தான். இருந்தாலும் என் கண்களை உறுத்துவதில்லை. ஊரைப் போல பயந்து பத்தடி தள்ளி நிற்காமல் மாணவர்கள் ஆசிரியர்களை நெருங்க முடிவது நல்ல அணுகு முறை.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  17. நல்ல சுவாரஸ்யமான கதை வானதி.

    //ஆணிகள் ஒழுங்கா அடிக்கிறார்களா என்று சோதனை செய்ய //

    வீடு கட்ட செங்கல், சிமெண்ட்தானே வேணும், ஆணி எதுக்கு, ஷட்டர் போடுறதுக்கான்னு யோசிச்சேன். அப்புறந்தான் ஞாபகம் வந்துது, அங்கல்லாம் மர வீடுகள்தானே!! :-))))

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!