Tuesday, February 1, 2011

காலிஃப்ளவரில் ஒரு ரெசிப்பி

வெங்காயம் - 1
தக்காளி - 1
காலிஃப்ளவர் - பாதி
பூண்டு - 2 பல்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளாகாய் - 2
மஞ்சள் - 1/2 டீஸ்பூன்
உப்பு
எலுமிச்சம் சாறு - சிறிதளவு
காலிஃப்ளவரை சுத்தம் செய்து வைக்கவும்.
பேக்கிங் ட்ரேயில் காலிஃப்ளவரை பரப்பி விடவும்.
சட்டியில் எண்ணெய் விட்டு, மஞ்சள், உப்பு சேர்க்கவும். லேசாக சூடானதும் காலிஃபளவரின் தலையில் ( உங்கள் தலையில் அல்ல ) ஊற்றவும்.
385 ஃபரனைட் முற்சூடு செய்யப்பட்ட அவனில், 30 நிமிடங்கள் பேக் பண்ணவும்.


வேறு சட்டியில் பொடியாக நறுக்கிய வெங்காயம் வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், பச்சை மிளாகாய், பூண்டு, தக்காளி சேர்க்கவும்.
பின்னர் கரம் மசாலா, மிளகாய்த் தூள் சேர்க்கவும்.
நன்கு வதங்கியதும் காலிஃப்ளவரை சேர்த்து கிளறவும்.
சிறிது தண்ணீர் சேர்த்து, தண்ணீர் வற்றும் வரை கிளறி, சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்.

குறிப்பு.
இது All recipes என்ற தளத்தில் வெளிவந்த குறிப்பு. ஆனால், இதை சமைச்சவர்கள் பெரும்பாலனவர்கள் ஒரே ட்ரை ஆக இருக்கு என்று புகார் தெரிவித்திருந்த படியால் நான் சிறிது மாற்றங்களுடன் செய்தேன்.
மிளகாய்த் தூள் சேர்ப்பதும் என் ஐடியா தான்.
காலிஃப்ளவரை பேக் செய்த பின்னர் அப்படியே சாப்பிட்டால் கூட மிகவும் சுவையாக இருக்கும். எங்க வீட்டில் பேக் செய்து வைத்து விட்டு, திரும்பி பார்ப்பதற்குள் கிட்டத்தட்ட ட்ரே காலியாகி விட்டது.






ஆசியா அக்கா கொடுத்த விருது. மிக்க நன்றி.

24 comments:

  1. நல்லது செய்துப் பார்க்கலாம்

    ReplyDelete
  2. புது ரெசிபியா இருக்கே... நான் கொத்துகறி போட்டு குருமா வைத்துதான் பழக்கம்... ஹி,ஹி,ஹி....

    ReplyDelete
  3. பொதுவா காலிஃப்ளவர் நிறையா பேர்களுக்குபிடிப்பதில்லை. இந்தமுறையில் செய்து கொடுத்தால் பிடிக்கும்.

    ReplyDelete
  4. கண்டிப்பா செய்து பார்த்து விடத்தோன்றும் படமும் ரெஸிப்பியும் சூப்பர்.

    ReplyDelete
  5. அருமை வானதி.படம் சூப்பர்.

    ReplyDelete
  6. சூப்பராக இருக்கின்றது...பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete
  7. வான்ஸ் என்னாதிது மிளகாய் பொடியெல்லாம் போட்டு படம் ஒரே டெர்ரரா இருக்கு? ரிசிப்பியை பிரிண்ட் எடுத்து ஹோம் (கிச்சன் கேபினெட்) மினிஸ்டரிடம் ஒப்படைத்து விட்டேன். அவங்களும் பிரிண்ட் எல்லாம் சரியா வந்திருக்கான்னு வாங்கி ஒரு முறை மேலும் கீழும் படிச்சி பார்த்துக் கிட்டாங்க. நாளைக்கு என்ன நடக்குமோ? எல்லோரும் நலமா இருந்தா அடுத்தப் பதிவுக்கு வருகிறேன். அவ்வ்வ்வ் ....(சும்மா)!!!

    ReplyDelete
  8. சரி நல்லா இருக்கிற, டேஸ்டா இருக்கிற இதுக்கு 'காலி'ஃபிளவர்ன்னு ஏன் பேர் வந்துச்சு?

    ReplyDelete
  9. எல்கே, மிக்க நன்றி.
    மாத்தி யோசி, மிக்க நன்றி.


    மேனகா, மிக்க நன்றி.
    சித்ரா, செய்து பாருங்க. நல்லா இருக்கும்.
    மிக்க நன்றி.

    சரவணன், மிக்க நன்றி.

    லஷ்மி ஆன்டி, மிக்க நன்றி.

    ஸாதிகா அக்கா, மிக்க நன்றி.

    ஆசியா அக்கா, மிக்க நன்றி.
    கீதா, மிக்க நன்றி.

    நாட்டாமை, என்ன இப்படி பயப்படலாமா?
    இன்னும் தெம்பா வருவீங்க. கவலை வேண்டாம்.
    நல்ல பேப்பரில் தானே ப்ரின்ட் எடுத்து குடுத்தீங்க. சும்மா தமாஷ்....
    நொடியில் காலியாகிடும் என்று நினைச்சு வைச்சாங்களோ என்னவோ???
    மிக்க நன்றி.

    ReplyDelete
  10. காலிப்ளவர் பேக் செய்ததில்லை (இப்போ தான் ப்ரோசன் வடை பேக் செய்யக் கத்துகிட்டு இருக்கேன் :) ). செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete
  11. அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. உங்ங லிங்குகளை நான் நல்ல விற்பனை செய்கிறேன்...

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    என் சிங்கக்குட்டி சீறி வந்த நாளும் என் மீள் வருகையும்.

    ReplyDelete
  13. நல்லா இருக்கு வானதி! செஞ்சு பாத்தரலாம்.

    ReplyDelete
  14. நல்லா இருக்கு வானதி! அடுத்தமுறை காலிஃப்ளவர் வாங்கியதும் செய்து பார்க்கிறேன்.

    /சூடானதும் காலிஃபளவரின் தலையில் ( உங்கள் தலையில் அல்ல ) ஊற்றவும்./அட,காலிஃப்ளவருக்கு தலை கூட இருக்கா? அப்ப அதோட கை-கால் எல்லாம் என்னாச்சு வானதி?அதைப்பத்தி நீங்க எதுவுமே சொல்லலையே?!! ;)

    ReplyDelete
  15. அருமை வானதி.செய்துப் பார்க்கனும்.

    ReplyDelete
  16. வான்ஸ் , காலி ஃப்ளவர் பூவா..? காய்கறியா இதுல எது சரி ..முதல்ல இதுக்கு ஒரு வழி சொல்லுங்க :-))

    ReplyDelete
  17. இந்த ரெசிப்பிய நான் செய்து பார்க்க நினைச்சேன் வானதி,ஆனா முடியல!

    காலிஃப்ளவர் தலையில உப்பு+மஞ்சள்+எண்ணெய கொட்டி பேக் செய்து எடுப்பதுவரை எல்லாம் நல்லா நடந்தது,அப்புறம் அப்படியே வயித்துக்குள்ள போயிருச்சு.ஹிஹி!

    தேங்க்ஸ் பார் தி ரெசிப்பி!

    ReplyDelete
  18. மகி, எங்க வீட்டிலும் இந்த ஸ்டேஜ் தாண்டுவது கஷ்டம். உடனே ட்ரே காலியாகி விடும்.
    மிக்க நன்றி, மகி.

    ReplyDelete
  19. வானதி,வெற்றிகரமா இன்று காலிஃப்ளவர் ரெசிப்பி லாஸ்ட் ஸ்டெப் வரை செய்துட்டேன்! ;) சீக்கிரம் ப்ளாகிலயும் போஸ்ட் பண்ணறேன்!:)

    ReplyDelete
  20. மிக்க நன்றி, மகி.

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!