Wednesday, January 26, 2011

ஆச்சரியங்கள்!


உறவினர் ஒருவருக்கு பிறந்த நாள் வாழ்த்து அட்டை அட்டை அனுப்ப தபால் நிலையம் போயிருந்தேன். சரியாக 9 மணிக்கு தான் திறப்பார்கள். போய் லைனில் காத்திருக்க வேண்டும். அங்கு ஒரு அறிவிப்பு சுவரில் ஒட்டியிருந்தார்கள். அதில் தபாலில், பார்சலில் என்ன பொருட்கள் அனுப்ப கூடாது என்று ஒரு லிஸ்ட். பட்டாசு, எரிபொருள், பாட்டரிகள், பசை, தெர்மாமீட்டர், நெயில்பாலிஷ்.... இப்படியே லிஸ்ட் நீள்கிறது. இருக்கட்டுமே இப்ப அதுக்கு என்ன என்கிறீங்களா? இதை மீறி நான் அனுப்புவேன் என்று அனுப்பினால் தண்டனையும் இருக்காம். குறைந்தது 250 டாலர்களில் ஆரம்பித்து 100 000 ( ஒரு இலட்சம் ) டாலர்கள் வரை அபராதம். நீங்கள் 10 பொருட்கள் அனுப்பினால் ஒவ்வொரு பொருளுக்கும் தனித்தனியாக அபராதம் கட்ட வேண்டும். நான் இப்ப 10 நெயில்பாலிஷ் என் சகோதரிக்கு ( சும்மா ஒரு பேச்சுக்கு ) அனுப்பினால் $250 * 10 .... 2500 டாலர்கள் குறைந்தது அபராதம் கட்ட வேண்டும். இதற்கு நான் டிக்கெட் வாங்கி நேரே போய் என் சகோதரிக்கு 10 பாட்டில்கள் வாங்கி குடுத்திட்டு, மீதி பணத்தினை சேமித்து வைக்கலாம். இப்படியா தண்டனை குடுப்பது என்று வயித்தெரிச்சலில் நிற்கவும் தபால் நிலைய ஷட்டரை திறக்கவும் சரியாக இருந்தது.
பிறந்தநாள் அட்டை 3 டாலர்கள், முத்திரை 1 டாலர் ஒட்டி அனுப்ப ஆயத்தமாக இருந்தது. அங்கு வேலை செய்த பெண்மணி கேட்டார், " ஓவர் நைட் அனுப்ப போறியா? அதற்கு நீ $30 டாலர்கள் கொடு. இரண்டு நாளில் போய்ச் சேர வேண்டிய இடத்திற்கு போய்விடும் என்றார்."
" இல்லை வேண்டாம். ( அம்பூட்டு காசு செலவு செய்ய நான் என்ன லூஸா? ) ", மெதுவா போய் சேரட்டும். ", என்று விட்டு நகர்ந்தேன். நல்லா அடிக்கிறாங்க கொள்ளை.

**************************
நாங்கள் காட்டு மிராண்டிகள் ஆனது எப்படி?

ஊரில் பள்ளியில் வரலாற்றுப்பாடம் எப்போதும் மதிய இடைவெளியின் பின்னர் தான் இருக்கும். தூக்கம் சொக்கும். ஆசிரியை வயதானவர். யாரையாவது படிக்க சொல்லிட்டு, அவரும் தூங்கி விழுவார். நாங்களும் அவரோடு சேர்ந்து தூங்குவோம். புத்தகத்தை படிப்பவர் மட்டும் பாவமாக நின்று படிப்பார். ஒரு நாள் எங்கள் ஆசிரியை திடீரென்று விழித்துப் பார்த்திருப்பார் போல கோபத்துடன் கேள்வி கேட்க ஆரம்பித்தார்.

" அமெரிக்காவின் பூர்வ குடிகளின் தலைவன் பெயர் என்ன ? " , என்றார்.
முதல் நாள் படித்த பாடம். ஏதோ அரையும் குறையுமாக ஞாபகம் வந்து தொலைத்தது.

யாரோ ஒரு மாணவி சரியான பதிலான " தேக்கும்சே " என்று சொல்ல, மீதி தூக்கத்தில் இருந்து விழித்தவர்கள் ஙே என்று முழித்து, " பேக்கும்சே " என்று பறைய, ஆசிரியை கோபத்துடன், " இந்தக் காட்டு மிராண்டிகள் எல்லாம் சேர்ந்து ஒரு சரித்திரம் அமைக்கப் போகுதுங்க", என்று சீரியஸாக சொல்ல.....

நாங்கள் காட்டு மிராண்டிகள் ஆன வரலாறு இது தான்.
*********************

அமெரிக்காவில் பேரழிவு நடக்கலாம் என்ற பயத்தில் சிலர் இருக்கிறார்கள். குறிப்பாக அணுகுண்டு, ரேடியோ கதிர் வீச்சு அபாயம் இப்படி பல அழிவுகள் ஏற்படலாம் என்ற பயத்தில் சில மக்கள் இருக்கிறார்கள். எப்பவும் பயத்தில் சாவதை விட வேறு எதையாவது செய்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று சிலர் செயலில் இறங்கியும் விட்டார்கள். யூட்டா என்ற இடத்தில் ஒரு தம்பதியினர் அண்டர் கிரவுன்ட் பங்கர் கட்டி, அதில் போய் பதுங்கிக் கொள்ளப் போகிறார்களாம். அதைக் கட்டி முடிக்க பல இலட்சக் கணக்கான பணம் செலவு செய்தார்களாம். அதில் சமையல் அறை, பாத்ரூம், தண்ணீர் வசதி, காற்று போய், வர வழிகள் , படுக்கைகள். இதைக் கட்டி முடிக்க 2.5 இலட்சம் டாலர்கள் முடிந்ததாம். இருக்கிறவள் அள்ளி முடிகிறாள் வேறு என்னத்தை சொல்வது.


*******


உறவினர் ஒருவர் சொன்ன தகவல். கோழி வளர்க்கும் இடங்களில் தினமும் பல கோழிகளை கொல்வார்களாம். இந்தக் கோழிகளை மொத்தமாக வாங்கி கொலை செய்ய ஒருவர் இருக்கிறாராம். இவை மனிதர்கள் சாப்பிடுவதற்கு ஏற்றவை அல்ல. ஆனால், இந்த மொத்தமாக வாங்கும் ஆசாமி செம கில்லாடி. அவர் இது நாட்டுக் கோழி இறைச்சி என்று சொல்லி நல்ல இலாபம் பார்த்து வருபவர். இலவசமாக வாங்கி நல்ல இலாபம் வரும் தொழில். இந்தக் கோழிகளை கொல்வதற்கு மிகவும் கல்வி அறிவு குறைந்த, வருமானத்திற்கு வழி இல்லாத ஆட்கள் வருவார்களாம். சில நேரங்களில் தமிழர், சில நேரங்களில் சைனீஷ் மக்கள் வருவார்களாம். ஆனால், இந்த செயல் சட்டத்திற்கு புறம்பானது என்பதால் அரசாங்க அதிகாரிகள் ரெய்ட் வருவதுண்டாம். அவர்கள் வரும் அறிகுறிகள் தெரிந்தால் அந்த இடமே காலியாகி விடும்.
அந்த அதிகாரிகளில் ஒருவரான தமிழ் நபர் சொன்னது , " தமிழர்களில் ஒருவரைப் பிடித்தால் போதும் அவன் எல்லாத்தையும் உளறிக் கொட்டிடுவான். மற்றவர்களைப் போட்டுக் குடுத்திடுவான். ஆனால், இந்த சைனீஷ் இருக்கிறார்களே அவர்கள் வாயே திறக்க மாட்டார்கள். "
நம்மைப் பற்றி நமக்கு தெரியாதா?




20 comments:

  1. /இந்தக் காட்டு மிராண்டிகள் எல்லாம் சேர்ந்து ஒரு சரித்திரம் அமைக்கப் போகுதுங்க", என்று சீரியஸாக சொல்ல.....//

    soooopppperr

    ReplyDelete
  2. மூன்று. பதிவுகளும் படித்தேன்
    நாசூக்காக சில தகவல்களை
    சொல்லிப்போகிற உங்கள் பாணி
    பாராட்டுக்குரியது.
    உண்மையில் இந்த மூன்று
    தகவல்களுமே எனக்குப் புதிது.
    தொடரக் கோரி ...வாழ்த்துக்களுடன்

    ReplyDelete
  3. காட்டு மிராண்டிக்கு வணக்கம் வச்சிக்கிறேன்

    ReplyDelete
  4. ஆச்சரியங்கள் ஆச்சரியமாத்தான் இருக்கு.நல்ல பகிர்வு.

    ReplyDelete
  5. போஸ்ட் ஆபீஸ் கதை நல்ல காமெடி வானதி! வரலாறு படைச்சதுக்கு வாழ்த்துக்கள்! :)

    ReplyDelete
  6. அந்த அதிகாரிகளில் ஒருவரான தமிழ் நபர் சொன்னது , " தமிழர்களில் ஒருவரைப் பிடித்தால் போதும் அவன் எல்லாத்தையும் உளறிக் கொட்டிடுவான். மற்றவர்களைப் போட்டுக் குடுத்திடுவான். ஆனால், இந்த சைனீஷ் இருக்கிறார்களே அவர்கள் வாயே திறக்க மாட்டார்கள். "


    ......பிழைப்புக்கு வந்த நாட்டில், என்ன கூத்தெல்லாம் பண்றாங்க? அப்புறம், மாட்டிக்கிட்டா மட்டும், "அய்யோ! அய்யோ!" என்று கத்துறது. ம்ம்ம்ம்.....

    ReplyDelete
  7. நல்ல பகிர்வு...அது correct...

    இந்தியாவிற்கு ஒரு post normalஆக ஆனுப்பினால் 2 $ தான் ஆகும்..அதுவும் 3 - 4 நாட்களிலே போய்விடும்..

    இதற்கு போய் Priority mail என்று நம்பி 20 - 30$ காட்டி 1 வாரம் வரை காத்து இருக்க வேண்டும் போஸ்ட் போய் சேர...

    அதனால் இப்பொழுது எல்லாம் Normal Post தான் அனுப்புவது...

    ReplyDelete
  8. மூன்று. பதிவுகளும் படித்தேன்
    நாசூக்காக சில தகவல்களை
    சொல்லிப்போகிற உங்கள் பாணி
    பாராட்டுக்குரியது.
    உண்மையில் இந்த மூன்று
    தகவல்களுமே எனக்குப் புதிது.
    தொடரக் கோரி ...வாழ்த்துக்களுடன்


    I agree with ramani! congratulations!

    ReplyDelete
  9. நாமெல்லாம் யாரு? காட்டிக் கொடுக்கிறதுல ”கிங்”குல! ;)

    ReplyDelete
  10. நல்ல பகிர்வு. வானதி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. நல்ல பகிர்வு!!

    ReplyDelete
  12. சிவா, எதுக்கு வாழ்த்துக்கள்??? நான் என்ன ஆஸ்கர் விருது வாங்கிட்டேனா?????

    ReplyDelete
  13. //அம்பூட்டு காசு செலவு செய்ய நான் என்ன லூஸா?//
    இல்லையா...சும்மா...ஜஸ்ட் கிட்டிங்... நாம (!!) எல்லாம் எவ்ளோ பெரிய அறிவாளிகன்னு எனக்கு தான் தெரியுமே... :)))

    //நாங்கள் காட்டு மிராண்டிகள் ஆன வரலாறு இது தான்//
    சூப்பர் இஸ்திரி... நான் ஹிஸ்டரிய அப்படி தான் சொல்றது...:)))

    //இருக்கிறவள் அள்ளி முடிகிறாள் வேறு என்னத்தை சொல்வது//
    அதசொல்லுங்க...

    //நம்மைப் பற்றி நமக்கு தெரியாதா?//
    நன்பேண்டா... "பாஸ் என்கிற பாஸ்கரன்" படத்த சைனீஸ் மொழில டப்பிங் பண்ணினா ஒரு வேள அங்கயும் இந்த எபக்ட் வரும்... நண்டு கதை தான் ஞாபகம் வருது போங்க... :)))

    ReplyDelete
  14. //vanathy said...
    சிவா, எதுக்கு வாழ்த்துக்கள்??? நான் என்ன ஆஸ்கர் விருது வாங்கிட்டேனா????? //

    வாணி உங்களுக்கு மேட்டர்ஏ தெரியாது...சிவா "கமெண்ட் மட்டும் போடுறவங்க" சங்கத்தின் தலைவர்... போஸ்ட் எல்லாம் படிக்க மாட்டார்... :)

    ReplyDelete
  15. //அமெரிக்காவில் பேரழிவு நடக்கலாம் என்ற பயத்தில் சிலர் இருக்கிறார்கள். குறிப்பாக அணுகுண்டு, ரேடியோ கதிர் வீச்சு அபாயம் இப்படி பல அழிவுகள் ஏற்படலாம் என்ற பயத்தில் சில மக்கள் இருக்கிறார்கள். எப்பவும் பயத்தில் சாவதை விட வேறு எதையாவது செய்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று சிலர் செயலில் இறங்கியும் விட்டார்கள். யூட்டா என்ற இடத்தில் ஒரு தம்பதியினர் அண்டர் கிரவுன்ட் பங்கர் கட்டி, அதில் போய் பதுங்கிக் கொள்ளப் போகிறார்களாம். அதைக் கட்டி முடிக்க பல இலட்சக் கணக்கான பணம் செலவு செய்தார்களாம். அதில் சமையல் அறை, பாத்ரூம், தண்ணீர் வசதி, காற்று போய், வர வழிகள் , படுக்கைகள். இதைக் கட்டி முடிக்க 2.5 இலட்சம் டாலர்கள் முடிந்ததாம். இருக்கிறவள் அள்ளி முடிகிறாள் வேறு என்னத்தை சொல்வது. //

    உண்மைலயே உலகமகா பயந்தாங்கொள்ளிகள் அமஎரிக்காவிலதேன். இதை எங்க போய் சொல்வது??

    ReplyDelete
  16. உன்மையில் இந்த மூன்றுதகவல்களுமே எனக்கு புதிது.

    ReplyDelete
  17. போஸ்ட் ஆஃபீஸ் சம்பவம் சுவாரஸ்யாமாக சொல்லி இருகின்றீர்கள் வானதி

    ReplyDelete
  18. எல்கே, இவ்வளவு எழுதியிருக்கேன். ஆனால், பல்பு வாங்கினது மட்டும் சூப்பரா?? அவ்வ்..
    மிக்க் நன்றி.

    ரமணி, மிக்க நன்றி.

    ரமேஷ், வணக்கம்.
    மிக்க நன்றி.

    ஆசியா அக்கா, மிக்க நன்றி.

    மகி, மிக்க நன்றி.


    சித்ரா, மிக்க நன்றி.
    சங்கவி, நன்றி.
    கீதா, உண்மை தான். நன்றி.
    மாத்தி யோசி, நன்றி.
    சரவணன், நன்றி.
    சிவா, நன்றி.

    அப்பாவி, ம்ம்ம்... அறிவாளிங்க தான். அதில் சந்தேகமே வேண்டாம்.
    நண்டுக் கதை - கருத்து மிக்க கதை தான்.
    மிக்க நன்றி.
    அம்பி சிவா இனிமேலாவது கடைசி லைனையாவது படிச்சுட்டு கமென்ட் போடுங்கோ ஒகேவா??

    அன்னுக்கா, உண்மை தான்.
    மிக்க நன்றி.

    லஷ்மி ஆன்டி, மிக்க நன்றி.
    ஸாதிகா அக்கா, மிக்க நன்றி.

    ReplyDelete
  19. போஸ்டாபீஸில் ஸ்டாம்ப் ஒட்டாமல் போட்டால் எவ்வளவு ஃபைன்னு நீங்க சொல்லவே இல்லையே..!! :-))

    நமக்கு வரலாறு முக்கியம் அமைச்சரே..அதை மறந்து விடாதீர்கள்..!!

    அஞ்சி அஞ்சி சாவார் இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலேன்னு பாரதியார் சொன்னது 100க்கு 200 சதம் அமெரிக்கனை பார்த்துதான் போல..!!

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!