Tuesday, January 25, 2011

தேடப்படும் நபர்கள்

அமெரிக்கா வந்த புதிதில் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த நாட்கள். அப்போது வீட்டில் கேபிள் இல்லை. அப்பார்ட்மென்டில் இலவசமாக 10 சானல்கள் இருந்த ஞாபகம். கனடாவில் சுற்றம், நட்பு புடைசூழ இருந்துவிட்டு இங்கே வந்தபோது ஒரே வெறுமையாக இருந்த நாட்கள். சனிக்கிழமை இரவு சும்மா தொலைக்காட்சியை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். ஏதோ ஒரு நிகழ்ச்சி, அதில் ஒருவர் ஓட, போலீஸ் விரட்டும் காட்சி. மிகவும் பரபரப்பாக இருந்தது. ஒரு மணி நேரம் போனதே தெரியவில்லை. ஒவ்வொரு சனியும் அந்த நிகழ்ச்சி பார்க்காவிட்டால் தலை வெடித்து விடும் போல உணர்வு உண்டானது. அந்த நிகழ்ச்சியின் பெயர் The America's 10 Most Wanted என்று சில நாட்கள் சென்ற பின்னர் தான் தெரிந்து கொண்டேன்.

போலீஸ் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு ஓடும் கிரிமினல்களை மீண்டும் பிடிக்க உருவாக்கப்பட்ட நிகழ்ச்சி. அதில் அந்த நபரின் அடையாளங்கள், பச்சை குத்திய செய்திகள், கடைசியாக காணாமல் போனபோது எப்படி இருந்தான், இப்ப விக் அணிந்தோ அல்லது மொட்டைத் தலையுடன் திரிந்தால் இப்படி இருப்பான் என்று காட்டுவார்கள். கண்டு பிடித்து போலீஸில் ஒப்படைப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவிப்பு இருக்கும். ஆனால், எச்சரிக்கை அந்த நபரிடம் துப்பாக்கி இருக்கலாம் என்றும் கூடுதல் தகவல் வழங்கப்படும். அப்படிக் கண்டு பிடித்தால் தூரமா நின்று போலீசுக்கு போன் பண்ணுங்கள் மேலதிக தகவலும் வழங்கப்படும்.


( இந்த நபரும் அந்த லிஸ்டில் இருப்பவர் தான். எங்கையாச்சும் கண்டால் எனக்கு விபரம் சொல்லுங்க. பணத்தை பங்கு போட்டுக் கொள்ளலாம். )

சரி! நம்ம தான் வெட்டியா இருக்கிறோமே எங்கையாவது யாரையாச்சும் கண்டால் போலீஸுக்கு தகவல் சொல்லி சன்மானத்தை வாங்கிக் கொள்ளலாமே என்று நினைத்து, நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வந்தேன்.

எஸ்கேப் ஆகிய கிரிமினல் போல ஒத்த முகசாயல் உடைய நபரை வைத்து, ஒரு குட்டி ட்ராமா போல நடித்துக் காட்டுவார்கள். இப்படி 10 பேருக்கும் ஒவ்வொரு கதை இருக்கும். பெரும்பாலும் தென் அமெரிக்காவில் போய் ஒளிந்து கொள்வார்கள். சிலர் அமெரிக்காவில் ஒவ்வொரு மாநிலமாக ஓடித் திரிவார்களாம். இந்த மாநிலம் மாநிலமாக ஓடித் திரியும் ஒரு நபராவது என் கண்களில் மாட்டா மாட்டானா என்று நப்பாசையுடன் நினைத்துக் கொள்வேன்.

ஆனால், இதில் ஒரு பிரச்சினை. எனக்கு பெரும்பாலும் புதிதாக அறிமுகம் ஆனவர்களின் முகங்கள் ஞாபகம் இருப்பதில்லை. ஒரு முறை புது அப்பார்ட்மென்ட் குடி போக கணவரின் வேலை நண்பர்கள் வந்து உதவி செய்தார்கள். இதில் ஒருவர் அமெரிக்கர். நல்ல ப்ரென்ட்லியான நபர். 2 மாசம் கழித்து கணவரின் அலுவலகம் போனபோது சிலர் வந்து ஹாய் சொன்னார்கள். ஒரு மொட்டை ஆசாமி மிகவும் உரிமையாக கதைக்க, நான் முழிக்க, அவர் கொஞ்ச நேரத்தில் போய் விட்டார். கணவர் சொன்னார் இவர் தான் எங்களுக்கு உதவி செய்த நபர். பெயரைச் சொன்ன பிறகு ஞாபகம் வந்தது. இவரை யார் திருப்பதிக்கு வேண்டுதல் வைத்து, மொட்டை அடிக்க சொன்னது என்று மனதில் நினைத்தபடி அவரிடம் மன்னிப்பு கேட்டு விட்டு வந்தேன்.

அப்படியே அந்த கிரிமினல்கள் வந்து என் முன்னாடி நின்றாலோ , அல்லது வழி கேட்டாலோ அல்லது ஒரு டாலர் கடன் கேட்டாலோ எனக்கு அவன் முகம் ஞாபகம் வந்து தொலையப் போவதில்லை. அதோடு நான் அந்த நிகழ்ச்சியிலேயே மிகவும் ஒன்றிப் போய், அதைப் பற்றியே எப்போதும் பேசிக் கொண்டு இருந்த படியால் என் கணவர் மிகவும் பயந்து போய் அந்த நிகழ்ச்சி பார்க்க விடாமல் தடை செய்து விட்டார்.




23 comments:

  1. இதுபோன்ற எங்களால் அறிந்துகொள்ளமுடியாமல்
    இருக்கிற நிகழ்வுகளை அறிந்துகொள்ளத்தான்
    பதிவு பதிவாக அலைகிறோம்.தாங்கள் இன்னும்
    விரிவாகவே இதுபோன்ற வித்தியாசமானவைகளை
    எழுதலாம்.நல்ல பதிவு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. //அதைப் பற்றியே எப்போதும் பேசிக் கொண்டு இருந்த படியால் என் கணவர் மிகவும் பயந்து போய் அந்த நிகழ்ச்சி பார்க்க விடாமல் தடை செய்து விட்டார். //

    வீட்டு சமையலை விட்டுட்டு எங்கே சி பி ஐ யில வேலைக்கு சேர்ந்துடுவீங்களோன்னு ஒரு பயமோ என்னவோ....!!

    அப்படி இல்லாட்டி ராத்திரி பாதி தூக்கத்துல அவரை பாத்து பயந்து போய் போலிசுக்கு நீங்க போன் செய்துட்டா ஹி..ஹி..

    ReplyDelete
  3. ரமணி, இன்னும் ஏதாவது எழுத முயற்சி செய்கிறேன்.
    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ஜெய்,
    //சி பி ஐ யில வேலைக்கு சேர்ந்துடுவீங்களோன்னு //
    சேர போன என்னை கதறி அழுது கூட்டிக் கொண்டு வந்தார் அதை சொல்ல மறந்துவிட்டேன்.
    கடைசி லைனை மட்டும் படிச்சுட்டு கருத்து சொல்லப் படாது. ( மீ எஸ்ஸ்ஸ்..... )
    மிக்க நன்றி, ஜெய்.

    ReplyDelete
  4. //கடைசி லைனை மட்டும் படிச்சுட்டு கருத்து சொல்லப் படாது.//

    இதுக்கு முன்னால சொன்னத சொன்னா அசிங்கமா தெரியுமேன்னு சொல்லல ..நீங்க கம்பெல் பண்ணுவதால சொல்ரேன்....இவ்வளவு ஞாபக சக்தி உள்ள நீங்க தனியா வெளியே போய்ட்டு திரும்பவும் சரியா வீட்டுக்கு வந்துடுவீங்களா..? இல்லை தர்மத்தின் தலைவன் ரஜினி மாதிரியா ? ஹா..ஹா..

    ReplyDelete
  5. அருமையான விவரனை.. பகிர்வுக்கு நன்றீ. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. சகோ. பயங்கர தைரியம் தான் உங்களுக்கு.

    ReplyDelete
  7. ஆசியா அக்கா, நன்றி.

    ஜெய், எந்த தர்மம், எந்த தலைவன்?? எந்த ரஜினி?? ( ஜெய், நம்புங்க எனக்கு எதுவுமே ஞாபகம் இல்லை )
    நாய் வேஷம் போட்டா நல்லா குரைக்கணும் என்று என் பாட்டி சொல்வார்.

    சரவணன், நன்றி.

    இளம் தூயவன், எதுக்கு பாராட்டு விழா ??
    மிக்க நன்றி.

    ReplyDelete
  8. படத்தில் இருக்கும் இருவரும் இங்கு பிரான்சில் தான் இருக்கிறார்கள்! ஐயோ அவசரப்பட்டு உண்மையச் சொல்லி விட்டேனா? இவர்களை மாதிரி இரண்டு பேரைக் கண்டேன் என்று சொல்ல வந்தேன்!



    சரி முதல் முறையாக வந்துள்ளேன்! இன்டிலியில் ஓட்டும் போட்டுள்ளேன்! நானும் காமெடிகளே எழுதுகிறேன்! நம்ம வீட்டுக்கும் வந்து போகவும்! காமெடிக் கூட்டணியே வைக்கலாம்!!

    ReplyDelete
  9. மாத்தி யோசி, ஹையோ! அது ஒரு நபர் தான். வித விதமான போஸில் போட்டிருக்கிறார்கள். இன்னொரு அப்பாவியையும் வீணாக பிடிச்சு உள்ளே தள்ளிடாதீங்க.
    உங்க வீட்டுப்பக்கம் இதோ வரேன்.
    முதல் வருகைக்கும், கருத்துக்கும், வோட்டுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  10. வாணி, தூக்கத்தில் முழித்து கணவனிடம் நீங்கள் யார் இங்க எதுக்கு வந்தீர்கள் என்று கேட்கலையே??

    ReplyDelete
  11. //என் கணவர் மிகவும் பயந்து போய் அந்த நிகழ்ச்சி பார்க்க விடாமல் தடை செய்து விட்டார்//

    பின்ன, போற போக்குல, உங்களைப் பாத்தா இன்னிக்கு நிகழ்ச்சில காமிச்ச குற்றவாளி மாதிரி இருக்கு; பாட்ஷா ரஜினி மாதிரி ஊர்விட்டு வந்து எல்லாரையும் ஏமாத்துறீங்களான்னு கேட்டு போலீஸ்ல மாட்டிவிட்டுட்டா? ;-)))))))

    ReplyDelete
  12. ஆ.. வான்ஸ்ஸ் இத்தலைப்பு என் கண்ணில படவேயில்லை, தற்செயலாக இப்போ தென்பட்டது, உடனே பதில்..

    //சேர போன என்னை கதறி அழுது கூட்டிக் கொண்டு வந்தார் அதை சொல்ல மறந்துவிட்டேன்.
    // திருநெல்வேலிக்கே அல்வாவா? விடமாட்டமில்ல:) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... இப்படியான விஷயமென்றால் தாய்க்குலம் இதைச் சொல்லிட்டுத்தானே அடுத்தகதையையே சொல்லுவினம்...:))) மீயா... எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...

    ReplyDelete
  13. //ஜெய், எந்த தர்மம், எந்த தலைவன்?? எந்த ரஜினி?? ( ஜெய், நம்புங்க எனக்கு எதுவுமே ஞாபகம் இல்லை ) //

    ஐயோ...பாவம் ... ஹா..ஹா.

    http://www.youtube.com/watch?v=PX27domc9Ro

    ReplyDelete
  14. // ஒரு நபராவது என் கண்களில் மாட்டா மாட்டானா என்று நப்பாசையுடன் நினைத்துக் கொள்வேன்//

    ஒரு கொலைவெறியோடு தான் திரிஞ்சீங்கன்னு சொல்லுங்க!! அவ்வ்வ்வ்...

    ReplyDelete
  15. //இதில் ஒரு பிரச்சினை. எனக்கு பெரும்பாலும் புதிதாக அறிமுகம் ஆனவர்களின் முகங்கள் ஞாபகம் இருப்பதில்லை.//

    இதுவேறையா. மனசுக்குள்ளேயே வச்சுங்க. வெளில சொல்லிபுடாதிங்க வான்ஸ்!!

    ReplyDelete
  16. ஜெய்,
    //சி பி ஐ யில வேலைக்கு சேர்ந்துடுவீங்களோன்னு //

    //சேர போன என்னை கதறி அழுது கூட்டிக் கொண்டு வந்தார் அதை சொல்ல மறந்துவிட்டேன்.//

    ஹா..ஹா.. இம்புட்டு நடந்து போச்சா. கதறி அழுதது யாரு? நீங்க இல்லை தானே!!

    ReplyDelete
  17. true டிவி-ன்னு ஒரு சானல் வருமே,ஒரு காலத்துல அதை ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா பார்த்துட்டு இருந்தோம்,அதுவும் கிட்டத்தட்ட இப்படித்தான். :)

    இன்ட்ரஸ்டிங்கான பதிவு!

    ReplyDelete
  18. ஹெ ஹெ ஹெ... இதுக்குத்தேன் நான் டார்ரெண்ட் எடுத்து வச்சு அவர் இல்லாதப்ப பாத்துக்கறது. இதுல என்ன கூத்துன்னா என்னமோ எல்லாரும் எங்கிட்டதேன் அகப்பட போறாங்ககற மாதிரி வெளில போனா எல்லாரையும் உத்து உத்து பார்ப்பேன்... ஒரியாக்காரர்தேன் டென்சனாவார். சர் சரி, ஏதோ நம்மளால முடிஞ்ச மாதிரி ஆத்தாவை மலைல ஏத்திட்டோமேன்னு நான் கம்முனு ஆயிடுவேன்..ஹி ஹி ஹி

    ReplyDelete
  19. உங்களுக்கு விருது வழங்கியிருக்கிறேன்,பெற்று கொள்ளவும்.
    http://asiyaomar.blogspot.com/2011/02/blog-post_06.html

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!