Monday, January 24, 2011

சில ஆச்சரியங்கள்

எனக்கொரு ஸ்நேகிதி ஸ்நேகிதி அவளை மாதிரி.....
நான், எனக்கொரு தோழி. அவர் எதித்ரியா நாட்டைச் சேர்ந்தவர். மிகவும் அப்பாவி ( என்னைப் போல. ஒகே நோ டென்ஷன் ). ஒரு நாள் ஈமெயில் ஐடி பற்றி பேச்சு வந்தது. அப்படின்னா என்னப்பா என்று அப்பாவியா கேட்டார். நானும் விளக்கம் சொன்னேன். எனக்கு ஒன்று வேணும் என்று கேட்டாள். சரி வாப்பா, நான் ஹெல்ப் பண்றேன் என்று சொல்லி, அவருக்கு யூஸர் நேம், கடவுச் சொல் ( இது அவரை டைப் பண்ணச் சொல்லிட்டு, நான் வேறு பக்கம் பராக்குப் பார்த்தேன்.) எல்லாம் என்டர் செய்தேன். கடவுச் சொல்லினை நான் கேட்காமலே எனக்குச் சொன்னார். ஒவ்வொரு எழுத்தாக சொல்லி வேறு காட்டினார். யாராவது மெயில் ஐடி கேட்டா கடவுச் சொல் மட்டும் கொடுத்து தொலைக்காதே என்று பல தடவை சொன்னேன். சரி என்று தலையாட்டி விட்டுப் போனார்.
வேறு ஒரு நாள் வகுப்பில் பிஸியாக பாடம் நடந்து கொண்டிருந்த போது, என்னைக் கூப்பிட்டு மெதுவான குரலில் சொன்னார், " என் நண்பன் இன்று என் மெயில் ஐடி கேட்டான். நான் குடுத்தேன். கடவுச் சொல்லையும் குடுத்தேன்...." இதன் பிறகு எனக்கு வேறு எதுவுமே காதில் விழவில்லை. உடனடியாக அவரைக் கூட்டிச் சென்று புது கடவுச் சொல் மாற்றி அமைக்கச் சொன்னேன். இப்படி கூட அப்பாவியா என்று எனக்கு இன்னும் பிரமிப்பு அகலவேயில்லை.


*********

என் மகனை என் உறவினர் ஒருவர் போட்டோ பிடிக்க காமராவினைத் தூக்கினார். சிறிது நேரத்தில் இந்த காமரா சரியில்லை, படமே தெரிய மாட்டேன் என்கிறது, என்று அவர் முணுமுணுத்தது காதில் விழுந்தது. நான் இந்த டெக்னிக்கல் விஷயத்தில் எல்லாம் வீக் என்றபடியால் பேசாமல் இருந்தேன். ஆனால், 3 வயசான என் மகன் அவங்க அப்பா போல ரொம்ப ஷார்ப். " மாமா, லென்ஸ் கவரை கழட்டிட்டு பாருங்க நல்ல தெளிவா தெரியும்" , என்று சொல்ல நான் அசந்து போனேன். அடச் சே! இப்படி அடிப்படை அறிவு கூட இல்லைன்னா எப்படின்னு நானும் கொஞ்சம் டெக்னிக்கல் விடயங்களை கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். ஈன்ற பொழுதினிலும்...


***********
என் கணவரும் கத்தரிக்காயும் என்ற தலைப்பில் உங்களிடம் பேசினேன். ஆனால், நீங்கள் ஒரு தீர்வும் சொல்லவில்லை. சரி! அதை விடுங்க. இப்ப என் மகனும் கத்தரிக்காய் பிரியராக மாறிவிட்டார் என்பது தான் லேட்டஸ்ட் நியூஸ். கத்தரிக்காய் குழம்பும், சப்பாத்தியும் என்றால் ஒரு பிடி பிடிப்பார். சில நேரம் பள்ளிக்கு போகும் முன்பு, " அம்மா, இன்று கத்தரிக்காய் குழம்பு வைங்க " என்று உத்தரவு போட்டு விட்டு செல்கிறார் நாட்டாமை. இப்ப எங்க வீட்டில் எவ்வளவு கத்தரிக்காய்கள் இருந்தாலும் எனக்கு வெறுப்போ அல்லது ஆத்திரமோ வருவதில்லை.


********

என் மகளுக்கு இப்ப தான் நாலு வயசு. ஆனால், எல்லாவற்றையும் உற்று நோக்குவதில், அதை அப்படியே காப்பி பண்ணுவதில் கெட்டிக்காரி. நான் இன்று பாயாசம் செய்யப் போகிறேன் என்று சொன்னால் போதும், ஜவ்வரிசி, சேமியா, ஏலக்காய், முந்திரி வற்றல், சீனி என்று தேவையான எல்லா பொருட்களையும் கிச்சன் கவுண்டரில் எடுத்து வைத்து விடுவார். இன்னும் கொஞ்ச நாட்களில் பாயாசம் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பாயாசம் மட்டும் அல்ல பொங்கல் அல்லது வேறு சமையலுக்கும் தேவையான பொருட்கள் எடுத்துக் கொடுப்பதில் சமர்த்து.

*********


என் கணவருடன் முன்பு வேலை பார்த்த ஒரு சைனீஸ் பெரியவர் நிறையப் படித்தவர். இவர் இன்று வேறு ஒரு கம்பெனியில் பெரிய பதவியில் இருக்கிறார். என் கணவருக்கு சமீபத்தில் ஒரு மெயில் அனுப்பி இருந்தார். அவர் நன்றாக பாடுவாராம். அதை Youtube இல் யாரோ அப்லோட் செய்திருந்தார்கள் ( அந்தக் கொடுமையை அவரைத் தவிர யாரும் செய்திருக்க மாட்டார்கள் ) . கேட்கவே சகிக்கவில்லை. ஆனால், ஏதோ ஒரு நம்பிக்கையில் அவர் பாட, சுற்றி இருப்பவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்கிறார்கள். என் கணவரும் நல்லா இருக்கு, இன்னும் நிறையப் பாடுங்கள் என்று மெயில் அனுப்பியது தான் இன்னும் கொடுமை.

39 comments:

  1. ஆஹா ரொமப் ஸ்வராஸ்யமா இருந்துச்சு.

    ReplyDelete
  2. அவருக்கு யூஸர் நேம், கடவுச் சொல் ( இது அவரை டைப் பண்ணச் சொல்லிட்டு, நான் வேறு பக்கம் பராக்குப் பார்த்தேன்.) /// வான்ஸ்ஸ்... இதை நான் நம்புவேனாக்கும்:):)... அப்படிச் சொல்லமாட்டேன் நம்புவேன் எனச் சொல்ல வந்தேன்.

    //என் மகளுக்கு இப்ப தான் நாலு வயசு. ஆனால், எல்லாவற்றையும் உற்று நோக்குவதில், அதை அப்படியே காப்பி பண்ணுவதில் கெட்டிக்காரி. // அம்மா 8 அடி பாய்ந்தால் மகள் 16 அடி எனச் சொல்வார்கள்... என்னதான் இருந்தாலும் பெண்குழந்தைகள் ஆண்குழந்தைகளைவிட அனைத்திலும் ஷார்ப்தான் வான்ஸ்...(இந்த இடத்தைவிட்டால் எங்கட பெருமையைப் பேச ஒரு புளொக்கும் கிடைக்காதே....:))

    ReplyDelete
  3. சின்னச் சின்ன விஷயங்கள்தான் ஆயினும்
    ரசிப்பதில் மட்டும் அல்ல
    அதை ரசிக்கச் சொல்வதிலும் ,படிப்பதிலும்தான்
    எத்தனை சுவாரசியங்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. அருமையான பகிர்வு.அனைத்தும் ரசித்தேன்.அதிராவின் பின்னூட்டத்தையும் ரசித்தேன்..

    ReplyDelete
  5. இதைமாதிரி சின்னச்சின்ன நிகழ்வுகள்தான் வாழ்க்கையை சுவாரஸ்யமாக்குதுங்க :-))))

    ReplyDelete
  6. இன்னும் கொஞ்ச நாட்களில் பாயாசம் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.


    ....போற போக்கில, உங்களை சூப்பரா சமைப்பாங்க போல..... சீக்கிரம் ப்லாக் எழுத வர சொல்லுங்க!

    ReplyDelete
  7. //என்னதான் இருந்தாலும் பெண்குழந்தைகள் ஆண்குழந்தைகளைவிட அனைத்திலும் ஷார்ப்தான் வான்ஸ்...//

    இதனாலதான் உலகத்துல எங்கே புயல் அடிச்சாலும் அதுக்கு பெண் பெயரையே வைக்கிறாங்க ... (( சுனாமி--இதுக்கூட பெண் பேர் மாதிரிதான் இருக்கு ))

    (இந்த இடத்தைவிட்டால் எங்கட பெருமையைப் பேச ஒரு புளொக்கும் கிடைக்காதே....:)) //


    ஹா...ஹா...ஹா...ஹா...

    ReplyDelete
  8. ஜெய்லானி said......இதனாலதான் உலகத்துல எங்கே புயல் அடிச்சாலும் அதுக்கு பெண் பெயரையே வைக்கிறாங்க ... (( சுனாமி--இதுக்கூட பெண் பேர் மாதிரிதான் இருக்கு ))
    /// மாதிரி என்ன பெண்ணேதான்:)..... புயலாப் பொங்குவமில்ல:)... இது..இது இந்தப்பயம் எப்பவும் இருக்கோணும் எனச் சொல்லிடுங்க வான்ஸ்ஸ்... சொல்லிட்டு ஓடிப்போய் புகைக்கூட்டுக்குள்ள ஒளிஞ்சிடுங்க... நான் கட்டிலுக்குக் கீழ பத்திரமா இருக்கிறேன்... என்னைப்பற்றி டோண்ட் வொரியா.... இல்ஸ்ஸ் தாங்கிக்கொள்வா:).. எதையெனக் கேய்க்கப்பூடாதூஊஊஊஊஊ:)..

    ஊசிக்குறிப்பு:)
    வான்ஸ்ஸ்.... அவரிட்ட சொல்லி வையுங்க தண்ணிக்குள்ளயே இருக்கட்டாம் என.. ஒன்றுமில்லை வெளியில கடும் வெயில்.. அதனால ஒரு அக்கறையிலதான்...

    ஆசியா... ரசிச்சீங்களா? நண்டி..

    ReplyDelete
  9. குடும்ப அனுபவங்களில் இருந்து நிறைய சுவாரசியம் மாடுமல்ல கற்றுக்கொள்ளவும் முடிகிறது விசேடமாக பிள்ளைகளிடம் இருந்து ,இதை நகைச்சுவை பதிவு என்ற வகைக்குள் போட்டது கொடுமையு கொடுமை , உங்கள் பதிவில் இருந்து சிந்திக்க நிறைய விடயங்களை தந்துள்ளீர்கள்

    ReplyDelete
  10. சின்ன சின்ன சம்பவங்கள் எப்போ நினைத்துப் பார்த்தாலும் சுவாரஸ்யம் தான்! :)

    ReplyDelete
  11. //இப்ப எங்க வீட்டில் எவ்வளவு கத்தரிக்காய்கள் இருந்தாலும் எனக்கு வெறுப்போ அல்லது ஆத்திரமோ வருவதில்லை. ///

    நாங்க கேட்ட கிடைக்காது. இப்ப பசங்க சொன்ன நடக்குது. இந்த தங்கமணிகளே இப்படிதான்

    ReplyDelete
  12. @வாணி
    //மிகவும் அப்பாவி ( என்னைப் போல. ஒகே நோ டென்ஷன் )/// இதுக்கு வேறப் பெயரும் இருக்கு ஹிஹி

    ReplyDelete
  13. அதீஸ், நம்பியே ஆக வேண்டும். வேறு வழி இல்லை.
    நல்லாப் பேசுங்க, அதீஸ். ஜெய் மாதிரி ஆட்களுக்கு காது குளிர, புகை வர நல்லாச் சொல்லுங்க ஹிஹி...

    ரமணி, ஊக்கத்திற்கு மிக்க நன்றி.
    நச் என்று இருக்கு உங்கள் பின்னூட்டம்.

    ஆசியா அக்கா, மிக்க நன்றி.
    அதீஸ் வந்தாலே கலக்கல் தானே, அக்கா.

    அமைதி அக்கா, மிக்க நன்றி.

    சித்ரா, நீங்க என்னைப் புகழ்றீங்களா இல்லையான்னு விளங்கவில்லை.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  14. சுனாமி - பெண் பெயரே தான். சுனாமிக்கு ஆண்பால் என்ன ??
    பெண் பெயர் வைக்க காரணம் - அதைக் கண்டு பிடிப்பது ஆண்கள் தான். கண்டு பிடிக்கிறவங்களுக்கு வீட்டில் என்ன பிர்ச்சனையோ தெரியவில்லை உடனே மனைவியின்/காதலியின் பெயரை சூட்டி, கோபத்தை தணிச்சுக் கொள்றாங்க போல. பாவம் இந்த உரிமை கூட இல்லைன்னா ....ஆண்கள் நிலைமையை நினைக்கவே பரிதாபமா இருக்கு.

    ஜெய், மிக்க நன்றி.

    அதீஸ், நல்லா விளக்கமா சொல்லிப் போட்டன் அல்லவா! இனிமே கலங்க வேண்டாம்.

    யாதவன், சோகம் என்று லேபிள் போட்டா யாரும் படிக்க மாட்டாங்க. அதான் இப்படி ஒரு டெக்னிக்.
    மிக்க நன்றி.

    பாலாஜி, மிக்க நன்றி.

    எல்கே, ஏதோ கிடைக்குதுன்னு நினைச்சு சந்தோஷமா சாப்பிட்டுக் கொள்ள வேண்டியது தானே ஹா..
    நீங்கள் அப்பாவி அக்காவை சொல்றீகளா???
    மிக்க நன்றி, எல்கே.

    ReplyDelete
  15. ஹ ஹ...எல்லாமே சுவாரஸ்யமான அனுபவங்களா சொல்லி இருக்கீங்க வாணி...பையன்,பொண்ணு செம சூப்பர் ஆ வருங்க பாருங்க...ஆனாலும் அந்த chinesh பெரியவரை ஓவர் ஆ கலாய்ச்சிருக்கிங்க...கொஞ்சம் அந்த லிங்க் ஐ அனுப்புங்க...எதாவது எதிரிக்கு அனுப்ப யோசிக்கலாம் இல்லையா...ஹ ஹ...சூப்பர் வாணி படிக்க நல்லா இருந்தது...

    ReplyDelete
  16. //கண்டு பிடிக்கிறவங்களுக்கு வீட்டில் என்ன பிர்ச்சனையோ தெரியவில்லை உடனே மனைவியின்/காதலியின் பெயரை சூட்டி, கோபத்தை தணிச்சுக் கொள்றாங்க போல.//

    ஹ...ஹா...ஹா....

    கன்டுபிடிச்சவன் கூட கொடுக்க முடியாத விளக்கம் வானதி

    ReplyDelete
  17. கணவருக்கு கத்திரிக்காய் பிடித்த போது பொலம்பி ஒரு பதிவு. பிள்ளைக்குப் பிடிக்கும் போது சந்தோஷப் பகிர்வு... ம்....!
    நல்லா இருக்கு எல்லாமே...!

    ReplyDelete
  18. ஆமா சந்தேகமே இல்லை இதுபோல சின்னச்சின்ன மலரும் நினைவுகள்தான் வாழ்க்கையை சுவாரசியமாகக்கொண்டு செல்கிரது.

    ReplyDelete
  19. சின்னச்சின்ன சம்பவங்கள் எப்போது நினைத்தாலும் சுகம்தான்.

    ReplyDelete
  20. //இப்ப எங்க வீட்டில் எவ்வளவு கத்தரிக்காய்கள் இருந்தாலும் எனக்கு வெறுப்போ அல்லது ஆத்திரமோ வருவதில்லை. //

    இதான் தாய்ப்பாசம்ங்கிறது!! இல்லையா வானதி? :-))))))

    ReplyDelete
  21. வாணி தனி தனியா எதை ரசித்தேன் என்று சொல்ல முடியலப்பா... இயல்பா சொல்லி இருக்கிற அனைத்தையும் மிக ரசித்து படித்தேன், படித்து ரசித்தேன்.

    பெண் குழந்தைகள் என்றாலே பொறுப்புகள் கூடவே வந்துவிடுகிறது போலும்...

    ReplyDelete
  22. அருமை!ரசித்து படித்தேன்!

    ReplyDelete
  23. //என்னதான் இருந்தாலும் பெண்குழந்தைகள் ஆண்குழந்தைகளைவிட அனைத்திலும் ஷார்ப்தான் /

    அது எப்படிங்க........ம் எல்லாம் நேரம்.

    அருமை!ரசித்து படித்தேன்!

    ReplyDelete
  24. சுவையான பதிவு,பதிவின் ஸ்வாரஸ்யத்தை அதிகமாக்கும் பின்னூட்டங்கள்! நல்லா இருக்கு வானதி! :)

    ReplyDelete
  25. வருகை தாருங்கள்...!
    வாசித்துப் பாருங்கள்...!
    பங்கு பெறுங்கள்...!!

    என்றும் உங்களுக்காக
    "நந்தலாலா இணைய இதழ்"

    ReplyDelete
  26. 25..

    கடைசி பகுதி அருமை
    ஹஹா

    மருமகனுக்கும் மருமகளுக்கும் வாழ்த்துக்கள்

    நல்ல கலவை பதிவு

    ReplyDelete
  27. அங்க என்ன சத்தம்!! ஆஹா தல வந்துடுச்சா..!! கச்சேரி கல கட்டிடிச்சு ம்ம்ம்...

    ReplyDelete
  28. மீண்டும் கத்திரிக்காயா?? அவ்வ்வ்வவ்... பாவம் வான்ஸ் !!

    ReplyDelete
  29. மகருக்கும், மகளுக்கும் என் அன்புகளை சொல்லுங்கள்...

    ReplyDelete
  30. // ஏதோ ஒரு நம்பிக்கையில் அவர் பாட, சுற்றி இருப்பவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்கிறார்கள். என் கணவரும் நல்லா இருக்கு, இன்னும் நிறையப் பாடுங்கள் என்று மெயில் அனுப்பியது தான் இன்னும் கொடுமை!! //

    பாவம் ரங்கஸ். இதிலாவது சந்தோஷமாக இருக்க விடுங்களேன்னு சொல்லமாட்டேன்னு சொல்லமாட்டேன்..க்கி..க்கி நீங்க இதில் கண் (காது)மூக்கை ஏன் நுழைக்கிறீர்கள் வான்ஸ் அவ்வ்வ்வவ்!!

    ReplyDelete
  31. மேலே போட்டோவில் ஒரு கை உடைந்து போய் கிடக்க, அந்த கை மேலே ஒரு புல்லாங்ககுழல் மீட்டாமல் கிடக்க, இருவர் சோகமே முகம் புதைத்துக் கிடக்க ... என்ன நடக்கு அங்கே வான்ஸ்...!! எனக்கு எதை எதையோ நினைவூட்டுகிறதே அந்த அசையாப் படம்!!

    ReplyDelete
  32. //இப்படி கூட அப்பாவியா என்று எனக்கு இன்னும் பிரமிப்பு அகலவேயில்லை.//
    அதானே என்னை விட பெரிய அப்பாவி போல இருக்கே...

    //மாமா, லென்ஸ் கவரை கழட்டிட்டு பாருங்க நல்ல தெளிவா தெரியும்//
    சூப்பர் சுட்டி பையன்... (அப்பாவ போலனு நீங்களே சொல்லிட்டீங்க... ஹா ஹா)

    //இப்ப எங்க வீட்டில் எவ்வளவு கத்தரிக்காய்கள் இருந்தாலும் எனக்கு வெறுப்போ அல்லது ஆத்திரமோ வருவதில்லை.//
    அநியாயம் இது...

    //இன்னும் கொஞ்ச நாட்களில் பாயாசம் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை//
    உங்க பொண்ணுகிட்ட நல்லா இட்லி ரெசிபி இருந்தா வாங்கி குடுங்க... :)))

    //என் கணவரும் நல்லா இருக்கு, இன்னும் நிறையப் பாடுங்கள் என்று மெயில் அனுப்பியது தான் இன்னும் கொடுமை.//
    நீங்க எனக்கு கமெண்ட் எல்லாம் இதே ரகம் தானோ? ஹ்ம்ம்.... (((:

    ReplyDelete
  33. மகன்,மகளின் அறிவார்ந்த செயலை அறிந்து மகிழ்வாக இருந்தது,இது போன்ற சுவாரஸ்யமான பகிர்வுகளை அடிக்கடி பகிர்ந்துகொள்ளுங்கள் வானதி.

    ReplyDelete
  34. கடைசி பகுதி அருமை.சுவாரஸ்யமான பகிர்வு

    ReplyDelete
  35. நல்லாருங்குங்க சகோ

    யதார்த்தமாகவும் சுவாரசியமாகவும் சொல்லியிருக்கீங்க அருமை வாழ்த்துக்கள் சகோ...

    தொடர்ந்து இதுபோன்ற அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்

    ReplyDelete
  36. கத்திரிகானா இப்படியா?
    ம்,முன்பு சில அயிட்டத்துக்கு தான் கத்திரிகா
    னிரைய இருந்தால், ஸ்கின் அலரிஜி என்று யாரொ சொன்னத கேட்டுட்டு பயன் படுத்தாமல் இருந்தேன்
    அப்பரம் இப்ப பயன் படுத்த ஆரம்பிச்சாச்சு அலர்ஜி ஒரு சில பேருக்கு தானாம்,
    மட்டனும் கத்திரிககய் போட்டு செய்யும் போது வாசனை பிச்சி கொண்டுவரும் அதே ப்போல் சாம்பாரில் கத்திரிக்காய் இல்லாத சாம்பார் கிடையாது
    உங்கள் மகன் மகள் , ம்ம் படு சுட்ட்டிகல் தான்

    ReplyDelete
  37. //அதீஸ், நம்பியே ஆக வேண்டும். வேறு வழி இல்லை.
    நல்லாப் பேசுங்க, அதீஸ். ஜெய் மாதிரி ஆட்களுக்கு காது குளிர, புகை வர நல்லாச் சொல்லுங்க ஹிஹி...//

    அடடா இவ்வளவு நடந்திருக்கா ..வந்துட்டோமில்ல ..இனி இங்கேயும் நமது அட்டகசங்கள் பழைய படி தொடங்கும் :-))))))))))0

    ReplyDelete
  38. ஆனந்தி, மிக்க நன்றி.
    ஓவரா கலாய்க்க இல்லை. எல்லாம் வயித்தெரிச்சல் தான். நான் கழுதையா கத்தினாலும் வாய் திறந்து நல்லா இருக்குன்னு சொல்லாத என் ஆ.காரர் இந்த பெரியவரை இப்படி.... சரி விடுங்க. என் பிரச்சினையை உங்களுக்கு சொல்லி என் ஆவப் போவுது?????
    பகைவனுக்கு அருள்வாய்.... என்று மன்னிச்சு விட்டுடுங்கோ, ஆனந்தி.

    ஆமி, இதெல்லாம் வெளிப்படையா சொல்ல முடியுமா அவங்க. இப்படி யாராச்சும் கண்டு பிடிச்சு சொன்னாதான் உண்டு.
    மிக்க நன்றி.

    குமார், இதெல்லாம் கண்டுக்க கூடாது. ஓக்கை. ஹாஹா...
    மிக்க நன்றி.

    கோமு, மிக்க நன்றி.

    லஷ்மி ஆன்டி, மிக்க நன்றி.

    ReplyDelete
  39. ஹூசைனம்மா, உங்களுக்கு விளங்குது. மற்றவங்க போல கேள்விகள் கேட்காமல் பாயின்டை பிடிச்சிட்டீங்க.
    மிக்க நன்றி.

    கௌஸ், உண்மைதான்.
    மிக்க நன்றி.

    சுகந்தி, மிக்க நன்றி.

    இளம் தூயவன், ஆண்கள் என்று சொல்லவில்லை. ஆண் குழந்தைகள் என்று சொல்லி இருக்கிறாங்க. நோ டென்ஷன் ஹாஹா.
    மிக்க நன்றி.

    மகி, மிக்க நன்றி.

    நந்தலா, மிக்க நன்றி.

    சிவா, மிக்க நன்றி.

    நாட்டாமை, உங்கள் அன்புக்கு நன்றி.
    தல வந்திடுச்சு ஆனா மீண்டும் காணாம போயிடும்.
    சந்தோஷம் எல்லாம் இல்லை. அவர் மூகம் கடு கடுன்னு தான் இருந்திச்சு.
    ஆனா சும்மா ரசிக்கிறாப் போல பில்டப் பண்ணினார்.
    படமா??? அது என் ஆ.காரர் எடுத்தது.

    அப்பாவி, நீங்க அப்பாவின்னு பெயரை இணைச்சுட்டா போதுமா?? அதை நிரூபிக்கணும். அதை என் தோழி செஞ்சுட்டா ஹிஹி.
    அடடா! அப்பா போலன்னு சொன்னதும் இங்கே நிறையப் பேருக்கு என்னா ஒரு சந்தோஷம்.
    இட்லி ரெசிப்பியா??? அவ கொஞ்சம் பிஸியா இருக்கா பிறகு கேட்டு சொல்றேன்.
    இப்படி பப்ளிக்ல எல்லாம் வைச்சு கேள்விகள் கேட்கப் படாது.

    மிக்க நன்றி, தங்ஸ்.

    ஸாதிகா அக்கா, மிக்க நன்றி.

    ஆயிஷா, மிக்க நன்றி.

    மாணவன், மிக்க நன்றி.

    ஜலீலா அக்கா, கத்தரிக்காய் சிலருக்கு அலர்ஜி தான்.
    வெண்டைக்காய், தக்காளி, சிலவகை மீன்களும் இந்த லிஸ்டில் வரும்.
    மிக்க நன்றி, அக்கா.

    ஜெய், வாங்க தல.
    அது நீங்க இல்லை வேறு ஒரு ஜெய் ( சமாளிப்பதில் நான் பெரிய ஆள் தான் ).
    மிக்க நன்றி.

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!