Tuesday, July 20, 2010

விருது!

ஆனந்தி எனக்கு குடுத்த விருது.


மிக்க நன்றி, ஆனந்தி.


மைதா மா - 1 1/2 கப்
சீனி - 1 கப்
பேக்கிங் பௌடர் - 3/4 டேபிள்ஸ்பூன்
பட்டர் - 113 கிராம் ( 4 oz )
முட்டை - 2
பால் - 1/2 கப்
வனிலா - 1/2 டீஸ்பூன்

அவனை 350 F க்கு முற்சூடு செய்யவும்.
கப் கேக் ட்ரேயின் உள்ளே பேப்பர் கப்களை போட்டு வைக்கவும்.

மா, சீனி, பேக்கிங் பவுடர் மூன்றையும் எலக்ட்ரிக் பீட்டரால் கலக்கவும்.
பின்னர் பட்டரை சிறிய துண்டுகளாக வெட்டி சேர்க்கவும்.
மாக்கலவை நன்கு படும்படி மீண்டும் அடிக்கவும்.
முட்டைகளை ஒவ்வொன்றாக சேர்க்கவும். நன்கு அடிக்கவும்.
இப்போது பாலினை சிறிது சிறிதாக ஊற்றி அடிக்கவும்.
வனிலா எசன்ஸ் சேர்க்கவும்.



மாவினை கரண்டியால் கப் கேக் ட்ரேயின் 2/3 பாகம் அளவிற்கு நிரப்பவும்.



முற்சூடு செய்த அவனில் 25 - 30 நிமிடங்கள் பேக் செய்யவும்.

குறிப்பு:
இதில் நான் பாவித்தது சால்டட் பட்டர்.
கேக்கின் மேல் ஐஸிங் போட்டு அலங்கரிக்கலாம்.
முட்டை, பட்டர் இரண்டும் ரூம் டெம்பரேட்சரில் ( room temperature )இருக்க வேண்டும்.
டயட்டில் இருப்பவர்கள் ஒரு நாளைக்கு எதைப்பற்றியும் கவலைப்படாமல் சாப்பிடுங்கள்.
இந்த ரெசிப்பி நான் தொலைக்காட்சியில் பார்த்து கற்றுக் கொண்டது. இதை செய்து காட்டியவர் Ms. Ina Garten . குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். செய்வதும் சுலபம்.

29 comments:

  1. கேக் ரொம்ப சூப்பராயிருக்கு....

    ReplyDelete
  2. விருதுக்கு வாழ்த்துக்கள் வானதி

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்.

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  4. //படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!//

    வான்ஸ் கேக் செய்யும் வேகத்தில தொட்டியை மத்தி கொண்டு வந்துட்டீங்களே...ஐயோ பாவம்...பூஸார் வரதுகுள்ள ஓடிப்போய் மாத்தி கொண்டு வங்க ..ஹா..ஹ..

    ReplyDelete
  5. கேக் சூப்பரா இருக்குங்க.. :D :D

    கண்டிப்பா செஞ்சு பாக்கறேன்..
    ரொம்ப ரொம்ப நன்றி தோழி...!!

    ReplyDelete
  6. அப்ப வான்ஸ் ஸ்டேஜிக்கு போனால் விருதுக்கு பதில மைக் செட்ட கொண்டு வந்துடுவீங்களே..!!

    ReplyDelete
  7. enakku pichcha item cake. superrr...

    ReplyDelete
  8. விருதுக்கு வாழ்த்துக்கள்..!!!


    கேக் சூப்பரா இருக்கு..அப்படியே பார்ஸ்ல அனுப்பிடுங்க..!!!

    ReplyDelete
  9. கேக் நல்லா இருக்கு வாணி. எனக்கும் ஒரு பார்சல்

    ReplyDelete
  10. ஆ... இம்முறை கரெக்ட்டா மறக்காமல் சொல்லிடுவேன்..... வாழ்த்துக்கள்.. வான்ஸ்.. சீ என்ன இது?, வான், பஸ் எண்டெல்லாம் சொல்லப்பூடாது ஜெய்.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))..

    வாழ்த்துக்கள் வான்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!!!! இப்பூடித்தான் சொல்லோணும்...

    உஸ் அப்பா முடியல.... எனக்குத்தான்.

    ஐயோ பாவம்...பூஸார் வரதுகுள்ள ஓடிப்போய் மாத்தி கொண்டு வங்க ..ஹா..ஹ..
    /// ஹா...ஹா.. ஹா... உந்தப் பயம் எப்பவும் இருக்கட்டும்... பீ ஹெயார்புல்... கடவுளே... நான் என்னைத்தான் சொன்னேன்...

    வாணீஈஈஈஈஈ, நல்ல அழகா கேக் செய்திருக்கிறீங்கள், சமையலிலும் கலக்குறீங்க இன்னும் இப்படிக் கலக்க வாழ்த்துக்கள்.

    பி.கு:
    சத்தியமாக எனக்கு கேக் வேண்டாம்.. எனக்குந்த இனிப்பு விருப்பமில்லை, பழுதானாலும் பறவாயில்லை ஷார்ஜாவுக்கே அனுப்பிடுங்கோ.

    ReplyDelete
  11. மேனகா, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    சரவணன், மிக்க நன்றி.

    ஹைஷ் அண்ணா, மிக்க நன்றி.

    ஜெய், நீங்கள் பூஸாருக்கு இம்பூட்டு பயமா??? அது ஒரு அப்பாவி பூஸார். என்ன சவுன்ட் தான் கொஞ்சம் அல்ல நிறைய விடும்.

    ஆனந்தி, விருதுக்கு மிக்க நன்றி.
    நேரம் கிடைக்கும் போது செய்து பாருங்கோ.

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் வானதி!! கேக் நல்லா இருக்குது!

    ReplyDelete
  13. ஜெய், மைக் செட்டா??? என்ன சொல்றீங்க?? என் குரல் கூட அவ்வளவு ஸ்வீட்டா இருக்காது.

    விருதை மட்டும் போட்டால் வந்தவர்கள் ஏமாந்து விடுவார்கள். அதான் இப்படி ஒரு ஏற்பாடு... ( நீங்கள் கேட்ட கேள்வி இது தான் என்று நினைத்து பதில் சொல்லி விட்டேன்.)
    மிக்க நன்றி, ஜெய்.

    கௌஸ், மிக்க நன்றி.

    ReplyDelete
  14. எல்கே, இந்த கேக் முழுவதும் உங்களுக்கும் ஜெய்க்கும். சண்டை போடாமல் சாப்பிடோணும் சரியா.
    எதற்கும் 12 என்ற நம்பரை ஞாபகம் வைச்சிருங்கோ. நீங்கள் அசந்த நேரம் ஜெய் 2,3 ...12 கேக்குகளையும் ஒழிக்காமல் ஒரு முன்னெச்சரிக்கை.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  15. அதீஸ், மிக்க நன்றி.
    ஏன் பச்சைப் புள்ளை ஜெய்யை இப்படி பயமுறுத்தி.... என்னத்தை கண்டீங்க.

    கேக் எல்லாம் பழுதாப் போகாது அதீஸ். நல்ல தரமான பொருட்களில் செய்தேன்.
    உங்களுக்கு வேணும் என்றால் மிளகாய்த் தூள் சேர்த்து செய்து தாரன்.
    வயதானால் சுகர் ( சீனி ) மீது வெறுப்பு வருவது இயல்பு தானே.

    ReplyDelete
  16. வயதானால் சுகர் ( சீனி ) மீது வெறுப்பு வருவது இயல்பு தானே.
    //// வான்ஸ்ஸ்ஸ் ஜெய்யைப்பற்றித்தானே கதைக்கிறீங்க.... பாவம் அவருக்கு இன்னும் பொன்விழாவே(பி.தினம்) நடக்கவில்லையாம்... அதுக்குள் சுகர் வந்திடுதோ???:).

    பாருங்கோ.. பூஸ், ஒரு பேபியாக இருந்தாலும்(அதார் முறைக்கிறதூஊஊஉ, கர்ர்ர்ர்ர்ர்ர்), இப்பூடியெல்லாம் கவலைப்படுது, அடுத்தவர்களைப்பற்றி:)).

    ஜெய், நீங்கள் பூஸாருக்கு இம்பூட்டு பயமா??? அது ஒரு அப்பாவி பூஸார். என்ன சவுன்ட் தான் கொஞ்சம் அல்ல நிறைய விடும்./// நிஜமாவோ?:), நான் இப்பவும் கட்டிலுக்குக்கீழதான்...:).

    ReplyDelete
  17. யம்மி யம்மி.. எளிதாக இருக்கே இந்த ரெசிப்பி..

    நான் எப்போ தான் கேக் செய்து பழகுவது??? ஓக்கை.. இன்னும் ஒரு மாசம் போகட்டும் :))

    ReplyDelete
  18. பூஸார் சவுன்ட் விட்ட பிறகு பாதுகாப்பா கட்டிலுக்கு கீழே பதுங்கினாலும் இனி கஷ்ட காலம் தான்.

    எங்க தலீவர் லா...னிக்கு அதீஸ் சப்போர்ட் பண்ணுகிறார். கவனம்.

    சந்தூ, செய்து பாருங்கள். சுலபமாக செய்யலாம்.
    இதில் பழகுவதற்கு ஒன்றுமே இல்லை. வீட்டில் எலி இருந்தால் போதும். துணிந்து செயலில் இறங்கிட வேண்டியது தான்.
    மிக்க நன்றி.

    புவனேஸ்வரி, வருக்கைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  19. naane ella cakeum edthukkaren jaiku lethuuu

    ReplyDelete
  20. கேக்கை அப்ப‌டியே பேக் செய்து ந‌ம்ம‌ பிளாக் அட்ர‌ஸுக்கு அனுப்பிருங்கோ ச‌கோ.. விருதுக்கு வாழ்த்துக்க‌ள்..

    ReplyDelete
  21. வாழ்த்துக்கள் வானதி.

    கேக் நல்லா இருக்குது... அப்படியே பார்ஸ்ல அனுப்பிடுங்க... OK.

    ReplyDelete
  22. விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் வாணி. ;)
    கேக் சுப்பர். படங்களும் அழகு. பாராட்டுக்கள்.
    ஸ்ட்ரோபெரி... விடமாட்டீங்களே அதை. ;))

    ReplyDelete
  23. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  24. அருமையாக இருக்கு ,வானதி.ப்ரெசெண்டேஷன் சூப்பர்.

    ReplyDelete
  25. நாடோடி, அனுப்பிட்டேன். வந்திச்சா???
    மிக்க நன்றி.

    திவ்யாம்மா, வாங்கோ. தனியா ப்ளாக் ஆரம்பித்து விட்டீங்க. வாழ்த்துக்கள்.
    வரவிற்கு மிக்க நன்றி.

    குமார், மிக்க நன்றி.

    இம்ஸ், மிக்க நன்றி.
    ஏன் இமா ஸ்ட்ராபெரியிலை ஏதாவது கோபமோ???

    ஆசியா அக்கா, மிக்க நன்றி.

    ReplyDelete
  26. // ( நீங்கள் கேட்ட கேள்வி இது தான் என்று நினைத்து பதில் சொல்லி விட்டேன்.)
    மிக்க நன்றி, ஜெய்.//

    ரொம்ப உஷார்தான் மாத்திட்டீங்க அது போதும்ம்ம்ம்ம்


    அதுசரி நான் திரும்பி வரதுகுள்ள எல்லாருமே சேர்ந்து இத்தனை கலாய்ச்சலா.. சவுண்ட் விடாம நான் எஸ்ஸ்ஸ்ஸ்கேப்

    ReplyDelete
  27. விருதுக்கு வாழ்த்துக்கள் வானதி.கேக்கும்,படம் எடுத்து பதிவிட்டதும் அருமை.

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!