ஜெய்லானி ( மனதிற்குள் ) கொசு வளர்ப்பது எப்படி? சுடுதண்ணீர் வைப்பது எப்படி ? என்றெல்லாம் நிறைய பயனுள்ள பதிவுகள் போட்டாச்சு. இனிமேல் என்ன எழுதுவது? நான் என்ன செய்வேன்.
வானதி வருகிறார்.
வானதி : ஜெய்லானி, என்ன யோசனை பலமா இருக்கு?
ஜெய்லானி : ( மனதிற்குள் ) இப்படி மூஞ்சியை வைத்துக் கொண்டிருந்தால் வர்றவன்போறவன் எல்லாம் விசாரிப்பானுங்க.
( சத்தமாக ) இல்லை சும்மா ரெஸ்ட் எடுக்கிறேன்.
வானதி : ஏன் நீங்கள் தவளை வளர்ப்பது எப்படி என்று ஒரு பதிவு போடக் கூடாது?
ஜெய்லானி : இந்த வறண்ட பூமியில் மனுசன் குளிப்பதே பெரும்பாடு. தவளை வளர்க்க குளம் வேணும், அந்த குளத்தில் தண்ணீர் வேணும்..
வானதி: அப்ப நீங்களெல்லாம் குளிக்கவே மாட்டீர்களா?
( மனதிற்குள் ) எதற்கும் ஒரு நாலடி தள்ளி நின்று கதைப்போம்.
( சத்தமாக ) சரி நான் போறேன்.
ஜெய்லானி : சரி போங்க.
*****
இமா வருகிறார்.
இமா : ஜெய், என்ன யோசனை?
வண்ணத்துப்பூச்சி வளர்ப்பது எப்படி என்று ஒரு பதிவு போடலாமே?
ஜெய்லானி : நான் எங்கே போவேன் வண்ணத்துப்பூச்சிக்கு..
இமா : அந்தக் கவலையே வேண்டாம். நானே உங்களுக்கு போட்டோ எடுத்து தருகிறேன்.
ஜெய்லானி : சரி. ஆனால் வண்ணத்துப்பூச்சி பற்றி எனக்கென்ன தெரியும்.
இமா : அதெல்லாம் நானே எழுதி, போட்டோ எடுத்து தந்துடுவேன். நீங்கள் உங்கள் வலைப்பூவில் போடுங்கள் சரியா?
ஜெய்லானி : பார்க்கலாம்.
இமா : ஹையோ ! ஜெய்லானி சரின்னு சொல்லி விட்டார். என் காமரா எங்கே? இந்த சந்தனா, அதிரா கண்ணிலே படாமல் எஸ்கேப் ஆகணும்.
சந்தனா : இமா, நில்லுங்கோ. எங்கே போறீங்க?
இமா : போகும் போது இப்படி அபசகுனமாக கேட்க கூடாது. எனக்கு ஆயிரம் வேலைகள் இருக்கும். வரட்டா.
சந்தனா : சரி. வரும்போது எங்கேயிருந்து வருவீங்க? இது எப்பூடி இருக்கு?
இமா : ம்ம்ம்.. அதிராவோடு சேர்ந்து எல்லோருமே நல்லா கதைக்கிறாங்கள். நான் போறேன்.
சந்தனா : அதீஸ், அதீஸ்...
அதிரா : என்னது?
சந்தனா : இமா எங்கேயோ போறாங்க. ஆனால் கேட்டால் குதர்க்கமாகவே பதில் சொல்றாங்க.
அதிரா : இருங்கள். காமரா இருக்கா என்று பார்த்து வரேன். கடவுளே... காமராவையும் காணேல்லை.
சந்தனா : என்னது காமராவும் மிஸ்ஸிங்கா?
இருவரும் வெளியே ஓடுகிறார்கள். அதற்குள் இமா மிஸ்ஸிங்.
அதிரா : சந்தனா, அதான் நான் எப்போதும் சொல்றது இமாவிலை ஒரு கண் வையுங்கோ என்று. இப்ப கோட்டை விட்டுட்டு நிற்கிறீங்க..
நான் எங்கே போய் தேடுவேன். அடுத்து என்ன படங்கள், பதிவு என்று தெரிந்தால் தானே நாங்களும் பதிவுகள் போடலாம்.
************************
ஜெய்லானி: எல்கே, ஏதாவது ஐடியா குடுங்களேன்?
எல்கே : என்னுடைய கோந்து ரெசிப்பி தரவா?
ஜெய்லானி : அது என்னது?
எல்கே : சரி விடுங்க. நேரமாகிறது நான் போகணும்.
ஜெய்லானி : நம்ம அப்பாவி தங்கமணியின் இட்லி படத்தை போட்டு கொஞ்சம் டெரர் குடுக்கலாம். ஆனால் தங்கமணியை ப்ளாக் பக்கமே காணவில்லை.
***********************
அதிரா : சந்து, நீங்கள் காரிலை இந்தப் பக்கம் போய் பாருங்கள். நான் மற்றப் பக்கம் போய் தேடுறேன். இமா இல்லாமல் இன்று வீடு போவதில்லை என்று சபதம் எடுங்கோ.
சந்தனா: ஹிஹி... நான் இன்னும் எல் போர்டு என்பதை மறந்தாச்சா?
அதிரா : ஓ! அது வேறா. சரி நடந்து போய் தேடுங்கோ. சந்து, பொந்து, மலை, காடு எல்லா இடமும் தேட வேண்டும். இந்த முறை கோட்டை விடப்படாது.
இருவரும் எதிர் எதிர் திசையில் ஓடுகிறார்கள்.
இது வரை ஒளிந்து நின்ற இமா வெளியே வருகிறார்.
இமா: அப்பாடா! இரண்டும் போயாச்சு. கொஞ்ச நேரம் நிம்மதியாக ப்ளாக் இல் பதிவுகள் போடலாம்.
ஜெய், எழும்புங்கோ. இந்தாங்கோ எல்லாமே டைப் பண்ணி, படங்கள் அப்லோட் பண்ணியாச்சு. உங்கள் ப்ளாக்கில் போடுங்கோ.
ஜெய்லானி : என்னது? நான் எங்கே இருக்கிறேன்?
இமா : விளையாட்டுப் போதும் எழுந்திருங்கள்.
1 மணி நேரம் கடந்த பின்னர்
இமா : ஜெய், ஏதாவது பின்னூட்டம் வந்திச்சா?
ஜெய்லானி : ம்ம்ம்.. வண்ணத்துப்பூச்சி என்ன சாப்பிடும் என்று யாரோ கேள்வி கேட்டிருந்தார்கள். நான் வாழைப்பழம் என்று பதில்....
இமா : ஜெய், நீங்கள் லூசா? வண்ணாத்துப் பூச்சி அதெல்லாம் சாப்பிடாது. நான் சொல்றதை டைப் பண்ணுங்கோ.
30 நிமிடங்களின் பின்..
இமா : ஜெய், ஏதாவது பின்னூட்டம்.
ஜெய்லானி : இல்லை.
45 நிமிடங்களின் பின்
இமா : ஜெய், ஏதாச்சும் ...
ஜெய்லானி : இல்லை
மறுநாள்
ஜெய்லானியின் ப்ளாக் - முக்கிய அறிவித்தல்.
நான் இனிமே என் ப்ளாக் பக்கமே வர மாட்டேன். என் ப்ளாக்- ஐ காலவரையின்றி மூடுகிறேன்.
நன்றி.
இந்தக் கதையில் வரும் பாத்திரங்கள் யாவும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல.
:P:P:P:P ஜெய்லானி மேல ஏனிந்த கொலை வெறி?
ReplyDelete//ஜெய்லானி: எல்கே, ஏதாவது ஐடியா குடுங்களேன்?
ReplyDeleteஎல்கே : என்னுடைய கோந்து ரெசிப்பி தரவா?//
அவ். என்னோட அடுத்த சமையல் குறிப்பு மட்டும் அல்ல. அதை செஞ்சு உங்களுக்கு ஒரு பார்சல் அனுப்பறேன் இருங்க.
நல்ல இருந்துச்சு உங்க கற்பனை
வானதி அறுசுவையில் உங்கள் நகைச்சுவை கெட்டுகெதர் காமெடியை நினைத்து அடிக்கடி சிரிப்பதுண்டு,இங்கு ப்ளாக்கிலும் ஆரம்பிச்சாச்சா?பாவம் அப்பாவி எல்.கேயையும் விட்டு வைக்கலையா?நல்ல கற்பனை.
ReplyDeleteம்ம்ம்ம்.. நடக்கட்டும் நடக்கட்டும்... நல்லா கலாய்ச்சிருக்கீங்க...
ReplyDeleteஹா..ஹா..வாய் விட்டு சிரித்தேன். நல்ல கறபனை.
ReplyDelete(மனதுக்குள் ) இதை பாத்துட்டு மத்தவங்களும் எதிர் பதிவு போடாம கட்வுளே காப்பாத்துஊஊஊஊஊஊ.
//இமா : ஜெய், நீங்கள் லூசா? வண்ணாத்துப் பூச்சி அதெல்லாம் சாப்பிடாது. நான் சொல்றதை டைப் பண்ணுங்கோ. //
ReplyDeleteஅப்ப அவித்த முட்டைன்னு போட்டிருந்தா ஒரு வேளை ஏதாவது பின்னூட்டம் வந்திருக்கும் ஹி..ஹி..
//இமா : ஜெய், ஏதாவது பின்னூட்டம் வந்திச்சா?
ReplyDeleteஜெய்லானி : ம்ம்ம்.. வண்ணத்துப்பூச்சி என்ன சாப்பிடும் என்று யாரோ கேள்வி கேட்டிருந்தார்கள். நான் வாழைப்பழம் என்று பதில்....
இமா : ஜெய், நீங்கள் லூசா? வண்ணாத்துப் பூச்சி அதெல்லாம் சாப்பிடாது. நான் சொல்றதை டைப் பண்ணுங்கோ.
30 நிமிடங்களின் பின்..
இமா : ஜெய், ஏதாவது பின்னூட்டம்.
ஜெய்லானி : இல்லை.
45 நிமிடங்களின் பின்
இமா : ஜெய், ஏதாச்சும் ...
ஜெய்லானி : இல்லை
மறுநாள்
ஜெய்லானியின் ப்ளாக் - முக்கிய அறிவித்தல்.
நான் இனிமே என் ப்ளாக் பக்கமே வர மாட்டேன். என் ப்ளாக்- ஐ காலவரையின்றி மூடுகிறேன்.
நன்றி.
//இது தான் செம காமடி....நல்லா எழுதி இருக்கின்றிங்க வானதி...வாழ்த்துகள்...
ஆ... கால் வச்ச வனி... உங்கள் கற்பனை வானத்தில காத்தாடியாப் பறக்குதே.... பார்த்ததும் சிரிக்க வச்சிட்டீங்கள்...
ReplyDeleteஇருப்பினும் எங்கட ஜெய்..லானியை இப்படி புளொக்கை மூடும்படி செய்து கதையை முடித்தது நல்லாவே இல்லை, நொந்து நூடில்சாகிடப்போகிறார்:):).
பின்குறிப்பு: சந்து!!! சந்தூஊஊஊஊஊ... இமா கிடைச்சிட்டாவோ? இப்போ சமர் எண்டதால பறவாயில்லை, இருட்டு வருவதுக்குள் கண்டு பிடிச்சிடவேணும்.
எல் எஸ், மிக்க நன்றி.
ReplyDeleteமகி, மிக்க நன்றி.
அநன்யா, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
எல்கே, ம்ம்.. அனுப்புங்கோ. நல்லா இருக்கும் தானே.
மிக்க நன்றி.
ஆசியா அக்கா, எல்கே அப்பாவியா? அப்பாவி தங்கமணி கேட்டால் தன் பெயரில் இருக்கும் அப்பாவியை நீக்கிவிடுவார். அவர் தான் சொன்னார் எல்கே ..அப்பாவி இல்லையாம்.
மிக்க நன்றி.
நாடோடி, மிக்க நன்றி.
ஜெய்லானி, இந்த பதிவை போட்டுட்டு இரவு முழுக்க நித்திரை இல்லை. கடவுளே... இது ஜெய்லானி கண்ணிலை படக் கூடாது என்று.
ReplyDeleteநீங்கள் சிரிச்சேன் என்று சொன்னதும் ... நானும் சிரித்து விட்டேன்.
ம்ம்... முட்டை என்று சொன்னால்.. யாராவது பதில் சொல்லியிருக்க கூடும்.
மிக்க நன்றி.
கீதா, மிக்க நன்றி.
அதீஸ், நீங்கள் சிரித்து விட்டீர்கள். ஆனால் எங்கட இம்ஸ் ஐ நினைத்தாலே எனக்கு கலக்கமாக இருக்கு. என் ப்ளாக்யை மூடி விட்டு எங்காவது காசி, ராமேஸ்வரம், காஷ்மீர்... இப்படி எங்கையாவது போகப் போறேன்.
ReplyDeleteசந்தனாவை சமாளிக்கலாம்.
வருகைக்கு மிக்க நன்றி.
//இருப்பினும் எங்கட ஜெய்..லானியை இப்படி புளொக்கை மூடும்படி செய்து கதையை முடித்தது நல்லாவே இல்லை, நொந்து நூடில்சாகிடப்போகிறார்:):).//
ReplyDeleteபூஸாரே உங்க அன்புக்கு நன்றி..அடுத்த 20 நிமிஷத்தில புதுசா ஒன்னு போட்டுட்டோமில்ல .இதூஊஊஊஊ எப்டி இருக்கு...ஹி...ஹி...
இட்லிய வெச்சு மெரட்டி தான் என் பொழப்பே ஓடுது,.... அதயும் திருடுராங்களே... (நாலு நாளு ஊரு சுத்திட்டு இப்போ தான் வந்து சேந்து இருக்கேன்... அப்படி எல்லாம் சந்தோசப்பட வேண்டாம்... வந்தே தீருவேன்... எப்படி எல்லாரும் நிம்மதியா இருக்கலாம்....)
ReplyDeleteLK கோந்து...ஹா ஹா ஹா...சூப்பர் சூப்பர் சூப்பர் ..... பார்சல் வருதாமே... ஐயோ ஐயோ... இது தான் வேலில போற ஓணானை எடுத்து விட்டுகறதா....ஹா ஹா ஹா
ReplyDelete//இந்தக் கதையில் வரும் பாத்திரங்கள் யாவும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல. //
ReplyDeleteஆமாமா... BBC ல சொன்னாக...
வாணீஈஈஈஈஈஈஈஈஈ ஓடிவாங்கோ.... இமாவைத் தேடப்போன சந்துவையும் துலைச்சிட்டெல்லோ நான் நிற்கிறேன்:(:(... கடவுளே எனக்கு கையும் ஓடல்லே காலும் ஓடல்லே.... அதுசரி யாரோ அவித்த முட்டையாமே... அதையாவது குடுங்கோ... சாப்பிட்டுவிட்டு கொஞ்சம் தென்பாத் தேடலாம்..
ReplyDelete//பூஸாரே உங்க அன்புக்கு நன்றி..அடுத்த 20 நிமிஷத்தில புதுசா ஒன்னு போட்டுட்டோமில்ல .இதூஊஊஊஊ எப்டி இருக்கு...ஹி...ஹி... // கடவுளே ஜெய்..லானி ,,, உது இருக்கட்டும் வயிற்றுவலிக்கு நாட்டுமருந்து உங்கட ரீவியில போடுங்கோ.... இனியும் வெயிட் பண்ணமுடியாமல் இருக்கே....
///இந்தக் கதையில் வரும் பாத்திரங்கள் யாவும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல. // ஆ... இது வேறயா? எப்ப தொடக்கம் இப்பூடி உண்மையெல்லாம் பேசி நல்ல பிள்ளையாகினனீங்கள் வாணீஈஈஈஈ?? அப்போ இதில் வரும் எல்லாம் என்ன ஆவி??? ஈசாசு??? அப்படியோ??? நோ சான்ஸ்ஸ்.. நான் வடிவாக் குனிந்து தடவியும் பார்த்திட்டேன்.. எனக்கு ரண்டுகாலும் நிலத்தில நல்ல ஸ்ரோங்காப் பட்டுக்கொண்டிருக்கு..... ஒரு வேளை ஜெய்..லா..... இல்ல இல்ல நான் ஒண்ணுமே சொல்லவேயில்லை......
ஹாஹ்ஹ்ஹாஆஆஆஆஆஆ... வானதி.. நன்றாக கொண்டு போயிருக்கீங்கள் உங்க நகைச்சுவை கற்பனையை.. ரொம்பவே ரசித்தேன்.. சிரித்தேன்..
ReplyDeleteஅதீஸ்.. நான் கிடைச்சுட்டேன்.. என் எல்போட்டுக் காரிலேயே உங்களையும் ஏத்தி (உங்க மேல இல்ல :) ) கெதியாகத் தேடலாம் வாங்கோ இமாவை.. அவர் எங்கயோ மேலே போயிட்டு இருக்காவாம்.. பின்னாடியே படியேறுவோம் ரெண்டு பேரும்..
//கொசு வளர்ப்பது எப்படி? சுடுதண்ணீர் வைப்பது எப்படி ?//
இப்பூடியெல்லாம் பதிவுகள் போட்டு அசத்தியிருக்கிங்களா ஜெய்லானி? வந்துடறேன்.. படிச்சுட்டு கலாய்ச்சிடலாம்..
//பாவம் அப்பாவி எல்.கேயையும் விட்டு வைக்கலையா/
ReplyDeleteஇதுக்காகவே உங்களுக்கு நான் விருது தரேன் ஆசியா
நீங்க எழுதியதை 5 நிமிட குறும்படமா
ReplyDeleteஎடுத்தா ரொம்ப விறுவிறுப்பாகவும்,
சுவாரஸ்யமாகவும் இருக்கும்
அதுக்காக என்னை ஸ்பான்சர்
ReplyDeleteசெய்ய சொல்ல கூடாது
//பூஸாரே உங்க அன்புக்கு நன்றி..//
ReplyDeleteபூஸார் ஏதோ எனக்கும் ஜெய்லானிக்கும் இடையே பத்த வைக்கிறாப் போல இருக்கு. நீங்கள் வேறு நன்றி சொல்லி, கும்பிடு போடுகிறீர்கள்.
தங்ஸ், உங்கள் இட்லியை வைத்து நானும் கொஞ்ச நாட்கள் ஓட்டலாம் என்று பார்த்தால் சரி வராது போல இருக்கு.
ReplyDeleteம்ம்ம்...BBC லையும் சொன்னாங்களா? அங்கேயும் யாரோ என் வலைப்பூவை பார்கிறாங்க போல இருக்கு.
அதீஸ், என்ன ஜெய்லானியை பே...ய் என்கிறீர்களா? அப்பாடியோ பத்த வைச்சாச்சு..
ReplyDeleteசந்தனா அம்மையார் இமாவின் பக்கம் நின்று ஏதோ நோண்டி நோண்டி கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார்.. இதோ இங்கே வந்து விட்டார்.
சந்தனா, நன்றி. கெதியா போய் பிடிச்சு வாங்கோ. அடடா.. நம்ம ஜெய்லானியின் ப்ளாக் தெரியாதா. நிறைய மிஸ் பண்ணி விட்டீர்கள்.
ReplyDeleteஎல்கே, உங்களை அப்பாவி என்று சொன்னதுக்கு விருதா?? இதெல்லாம் டூ மச்.
ReplyDeleteகவிதா, நல்வரவு. ம்ம்.. குறும்படம். ஜெய்லானி தான் ஹீரோ. அவரே செலவுகளையும் பார்த்துக் கொள்வார்.
ReplyDeleteமிக்க நன்றி.
சந்து... சந்து!!! இமா மேலேயா போறா? அப்படியெண்டால் ஓடிவாங்கோ பின்னால கெதியா ஏறுவம்... இமா என்னா ஸ்பீட்டு.. 1000 படி தாண்டிட்டா போல இருக்கே.. நாங்க இந்த ஸ்பீட்டில போனா சந்து, எங்கட படிப்பு, பதவி, அஸ்தஸ்து, கெளரவம், அழகுவடிவு:), எல்லாம் என்னாவாகிடப்போகுது? மொத்தமும் ஸ்பொயில்ட் ஆகிடாது? கெதி கெதியா ஏறுங்க.. மூச்சு இழுக்கிறமாதிரி, இதயம் பலமா அடிக்கிற மாதிரி இருந்தாலும் வெளியில காட்டிடப்பிடாது ஓக்கை?? அந்த எல்போர்ட்டை எதுக்கு காரில வச்சிட்டு வந்தீங்க? அதைக் கையில பிடிச்சுக்கொண்டு ஏறினால், சனங்கள் பயத்தில வழிவிட்டுத் தருவினமெல்லோ, கெதியா எடுத்திட்டு ஓடியாங்கோ... கடவுளே உதென்ன உது வயிற்றைப் பிடிக்காமல் ஸ்மாட்டா நடவுங்கோ... எங்கட கதையை யாரும் கேட்கமாட்டினம், வாணியும் இப்போ பிரியாணி, யூஸ் இப்படி களவெடுப்பதிலயே குறியா இருப்பதால எங்களைக் கவனிக்க மாட்டா.
ReplyDeleteசரி சந்து படிச்சதும் கிழிச்சிடுங்கோ, இமா இதைப் பார்த்தால் ஆபத்து. எனக்கென்னமோ அவ மலை உச்சியில நின்று படங்கள் எடுக்கப்போறா எண்டுதான் சந்தேகமாய் இருக்கு.... நாங்க யாரு விட்டுடுவோமா?. ஒரு பத்தை, பூச்சி, புழு, பறவை ஒண்டும் விடாமல் எடுத்திடுவம்.... அவ என்ன போடுறா என்பதைப் பார்த்துப் போட்டிடலாம் ஓக்கை??? மெதுவா பேசுங்க....
சுவாரஸ்யமான ஒரு குட்டிக்குறும்படம் பார்த்தது போல இருந்தது......
ReplyDelete//கவிதா, நல்வரவு. ம்ம்.. குறும்படம். ஜெய்லானி தான் ஹீரோ. அவரே செலவுகளையும் பார்த்துக் கொள்வார்.//நீங்க பிரியானி , இட்லி மட்டும் அடுத்த பிளாக்கில சுட்டுட்டு வந்துடுங்கோ போதும் !!
ReplyDelete//அதீஸ், என்ன ஜெய்லானியை பே...ய் என்கிறீர்களா? அப்பாடியோ பத்த வைச்சாச்சு..//
பாவம் பூஸார் , போட்டு குடுத்த ஆயுர்வேதிக் லெமன் ஜூஸால வந்த வேலை இது.
//இப்பூடியெல்லாம் பதிவுகள் போட்டு அசத்தியிருக்கிங்களா ஜெய்லானி? வந்துடறேன்.. படிச்சுட்டு கலாய்ச்சிடலாம்.. //
ReplyDeleteமக்கள் ஊறுக்காவுக்கு வெயிட்டிங் ஆனா அதிஸ் வேனாம் மக்கள் பாவம் விட்டிடுங்கன்னு சொல்றாங்க என்ன செய்யலாம் !!
//மக்கள் ஊறுக்காவுக்கு வெயிட்டிங் ஆனா அதிஸ் வேனாம் மக்கள் பாவம் விட்டிடுங்கன்னு சொல்றாங்க என்ன செய்யலாம் !! /// ஆஆ... என்னாது?? ஊறுகாய் மற்றர் இங்க வரையும் வந்திட்டுதோ? கடவுளே எனக்கு யாராவது தண்ணி தெளித்து அ.கோ.மு தீத்துங்கோ..... மீ பெயிண்டிங்...(இது வேற பெயிண்ட்).
ReplyDelete//எல்கே, உங்களை அப்பாவி என்று சொன்னதுக்கு விருதா??//
ReplyDeleteunmaya solli irukkanga illa athukuthan viruthu :D
//இது வரை ஒளிந்து நின்ற இமா வெளியே வருகிறார்.// ஹாய் அதீஸ்! டிஷ்யூ ப்ளீஸ். ;)
ReplyDeleteஎன்ன எழுதலாம்!!!! ;))
வாணியோட //சேர்ந்து எல்லோருமே நல்லா கதைக்கிறாங்கள்.// ;))
எனக்கு எது இடுகை எது பின்னூட்டம் என்றே விளங்க மாட்டன் எண்டுது வாணீஸ். உங்களோட சேர்ந்து எல்லாரும் குழப்பிப்போட்டாங்கள். ;))
//தவளை வளர்ப்பது எப்படி என்று ஒரு பதிவு// நுணல்தானே? எதுக்கு வாணி அது? ;)
//இமா : அதெல்லாம் நானே எழுதி, போட்டோ எடுத்து தந்துடுவேன். நீங்கள் உங்கள் வலைப்பூவில் போடுங்கள் சரியா?// வாணியம்மா... இது என்ன குழப்படி??? ;)))))
//ஜெய், எழும்புங்கோ. இந்தாங்கோ எல்லாமே டைப் பண்ணி, படங்கள் அப்லோட் பண்ணியாச்சு. உங்கள் ப்ளாக்கில் போடுங்கோ.// பார்க்கிறவங்கள் ஏதோ நான்தான் கொசு வளர்க்கிறதுக்கு டிப்ஸ் டைப் பண்ணிக் குடுத்தன் எண்டு நினைக்கப் போகினம். ;))))
//போகும் போது இப்படி அபசகுனமாக கேட்க கூடாது.// இங்கதான் கொஞ்சம் இடிக்குது. ;)) ஐ நெவர் ஸீ சகுனம்ஸ். ;) அனைத்தும் சுப சகுனமே.
//எனக்கு ஆயிரம் வேலைகள் இருக்கும்.// என்ன? நான் இவ்வளவு நாளும் வராமல் இருந்ததுக்கு நக்கலா? ;) நடத்துங்க.
//அடுத்து என்ன படங்கள், பதிவு என்று தெரிந்தால் தானே நாங்களும் பதிவுகள் போடலாம்.// & //அவ என்ன போடுறா என்பதைப் பார்த்துப் போட்டிடலாம்// ஓ!! அப்பிடியா!! போடுங்கோ, போடுங்கோ. ;))
("பெண்கள்" ;D )
//சந்தனா: ஹிஹி... நான் இன்னும் எல் போர்டு என்பதை மறந்தாச்சா?// ;D
//அதிரா : ஓ! அது வேறா. சரி நடந்து போய் தேடுங்கோ. சந்து, பொந்து... // ;D ;D
//இம்ஸ் ஐ நினைத்தாலே எனக்கு கலக்கமாக இருக்கு.// ஏன்? நானும் சிரித்தேன். ;) குழப்படிப் பிள்ளை. ;))
யாரது, குறும்பட ஐடியாவெல்லாம் குடுக்கிறது!! கர்ர்ர் ;))
//அந்த எல்போர்ட்டை... கையில பிடிச்சுக்கொண்டு ஏறினால், சனங்கள் பயத்தில வழிவிட்டுத் தருவினமெல்லோ,// ;)
இவ்வளவு நாளைக்கும் ஒரு செல்லப் பிராணியும் எனக்கு க்ளூ குடுக்காமல் சிரிச்சுக் கொண்டு இருந்திருக்கிறீங்கள் என்ன? ;) பொல்லாத கூட்டம் எல்லாம். ;) அடி தரவேணும் எல்லாருக்கும். ;)
ஹிஹி
ReplyDeleteசந்தூஊஊஊஊஊஉ ஓடிவாங்கோ நான் பிடிச்சிட்டேன்...
ReplyDelete............................
//எல்கே, உங்களை அப்பாவி என்று சொன்னதுக்கு விருதா??//
unmaya solli irukkanga illa athukuthan viruthu :D///
எல் கே ஜி எண்டாலே எல்லோரும் அங்கே அப்பாவிகள்தானே:):)...... வாணீஈஈஈஈஈஈஈ!!! என் வாய்தான் நேக்கு எதிரி.... நான் இனி இப்பக்கம் தலை வைத்தும் படுக்க மாட்டேன்.... அடுத்த தலைப்பு வரும்வரை சீயா... மீயா..... எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
வணக்கம்
ReplyDeleteநண்பர்களே
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்
www.thalaivan.com
//எல் கே ஜி எண்டாலே எல்லோரும் அங்கே அப்பாவிகள்தானே:)///
ReplyDeleteungalukkum award undu
இமா,
ReplyDelete//இம்ஸ் ஐ நினைத்தாலே எனக்கு கலக்கமாக இருக்கு.// ஏன்? நானும் சிரித்தேன். ;) குழப்படிப் பிள்ளை. ;)) //
என் வாழ்வில் நான் யாரையும் ( அதீஸ், ஜெய்லானி, சந்தனா போன்ற ஒரு சிலரை தவிர ) கிண்டல் பண்ணியதில்லை. அதுவும் எங்கட இமா...எவ்வளவு சீனியர். அதான் பயம்.
சரி. இனிமேல் பிழை விடவில்லை. அடிக்க வேண்டாம்.
ஜலீலா அக்கா, நன்றி.
ReplyDeleteஅதீஸ், இனிமேல் பூச்சி, பூரான், பூஸ் இப்படி திரியாமல் எல்கேஜி யை அப்பாவி என்று சொல்லுங்கோ போதும். விருது வரும்.
நானும் சொல்றேன்.....எல்கே.... ரொம்ப.. மிகமிகமிக அப்பாவி.
//LK said... //பாவம் அப்பாவி எல்.கேயையும் விட்டு வைக்கலையா/
ReplyDeleteஇதுக்காகவே உங்களுக்கு நான் விருது தரேன் ஆசியா//
சாரே... அவிக சொன்னது... அப்பாவியையும் LKவயும்னு (என்னையும் உங்களையும்)....உங்கள அப்பாவின்னு இல்ல.... மனசிலாயிந்தா....(இது என்னமோ நிதயானந்தா மாதிரி இருக்கே...ச்சே...)
//Vanathy said - நானும் சொல்றேன்.....எல்கே.... ரொம்ப.. மிகமிகமிக அப்பாவி. //
வானதி, என்ன ஆட்டோ வரும்...ஆள் வரும் மிரட்டல் வந்ததா LK கிட்ட இருந்து.. இதுக்கெல்லாம் பயந்து பொய் சாட்சி வேண்டாம் அம்மணி... நல்லதுக்கு தான் துணை போகணும்... அதாவது என்னை போல் நல்லவங்களுக்கு....ரைட்ஓ?
வாணி.. சான்ஸ்சே இல்லப்பா.. செம செம காமெடி..
ReplyDeleteபின்னி பெடல் எடுத்துட்டீங்க..
ரொம்ப என்ஜாய் பண்ணி படிச்சேன்.. :D :D :D