Saturday, April 2, 2011

Sweet potato pie






கிழங்கு ( sweet potatoes )- 5
சீனி - 3/4 கப்
1/2 டீஸ்பூன் - உப்பு
சினமன் தூள் - 1 டீஸ்பூன்
காய்ந்த ஜிஞ்சர் தூள் ( dry ginger powder ) - 1/2 டீஸ் பூன்
கராம்பு தூள் - 1/4 டீஸ் பூன்
முட்டை - 2
கார்னேஷன் பால் - 12 அவுன்ஸ் ( 1 1/2 கப் )
1 அன் பேக்ட் பை ஷெல் ( 9" )


அவனை 350 ப்ரீ ஹீட் செய்யவும். கிழங்குகளை ட்ரேயில் வைத்து, அவனில் 40 நிமிடங்கள் பேக் செய்யவும். முள்ளுக் கரண்டியால் குத்தி பார்த்துக் கொள்ளவும். கிழங்கு நன்கு வெந்திருக்க வேண்டும். பேக் செய்த கிழங்குகளை நன்கு ஆற விடவும். பின்னர் தோல் நீக்கி, ஃபுட் பிராஸஸரில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.

சீனி, உப்பு, மற்றும் பொடி வகைகளை கலந்து வைக்கவும்.
முட்டைகளை நன்கு அடிக்கவும். இதனுடன் கூழாக்கிய கிழங்கு ( 15 oz ) சேர்க்கவும்.
பின்னர் கார்னேஷன் பால் சேர்க்கவும். சீனி கலவையை சிறிது சிறிதாக கொட்டி நன்கு கலக்கவும்.

425 F ப்ரீ ஹீட் செய்யப்பட்ட அவனில் இந்தக் கலவையை 15 நிமிடங்கள் பேக் செய்யவும். பிறகு 350 டிகிரி F க்கு குறைத்து 40 - 50 நிமிடங்கள் பேக் செய்யவும். நடுவில் வெந்து விட்டதா என்று தெரிந்து கொள்ள கத்தியால் குத்திப் பார்க்கவும். வேகவில்லை எனில் மேலும் சில நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.

குறிப்பு: இந்த ரெசிப்பி Libby's pumpkin can இலிருக்கும் ரெசிப்பி. அவர்கள் பம்கின் ஃபில்லிங் பாவித்து செய்திருந்தார்கள். நான் sweet potato ஃபில்லிங் வைச்சு செய்தேன். பை ஷெல் கடையில் வாங்கியது.







Thanks : Libby's

26 comments:

  1. வணக்கம் சகோதரம், வாய்க்கு ருசியாக ஒரு உணவுக் குறிப்புடன் வந்திருக்கிறீர்கள். பை என்பது நம்ம ஊரு றோல் மாதிரி ஒரு சாப்பாடா?

    ReplyDelete
  2. இது றோல் போல இல்லை. கேக் போல இருக்கும். நடுவில் கொஞ்சம் வட்டிலப்பம் போல இருக்கும்.

    ReplyDelete
  3. நன்றிகள் சகோ. அம்மாவிடம் உங்களின் றிசிப்பையைக் கொடுத்து செய்து பார்க்கச் சொல்கிறேன்.

    ReplyDelete
  4. ஐயய்யோ வடை போச்சே மக்கா...

    ReplyDelete
  5. எனக்கு பிரியாணி போதும்....அப்புறமா ஸ்வீட் சாப்புடுரேனே....

    ReplyDelete
  6. ம்ம்ம்ம் நமக்கு குடுத்து வச்சது அம்புட்டுதேன்...இதெல்லாம் பண்ணி தர நாதி இல்லை. ஹோட்டல் சாப்பாடு ஒட்டகம் பிரியாணிதான்....
    சரி சரி மனோ விடு விடு அழாதே பப்ளிக் பப்ளிக்...

    ReplyDelete
  7. நல்லா வந்திருக்கே.

    அதுசரி எதுக்கு 2 days ago என சொல்லி கீழே போயிருக்கு தலைப்பூஊஊஊஊஊஊஊ

    ReplyDelete
  8. இதெல்லாம் செஞ்சு கொடுங்கன்னு வீட்ல சொன்னா கல்லை கொண்டு அடிக்கிறாங்க.. இருக்கிற வேலையில இது வேறயான்னு.. அதனால நீங்க இப்படி பதிவு போடுறத விட்டுட்டு அத சமைச்சு.. எனக்கு அனுப்பலாமே.!! கொடுப்பீர்கள் என்னும் நம்பிக்கையில் ஓட்டுப்போட்டுட்டு போறேன்..

    ReplyDelete
  9. உருளைப் பிடிக்கும். ஆனால் முட்டை குடுத்து இருக்கீங்க :(

    ReplyDelete
  10. Thanksgiving Day treat. Yummy!

    ReplyDelete
  11. சக்கரைவள்ளிக்கிழங்கில் செய்திருப்பது நல்லாயிருக்கு...

    ReplyDelete
  12. புதுசாக இருக்கு வானதி,அப்படியே ஆளுக்கொரு துண்டு அனுப்பிடுங்க..அருமை.வட்டிலப்பம் போலா?

    ReplyDelete
  13. வான்ஸ்.. அப்படியே கடையில பார்ப்பது போல இருக்கு! இதுக்கும்.. ஆஆ.. பாத்துட்டே போறேன்.. எங்க வீட்டுக்காரம்மா (லேன்ட்லார்ட்) ஒரு நாளைக்கு ஆப்பிள் பை செய்யச் சொல்லித் தாறேன்னு சொல்லியிருக்காங்க.. செய்து பழகிட்டா அடுத்து இது தான்..

    ReplyDelete
  14. வானதி,நம்பினா நம்புங்க,இங்கே வந்து இத்தனை நாள்ல நான் இந்த Pie வெரைட்டி எதையுமே டேஸ்ட் பண்ணியதே இல்ல! :) ஸ்வீட் பொட்டடோ ஃபில்லிங் புதுசா இருக்கு..போட்டோவும் சூப்பரா இருக்கு.

    ReplyDelete
  15. வாவ்...வானதி...சூப்பர்பாக ரெஸிபி...ரொமப் சூப்பராக இருக்கு..

    எனக்கு ரொம்ப பிடித்த பை...

    ReplyDelete
  16. மகி..கண்டிப்பாக இனிமேல் மிஸ் பண்ணாம செய்து பாருங்க,,,பை ரொம்ப நல்லா இருக்கும்...

    ReplyDelete
  17. பகிர்வுக்கு நன்றி வானதி

    ReplyDelete
  18. எல்லாமே சூப்பரா தான் இருக்கு. இங்கையும் கொஞ்சம் பார்சல் அனுப்புனா நல்லா இருக்கும்.


    வீட்டில் நீங்கள் குழந்தைகள் நலமா வாணி?

    ReplyDelete
  19. சர்க்கரை வள்ளிக் கிழங்கில் ஒரு அருமையான குறிப்பு வானதி! வித்தியாசமான குறிப்பாகவும் இருக்கிறது! புகைப்படமும் அழகு!

    ReplyDelete
  20. ஃஃஃஃ பை ஷெல் கடையில் வாங்கியது.ஃஃஃ

    அக்கா அப்ப நான் இதை எங்கே வாங்கறது... ஹ..ஹ...

    ReplyDelete
  21. பாத்தாலே சாப்பிடனும்போல தோணுது.. செஞ்சு பாக்க சொல்லணும்.. வீட்ல..

    ReplyDelete
  22. கருத்துக்கள் தெரிவிச்ச எல்லோருக்கும் நன்றி கலந்த அன்பு.

    ReplyDelete
  23. This looks delicious.... Wonderful blog ...!!

    ReplyDelete
  24. மிக அருமை வானதி

    ReplyDelete
  25. சீனி கிழங்கில் அருமையான ரெசிபி.வானதி மிக அருமை..

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!