ஜப்பானில் வந்த நிலநடுக்கம், சுனாமி பற்றி எல்லோருக்கும் தெரியும். ஜப்பானில் ஒரு மூதாட்டி ( வயது 70 க்கு மேல் ) சுனாமி சைரன் கேட்க தொடங்கியதும் வேகமாக சைக்கிளில் மிதிக்க ஆரம்பித்தாராம். இவர் குடியிருந்த வீடு தண்ணீரோடு போய் விட, இவர் மட்டும் சைக்கிளை மிதிச்ச மிதியில் தப்பி பிழைத்து பாதுகாப்பான இடத்திற்கு போய் சேர்ந்து விட்டார். இப்போது அரசாங்கம் வழங்கிய ஷெல்டரில் பாதுகாப்பாக இருந்தாலும் எதிர்காலம் பற்றிய பயம் இவர் கண்களில் தெரிந்தது. இவர் ஒரு விவசாயி. தோட்டத்தில் கடுமையாக வேலை செய்ததால் இவருக்கு இந்த உடல் தைரியம், மன தைரியம் இயற்கையாகவே அமைந்திருக்கும் போல. இரண்டு பிள்ளைகள் இருந்தாலும் அவர்களுக்கு தொல்லையாக இல்லாமல் தனித்து வாழ்ந்து வந்தவர் கண்களில் வெறுமை தெரிய, இனிமேல் என்ன செய்யப் போகிறேனோ தெரியவில்லை என்றார் கலக்கத்துடன்.
***********************
சமீபத்தில் ஒரு சேர்வே ( survey ) எடுத்தார்களாம், ஆண்களா பெண்களா வேலைகளை ஒழுங்கா செய்து முடிப்பது, நேர்த்தியாக செய்வது இப்படி பல விடயங்கள் ஆராய்ச்சி செய்யப்பட்டன. முடிவு என்னவென்று உங்களுக்கு/எல்லோருக்கும் தெரியுமே! எடுத்த வேலைகளை செய்து முடிப்பதில் பெண்கள் கில்லாடிகள் என்பது தான் முடிவாம்.
உதாரணமாக, இடியோடு கூடிய மழை வரப் போகிறது என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் கதறினால் பெண்கள் எச்சரிக்கையாக இருந்து கொள்வார்களாம். ஆனால், ஆண்கள் கூரை மீது ஏதாவது ஃபிக்ஸ் பண்ணப் போறேன்னு ( கூரையில் ) ஏறி நிற்பார்களாம் அல்லது golf விளையாடப் போறேன்னு கிளம்பி விடுவார்களாம்.
இதுக்கு எல்லாம் எதுக்கு survey. எங்களை கேட்டா நாங்களே சொல்லியிருப்போமே!!!!
**********************
ஒரு கிழிந்த டாலர் நோட்டு. என் ஆ.காரர் தலையில் யாரோ கட்டி விட்டார்கள். ஒரு ஓரமா கிழிச்சிருந்தா கூட பரவாயில்லை. 1/8 பகுதி மிஸ்ஸிங். என் ஆ.காரர் சொன்னார் இதை இனிமேல் பாவிக்க முடியாது தூக்கி கடாசிட வேண்டியது தான். அவர் சொல்றார் என்பதற்காக கடாசிட முடியுமா? யாசிப்பவர்களுக்கு குடுக்கலாம். ஆனால் குடுத்தா ஒழுங்கா, நல்ல நோட்டா குடுக்கணும் என்பது எங்கள் பாலிஸி. இரண்டு நாள் டைம் குடுங்க யார் தலையிலாவது கட்டிட்டு தான் மறு வேலை என்று சபதம் எடுத்தேன். ஏதோ ஒரு பொருள் வாங்கிய பின்னர் நோட்டினை மடித்து குடுத்தேன். ஆனால், கடைக்காரர் ஒரு பார்வை பார்த்திட்டு திரும்ப தந்து விட்டார். அங்கேயே நின்றால் அடித்து விடுவாரோ என்று பயத்தில் வந்து விட்டேன்.
நேற்று கடைக்கு போனேன். இங்கே சூப்பர் மார்க்கெட்டில் பொருள்கள் வாங்கிய பின்னர் நாங்களே ஸ்கான் பண்ணி, பில் போட்டு வரக் கூடிய ஷெல்ப் செக் அவுட் ( self check out ) வசதியும் இருக்கு. இதை விட்டா வேறு சந்தர்ப்பம் வராது என்று அந்த டாலர் நோட்டை உள்ளே தள்ளி விட்டேன். மெஸின் அதை வெளியே துப்பிவிட்டது. நான் விடுவேனோ பார் என்று மீண்டும் கிழிஞ்ச பக்கம் முதல் போகும்படி உள்ளே தள்ளினேன். குறைஞ்சது 2 நிமிடங்கள் மெஸின் மவுனம் சாதிச்சது. சரி! காசு அவ்வளவு தான் என்று எண்ணிக் கொண்டேன். சில நிமிடங்களின் பின்னர் பச்சை சிக்னல் வந்தது. மெஸின் வேறு வழி இல்லாமல் என் காசை எடுத்துக் கொண்டதன் அடையாளம் அது. இனி மெஸினின் சாமர்த்தியம் அதை வேறு யாராவது தலையில் கட்டுவது.
******************
கிழிந்த நோட்டை இப்படி மாற்றுவது தவறு இல்லையா ??
ReplyDeleteமூன்று பதிவுகளும் வித்தியாசமானவைகளாக
ReplyDeleteரசித்துப் படிக்கும்படியாக இருந்தன
அந்தப் பாட்டியின் படமும் பார்க்கும்படி
போட்டிருக்கலாமோ எனத் தோன்றியது
நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்
என் காசை எடுத்துக் கொண்டதன் அடையாளம் அது. இனி மெஸினின் சாமர்த்தியம் அதை வேறு யாராவது தலையில் கட்டுவது.
ReplyDelete//
நீங்க ரொம்ப சமத்து...
முதல் ஆச்சரியம் மனதை தொட்டது,ஜப்பானிய பெண்களின் ஆயுள் சராசரியே 83 வயது என்று ஒரு ஆய்வு சொல்லுது,அதற்கு அவர்கள் உணவு முறையும் உழைப்புமே காரணம்.
ReplyDeleteஇரண்டாவது தெரிந்தது தானே!
மூன்றாவது,ஆகா என்னே உங்க சாமார்த்தியம்.
வித்தியாசமான பதிவு. நன்றாக இருந்தது வானதி.
ReplyDeleteபெண்களின் பெருமையை எப்போ புரிஞ்சிக்கப் போறாங்களோ?!!
ReplyDeleteஅந்த மாலுக்கு இப்போதைக்குப் போகாதீங்க - மெஷின் உங்களுக்காகக் காத்திருக்கப் போவுது!! :))
வானதி சாமர்திய காரங்கதான். மிஷினையே கிழிஞ்ச் நோட்டு வாங்க வச்சுட்டீங்களே?
ReplyDeleteமெசினின் சாமர்த்தியம்.இருங்க அடுத்த தடவை நீங்க போகும் போது உங்களுக்கே தரப் போகுது.
ReplyDelete//இதுக்கு எல்லாம் எதுக்கு survey. எங்களை கேட்டா நாங்களே சொல்லியிருப்போமே!!!!// ;)))))))))
ReplyDelete//இனி மெஸினின் சாமர்த்தியம்// ம். கெட்டிக்காரிதான் வாணி. ;))
உங்களுக்கு/எல்லோருக்கும் தெரியுமே! எடுத்த வேலைகளை செய்து முடிப்பதில் பெண்கள் கில்லாடிகள் என்பது தான் முடிவாம்///
ReplyDeleteஹீ..ஹீ..ஹீ... வேலைகளை முடிப்பதில மட்டும்தானோ?:))).
நல்லவேளை நீங்க காசை உள்ளே தள்ளிட்டீங்க, நேற்று நான் உப்புடித்தான் செல்வ் செக்கவுட் செய்தேன், ஏற்கனவே pay பண்ணிய ஒரு பொருளும் basket il இருந்தது, அதை மெஷினில் காட்டத்தேவையில்லைத்தானே, அதனால் தூக்கி மறுபக்கம் bag il போட்டேன், machine சொல்லத் தொடங்கிட்டுது ~செக் பண்ணாமல் ஏதோ வைத்தாய், அதை முதலில் வெளியே எடு” என, அதை வெளியே எடுத்தபின்புதான் தன் வேலையைத் தொடர்ந்தது..... அப்படிப்பட்ட மெஷினை ஏமாத்திப்போட்டீங்களோ? கில்லாடிதான்:)))).(ஏன் bankஇல் கொடுத்து மாத்தலாமே?)).
ஆச்சரியமான தகவல்கள் பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteஉண்மையில் அந்த மூதாட்டியின் தைரியமும் மனோபலமும் ஆச்சர்யம் என்றால் அவரின் எதிர் கால ம்மிகவும் கேள்விக்குறியதுதான்
ReplyDeleteஎல்கே, யாரோ என் தலையில் கட்டியதை மீண்டும் யாரிடமோ குடுத்தாச்சு. இதில் என்ன தவறு இருக்கு?????
ReplyDeleteThanks, LK.
உங்கள் சாமர்த்தியம் சூப்பர்ர்!!
ReplyDeleteவானதி என்றால் சும்மாவா என்ன...எவ்வளவு சாமர்த்தியம்...இப்படி இருந்தால் நாடு நல்லா இருக்குமே...
ReplyDelete//யாரோ என் தலையில் கட்டியதை மீண்டும் யாரிடமோ குடுத்தாச்சு. //
ReplyDeleteதவறு என்று எண்ணுகிறேன் . முறையாய் வங்கியின் மூலம் திருப்பி கொடுத்து இருக்கலாம். அங்கே என்ன நடைமுறை என்றுத் தெரியாது .
தவறாக இருந்தால் மன்னிக்கவும்
எல்கே, முன்னாடி சொல்லியது போல தவறு இல்லை. இப்ப கூட 2 கிழிந்த நோட்டுகள் என்னிடம் இருக்கு. அதை என் தலையில் கட்டியவன் கொஞ்சம் யோசித்து இருக்கலாம். இதுக்காக போய் வங்கியில் 1/2 மணி நேரம் செலவு செய்வது மடத்தனம். புரிந்து கொண்டீர்கள் என்று நினைக்கிறேன்.
ReplyDeleteஆச்சரியங்கள், ஆச்சரியங்களாக! :)
ReplyDeleteரமணி அண்ணா, போட்டிருக்கலாம். தோணவில்லை. டிவியில் காட்டும்போது பார்த்தது. தேடிப்பார்க்கணும்.
ReplyDeleteமிக்க நன்றி.
சிவா, இதில் சமர்த்து ஒண்ணுமே இல்லை. இப்படி நிறைய நோட்டுகள் என்னிடம் வந்து, நிறைய கஷ்டப்பட்டாச்சு. அதான் இந்த முறை இப்படி செய்தேன்.
மிக்க நன்றி.
ஆசியா அக்கா, உண்மை தான். அங்கு வயதானவர்கள் அதிக நாட்கள் உயிர் வாழ்கிறார்கள். அவர்களின் உணவு முறையும் ஒரு காரணம்,
மிக்க நன்றி.
புவனேஸ்வரி, மிக்க நன்றி.
ReplyDeleteமாதவி, போகாவிட்டாலும் ஏதாவது ஒரு வழியில் வந்து சேர்ந்திட்டே இருக்கு.
மிக்க நன்றி.
கோமு, மிக்க நன்றி.
அமுதா, தந்தாலும் பரவாயில்லை. ஹிஹி...
மிக்க நன்றி.
இம்ஸ், மிக்க நன்றி.
அதீஸ், இப்படி எங்கள் பக்கமே பந்தை திருப்பி அடிக்க கூடாதூ. ஓக்கை.
ReplyDeleteமெஸின் ஸ்மார்ட் தான் யார் இல்லையென்றா??
வங்கியில் போய் வேலை மெனக்கெட வேண்டும். இங்கு வங்கியில் ஏற்கனவே கூட்டம் அலை மோதும்.
மிக்க நன்றி.
பிரஷா, மிக்க நன்றி.
லஷ்மி ஆன்டி, உண்மைதான். மிக்க நன்றி.
மேனகா, மிக்க நன்றி.
கீதா, மிக்க நன்றி.
பாலாஜி, மிக்க நன்றி.
ReplyDeleteநல்ல பதிவு.. அந்த நோட்டு விவகாரம் சூப்பர்.
ReplyDeleteஆச்சரியங்கள் நல்லா இருக்கு வானதி!:)
ReplyDeleteமுதல் செய்தி :((
ReplyDeleteஇரண்டாவது.. ஹிஹி.. :) எங்க வீட்டுல அப்படியே நேரெதிர்.. ஆனா நான் பார்க்கும் பெண்கள் உஷாராகத் தான் இருக்காங்க..
//ஆனால், ஆண்கள் கூரை மீது ஏதாவது ஃபிக்ஸ் பண்ணப் போறேன்னு ( கூரையில் ) ஏறி நிற்பார்களாம் அல்லது golf விளையாடப் போறேன்னு கிளம்பி விடுவார்களாம்.//
இடி விழும் போது தான் இதையெல்லாம் செய்வாங்களா :))))))))
மூன்று.. அப்பாவி மெஷின இப்படி ஏமாத்தினத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன் :))
சாமர்த்தியம் சூப்பர் வானதி
ReplyDeleteATM மிஷின் கிளிஞ்ச நோட்டை வாங்குறது இப்ப தான் முதல் தடவையா கேக்குறேன் . லேசா ஓரம் மடங்கி இருந்தாலும் வெளியே துப்பிடும் .அதுப்போல ரொம்ப பழைய நோட்டானாலும் அப்படிதான் :-)
ReplyDelete//மெஸின் வேறு வழி இல்லாமல் என் காசை எடுத்துக் கொண்டதன் அடையாளம் அது. இனி மெஸினின் சாமர்த்தியம் அதை வேறு யாராவது தலையில் கட்டுவது.
ReplyDelete//உங்கள் சாமர்த்தியத்தை மெச்சினேன் வானதி.
// 1/8 பகுதி மிஸ்ஸிங். //
ReplyDeleteஇனிமேல் 7/8 பகுதி மிஸ் ஆனா கூட அதை நீங்கள் ஏடிஎம் மெஷினை ஏமாற்றி விடலாம்...
என்னா வில்லித்தனம்!!?? (சும்மா டமாசு...)
Oh!
ReplyDeletevery nice write up dear.
I remember my favorite Ponnien selvan naval while reading your name.
Such a sweet name.
viji