Friday, September 17, 2010
எங்கெங்கு காணிணும்...
நாங்கள் தற்போது இருக்கிற வீட்டிற்கு குடிவந்தபோது தோட்டத்தினை அழகா மாற்றி, சில பூச்செடிகள் வைத்து சீராக்கினார் ஒரு தோட்டக்காரன். பழைய மண்ணை தோண்டி எடுத்து, கற்களை நீக்கி, ஒரு லேயராக மக்கும் தன்மையுடைய ஒரு ஷீட் விரித்து, மேலே மண் பரவி, பார்க்க அழகாக இருந்தது. பழைய செடிகளைப் பிடுங்கி எறியும் போது ஒரு மின்ட் செடியும் இருப்பதைக் காட்டினார் தோட்ட வேலைகள் செய்தவர். எனக்கு தலைகால் புரியாத மகிழ்ச்சி. அதை அப்படியே விட்டுவிடுங்கள் என்று என் ஆ.காரரும் சொன்னார். தோட்டவேலைகள் செய்தவரும் அப்படியே அந்த மின்ட் செடியை விட்டு விட்டார். நான் தினமுன் போய் பார்ப்பேன். ஆனால், பெரிதாக வளர்ச்சி இல்லாமல் ஏனோ வாடிப்போய் காட்சி தந்தது.
வின்டர் காலம் வந்தது. நானும் இனிமேல் மின்ட் செடி வராது என்று நினைத்துக் கொண்டேன். வின்டர் முடிந்து, வசந்தகாலம் வர, மின்ட் செடியும் துளிர் விட்டு, அழகா குட்டிச் செடியாக வெளிவந்தது.
ஒரு இடத்தில் இருந்த செடி பரபரவென எல்லா இடமும் பரவ ஆரம்பித்தது. என் கணவருக்கு ஏனோ தெரியவில்லை இந்த மின்ட் செடிகள் பரவியதும் பிடிக்கவில்லை. பொழுது போகாத நேரம் தோட்டத்திற்குப் போய் ஒரு செடியை விட்டு, மீதி எல்லாவற்றையும் பிடுங்கி எறிந்து விடுவார். பிடுங்கிய செடிகளை அக்கம் பக்கம் இருப்பவர்கள் தொடக்கத்தில் எடுத்துச் சென்றார்கள். ஒவ்வொரு வருடமும் அதற்கு முந்திய வருடத்தை விட புதினா எங்கும் வேரோடி நிறையச் செடிகள் புதிது புதிதாக வளர ஆரம்பித்தன. மற்றச் செடிகளை வளர விடாமல் எங்கும் ஒரே புதினா மயம். என் கணவர் எரிச்சலுடன் எல்லாச் செடிகளையும் வேரோடு பிடுங்கி எறிந்து விட்டாதாக வெற்றிச் சிரிப்பு சிரித்தார். ஆனால், மீண்டும் எங்கும் புதினா மயம்.
என் ஆ.காரர் எவ்வளவு முயற்சி செய்தும் இந்த புதினா செடிகளை அழிக்க முடியாமல் திண்டாடிப் போனார். ஏஸியன் சூப்பர் மார்கெட்டில் சும்மா 5 இணுக்குகள் வைச்சு, 2 டாலர்களுக்கு விற்பார்கள். இப்படி கொள்ளை அடிக்கிறார்களே என்று நினைப்பேன்.
ஒரு முறை பிரியாணி செய்யும் போது புதினாவை நிறையச் சேர்த்து விட்டேன். என் கணவருக்கு இந்த புதினா டேஸ்ட் பிடிப்பதில்லை. எரிச்சல் ஒரு பக்கம் வந்தாலும், பிரியாணியை விட மனமில்லாம ல் சாப்பிட்டு முடித்தார். மீண்டும் புதினா செடிகளுக்கு கஷ்டகாலம் தொடங்கியது.
நான் ஒரு சூப்பர் ஐடியா சொன்னேன் என் ஆ.காரரிடம். அதாவது, இந்த புதினா இலைகளை மார்க்கெட்டில் கொண்டு போய் விற்பனை செய்தால் .... நான் முடிக்கும் முன்பே என் கணவர் சொன்னார்.
கொண்டு போய் விற்று, வரும் லாபத்தை நீங்கள் மூவரும்( என்னையும் என் பிள்ளைகளையும் ) பங்கு போட்டுக் கொள்ளுங்கள். எனக்கு ஒரு சதம் கூட வேணாம் என்று சொல்லி விட்டு, புதினா செடிகளைப் பிடுங்க சென்று விட்டார்.
புதினாக்கு கஸ்டமர் பிடிக்க கடை கடையா ஏறி இறங்கணும், சுத்தமா கழுவணும், அதற்குரிய தட்டுகளில் வைத்து, பாலித்தீன் கடதாசி சுற்றி, விலை நிர்ணயம் செய்து... இதெல்லாம் தேவையா என்று உள்மனம் சொன்னது.
கணவர் பிடுங்கி எறிந்த புதினா செடிகளை பக்கத்து வீட்டுக்காரருக்கு குடுக்கலாம் என்று போனேன். அவர் கதவினை திறந்து கூட பார்க்காமல் எனக்கு வேண்டவே வேண்டாம் என்று சவுன்ட் விட்டார். என் கணவர் ஆவேசமாக புதினா செடிகளை பிடுங்கி எறிந்ததை கவனித்து இருக்க வேண்டும் இந்த ஆசாமி. அல்லாத்தையும் நீயே வைச்சுக்க என்று பக்கத்து வீட்டு வாண்டு சொன்னது. ஓசியில் ஒரு பொருளைக் குடுத்தால் அதன் மதிப்பே தெரியாது அல்லவா!
என் பிஸினஸை இங்கு ப்ளாக்கில் இருந்தே ஆரம்பிக்கலாம் என்று ஒரு யோசனை தோன்றியது. புதினா வேண்டும் என்பவர்கள் கையை தூக்குங்க. அப்படியே செக் புத்தகத்தை எடுத்து, ஒரு 20 டாலர்களுக்கு ஒரு செக் எழுதி, என் அட்ரஸுக்கு அனுப்பி வைங்க. பாம்பு, கத்தரிக்காயெல்லாம் அனுப்ப வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
Labels:Tamil Short Stories
நகைச்சுவை பதிவு
Subscribe to:
Post Comments (Atom)
எனக்கு ஒரு பார்சல்
ReplyDeleteகையை தூக்கிட்டேன்..... அட்ரஸ் கொடுங்க! :-)
ReplyDeleteஏன் வானதி என் வயித்தெரிச்சலை கிளப்பறீங்க :(. செழித்து தழைத்து வளர்ந்த என் செல்ல புதினா இப்போ வளரவே மாட்டேங்குதுன்னு நானே கவலையா உட்கார்ந்திருக்கேன். நீங்க என்னடான்னா வெட்டி தூக்கி எரியறதா சொல்றீங்க. சரி சரி சீக்கிரமா ஒருகிலோ புதினா பார்சல் பண்ணுங்க. என்னது காசா...எல்லாம் வரும் வரும் கத்திரிக்காயோட :)
ReplyDeleteசெக் அனுப்பிட்டேன் வானதி! (Bounce ஆயிடுச்சுன்னு கம்ப்ளெயின்ட் பண்ணப்படாது,இப்பவே சொல்லிட்டேன்)..எங்க வீட்டுக்காரருக்கு புதினான்னா ரொம்ப பிடிக்கும்.புதினா சேர்க்காம பிரியாணியே செய்யக்கூடாது வீட்டுல!:)
ReplyDeleteசரி,சரி..ஃபெடெக்ஸ்-க்கு வெயிட் பண்ணிட்டு, லைப்ரரி போகாம அவ்வளவு ஏன் மெய்ல் பாக்ஸ் செக் பண்ணக்கூடப்போகாம வீட்டுலயேஏஏஏஏஏஏ இருக்கேன்.புதினா-வ சீக்கிரமா அனுப்புங்க!!
ஓசியிலே கிடைக்கறதுன்னு புதினா தோட்டத்தையே பிரியாணியில் அள்ளிக்கொட்டினால் இப்படித்தான் ஆத்துக்காரர் பண்ணுவார்.
ReplyDeleteஒரு வேளை ஆ.காரருக்கு கத்திரிக்காய் பிடிக்கும் என்பதால் அவர் தூங்கும் போது அவருக்கு பிடிக்காத புதினாவை யாரோ நட்டு வைக்கிறார்கள் (ஒரு வேளை 20 டாலருக்காக கூட இருக்கலாம்)
ReplyDeleteஅந்த 20 இல் 2 பாம்பு படம் எடுத்த மாதிரிதானே இருக்கு 20 டாலர்தான் வேண்டுமா யோசித்து சொல்லுங்கோ:)))
புதினாவை காய வச்சி பவுடராக்கி எனக்கு பார்ஸல் பண்ணுங்க .. இருபது என்ன இருநூரே தரேன்.. சந்தோஷமா...!! :-)
ReplyDeleteஒரு ஐடியா வாணி.. இப்படி செய்தா என்ன? கத்திரிக்கா கூட மின்ட் போட்டு ஒரு கறி பண்ணிப் பாருங்க. :))
ReplyDeleteஎனக்கு மின்ட் ரொம்பப் பிடிக்கும்.. ஹூம்.. கொடுத்து வைக்கல..
ஐ பொதினா எனக்கு ரெம்ப பிடிக்கும்... நான் கை தூக்கிட்டேன்...ஆனா என்கிட்ட 20 டாலர் லேது... வாணி நான் ஒரு ஐடியா சொல்லட்டுமா... நான் எதாச்சும் சமைச்சு தர்றேன்... அதுக்கு பதிலா பொதினா... பண்டமாற்று முறை... ஹொவ் இஸ் இட்? (ஹி ஹி ஹி... திட்டரதுன்னா தனியா ஈமெயில் பண்ணுங்க... பப்ளிக்ஆ திட்டறது சரி இல்ல சொல்லிட்டேன்...)
ReplyDeleteஎனக்கு ஒரு பார்சல் புதினா பவுடர்.
ReplyDeleteenakkum veenum vaanathy!!!!!!
ReplyDeleteஅட கத்திரிக்காய் போய் புதினாவா?புதினா இருக்கு இருக்குன்னு சொன்னாலும் என் கணவர் கட்டு கட்டாக வாரம் வாரம் புதினா வந்த வண்ணம் இருக்கும்.நானும் வேஸ்ட் பண்ணவேண்டாம் என்று அதனை ப்ராசஸ் செய்து காய்ந்த புதினா நிறைய சேர்ந்து விட்டது.தினமும் மிண்ட் ப்ளாக் டீ தான்.எல்லாத்திலும் புதினா போட்டாலும் அவருக்கு அலுப்பு வரலை.புதினா துவையலும் எப்பவும் ஃப்ரிட்ஜில் ஸ்டாக்.அட ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு மாதிரி...
ReplyDeleteசூப்பர் வியாபராமாக இருக்கே .. வி.பி.பி. அனுப்பவும். பகிர்வுக்கு நன்றீ.
ReplyDeleteஆஹா...இதுக்கு போயி அலுத்துக்கலாமா? உங்க வீட்டுக்காரரை இந்த மறுமொழியெல்லாம் படிக்க சொல்லுங்க. எவ்வளவு பேர் அதுக்கு தவம் கிடந்தும் கிடைக்க மாட்டேஙுதுன்னு தெரியும். நான் ஒமஹா வந்த புதுசுல, பிரியாணி, புலாவ், ஏன் வெறும் சட்னியா செய்யக்கூட புதினா கிடைக்காம அல்லாடினேன். இப்பதேன் ஒரு சகோ சென்னைக்கு மூட்டை முடிச்சுகளோட பயணம் செய்ய்றதுக்கு முன் ரெண்டு தொட்டி குடுத்தாங்க. அதை வளர்க்கறதுக்கு பதிலா ரெண்டு பிள்ளைங்கள்கை வளர்த்திடலாம் போல. எல்லாம் அவரவருக்கு வரும்போதுதேன் தெரியும் வாணி, ஃப்ரீயா விடுங்க.
ReplyDelete/ட 20 டாலர் லேது... வாணி நான் ஒரு ஐடியா சொல்லட்டுமா... நான் எதாச்சும் சமைச்சு தர்றேன்... அதுக்கு பதிலா பொதினா.///
ReplyDeleteஎன்னது உன் இட்லிக்கு பதிலாவா ??? பாவம் வாணி. விட்டுடு அவங்களை
;))
ReplyDeleteநல்ல வியாபாரம் தான் .. ஹி..ஹி.
ReplyDelete//ஒரு ஐடியா வாணி.. இப்படி செய்தா என்ன? கத்திரிக்கா கூட மின்ட் போட்டு ஒரு கறி பண்ணிப் பாருங்க. :))// அப்பா யானை மாதிரி ஞாபக சக்தி.
ReplyDeleteபி.கு: Mr வாணி உங்கட தங்ஸை நயகரா பக்கம் அனுப்பாதீங்க அங்க ரொம்ப வில்லதனம் எல்லாம் சொல்லிதராங்களாம்:))
எனக்கும் ஒரு பார்சல் வானதி ஆனா செக் எந்த முகவரியில் அனுப்ப வேண்டுமென்னு சொல்லவே இல்ல ..சொல்லுங்க ..
ReplyDeleteகதிரிக்க பிரியரான உங்க ஆ.காரர் ஏன் புதினாவே வெறுக்கறா ?சும்மா கேட்டே நோ பீலிங்க்ஸ்
ஹய்யோ.. எங்கூட்ல புதினா வளர்த்தப்ப தினமும் புதினா டீதான்.. தொட்டியில்தான் வளர்த்தேன்னாலும் நல்லாவே வளர்ந்தது.. உங்க வீட்டு செடியும் தளதளன்னு இருக்கு :-))
ReplyDeleteவான்ஸ்! புதினா ஊறுகாய் போட்டு கொடுத்தா நிறைய பேர் வாங்குவாங்க...
ReplyDeleteஎனக்கும் ஒரு பாட்டில் ஊறுகாய்.. ஜஸ்ட் தட் :)
சாம்பிள் அனுப்புங்க அப்புறமா செக் அனுப்பறேன் ஹா ஹா
ReplyDeleteபுதினா சட்டினி செய்யச் சொல்லி என் அம்மாவை எப்போதும் தொந்தரவு செய்வேன். கடையில் எப்போது பார்த்தாலும் வாங்கிக் கொண்டு வருவேன். சில சமயம் வீட்டில் திட்டு வாங்குவேன்.. அதனை ஆய்வதற்குக் கொஞ்சம் நேரம் பிடிக்கும்.. அதுதான் பிரச்சினை.. ஒரு கட்டு ஐந்து ருபாய் விற்கிறது..சட்டினி செய்தார்கள் என்றால், தோசைக்கும் மற்றும் சாப்பாட்டுக்கும் தொட்டுக் கொள்வேன். சும்மாவும் சாப்பிடுவேன்.. அப்படி ஒரு இஷ்டம்.. நன்றி.
ReplyDelete‘புதினா’ பற்றிய கதை அருமை!
ReplyDeleteதோசைக்கும் மற்றும் சாப்பாட்டுக்கும் தொட்டுக் கொள்வேன். சும்மாவும் சாப்பிடுவேன்.. அப்படி ஒரு இஷ்டம்.. நன்றி.
ReplyDelete--repeatu..
வான்ஸ், எனக்கும் பொதினா வேணும் தான் ஆனா வேணாம். ஏன்னா இங்க ஒரு நண்பர் தோட்டத்துல வேலை செய்றார். ரெண்டு நாள் கூடி மூணு நாள் கூடி பறித்துக் கொண்டு வந்து தருவார். ரொம்ப
ReplyDeleteஃபிரெஷா பார்க்க அழகா இருக்கும். "தங்ஸ்" கிட்ட சொல்லி சம்பால் செய்து தரச் சொல்வேன். sooooopera இருக்கும். ஆப்பம் தோசைக்கு அது அள்ளிக்கிட்டு போகும். "உச்ச்ச்" கொட்டி சாப்பிடுவேன்.
நான் தான் லேட் கமண்ட்ஸ்ஆ வாணி!! "சாரி" ரொம்ப "ஆணியில்" எல்லோருக்கும் வோட்டு மட்டும் போட்டுட்டு போய்டுறேன். யாரும் வருத்தப் பட்டுக்காதீங்க. ப்ளீஸ்!!
ReplyDeleteஆஹா என்ன பொருத்தம் அவருக்கு புதினா பிடிக்காது,உங்களுக்கு கத்திரிக்காய் பிடிக்காது...
ReplyDeleteவானதி,தொடர் பதிவுக்கு உங்களையும் இணைத்துட்டேன்.தொடருங்க!:)
ReplyDeletehttp://mahikitchen.blogspot.com/2010/09/blog-post_20.html
எல்கே, ம்ம்.. கட்டாயம் அனுப்புறேன்.
ReplyDeleteமிக்க நன்றி.
சித்ரா, மிக்க நன்றி.
கவிதா, பிஸ்னஸ் பிஸ்னஸா இருக்கணும். காசை உடனடியா எண்ணி வைங்க.
மிக்க நன்றி.
மகி, அனுப்பியாச்சு.
மிக்க நன்றி.
ஸாதிகா அக்கா, நீங்களும் என் ஆ.காரருக்கு சப்போர்ட்டா???அவ்வ்வ்வ்
மிக்க நன்றி.
ஹைஷ் அண்ணா, பாம்பு படம் போட்ட டாலரா?? முருகன் டாலரா?
எனக்கு டாலர் நோட்டில் இருக்கும் பாம்பு பார்த்து பயம் கிடையாது.
மிக்க நன்றி.
ஜெய், என்னது பவுடரா அனுப்பனுமா??? இருங்க குப்பையில் போட்ட புதினா காய்ந்து விட்டதா என்று செக் பண்ணிட்டு வரேன்.
ReplyDeleteகடவுளே! 200 டாலர்கள் என்றால் சும்மாவா. கலப்படம் செய்து ஒரு வழியா சமாளிச்சிடுவேன்.
மிக்க நன்றி.
சந்தனா, நல்ல ஐடியா? முயற்சி செய்து பார்க்கிறேன்.
ReplyDeleteமிக்க நன்றி.
தங்ஸ், எனக்கு அஞ்சப்பரில் இட்லி ஆர்டர் பண்ணுங்கோ. புதினா முழுவதும் உங்களுக்கே.
மிக்க நன்றி.
குமார், மிக்க நன்றி.
தெய்வசுகந்தி, மிக்க நன்றி.
ஆசியா அக்கா, உண்மைதான். மல்லித்தழை பிடிக்கும் என்னவருக்கு. ஆனால், இந்த புதினா மணம் பிடிப்பதில்லை.
மிக்க நன்றி.
சரவணன், நல்ல பிஸ்னஸ் தான். இலாபம் தான் இன்னும் பெரிதாக வரவில்லை.
ReplyDeleteமிக்க நன்றி.
அன்னு, அடடா! புதினா தேடி இவ்வளவு கஷ்டப்பட்டீங்களா?
இந்தச் செடிகள் தொட்டியில் வளரவே வளராது என்று என் அம்மா சொன்னார். அவரும் ட் ரை பண்ணி பார்த்து களைத்துப் போய் விட்டார்.
மிக்க நன்றி.
எல்கே, நம்ம யாரு? விவரமா அஞ்சப்பர் இட்லி கேட்டுட்டுட்டோம் இல்லை.
மிக்க நன்றி.
இமா, :))
மிக்க நன்றி.
ஹைஷ் அண்ணா, கடவுளே! யார் எங்கட சந்துவோ!!?? சே! அப்படி எல்லாம் இருக்காது. அவர் ஒரு நல்ல பெண்மணி. மனசால் கூட யாருக்கும் தீங்கு நினைக்க மாட்டார்.
ReplyDeleteநாடோடி, மிக்க நன்றி.
சந்தியா, நிலவுக்கு ஏன் அட்ரஸ். நான் என்னைத் தான் சொன்னேன்.
அதென்னவோ அதன் மணம் பிடிப்பதில்லை.
அமைதிச்சாரல், முன்பு இன்னும் தளதளவென இருந்திச்சு. இப்ப லேசா குளிர் வந்தபடியா இப்படி ஆகிவிட்டது.
மிக்க நன்றி.
இலா, என்னது புதினா ஊறுகாயா? ரெசிப்பி போடுங்க.
மிக்க நன்றி.
பிரகாஷ், இந்த வயசில் அம்மாவிடம் திட்டு வாங்காமல் நீங்களே செய்து சாப்பிடோணும்.
சரியா?
மிக்க நன்றி.
சரவணன், ம்ம்.. வந்திட்டே இருக்கு.
ReplyDeleteமிக்க நன்றி.
மனோ அக்கா, மிக்க நன்றி.
சிவா, மிக்க நன்றி.
நாட்டாமை, அனுபவித்து, ரசிச்சு சாப்பிடுறீங்க!!
எதுக்கு மன்னிப்பெல்லாம். நேரம் கிடைக்கும் போது மெதுவா வாங்கோ.
மிக்க நன்றி.
மேனகா, மிக்க நன்றி.
மகி, கட்டாயம் தொடருவேன்.
உ
ReplyDeleteஎன்னத்தை சொல்லி என்னத்தை பண்ணறது!
இங்க காஆஆஆஆசு கொடுத்து வாங்கரோம்!
அங்க தானா வளர்ரது!
எப்போவுமே வேண்டாம் சொல்றவாளுக்குதான்
எல்லாம் கிடைக்கும் போலிருக்கு!
என் பெரிய பொண் புதினாலேயே மூழ்கி
புதினாலேயே எழுந்துருப்பா!
மாடில தொட்டி முழுக்க புதினாதான்!
ஆனா வளரவே மாட்டேங்கறது!
நான் செக் அனுப்பரென்!
ஆனா அதுலயும் ‘உ’ போட்டுருப்பேன்!
வருத்தபடாம பிள்ளையாருக்கு அனுப்பறதா நெனச்சு
அனுப்பிடுங்கோ!
இதே கதை தான் இங்கும் நடக்குது...என்ன உங்களுக்கு புதினா ...இங்கே மணத்தக்காளி அவ்வளவு தான் வித்தியசம்...இன்றக்கு தான் மணத்தக்காளி செடி எல்லாம் பிடுங்கு போட்டுவிட்டேன்...அதனுடைய விதைகளை மட்டும் எடுத்து வைத்து கொண்டேன்...
ReplyDelete