பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்களே அது என்னைப் பொறுத்தவரை மிகவும் சரியானதே. எனக்கு உடம்பே நடு நடுங்கும்.
இப்ப கூட பாருங்க ஒரு பாம்பு படம் கூகிளாண்டவரிடம் கேட்டு, இங்கு போட பயம். அவ்வளவு ஏன் பாம்பு பற்றிய பதிவுகள், படங்கள் எதையுமே பார்க்கவே மாட்டேன்.
சமீபத்தில் ஒரு நண்பரின் வலைப்பூவில் பாம்பு படம் பார்த்தேன். படித்தது முழுக்க மறந்து விட்டேன். வேறு ஒருவரின் ப்ஃரொபைல் படம் இந்த ஊர்வன படம் தான். அதுவும் படமெடுத்து, ஆவேசமாக வரும் பாம்பு. நான் அவரிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க படத்தை மாற்றி விட்டார். என் கஸின் ஒருவருக்கு பாம்பென்றால் பயமே இல்லை. ஏய்! இந்தா சூ சூ..போய்த் தொலை என்பார். பாம்பு ஓடிவிடும்.
ஏன் அவ்வாறு நடக்குது என்பது விளங்கவேயில்லை! சின்ன வயசில் ஊரில் வாய்க்காலில் படுத்துக் கிடந்த பாம்பு, வீட்டு ஹாலில் வழி மாறி ஓடி வந்த பாம்பு என்று பல சம்பவங்கள் கூட இருக்கலாம். கடற்கரை போன போது மீனவர்கள் பிடித்து கரையில் போட்ட தண்ணீர் பாம்பு. அது விரட்டியதால் நான் ஓடினேனா? அல்லது நான் ஓடியதால் அது விரட்டியதா என்பது இன்னும் விடை தெரியாத கேள்வி.
திருச்சியில் இருந்த போது அழகான வீடு, பக்கத்தில் வயல், காவிரி ஆற்றுத் தண்ணீர் பாய்ந்து வரும் கால்வாய்கள் என்று மிகவும் அழகான இடத்தில் குடியிருந்தோம். எல்லாமே அழகாக தெரிந்தது அதாவது நான் நாகபாம்பினைக் காணும் வரை. வயலில் திரியும் எலிகளைப் பிடிக்க வரும் பாம்புகள் எங்கள் வீட்டிற்கும் வரும்.
படமெடுத்து ஆடிய பாம்பினைக் கண்ட பிறகு எனக்கு காய்ச்சல் வந்து விடும். என் அப்பா, பக்கத்து வீட்டினர், போவோர், வருவோர் எல்லாமே சேர்ந்து பாம்புகளை விரட்டுவார்கள்.
ஒரு முறை எங்கள் வீட்டு நாய் ஒரு பாம்பினை வாயில் பிடித்து, அடித்துக் கொன்றது. அதன் பிறகு நான் என் நாய் இல்லாமல் எங்கேயும் போவதில்லை. என் ஹீரோ என் நாய் டெனி தான்.
மக்களுக்கு இப்படியான பயங்களை போபியா(Phobia ) என்று சொல்வார்கள். இது கிரீக் ( Greek ) வார்த்தை.
பல வருடங்களுக்கு முன்னர் தொலைக்காட்சியில் இப்படி போபியா இருப்பவர்களைக் காட்டினார்கள். கோமாளிகள் (க்ளௌன் ), லிப்ட், உயரமான மாடிகள்/இடங்கள், பூனைகள், பலூன்கள், பாம்பு, பொய் மூக்கு/மீசை/கண்ணாடிகள், இப்படி இந்த லிஸ்டில் இருப்பவர்கள் சிலரைப்பற்றிய நிகழ்ச்சி அது. ஒரு மனோதத்துவ நிபுணர் இதற்கான காரணங்களை விளக்கமாக சொன்னார்.
இந்த மக்களின் பயங்களை நீக்கி விட்டுத் தான் மறுவேலை பார்ப்பேன் என்று அடம் பிடித்தார் நிகழ்ச்சி நடத்தியவர். இதில் ஹைலைட்டான விடயம், பாம்பு போபியா வந்தவரின் பயத்தை எப்படி நீக்கி, அவரை ஒரு சாதாரணமான குடிமகன்(ள்) ஆக்கினார்கள் என்பதே.
ஒருவர் மஞ்சள் கலரில் இருந்த பாம்பினைக் மேடைக்கு கொண்டு வர, இந்தப் பெண்மணி எடுத்தார் ஓட்டம். அரங்கத்தினை விட்டு, வீதிக்கு ஓடியவரை விடாமல் விரட்டிச் சென்று கூட்டி வந்தார்கள். அழுது கொண்டே வந்தவரை சமாதானம் செய்தார்கள்.
ஓடிய பெண்மணியிடம் பாம்பினைக் குடுத்தார்கள். முதலில் தெருவுக்கு ஓடியவர், பிறகு கொஞ்சம் பயம் தெளிந்து அரங்கத்தினுள் சுற்றி ஓடினார். பின்னர் மேடையில் மட்டும் அங்கும் இங்கும் ஓடினார். இதெல்லாம் எடிட் பண்ணி 1 மணி நேரத்தில் காட்டினாலும், இவரின் பயத்தினைப் போக்க குறைந்தது 1 வாரம் ஆவது ஆகியிருக்கலாம்.
இறுதியில் என்ன ஆச்சரியம்! பாம்பினைக் கண்டு பயந்த பெண், பிரிட்னி ஸ்பியர்ஸ் போல கழுத்தில் பாம்பினை மாலையாக போட்டுக் கொண்டு அழகாக நடந்து வந்தார். பாம்பினை தடவிக் கொடுத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு போபியா பிரச்சினையுடன் வந்த எல்லோரும் பயம் தெளிந்து, வீர நடை போட்டார்கள்.
இப்படி ஏதாவது நிகழ்ச்சிகளுக்குப் போனாலாவது என் பயம் தீருமா என்று தீவிரமா யோசித்தும் இருக்கிறேன். இன்னும் செயல் வடிவம் குடுக்கவில்லை.
வானதி? எதுக்கிந்த விஷப்பரீட்சை??
ReplyDeleteஎனக்கு பாம்பு கூட வேணாம்,பூரான்,சிறுபாம்பு,மண்புழு போன்றவை கண்டாலே பயம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்! பக்கத்திலிருக்கும் உயரமான பொருள்(!!) மீது ஏறி நின்றுவிடுவேன்.
கை-காலெல்லாம் டைப்படிக்கும்.
தீம்பார்க் போனால் என் கணவரின் கட்டாயத்தில்தான் நிறைய ரைட் போவேன்.இருந்தாலும் ரோலர் கோஸ்டர் பக்கமெல்லாம் தலைவைத்துக்கூட படுக்கமாட்டேன்.
நம்மள்லாம் இப்படியே மெயின்டெய்ன் பண்ணிக்கலாமே.ஹிஹிஹி!
பாம்புன்னா எல்லாருக்கும் கொஞ்சம் பயம் இருக்கும் ஆனா காய்ச்சல் வர்ரதுஎல்லாம் ரொம்ப ஓவரு :)
ReplyDeleteநம்மள பார்த்துத்தான் எல்லோரும் பயப்படறாங்க நாம ஜஸ்ட் பாம்ப பார்த்து பயப்படுறோம்னு நினைச்சுக்கங்க ;)
ஓடிய பெண்மணியிடம் பாம்பினைக் குடுத்தார்கள். முதலில் தெருவுக்கு ஓடியவர், பிறகு கொஞ்சம் பயம் தெளிந்து அரங்கத்தினுள் சுற்றி ஓடினார். பின்னர் மேடையில் மட்டும் அங்கும் இங்கும் ஓடினார். இதெல்லாம் எடிட் பண்ணி 1 மணி நேரத்தில் காட்டினாலும், இவரின் பயத்தினைப் போக்க குறைந்தது 1 வாரம் ஆவது ஆகியிருக்கலாம்.
ReplyDelete...... இதுக்கு, பாம்பு பயமே பரவாயில்லை என்று நினைக்கிறேன். :-)
;) அடுத்த தடவை நான் ஊருக்குப் போகும் போது என்னோட வாங்க வாணி. எல்லாம் சரியாகி விடும். ;)
ReplyDeleteஹா ஹா வானதி நானும் உங்களைப் போல்தான். ஒரு புத்தகத்தில் பாம்பின் ஓவியம் இருந்தால் கூட அந்த புத்தகத்தை தொட மாட்டேன். அம்பூட்டு பயம் :).
ReplyDeleteஆனாலும் பாமபை நிஜமா நேரில் பார்த்த போது எப்படியோ சமாளிச்சுட்டேனே :)
நானும் உங்க செட் தான் எனக்கும் பாம்பு ன்னு சொன்னாலே ரொம்பவே பயம் தான் ..
ReplyDeleteநேற்று தாங்க ஜூவில் நிறைய பாம்பை பார்த்து வந்தேன், மஞ்சள் பாம்பு மிக அழகு.எனக்கு தொட்டுப்பார்க்கணும் தோணுச்சு.
ReplyDeleteஎனக்கும் கொஞ்சம் அலர்ஜி தான்.. என்னுடைய தளத்தில் அந்த ஐந்துதலை பாம்பை பார்த்துதான் நீங்கள் பயந்துயிருப்பீர்க்ள்.. ஹா.ஹா..
ReplyDelete””தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல் “” கமலஹாசன் பாட்டுதான் நினைவுக்கு வருது.. அதுல நெருப்பை பார்த்தா அவருக்கு வரும்...
ReplyDeleteஇதுல பயங்கிறதை விட அருவெருப்பா இருக்கும் .அதான் மெயிண் காரணம்..
சரி இவ்வளவு பில்டப் குடுத்தீங்க ஒக்கே..!! கனவில வந்தா என்ன செய்வீங்க..?
ReplyDeleteஇது வரை வந்திருக்கனுமே..!!வந்திருக்குமே..!! அப்போ தூக்கத்தில நிறைய உளறியிருப்பீங்களா..ஹா..ஹா..
:-)))
என் சிறிய வயதில் ஒரு வயதான பாட்டி இருந்தார்.பாம்பு என்றாலே பே..பே..என்று திக்கி,திக்கி அலறுவார்.சிறிய பேப்பர் துண்டினை எடுத்துப்போட்டு பாம்பு என்றால் கேட்கவே வேண்டாம்.அவர் செய்யும் அலப்பரையை குட்டீஸ் அனைவரும் ரசித்து சிரித்து அவரை இம்சைபடுத்தி மகிழ்வோம்.அவருக்கு பெயரே பாம்பு பாட்டிதான்.பழைய நினைவுகளில் மூழ்கடித்து விட்டீர்கள்.
ReplyDeleteபாம்பென்றால் படையும் நடுங்குமே...அது சரிதான் போல..நான் கூட பாம்பு படம் போட்ட புக்கை தொடமாட்டேன்.....
ReplyDelete//இது வரை வந்திருக்கனுமே..!!வந்திருக்குமே..!! அப்போ தூக்கத்தில நிறைய உளறியிருப்பீங்களா..ஹா..ஹா..//
ReplyDeleteஜெய்லானி, உங்கள் பின்னஊட்டத்தில் ஒரு சொற்குற்றம்... "தூக்கத்திலும்" என்று இருக்க வேண்டுமல்லவா?
பாம்பை கண்டால் படையும் நடுங்கும் தான்
ReplyDeleteஒரு ஐடியா பாம்பை மையமாக வைத்து எடுத்த படங்களை தொடர்ந்து பாருங்கள் பயம் விலகுகிறதா என்று ஹா ஹா
ஆடு பாம்பே ஆடு பாம்பே ..... ஆடு Bombay என்றால் எனக்கும் பயம்தான். அங்குள்ள மனிதபமற்ற எந்திரக் கூட்டத்தைக்கண்டு!
ReplyDelete// கனவில வந்தா என்ன செய்வீங்க..? இது வரை வந்திருக்கனுமே..!!வந்திருக்குமே..!! அப்போ தூக்கத்தில நிறைய உளறி யிருப்பீங்களா..ஹா..ஹா..//
ReplyDeleteஏன் பாஸ் அவங்க தூக்கத்தில் பயந்து உளறி இருந்தா, அவங்க வீட்டக்காரர் அல்லவா பயந்து குதித்து வெளியே ஓடி இருக்கணும் ஹி..ஹி.. சும்மா ஒரு இமாஜிநேசன் தான். மற்றபடி அவங்க எப்படி கத்தியிருப்பாங்கன்னு யோசிச்சுப் பார்த்தா அம்மாடியோவ்.... பாஸ் க்கி..க்கி.. .
இந்த பாம்புக்கே இவ்வளவு சொல்றீங்களே எங்க 'தங்ஸ்' ஒரு கரப்பான் பூச்சிய கண்டாலே குதிச்சு என் தோல் மேலே ஏறி உட்கார்ந்து கொள்வாங்களே அதுக்கு என்ன சொல்றீங்க!!
ReplyDeleteவாணி அப்படியெல்லாம் பயப்படக்கூடாது. அடுத்தத் தடவ நீங்களே பாம்பப் பத்தி இனென்ன வகை என்று சொல்லி ஒரு இடுகையே போடணும் சரியா?? ஹா.. ஹா.. done
பாம்பென்றால் படையும் நடுங்கும்! நானும் ஒரு படை வீரன் தான்!
ReplyDeleteபாம்பை பார்த்து நாம் பயப்பட அது நம்மைக்கண்டு பயந்து பயப்படுமாம். அதனால் அதைகண்டதும்
ReplyDeleteஒரு முறை முறைச்சிபாருங்க வாணி அப்புறம் பாருங்க பாம்பு பம்பாகிவிடும்.
[அம்மாடியோ பாம்பாஆஆஆஆஆஅ இது நான்]
உண்மையில் எந்த ஒரு பாம்பும் மனிதரை கண்டவுடன் ஒதுங்கி சென்றுவிடும், சில தவிர்க்க முடியாத சூழ்நிலையில் தற்பாதுகாப்புக்காகவே சீரவோ கடிக்கவோ செய்யும்.
ReplyDeleteஅதனால் இனி நேரில் கண்டால் கூட அருகில் செல்லாமல் நீங்கள் உங்கள் பாதையில் அமைதியாக சென்று விடுங்கள், அது அதன் பாதையில் போய் விடும்.
எனக்கு நீண்ட கருப்பு ராஜநாகம் மிகவும் பிடிக்கும் :-)
//இது வரை வந்திருக்கனுமே..!!வந்திருக்குமே..!! அப்போ தூக்கத்தில நிறைய உளறியிருப்பீங்களா..ஹா..ஹா..//
ReplyDeleteஜெய்லானி, உங்கள் பின்னஊட்டத்தில் ஒரு சொற்குற்றம்... "தூக்கத்திலும்" என்று இருக்க வேண்டுமல்லவா? //
ஐயா நான் மேலோட்டமா அடிச்ச கிண்டலை இப்பிடி பப்லிக்குல போட்டு குடுத்துட்டீங்களே...!!! அவ்வ்வ்வ்...
பாம்பை பார்த்தால் பயமா ஹி ஹி ஹி
ReplyDeleteநாங்கெல்லாம் அனகொண்டாவையே அனச்சிகிட்டு படுத்தவங்க
//நேற்று தாங்க ஜூவில் நிறைய பாம்பை பார்த்து வந்தேன், மஞ்சள் பாம்பு மிக அழகு.எனக்கு தொட்டுப்பார்க்கணும் தோணுச்சு.//
ReplyDeleteதோழி ஆசியா ரொம்ப தைரியமானவங்க தான் வாணி.
எனக்கு கொஞ்சம் பயம்தான்.
வானதி...பாம்பைக் கண்டு பயம் என்பதை அடுத்து அருவருப்பும் ஒரு காரணம்தானே தூர விலகுவதறகு !
ReplyDeleteபாம்பைப் பார்த்தால் பயமா?
ReplyDeleteஅய்யோ... அய்யோ...!
நானெல்லாம் தண்ணிப்பாம்புகிட்ட கடி வாங்கியிருக்கேன்.
நான் போன வாரம் தான் ரெண்டு குட்டிப் பாம்புகளை புதருக்குள்ள பாத்தேன்.. ஊர்ல பாம்பு அடிக்கரதப் பாத்திருக்கேன்.. பாம்பு கதைகளும் ஊருல பேமஸ் :) ஒருக்கா வாய்க்காலுக்கு பிரெண்ட்ஸக் கூட்டிட்டுப் போகறப்ப, மரத்துல தொங்குன செத்த பாம்பைக் கண்டு எல்லாரும் அலறி அடிச்சிட்டு ஓடியாந்தோம் :)
ReplyDeleteமக்களுக்கு பாம்பு பயம் இருக்கறது நல்லது தான்.. இல்லாட்டி அதையும் வீட்டுல வளர்த்த ஆரம்பிச்சிடுவாங்க.. :))
மை டியர் தோழி... எனக்கும் பாம்பென்றாலே பயம் தான்ப்பா...
ReplyDeleteநைட் வாயால சொல்ல கூட பயம் உண்டு.. உங்க பீலிங்க்ஸ் புரியுது..
தோழி... இந்த தலைப்பை பார்த்திட்டு படிக்கலாமா வேண்டாமா என தோன்றியது. அப்புறம் எப்படியோ படிச்சி முடிச்சேன். படம் இல்லைனாலும் ஒவ்வொரு முறையும் அதன் பெயரை படிக்கும் போதே பயமா இருந்துச்சி.
ReplyDeleteகல்லூரி படிக்குபோது என் கல்லூரியின் பாத்ரூமில் நானும் என் மற்ற இரண்டு தோழிகளும் பாம்புடன் மாட்டிக்கொண்டு பயந்து அழுத நாட்கள் நினைவுக்கு வந்து போனது.
அதனால் உங்க பயமும் நன்றாகவே புரிகிறது.
நானும் அப்படித் தான் நினைப்பதுண்டு. ஆனால், பிறகு ஏனோ இப்படி இருந்து என்ன சாதிக்கப் போறேன் என்று நினைப்பேன்.
ReplyDeleteமிக்க நன்றி.
பாலாஜி, ஓவர் எல்லாம் இல்லை.
மிக்க நன்றி.
சித்ரா, சரியா சொன்னீங்க. இப்படி கஷ்டப்படுவதை விட சிவனே என்று இருக்கலாம்.
மிக்க நன்றி.
இமா, நான் வரமாட்டேன் இப்பவே சொல்லிட்டேன்.
மிக்க நன்றி.
கவிதா, ம்ம்.. நீங்களும் என் கட்சி தானா?
மிக்க நன்றி.
சந்தியா, மிக்க நன்றி.
ReplyDeleteஆசியா அக்கா, நல்லா தொட்டு பாருங்க. நினைக்கவே வாந்தி வருகின்றது. ம்ம்ம்..நல்ல வீரமான பெண்மணி தான் நீங்கள்.
மிக்க நன்றி.
நாடோடி, நான் உங்கள் தளத்தில் பார்க்கவில்லை. நான் ரொம்ப உஷார். தலைப்பை பார்த்த உடனே அலர்ட் ஆயிட்டேன்.
இது வேறு தளம்.
மிக்க நன்றி.
ஜெய், அருவருப்பு, பயம் ஏதோ ஒன்று. இதெல்லாம் ஆராய்ச்சி பண்ணிட்டு...
கனவில் முன்பு நிறைய வரும். இப்போ காணவில்லை.
மிக்க நன்றி.
ஸாதிகா அக்கா, மிக்க நன்றி.
மேனகா, மிக்க நன்றி.
ReplyDeleteவிஷ்ணு, மிக்க நன்றி.
ஜெய்லானியை சந்தேகம் கேட்க ஒரு ஆளா??? ம்ம்... பதில் வரும்.
சரவணன், அடடா! சூப்பர் ஐடியா! கர்ர்ர்ர்ர்ர்.
இங்கு snakes in the flight ஒரு ப்ரோகிராம் போடுவார்கள். பார்க்கவே எரிச்சல் வரும்.
நாட்டாமை, நான் தூக்கத்தில் அலறி ஆர்பாட்டம் செய்வதில்லை.
என் தங்ஸ் குதிச்சு என் தோள் மேலே..... ஹையோ! நீங்கள் அவ்வளவு குட்டையா??? ஹிஹி
பாம்பில் எத்தனை வகையா??? ம்ம்.. அடுத்த பதிவு அதான் ( ஆண்டவா! காப்பாற்று )
மிக்க நன்றி.
வேல்ஜி, நீங்கள் படை நடுங்கும் வீரனா??
ReplyDeleteமிக்க நன்றி.
மலிக்கா, ஐடியா எல்லாமே சூப்பர். ஆனால், நான் எதையுமே முயற்சி செய்து பார்க்கப் போவதில்லை.
மிக்க நன்றி.
சிங்ககுட்டி, என் அப்பாவும் அப்படித் தான் சொல்வார்கள். ஆனா எனக்கு தான் அப்படி ஒரு பயம்.
மிக்க நன்றி.
சசிகுமார், என்ன உங்க மனைவிக்கு இது தெரியுமா?
அப்பாடி! டேஞ்சரான ஆசாமி தான் நீங்க.
மிக்க நன்றி.
கௌஸ், மிக்க நன்றி.
ஹேமா, பாதி சரி. மீதி பயம் தான் காரணம்.
மிக்க நன்றி.
குமார், தண்ணிப் பாம்பிடம் கடி வாங்கினீங்களா??
ReplyDeleteதைரியமா ஆள்தான்.
மிக்க நன்றி.
சந்தூ, உண்மை தான். இருந்தாலும் நிறைய ஆட்கள் வீட்டில் வளர்க்கிறாங்க.
பெரிய பாம்பாக வளர்ந்ததும் ரோட்டில் விட்டு விடுவார்களாம்.
மிக்க நன்றி.
ஆனந்தி , மிக்க நன்றி.
ப்ரியா, எனக்கும் அதன் பெயர் சொன்னாலே பயம் தான்.
மிக்க நன்றி.
எனக்கும் பாம்பு என்றால் பயம் தான்...அதற்காகவே இந்த பதிவினை படிப்பதினை தவிர்த்தேன்..இப்பொழுது தான் சரி படிப்போம் என்று படித்தேன்..
ReplyDeleteஎனக்கு பயங்கர பயம்..ஆனா அக்ஷ்தா குட்டிக்கு பாம்பு பயங்கர close friend மாதிரி அதனை பார்த்தால் சந்தோசம் படுவா..Zooவுக்கு கூட்டிக்கு போனால் கூட இதனை தான் முதலில் பார்க்கவேண்டும் என்று சொல்லுவா...
இதற்கு 1 வாரம் கூட போதாது...குறைந்தது 1 வருடமாவது ஆகும் எனக்கு...
பாம்பா.. பேரைக் கேட்டாலே பயம் எனக்கும்.
ReplyDeleteiyooooo....naan illappa... snakenaa enakku remba bayam...me escape
ReplyDeleteநல்ல பதிவு பாம்பென்றால் படையும் நடுங்கும்
ReplyDelete