தென்னந்தோப்பு வரைந்த சீமாட்டி
நான் பள்ளிக்கூடம் சென்ற கதை பற்றிய தொடர்ச்சி....
நான் Arts சம்பந்தமாக ஒரு பாடம் எடுக்க வேண்டும். இது என்ன பெரிய வேலை... நான் வரையாத படமா? வேறு ஒருவர் சொன்னார், தயவு செய்து அந்தப் பக்கம் போக வேண்டாம், அதற்குப் பதில் Music பாடம் எடு என்றார். பாஸ் செய்வது மிகவும் சுலபம் என்றார். என் குரல் வளம் ஆங்கிலத்தில் பாட இன்னும் கொடூரமாக இருக்குமே...வேண்டாம் ஆர்ஸ்ட் வகுப்பு தான் சரி வரும் என்று முடிவு செய்து விட்டேன். இங்கனை ஒரு கொசுவத்தியை சுழல விடவும்.....
நான் 7/8 வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது எங்கள் ஆசிரியை சொன்னார் எல்லோரும் தென்னந்தோப்பு வரைந்து கொண்டு வர வேண்டும் என்றார். நானும் வீட்டில் வரைந்து கொண்டிருந்த போது...என் அண்ணா சொன்னார் இது என்ன கன்றாவி... தோப்பு எனில் தென்னை ஓலை இலைகள் சீராக தெரிய வேண்டும். உன் படத்தில் ஓலைகள் கம்பி கம்பியாக தெரியுது என்று சொல்லி அவரே வரைந்து காட்டினார். அடுத்த நாள் பள்ளியில் ஆசிரியை என்னை கொண்டாடி தீர்த்துவிட்டார். என் தோழிகளுக்கு பயங்கர கடுப்பு. தென்னந்தோப்பு வரைந்த சீமாட்டியே... என்று பெயரும் புகழும் கிடைத்தது.
இப்படி எல்லாம் திறமை இருக்க (திறமைகள் அல்ல!) ஒரு ஆர்ஸ்ட் வகுப்பினைக் கண்டு பின்வாங்குவது வீரனுக்கு அழகல்ல... வகுப்பில் சேர்ந்தாயிற்று. வரப்போகும் சோதனைகள் அறியாமல்...from day one அந்த பேராசிரியை ஒரு சிம்ம சொப்பனமாகவே தெரிந்தார். ஏகப்பட்ட ரூல்ஸ்.. நேரத்திற்கு வரவேண்டும், ஆர்ஸ்ட் சப்ளைஸ் எல்லாம் சொந்தமாக கொண்டு வர வேண்டும், பக்கத்தில் கடன் வாங்கும் யோசனை இருந்தால் இப்பவே கிளம்பி விடுங்கள்...தென்னந்தோப்பு வரைந்த எனக்கு இது மிகவும் Silly ஆகத்தெரிந்தது. சில மாணவர்கள் பைகளை எடுத்துக் கொண்டு வெளியேறினார்கள். பாவம் பயந்துபோய் விட்டார்கள் போல..தென்னந்தோப்பு வரைந்த சீமாட்டி ஒரு பனங்காட்டு நரி, நான் பின் வாங்கப் போவதில்லை.
பேராசிரியருக்கு ஒரு உதவியாளர், அப்பாவியா? டெரரா ? என்று யூகிக்க முடியாத ஒரு person. தனியாளாக இருந்தால் நல்லவராகவும், professor உடன் சேர்ந்தால் terror ஆகவும் இருந்தார். முதல் நாள் வகுப்பில் எங்களை எல்லோரையும் பயங்காட்டி முடித்த பின்னர்.. அந்த செமஸ்டருக்கான அஸைன்மென்ட்களை மிகவும் விரிவாக விளக்க ஆரம்பிக்க இன்னும் ஒரு 5 மாணவர்கள் கிளம்பினார்கள். தென்னந்தோப்பு வரைந்தசீமாட்டி....ஒரு மிரட்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தார், but decided to hang in there.
(Image from Google Images)
Professor விளக்கிக் கொண்டிருக்க ஒரு மாணவர் மிகவும் டென்ஷனாக இருந்தார், அவரின் நெற்றியை தேய்த்துக் கொண்டிருந்தார் அவரின் eye socket இல் இருந்து அவரின் fake eye ball வந்து வெளியே விழுந்தது. இதைப் பார்த்ததும் மேலும் சில மாணவர்கள் ஓட்டம் பிடித்தார்கள். சீமாட்டி....செய்வதறியாமல்வேறு பக்கம் பராக்குப் பார்த்துக் கொண்டிருந்தார். என் யோசனை எல்லாம் இவர் எப்படி இந்த வகுப்பில் தேர்ச்சி பெறப் போகிறார் என்பதே. அந்த மாணவரோ கீழே விழுந்த eyeball யை மிகவும் லாவகமாக catch செய்து மீண்டும் பொருத்திக் கொண்டார். Professor எதையும் கண்டு கொள்ளாமல் எங்களை பயங்காட்டுவதில் குறியாக இருந்தார். அவரின் பக்கதில் இருந்த சில மாணவிகள் வேறு பெஞ்சுக்கு இடம் பெயர்ந்தார்கள். மொத்தம் 7 அஸைன்மென்ட்கள், எல்லாமே நேரத்திற்குள் முடித்து Submit பண்ண வேண்டும், இல்லாவிட்டால் points குறைக்கப்படும் என்றார் பேராசிரியை. மாணவர்கள் 3:29 (class duration 2-3:30)க்கு பைகளை தூக்கிக் கொண்டு கிளம்ப ஆயத்தமாக, கடுப்பான professor கடைசி 1 நிமிடங்கள் இன்னும் பயங்காட்ட ஆரபித்தார். சில மாணவர்கள் எதையும் கண்டு கொள்ளாமல், see you Thursday என்று விட்டு விடை பெற்றார்கள். சீமாட்டி நகராமல் அங்கனையே அமர்ந்திருந்தது. தென்னந்தோப்பு---
அட போங்கப்பா!!
குறிப்பு: இப்படித்தான் நான் பல வருடங்களின் முன்பு வரைந்தேன். வலது பக்கம் இருப்பது அல்ல, இடது பக்கம் இருப்பது தான் சரியான முறையில் வரைவது. Just a rough draft to explain:)
To be continued....