Friday, September 16, 2011

மீன் குஞ்சுக்கு நீந்தப் பழக்கணுமா?

என் மகனுக்கு 1 வயசாக இருந்த போது மாலில் வின்டோ ஷாப்பிங் & நடக்க போயிருந்தோம். அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தேன். ஒரு பெண்மணி என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். எனக்கு சங்கடமாக இருந்தது. முகத்தினை வேறு பக்கம் திருப்பிக் கொண்டேன். ஆனால், குறு குறுவென அவரின் பார்வையினை உணர முடிந்தது.
ஹாய், என்றேன்.
அவரும் ஹாய் என்றபடி பக்கத்தில் வந்தார்.
உன்னை எங்கேயோ பார்த்திருக்கிறேன் ஆனால் எங்கே என்று சரியா ஞாபகம் இல்லை, என்றார்.
எனக்கும் அவரின் முகம் பரிச்சயமாக தெரிந்தது. ஒரு வேளை போன ஜென்மத்தில் தோன்றிய பந்தமாக இருக்குமோ? எப்படிக் கேட்பது என்று தயங்கி நின்றோம்.
இதற்கிடையில் என் கணவர் நான் இருந்த பக்கம் வந்தார். நாங்கள் இருவரும் தடுமாறுவதை பார்த்து புன்முறுவலுடன் சொன்னார், எனக்கு உங்களை ஞாபகம் இருக்கு என்றார் அந்தப் பெண்மணியிடம்.
நான் இப்பவும் ஙே தான். இவங்களை ஞாபகம் இல்லையா? ஒரு ஆறு வாரம் நான் பட்ட சித்ரவதையை எப்படி மறக்க முடியும்...... இப்ப கொஞ்சம் ஞாபகம் வந்தது.

நீங்க திருமதி. பிரவுன் தானே என்றேன். அவருக்கே ஆச்சரியம். எப்படி என் பெயரை ஞாபகம் வைத்திருக்கிறாய் என்றபடி கைகளை குலுக்கினார்.
*********************************
நான் மாசமாக இருந்தபோது உதவிக்கு என் கணவரை விட்டால் யாரும் இருக்கவில்லை. என் பெற்றோருக்கும் விசா பிரச்சினை. அவர்கள் வருவார்களா, இல்லையா என்று நிச்சயமாக சொல்ல முடியவில்லை. என் மருத்துவர் கர்ப்பமாக இருப்பவர்களுக்கு ப்ரோகிராம் நடத்தப்படுகிறது அதில் சேர்ந்தால் நலம் என்று சொன்னார். நானும் பிறந்த குழந்தைக்கு டயப்பர் மாற்றுவது, இன்னபிற வேலைகளை என் கணவருக்கு பழக்கப் போகிறார்களாக்கும் என்று நினைத்து, என் கணவரை நச்சரித்து வகுப்பில் சேர்ந்து கொண்டோம். இதில் என் ஆ.காரருக்கு கடுப்பினை ஏற்படுத்திய இரண்டு விடயங்கள்
1. சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் காலை 7 மணிக்கு வகுப்புகள் ஆரம்பம்.
2. நான் எதுக்கு வெட்டியா வந்து அங்கனை உட்கார வேண்டும்

அதெல்லாம் முடியாது நீங்க கண்டிப்பா வர வேண்டும் என்று கூட்டிக் கொண்டு போனேன்.
அறிமுக படலம் நடந்தது. அதில் ஒருவர் தான் திருமதி. பிரவுன். தொடக்த்தில் அவர் தன்னைப் பற்றிச் சொன்ன போது பெரிதாக எதுவும் மனதில் பதியவில்லை.
எனக்கு பிரசவ வலியை நினைச்சா பயமா இருக்கு. ஆஸ்பத்திரியில் நான் நுழைஞ்ச உடனை எனக்கு வலியை குறைக்கும் மருந்தினை தந்திடோணும் என்று கண்டிப்பா கூறினார். நான் கொஞ்சம் தைரியமான ஆள். ஆனால் இவரின் பயத்தினை பார்த்ததும் எனக்கு பயம் தொற்றிக் கொண்டது.
உனக்கு எப்ப குழந்தை பிறக்கு என்று நேர்ஸ் கேட்க, அவர் பிப்ரவரி 29 என்று சொல்ல, எனக்கு அவரின் முகம், பெயர் & பேச்சு அப்படியே பதிந்து போனது.
நாலு வருஷத்துக்கு ஒரு முறை பிறந்த நாள் கொண்டாடினா போதும் இல்லை என்று எல்லோரும் சிரித்தார்கள்.

அடுத்த தம்பதிகள் அறிமுகபடலம் தொடங்கியது.
எங்க இரண்டு பேருக்கும் என் அம்மா, அப்பாவை ஆஸ்பத்திரிக்குள் விடாமல் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.
ஓ! ஆஸ்பத்திரிக்குள் வராதே என்று சொல்ல முடியாது. வேண்டுமென்றால் நீ இருக்கும் ரூமுக்குள் வர விடாமல் தடுக்கலாம் என்றார் நேர்ஸ்.
நீங்க என்ன செய்வீங்களோ தெரியாது என் அம்மா என் குழந்தையை பார்க்கவே கூடாது என்று அந்தப் பெண்மணி மீண்டும், மீண்டும் சொல்லிக் கொண்டே இருந்தார்.

உனக்கு என்ன செய்ய வேணும் என்று இப்பவே சொல்லிடு என்றார் நேர்ஸ் என்னைப் பார்த்து. எனக்கு என் அம்மா, அப்பா வர வேண்டும் என்றேன்.

நேர்ஸ் சிரித்துக் கொண்டார். என்ன உலகமடா இது! அவர்கள் வர வேண்டாம் என்கிறார்கள். நீ உன் பெற்றோர்கள் கட்டாயம் வரணும் என்கிறாய், அதோ அந்தப் பெண்மணிக்கு ஆஸ்பத்திரிக்குள் நுழைஞ்ச உடனை ஊசி போடணுமாம்.... என்னவோ போங்கப்பா என்று சிரித்துக் கொண்டார்.

ஆனால் நான் நினைத்தது போல அந்த வகுப்பில் குழந்தைக்கு டயப்பர் மாற்றுவதோ அல்லது பிறந்த குழந்தையை எப்படிக் கையாள்வது என்றோ சொல்லித் தரவில்லை. என் ஆ.காரரின் நித்திரை கெடுத்தது தான் மிச்சம் என்று நானே உணர்ந்து கொண்டேன்.
***********************
இப்ப தெரியுதா இவங்க யார் என்று? - என்றார் ஆ.காரர்.
ம்ம்ம்... உனக்கு மாசி 29 அன்றா குழந்தை பிறந்தது என்று ஆர்வமாக கேட்டேன். அவருக்கே பெரிய ஆச்சரியம். இதெல்லாம் எப்படி ஞாபகம் வைத்திருக்கிறாய் என்றார். இல்லை எனக்கு மார்ச் 1 அன்று பிறந்திச்சு என்றார்.

இப்ப என் கதைக்கு வருவோம். நான் பயந்தது போல ஆஸ்பத்திரியில் இருந்த நேர்ஸ் பயப்படவில்லை.
"ஹே! டாட் (dad ) , கமான்யா. டயப்பரை கட்டு, என்றார்.
என் ஆ.காரரும் ஒரு நொடியில் டயப்பர் விழா வண்ணம் மகனின் இடுப்பில் கட்டிய பிறகு ஒரு வெற்றிப் பார்வை பார்த்தார். இதெல்லாம் ஒரு பெரிய வேலையா என்று அவரின் பார்வை சொல்லியது.

இதெல்லாம் இயற்கையாக நம்மில் இருப்பது. இதுக்கு வகுப்புகள் எதுவும் தேவையில்லை என்று எங்கோ ஒரு மூலையில் பொறி தட்டியது.

27 comments:

  1. வணக்கம் அக்காச்சி,,

    நானும் பெப்ரவரி 29 தான் பிறந்தேன்.......

    ReplyDelete
  2. சில விடயங்களில் அனுபவ அறிவே போதுமானது,
    ஆனால் சில நேரங்களில் நம் மூளையின் எண்ணவோட்டத்திற்கமைவாக படிப்பறிவும் எம்மைச் செயற்பட வைக்கிறது.

    ReplyDelete
  3. Ungal kanavarin gnapagasakthikku j!

    Poruththamana thalaippu!

    ReplyDelete
  4. நல்ல அனுபவம் தான்

    ReplyDelete
  5. அனுபவம் புதுமை
    :)

    ReplyDelete
  6. நல்ல பகிர்வு..

    ReplyDelete
  7. இவை புனைவாக எழுதப்பட்டவையா இல்லை உண்மையாகவே தாங்கள் கடந்து வந்தவையா என்பது தெரியவில்லை ஆனால் மிகவும் ரசிக்கும் வகையில் இருந்தது . பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  8. ஹா ஹா நல்ல அனுபவம்தான்.

    ReplyDelete
  9. அந்தநாள் ஞாபகமோ?.. எதையுமே மறக்கவே முடியாதுதான்.

    நானும் இவ் வகுப்புக்கள் எதுக்கும் போகவில்லை. இங்கு நோமல் டெலிவரியாவதற்காக சில எக்சசையும், குழந்தையை பராமரிப்பது(டயப்பர், குளிப்பு....) இப்படியானதெல்லாம் சொல்லிக்கொடுப்பார்கள்.

    எனக்குத்தான் எப்பவோ எல்லாம் தெரியுமே என்கிட்டயேவா?:))). சீஸர்தான் என, குழந்தை தங்க முன்பே முடிவெடுத்திட்டமே ஹா..ஹா..ஹா..:))).

    ReplyDelete
  10. மீன் குஞ்சுக்கு நீந்தப் பழக்கணுமா?
    இதெல்லாம் இயற்கையாக நம்மில் இருப்பது. இதுக்கு வகுப்புகள் எதுவும் தேவையில்லை

    மிகச் சரி தலைப்பும் சொல்லிச் சென்ற விதமும்
    மிக மிக அருமை

    ReplyDelete
  11. நல்ல அனுபவம்...தலைப்பு அருமை....

    ReplyDelete
  12. அழகிய தலைப்பு.அழகிய அனுபவம்.

    ReplyDelete
  13. ஃஃஃஃ நீ உன் பெற்றோர்கள் கட்டாயம் வரணும் என்கிறாய், அதோ அந்தப் பெண்மணிக்கு ஆஸ்பத்திரிக்குள் நுழைஞ்ச உடனை ஊசி போடணுமாம்.... என்னவோ போங்கப்பா என்று சிரித்துக் கொண்டார்.ஃஃஃ

    அக்கா ரென்சனிலும் இது கொஞ்சம் கூல் பண்ணியிருக்குமே..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    மங்காத்தாவை வெல்ல வைத்த விஜய் ரசிகர்கள்

    ReplyDelete
  14. தலைப்பும் இடுகையும் அருமை வானதி!

    ReplyDelete
  15. மீண்டும் வணக்கம் அக்காச்சி..
    உங்கள் வலைப் பதிவினை என்னுடைய வலையில் இன்றைய தினம் அறிமுகப்படுத்தச் சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.

    ReplyDelete
  16. தற்போது தான் படித்து பார்த்தன்.
    நல்ல பல தகவல்கள் ...
    வானதிக்கு வாழ்த்துக்கள் ...

    உங்கள் பார்வைக்கு ....
    பதிவர்களின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது' அரசு அதிர்ச்சி !!!

    ReplyDelete
  17. கிட்ட தட்ட ஒரு மாசம் முன்பே அவங்களுக்கு குழந்தை பிறந்ததா...!!!!!!.அங்கேயும் குளரு படி டாக்டர்ஸ் இருக்காங்களா ...:-))))

    ReplyDelete
  18. அருமையான முகப்பு மலர்.
    நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்.
    http://rathnavel-natarajan.blogspot.com/2011/09/blog-post_19.html

    ReplyDelete
  19. நல்லா சொன்னீங்க போங்க... ஒருத்தருக்கு அம்மா வேணும் அவங்களுக்கு கிடைக்காது. இன்னொருத்தருக்கு வேண்டாம்... ஆனா கிடைக்கும்.... walks of life...

    Last line super..:)

    ReplyDelete
  20. அழகிய தலைப்பு.அழகிய அனுபவம்.

    ReplyDelete
  21. // என் ஆ.காரரும் ஒரு நொடியில் டயப்பர் விழா வண்ணம் மகனின் இடுப்பில் கட்டிய பிறகு ஒரு வெற்றிப் பார்வை பார்த்தார். //

    ஹா.. ஹா.. நாங்கல்லாம் எப்பூடி?? இருங்க கொஞ்சம் காலரை தூக்கி விட்டுக்கிறேன்.

    ReplyDelete
  22. ஜெய்லானி said...

    // கிட்ட தட்ட ஒரு மாசம் முன்பே அவங்களுக்கு குழந்தை பிறந்ததா...!!!!!!.அங்கேயும் குளரு படி டாக்டர்ஸ் இருக்காங்களா ...:-)))) //

    ஹலோ.. லோ.. லோ.. உங்களுக்கு என்னாச்சு ??

    // உனக்கு எப்ப குழந்தை பிறக்கு என்று நேர்ஸ் கேட்க//,.... //அவர் பிப்ரவரி 29 என்று சொல்ல//...//இல்லை எனக்கு மார்ச் 1 அன்று பிறந்திச்சு என்றார். //

    ஒரு நாள் பின்ன தானே!! ... இதில் எங்க ஒரு மாசம் பாஸு ... க்கி க்கி

    ஜெய் ... குழப்பம் அதில் இல்லை இங்க கவனிங்க!!

    // உனக்கு மாசி 29 அன்றா குழந்தை பிறந்தது என்று ஆர்வமாக கேட்டேன்.//
    என்று இங்கிலீஷ் கார அம்மணி திருமதி. பிரவுன் கிட்ட கேட்கிறாங்க நம்ம வான்ஸ். அங்க தான் நிக்கிறாங்க !! அவ்வவ்வ்வ்வ்.

    ReplyDelete
  23. உங்கள் ஊர் பக்கம் நவராத்திரி விழா குறித்து ஒரு
    சிறப்பு பதிவு போடலாமே
    இனிய நவராத்திரி தின நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  24. கருத்து தெரிவித்த எலோருக்கும் மிக்க நன்றிகள்.

    ReplyDelete
  25. Ungalathu blog il recipe visuals varuvathai paarthu follow seithen.Post-m super.Interesting read than.Luv it.

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!